Saturday, February 13, 2010

அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளுங்கள்

அல்லாஹ்வின் வல்லமையை விளக்கி அண்ணலார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
அல்லாஹ் கூறுகிறான்:- எனது அடியார்களே! நான் நிச்சயமாக (யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன் என்று) என் மீது அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் அதை ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள் தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்ளைத் தவிர, ஆகவே நேர் வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியவர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தவர்களே. ஆகவே உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.

என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்ச முடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும் (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!

என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் கேட்கட்டும், அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அப்படிக் கொடுத்து விடுவதால்) கடலில் ஓர் ஊசி முனையை எடுத்தால் அதில் கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு நீர் கடலில் குறையுமோ அந்த அளவுக்குக் கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.

என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக் கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள் நல்லது அல்லாததை (தண்டனையை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்காக நீங்கள் உங்களைத் தான் குறை கூறிக் கொள்ள வேண்டும்.

அறிவிப்பவர்: அபூதர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம்.

*************************
பல வழி செல்வோரைப் புறக்கணிப்போம்

எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாக) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் . (அல்குர்ஆன் 6 :1159)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::