Saturday, February 13, 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்:1999 மார்ச் அல்முபீனில் “”அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில், அமீரை மீறினால் என்ற குறுந் தலைப்பில்,மேலும் அமீருக்குக் கட்டுப்படுவது வணக்க வழிபாடுகள் போல் வற்புறுத்தப்பட்டுள்ளதை மேற்கண்ட சான்றுகள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. இது தலைவன் தொண்டனிடையே ஏற்படும் சாதாரண உறவு முறை அல்ல; விரும்பினால் கட்டுப்பட்டுவிட்டு விரும்பாத போது வெளியேறி விடும் கட்சித் தலைமை போன்றதுமல்ல. மாறாக அமீரிடம் எத்தகைய குறைபாடுகளைக் கண்டாலும் அவரை விட்டு விலகக் கூடாது. விலகுவது பாவம் என்ற அளவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இது விஷயத்தில் கூடுதலான ஆய்வையும் கவனத்தையும் நாம் செலுத்தியாக வேண்டும்.

அமீருக்குக் கட்டுப்படுவதை அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அமீர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அமீரா? பலர் இருக்க முடியுமா? ஒரே ஒருவர்தான் என்றால் அந்த ஒருவர் யார்? நாடுகள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அமீர் யார்? அல்லது மாநிலம் தோறும், ஊர்கள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் அந்த அமீர்கள் யார்? இதை எப்படித் தீர்மானிப்பது?

ஒரு மாநிலத்தில் நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு அமீர்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு இயக்கமும் தத்தமது அமீருக்குக் கட்டுப்படுவது தான் மார்க்கக் கடமை எனக் கருதுகின்றன. பிரச்சாரமும் செய்கின்றன.

இன்னும் சொல்வதென்றால் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாக உள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட அமீர்களும் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆசைப்படுபவன் இந்தக் கேள்விகளால் குழம்பிப் போகிறான். அமீர்கள் என்ற பெயரில் மக்கள் பிரிக்கப்பட்டு ஒற்றுமை கலைக்கப்படுவதைக் கண்டு தடுமாறுகிறான்.

முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டிக் கட்டுக் கோப்பைக் காப்பதுதான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்கு முக்கியக் காரணம். இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் நடைமுறையில் உள்ளது என்ன? ஏராளமான அமீர்கள் உருவாகும் போது சமுதாயம் ஏராளமான பிரிவுகளாக மாறுகிறது. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் கண்ணுறக் கூடிய ஒரு உண்மை முஸ்லிம் குழம்பிப் போகிறான்.

ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய ஒரு சித்தாந்தம் ஒருபோதும் வேற்றுமையை ஏற்படுத்தாது என்ற உணர்வோடு அமீருக்கு கட்டுப்படுதலை நாம் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும். தெளிவு பிறக்கும் இன்ஷா அல்லாஹ். (அல்முபீன் மார்ச் 99. பக். 6,7)
இப்படி பீ.ஜை. தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதன் எதார்த்த நிலை என்ன?
அப்துர்ரஹ்மான், திருச்சி.

விளக்கம்: இப்படியயாரு அசத்தலான பீடிகையைப் போட்டு தனது பக்தர்களை மயக்கத்திலும் குழப்பத்திலும் விட்டு 51 பக்கங்களை வீணடித்து ஆட்சி அதிகாரம் உள்ள அமீர் இருந்தால்தான் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட முடியும். ஆட்சி அதிகாரம் இல்லாதவரை சமுதாய ஒற்றுமை சாத்தியமே இல்லை. அல்லாஹ் 21:92,93 மற்றும் 23:52-56-ல் வலியுறுத்தி இருப்பது சாத்தியமில்லை; ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய சித்தாந்தம் ஆட்சி அதிகாரம் இல்லாத அமீரைக் கொண்டு நடைமுறைச் சாத்தியமில்லை. ஆக உலகளாவிய முஸ்லிம்கள் ஒன்று பட வழியே இல்லை என்று பொய்யன் பீ.ஜை. ஃபத்வா-மார்க்கத் தீர்ப்பு கொடுத்து விட்டார்.

அதை அப்படியே நம்பி ஏற்ற ஒரு கூட்டம் ஆட்சி அதிகாரம் உள்ள “கிலாஃபத்’ ஏற்பட்டால் தான் சமுதாயம் ஒன்றுபடும்; சமுதாயப் பிரச்சினைகள் தீரும் எனக் கூறி, 24:55-ல் அல்லாஹ் நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கும் உண்மை முஸ்லிம்கள் ஆனால் மட்டுமே முன்பிருந்தோருக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தது போல் உங்களுக்கும் கொடுப்போம் என்று கூறி இருக்கும் நிலையில், அல்லாஹ் கொடுப்பதாகச் சொல்லும் ஆட்சி அதிகாரத்தை இவர்கள் தட்டிப் பறிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வழிகேட்டிற்கும் பொய்யன் பீ.ஜை.யே காரணகர்த்தா!

இப்போது பீ.ஜை.யின் வழிகேட்டிற்கும், அவரது பக்தர்களின் வழிகேட்டிற்குமுள்ள அடிப்படைக் காரணத்தைப் பார்ப்போம்.
இவர்கள் கற்பனை செய்து இவர்களாக அமைத்துக் கொண்ட குட்டி, குட்டி இயக்கங்களுக்கு மாநிலம் தோறும், ஊர்கள் தோறும் தலைவர்கள் இருப்பது சாத்தியம் என்றால், அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய பேரியக்கமான ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கு மாநிலம் தோறும், மாவட்டங்கள் தோறும், வட்டங்கள் தோறும், ஊர்கள் தோறும் துணை அமீர்கள் இருப்பது சாத்தியமா? சாத்திய மில்லையா? பொய்யன் பீ.ஜை. எழுதி இருப்பது போல் இஸ்லாமிய அடிப்படையில் நூற்றுக் கணக்கான இயக்கங்கள் எப்படி இருக்க முடியும்? இஸ்லாமிய அடிப்படையில் ஒரே ஒரு பேரியக்கம் மட்டுமே இருக்க முடியும். நூற்றுக் கணக்கான அல்ல; இஸ்லாமிய அடிப்படையில் இரண்டு இயக்கங்கள் கூட இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இருந்தால் அவற்றில் ஒரேயொரு இயக்கம் மட்டுமே இஸ்லாமிய அடிப்படையில் இருக்க முடியும் (பார்க்க 21:92; 23:52)

நூற்றுக்கணக்கான இயக்கங்களில் ஒன்று கூட இஸ்லாமிய அடிப்படையில் இல்லாமலிருக்க வாய்ப்பு உண்டே அல்லாமல், அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையில் இருக்க ஒருபோதும் வாய்ப்பே இல்லை. இது பொய்யன் பீ.ஜையின் முதல் உளறல். இரண்டாவது உளறல் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாக உள்ளனர்; பத்துக்கும் மேற்பட்ட அமீர்களும் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? என்பதாகும்.

ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் ஒரே அணியில் ஒரே அமீரின் கீழ் ஒன்றுபட்டிருப்பார்களா? பத்து பிரிவுகளாகப் பத்து அமீரின் கீழ் இருப்பார்களா? இந்தப் பத்துப் பிரிவினரும் சாட்சாத் பொய்யன் பீ.ஜை.யின் கற்பனையில் உருவானவர்களை. ஒவ்வொரு பிரிவு இயக்கத்தையும் கற்பனை செய்து உருவாக்கி விட்டு, அங்கு தனது ஆளுமைக்கு, அதிகாரத்திற்கு இடமில்லை என்றதும், மரத்துக்கு மரம் குரங்கு தாவுவது போல் தாவி புதுப்புது இயக்கங்களைத் தோற்றுவித்தவர், தோற்றுவிப்பவர் அவரே. அதனால் தான் ஒரே கொள்கை கோட்பாடு என பிதற்றியுள்ளார். அது மட்டுமல்ல இவர்களின் பிரிவு இயக்கங்களுக்கு குர்ஆனோ, ஹதீஸோ காரணமல்ல; 2:213, 3:19, 42:14, 45:17 ஆகிய இடங்களில் அல்லாஹ் கூறுவதுபோல் பொய்யன் பீ.ஜைக்கு ஏற்பட்ட பொறாமையும், சுயநலமும், பேர் புகழில் பேராசையும், அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் அதீத ஆசையுமே காரணமாகும். (பார்க்க 7:175-179)ஒரே கொள்கை கோட்பாடுள்ளவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாகப் பிரிந்ததற்கு பீ.ஜை. அல்லாமல் வேறு யாரும் பிரதான காரணகர்த்தாக்கள் அல்ல. நாளை மறுமையில் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிற்கப் போகிறவர் பொய்யன் பீ.ஜை. தான்.

21:92, 23:52 இறைவாக்குகள் கூறுவது போல் முஸ்லிம் சமுதாயம் வேற்றுமையில்லாத ஒன்றுபட்டு ஓரணியில் இருக்கும் ஒரே சமுதாயம் தான். 21:93, 23:53,54,55,56 இறைவாக்குகள் கூறுவது போல் நாளை மறுமையில் நரகை அடைபவர்கள் ஒன்று பட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்துவார்கள். அவர்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக, தொழிலாகக் கொண்டுள்ள பொய்யன் பீ.ஜை. போன்ற புரோகிதர்கள்.

அல்லாஹ்வே 21:93, 23:53 இறைவாக்குகளில் இந்தச் சமுதாயம் பல பிரிவுகளாகச் சிதறுவார்கள் என்று கூறி இருக்கும்போது சமுதாய ஒற்றுமை எப்படி சாத்தியமாகும் எனக் கூறி சிந்திக்கத் துணியாத மக்களை மயக்கி ஏமாற்றுவார்கள். ஆம்! உண்மை தான்!! நாளை மறுமையில் நரகை நிரப்பும் பெருங்கொண்ட கூட்டம் (பார்க்க 32:13, 11:118, 119) சமுதாயத் தைப் பிளவுபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களில் 11:119 இறைவாக்கு கூறுவது போல் அல்லாஹ் அருள்புரிந்த மிகச் சிலர் எப்படி நடக்க வேண்டும் என்பதே நம்முன் உள்ள விவகாரம். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் புக விரும்பும் நல்லடியார்கள் எப்படி நடக்க வேண்டும்? இதற்கும் இறுதி நபி(ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், இன்று முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருப்பவர்களை விட மிகமிகக் கேடுகெட்டவர்கள், உளப்பூர்வமாக நம்பிக்கை கொள்ளாமல் உதட்டளவில் நம்பிக்கை கொண்டதாக நடித்துக் கொண்டு குறைஷ் காஃபிர்களுடன் சேர்ந்து ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருந்த நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தார்கள். 49:14-ல் ஈமான்-இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாதவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று தமது சமுதாயத்தில் இணைத்துக் கொள்ள அல்லாஹ் கட்டளை இடுகிறான். இப்படி இன்றைய முஸ்லிம்களை விட மிகமிக கேடுகெட்டவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று இந்தச் சமுதாயத்தை ஒரே சமுதாயமாக அரவணைத்துச் செல்வதின் மூலம் நபி(ஸல்) நமக்கு அழகிய நடைமுறையைக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

33:21,36, 59:7 இறைக் கட்டளைகள்படி நபி (ஸல்) அவர்களின் இந்த அழகிய முன்மாதிரியை ஏற்று, இறைக் கட்டளைகளையும், நபி வழியையும் நிராகரித்து ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி பல கோணல் வழிகளில் செல்லும் முஸ்லிம்களையும், அவர்களின் இறுதித் தீர்ப்பை அல்லாஹ்வே நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்பதை ஏற்று (பார்க்க 2:210, 6:58, 10:11,19,54,11:110, 14:22, 19:39, 39:69,75, 41:45, 42:14, 21) இவ்வுலகில் அவர்கள் அனைவரையும் முஸ்லிம்களாகவே ஏற்று அரவணைத்துச் செல்வதன் மூலம் சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும். யாருக்கும் குஃப்ர், ´ர்க் ஃபத்வா-தீர்ப்பு கொடுக்க முற்படக்கூடாது. யார் பின்னாலும் நின்று தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கக் கூடாது. இப்படி தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி அதிகாரம் என்பதை விளங்கி நடப்பவர்களை ஆலிம்களாக-அறிஞர்களாக இருக்க முடியும்.

இணை வைத்த நிலையில் இறந்து போன மூதாதையர் பற்றி ஃபிர்அவ்ன் மூஸா(அலை) அவர்களிடம் கேட்கிறான். அவர்கள் இறந்து போனவர்கள். தவறை உணர்ந்து தவ்பா செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை; அவர்களைப் பர்றியே மூஸா (அலை) சொன்னதை 20:51,52 தெளிவாகக் குறிப்பிடுகிறது.

“”அப்படியயன்றால் முன் சென்ற தலைமுறையினரின் நிலை என்ன?” என்று ஃபிர்அவ்ன் கேட்டான். “”இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார். (20:51,52) இணைவைத்த நிலையில் இறந்து போனவர்கள் பற்றியே ஒரு நபி, அவர்கள் காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்று கூறத் துணியவில்லை. இன்றைய ஆலிம்களுக்கு(?) இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஒரு நபிக்கே இல்லாத அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக இந்தப் புரோகிதர்கள் நினைத்துச் செயல்படுகிறார்களா? இன்னும் பாருங்கள்!

உஹதுடைய யுத்த களத்தில் இறைவனின் இறுதித் தூதரை குறைஷ்கள் மிகமிகத் துன்புறுத்தி விட்டார்கள். ­ஹீதாக்கப் பட்டார்கள். குறைஷ்களால் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. நபி தோழர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது (பார்க்க 3:144). இந்த நிலையில் நபி(ஸல்) வேதனையைத் தாங்க இயலாது, அவர்களில் சிலரைக் குறிப்பிட்டு அவர்களை அல்லாஹ்வின் கருணையிலிருந்து நீக்குமாறு பிரார்த்தித் தார்கள். அதைக் கண்டித்து அல்லாஹ் இறக்கிய இறைவாக்கைப் பாருங்கள். ”
“”(நபியே!) உமக்கு இவ்விடயத்தில் எந்தவித அதிகாரமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்தும் விடலாம்; அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம். நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!” அல்குர்ஆன்: 3:128 புகாரீ. 4559.

அல்லாஹ்வின் இறுதித்தூதரை மிகக் கடுமையாக எதிர்த்த, அன்று நிராகரிக்கும் காஃபிர்களாக இருந்த குறைஷ்களைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாகப் பிரார்த்தித்ததையே அல்லாஹ் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் இன்று தர்கா, தரீக்கா, மத்ஹபு என்றும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி வரமுடியும் என்றும் தவறான வழிகளில் செல்லும் முஸ்லிம்களுக்கும், குர்ஆன் மட்டும் போதும் என தவறான வழியில் செல்பவர்களுக்கும் ´ர்க், குஃப்ர் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்த முடியுமா? அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இல்லாத அதிகாரம் இவர்களுக்கு இருப்பதாக நம்பிச் செயல்படும் இவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது. எண்ணற்ற இறை எச்சரிக்கைகளை நிராகரிக்கும் ஜாஹில்களாக மட்டுமே இருக்க முடியும்.

தம் முன்னாலேயே தங்களை நபி என வாதிட்டவர்களுக்கே நபி(ஸல்) குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை. இந்த நிலையில் இப்புரோகிதர்களுக்கு இத்துணிச்சல் எங்கிருந்து வந்தது?

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்ததையே நிராகரித்து கடுமையாக எச்சரித்திருக்கும் நிலையில், இந்த மூட முல்லாக்கள் 42:21 அல்லாஹ் கடிந்து கூறுவது போல் அல்லாஹ்வின் தனி அதிகாரத்தை-அல்லாஹ்வே மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில் தங்கள் கைகளில் எடுத்து குஃப்ர் ஃபத்வா கொடுப்பவர்கள் வடிகட்டின ஜாஹில்களாக மட்டுமே இருக்க முடியும் என்பதில் சந்தேகமுண்டா?

தவறான வழிகளில் செல்பவர்களுக்கு அவர்களின் வழிகேடுகளை குர்ஆன், ஹதீஸ்கள் கொண்டு எச்சரிப்பதோடு நிறுத்திக்கொண்டு, குஃப்ர் ஃப்தவா கொடுக்காமல், அவர்கள் பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் அனைவரையும் இவ்வுலகில் முஸ்லிம்களாக ஏற்று சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் முஸ்லிம்கள் மட்டுமே ஆலிம்களாக-நபிமார்களின் வாரிசுகளாக இருக்க முடியும்.

ஆனால் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் சமுதாய ஒற்றுமையை நஞ்சென வெறுப்பார்கள். காரணம் அது அவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விடும். எனவே சமுதாயத்தை மேலும் மேலும் பிளவுபடுத்தி அவர்கள் அற்ப உலக ஆதாயம் அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். 1987க்குப் பிறகு சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது ஒலி வேகத்தைத் தொட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் அது ஒளி வேகத்தைத் தொடும். சமுதாயம் எண்ணற்றக் குழுக்களாகப் பிரிந்து சின்னாப்பின்னப்பட்டு விடும். இப்பூவுலகில் முஸ்லிம்களை விட ஒரு கேடுகெட்ட சமுதாயம் பிரிதொன்று இல்லை என்ற நிலையே ஏற்படும்.

இதைத் தடுப்பதற்குள்ள ஒரே வழி, வேறு வழியே இல்லை; அது முஸ்லிம்கள் மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகிதர்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகும். அவர்கள் பின்னால் முஸ்லிம் சமுதாயம் செல்வது 7:3, 33:36,66,67,68, 59:7, 42:21 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களின்படி நாளை மறுமையில் ஷிர்க், குஃப்ர், பித்அத் குற்றங்களுக்கு ஆளாகி நரகில் கொண்டு சேர்த்துவிடும். முஸ்லிம்களே எச்சரிக்கை. ஆனால் இவர்கள் அனைவரையும் இவ்வுலகில் 49:14, 2:8-20 இறைக் கட்டளைகள்படி முஸ்லிம்களாக ஏற்று ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை கட்டிக் காப்பதே நபி வழியாகும்; நேர்வழியாகும். அத்தகைய முஸ்லிம்களே நபி வழி நடப்பவர்கள், வெற்றியாளர்கள். மவ்லவிகள், ஆலிம்கள், அரபிமொழி கற்றவர்கள், மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள், மார்க்கம் சொல்ல உரிமை பெற்றவர்கள் என அகந்தை, ஆணவம், கர்வம், பொறாமை அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடும் புரோகிதர்கள் பின்னால் செல்பவர்கள் மாபெரும் நட்டவாளிகள் என்பதை நாளை மறுமையில் தெரிந்து கொள்வார்கள்.

புரோகிதனும் பொய்யனுமாகிய பீ.ஜை.யின் மூளையற்ற பேச்சை வேதவாக்காக(?) ஏற்று இஸ்லாம், முஸ்லிம் என செயல்பட்டால் போதும் என நம்பிச் செயல்படுகிறவர்களும் முகல்லிதுகளே. அல்லாஹ் “முஸ்லிம்’ என பெயரிடவில்லை. “முஸ்லிமீன்”- முஸ்லிம்கள் என ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்திற்கே பெயரிட்டுள்ளான். 41:33 இன்னும் தெளிவாக நபிமார்களின் பிரசார பணியைச் செய்பவர்களே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறவே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

இயக்கமே இல்லாமல் தனித்துச் செயல்படுவதும் வழிகேடே. ஜாஹிலியா காலத்து மரணத்தையே சந்திக்க நேரிடும் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பொய்யன் பீ.ஜை. சொல்வது போல் பிரிவு ஜமாஅத்தும் அல்ல; அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத்தும் அல்ல. அபூ அப்தில்லாஹ்வுக்கு அதில் கடுகளவும் உரிமை இல்லை. முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அடிப்படையில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்றுள்ள ஜமாஅத் அதுவேயாகும். நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் “முஸ்லிம்கள்” என்ற பெயருடன் (22:78-முஸ்லிமீன்) ஜமாஅத்துல் முஸ்லிமீனின் இருப்பது கொண்டே வெற்றியடைய முடியும். இதற்கே எண்ணற்ற குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. ஹிஜ்ரி 11க்குப் பிறகு அதாவது நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மனிதக் கற்பனையில் உருவான ஜமாஅத்துகள் அனைத்தும் பித்அத்களே-வழிகேடுகளே-நரகில் கொண்டு சேர்ப்பவையே. இது 7:3, 33:36,66, 67,68 அல்குர்ஆனின் நேரடியான கட்டளைகள் படியும், பித்அத் பற்றிய நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையின் படியும் உறுதி செய்யப்பட்ட பேருண்மையாகும். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::