Saturday, February 13, 2010

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

விமர்சனம் : பீ.ஜைனுலாப்தீன் உலவி தனது உணர்வு வார இதழிலும், அவரது வலைதளத்திலும் உங்களை பொய்யன், மனநோயாளி, மூளையற்றவர் என்றெல்லாம் விமர்சித்து நீங்கள் போட்ட வழக்கில் ஜெயித்துவிட்டதாக செய்திகள் பரப்புகிறாரே? உங்களது விளக்கம் என்ன?




விளக்கம்: முன்பக்கத்தில் இடம்பெற்றிருப்பது பொய்யன் பீ.ஜை.யை ஆசிரியராகக் கொண்ட ‘உணர்வு” நவம்பர் 27 முதல் டிசம்பர் 03 வரையுள்ள வார இதழ் பக்கம் 4-ல் இடம் பெற்றதும், 21.12.2009-ல் அவர் திருச்சி நீதிமன்றத்தில் கொடுத்த பொய் வாக்குமூலம் ஆகும். நாம் 2002-ல் போட்ட வழக்கை 2009 நவம்பர் 24ம் தேதி வரை இழுத்தடித்து இறுதியில் நீதிபதிமுன் ‘அந்நஜாத்திற்காக வாங்கிய சொத்தை அபூஅப்தில்லாஹ் தனது பெயரில் பதிவு செய்து கொண்டதால் அந்த துரோகத்தைத் தாங்க இயலாமல் நான் அந்நஜாத்திலிருந்து ஒரு வருடத்திலேயே வெளியேறி விட்டேன்” என்று விசாரணை அதிகாரி முன்னால் நான் கூறவில்லை; விசாரணை அதிகாரியே அவ்வாறு எழுதிக் கொண்டார் என்று பொய் வாக்குமூலம் அளித்து, அவரே ‘உணர்வில்” (வார இதழ்) குறிப்பிட்டிருப்பது போல் தீர்ப்பு தரப்பட்டதா? அல்லது வாங்கப்பட்டதா? என்பதை மக்கள் தீர்ப்புக்கே விடுகிறோமட். காரணம் மேலப்பாளையம், கடைய நல்லூர், திருச்சி, சிங்காரத்தோப்பு என மூன்று ஜாக் பள்ளிகள் வழக்குகளில் எப்படிச் செயல்பட்டு பீ.ஜை. அப்பள்ளிகளை அபகரித்து தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளார் என்பதை மக்கள் அறிவார்கள்.
பொய்யன் பீ.ஜை. உண்மையாளன் என்றால் 2001-ல் நாம் இதே செய்தியை அவரது உணர்வு வார இதழில் வெளியிடுமாறு வக்கீல் நோட்டீஸில் கேட்டமாத்திரத்தில் இப்படி வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அவர் என்ன செய்தார்? நமது வேண்டுகோளை கிடப்பில் போட்டுவிட்டார். மீண்டும் 20.07.2002-ல் அதே நோட்டீஸை அனுப்பியவுடன் அவர் என்ன செய்தார் தெரியுமா?

அந்த நோட்டீஸ் ஆங்கிலத்தில் இருந்தாலும் தான் 4-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதாலும் தனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் இருவரிடம் அந்த நோட்டீஸை கொடுத்து அவர்கள் மூலம் நோட்டீஸிலுள்ள விசயங்களை அறிந்து கொண்டாலும், தனக்கு மானம் போய் விட்டதாகவும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் என்மீது 16.10.2002-ல் மான நட்ட வழக்குத் தொடர்ந்தால். அது உடனடியாக ஏற்கப்பட்டு எனக்கு நீதிமன்றத்திலிருந்து வழக்கில் ஆஜராக சம்மன் வந்தது. (4856/2002)
அவர் சென்னையில் மான நட்ட வழக்கு என்மீது தொடர்ந்த பின்னரே நான் திருச்சியில் அவர் மீது மான நட்ட வழக்கு தொடர தள்ளப்பட்டேன். அவர் சென்னையில் தொடர்ந்த வழக்கு உடனடியாக ஏற்கப்பட்டு எனக்கு உடன் சம்மன் வந்ததும், நான் 2002-ல் திருச்சியில் தொடர்ந்த வழக்கில் என்னை, எனது சாட்சிகளை எல்லாம் விசாரிக்க இழுத்தடித்து 2003-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு (138/2003) பீ.ஜை.க்கு வழக்கில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதன் இரகசியத்தையும் பீ.ஜையே தனது 2009 நவம்பர் 27, டிசம்பர் 03 வரையுள்ள உணர்வு இதழில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் என்மீது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் ஆஜராகவே இல்லை. ஆனால் நான் தவறாது வாய்தாவுக்கு வாய்தா என 24 வாய்தாக்களுக்கும் ஆஜரானேன். இறுதியில் பீ.ஜை. ஆஜராகவில்லை. எனவே வழக்கை நடத்த மனுதாரர் அக்கறை எடுத்துக் கொடுப்பவர் சொல்லாததை எல்லாம் சொன்னதாக எழுதி குற்றத்தை நிரூபிக்க முற்படலாம். ஆனால் வழக்குக்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத ஒருவரைப் பற்றி விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுப்பவர் சொல்லாததை சொன்னதாக எழுத வேண்டிய அவசியமோ – தேவையோ – உந்துதலோ இல்லவே இல்லை என்று எனது வக்கீல் கொடுத்த உச்சமன்ற தீர்ப்பில் (Khatri V.State of Bihar 1981(2)Sec.493 M.N.Damani v., S.K.Shinha, AIR2001 Sec. 2037) இரண்டை ஆதாரமாக வைத்து பொய்யன் பீ.ஜை. உயர்நீதி மன்றத்தில் கொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து, திருச்சியில் நான் அவர்மீது தொடுத்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பின் முக்கியத்துவம் கருதி அத்தீர்ப்பு நீதிமன்றம் வெளியிடும் (Current Tamil Nadu cases 2004(2) CTC/05.05.2004) நூலிலும் வெளியானது. இந்த நிலையில் என்னுடைய கையெழுத்து இல்லாமல் போலீஸ் எழதிக் கொண்டதை நம்பி மூளையுள்ள எவராவது வழக்குப் போடுவார்களா? அதை இந்த அரை வேக்காடு வாந்தி எடுக்கலாமா? என்று பொய்யன் பி.ஜை. தான் மூளையற்ற நிலையில் எழதியுள்ளார். 161 வாக்குமூலத்தில் வாக்குமூலம் அளிப்பவரின் கையெழுத்துப் பெறப்படுவதில்லை என்ற சாதாரண நடைமுறைச் சட்டமும் பொய்யன் பீ.ஜை.க்குத் தெரியவில்லை.

அவ்வழக்கில் அவர் மட்டுமல்ல; அவரைப் போல 161 வாக்குமூலம் கொடுத்த எவருமே கையெழுத்திடவில்லை. நான் கையெழுத்திட மறுத்து விட்டேன் என்று பீ.ஜை. எழுதியிருப்பது ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யாகும். பொய்யன் பீ.ஜை.யின் கையெழுத்து இல்லாத அந்த 161 வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு உயர்நீதி மன்றம் வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரைப் பற்றி போலீஸ் எழுதத் தேவை என்ன இருக்கிறது? என்று விளக்கி அவரது வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி மூளையற்றவர் என்று பொய்யன் பீ.ஜை. சொல்கிறாரா? அதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாகக் காட்டித் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மூளையற்றவர்கள் என்று பொய்யன் பீ.ஜை. சொல்கிறாரா? இதற்காகவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம்.

மேலும் “பீ.ஜை. கையெழுத்துப் போடவில்லை. தடா நீதிமன்றத்திலும் இதைக் கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது பீ.ஜை. சொல்லாததைச் சொன்னதாக எப்படிக் கூறுகிறீர்கள் என்று நீதிபதி கேட்டபோது அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை” என்று அண்டப் புளுகன் பீ.ஜை. ஒரு அப்பட்டமான பொய்யை எழுதியுள்ளார். அப்படி ஒரு கேள்வியை நீதிபதி கேட்கவும் இல்லை. நான் பதில் சொல்லும் வாய்ப்பு ஏற்படவும் இல்லை. அப்படி நீதிபதி கேட்டிருந்தால் நான் பதில் சொல்லும் தேவையை ஏற்பட்டிருக்காது. CST/05/2004 புத்தகத்தில் வெளியான Cr.O.P.No.86360 of 2003.25.2.2004 தீர்ப்பில் பொய்யன் பீ.ஜை. சொல்லாத ஒன்றை வழக்குக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத அபூ அப்தில்லாஹ் பற்றி போலீஸ் எழுதவேண்டிய தேவையோ அவசியமோ உந்துதலோ இல்லை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பையே என்னால் எடுத்துக் காட்டி இருக்க முடியும். ஆனால் அவரது உணர்வு நவம்பர் 27 முதல் டிசம்பர் 3, 2009 வரையள்ள இதழில் எழுதியுள்ளது போல் பொய்யன் பீ.ஜை.யின் பொய் வாக்குமூலத்தைத் தவிர குறுக்கு விசாரணையோ, நான் பேசும் வாய்ப்போ இல்லாமல் போனது. நான் வற்புறுத்தியும் எனது வக்கீல் பொய்யன் பீ.ஜை.யை குறுக்கு விசாரணை செய்ய மறுத்து விட்டார். அதுவே பொய்யன் பீ.ஜை. தப்புவதற்கு காரணமாயிற்று என்பதை அந்நஜாத் வலைதளத்திலுள்ள தீர்ப்பை படிப்பவர்கள் மட்டுமே அறிய முடியும். அதன் இரகசியமும் பொய்யன் பீ.ஜை.மீது நீதிமன்ற அவமதிப்பு வழைக்குத் தொடரலாம்.

நாளை பொய்யன் பீ.ஜை. தன்னை நபி என்று குலாம் அஹ்மது மிர்சாவைப் போல் வாதிட்டாலும் அதை அப்படியே கண்மூடி ஏற்கும் பீ.ஜை.யின் குருட்டுப் பக்தர்களைத் தவிர ஒரு சாதாரண அறிவு படைத்தவனும் கோவை குண்டு வழக்கிற்கு அணுவளவும் சம்பந்தமே இல்லாத, அதில் குற்றச்சாட்டப்பட்ட 167 குற்றவாளிகளில் ஒருவனும் இல்லை; பீ.ஜை.யால் தூண்டிவிடப்பட்டு அக்குற்றங்களைச் செய்தவர் களைக் காட்டிக் கொடுத்துத் தன்னை விடுவித்துக் கொண்ட பொய்யன் பீ.ஜை. போல் ஒருவனும் இல்லை. அன்று SP.ஆக இருந்து இப்போது உயர் பதிவிகளை அடைந்துள்ள திரு.பன்னீர் செல்வத்திற்கு பீ.ஜை. வாக்குமூலம் கொடுத்த 24 .3.99-ல் அபூ அப்தில்லாஹ்வைப் பற்றியோ, அந்நஜாத்தைப் பற்றியோ, தெரியவே தெரியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த நிலையில் போலீஸுக்கு என்னை இழுத்து பொய்யன் பீ.ஜை. சொல்லாத ஒன்றை வலிய எழுதும் தேவை என்ன ஏற்பட்டத எனச் சிந்திப்பார்கள். அதுவும் பொய்யன் பீ.ஜை. இன்று பொய்களையும், அவதூறுகளையும் தொடர்ந்து பரப்பும் கள்ள வலைதளத்திலும், களவாடப்பட்ட உணர்வு வார இதழிலும் சொல்லியிருப்பது போல் ‘நஜாத் பெயரில் சொத்து வாங்கியது தொடர்பாக பிரச்சனை வந்தது. அதுவும் நஜாத் பத்திரிக்கையிலிருந்து விலகக் காரணமானது” என்று தெரிவித்ததை விசாரணை அதிகாரி எவ்விதத் தேவையுமில்லாமல் “நஜாத் பத்திரிகைக்காக வாங்கிய சொத்தை (அபூ அப்தில்லாஹ்) பொருளாளர் தன் பெயரில் பதிவு செய்து கொண்டதால் அந்த துரோகத்தைப் பொறுக்க முடியாமல் நான் நஜாத் பத்திரிகையிலிருந்து ஒரு வருடத்திலேயே வெளியேறி விட்டேன்” என்று ஜோடித்து அதிகாரியே எழுதிக் கொண்டார் என்று பொய்யன் பீ.ஜை. பொய்யாகக் கூறுவதை அவரது குருட்டு பக்தர்கள் நம்பலாம். விலை போகிறவர்கள் நம்பலாம். நடுத்தர அறிவு படைத்த சுய சிந்தனையாளன் ஒருவன் கூட நம்பமாட்டான்.

“கேப்பையில் நெய் வடிகிறதென்று சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று”? என்பது முதுமொழி, அதுபோல் மதியற்றவர்கள் மட்டுமே பொய்யன் பீ.ஜை.யின் பொய்க் கூற்றை நம்புவார்கள். மற்றபடி போலீசுக்கு இப்படி பொய்யன் பீ.ஜை. சொல்லாததைச் சொன்னதாக எழுதத் தேவை இல்லை. காரணம் இதற்கும் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கும் கடுகளவும் சம்பந்தமில்லை. மேலும் பேலீசுக்கு இப்படி ஜோடனையாக எழுதவும் வராது. இது பொய்யன் பீ.ஜை. அப்படியே வாந்தி எடுத்தது தான் என்பதை அற்ப சுய சிந்தனையாளனும் அறிவான்.

இப்போது 2009 இறுதியில் பொய்யன் பீ.ஜை. சொன்னதுதான் உண்மை என்றால் 2001-ல் நாம் அனுப்பிய வக்கீல் நோட்டீஸின்படி அவரது உணர்வு இதழில் இன்று கோர்ட்டில் சொன்னதை அன்றே வெளியிட்டிருக்கலாமே. ஏன் வெளியிடவில்லை? உண்மை காரணம் என்ன தெரியுமா? குற்றம் சாட்டப்பட்டவர் 167 பேர். அவர்கள் அனைவருக்கும் குற்றப் பத்திரிகை கிடைக்கும். அதன் மூலம் குற்றப் பத்திரிகை கிடக்கும். அதன் மூலம் குற்றப் பத்திரிக்கை ஒவ்வொருவரின் உறவினர்கள், நண்பர்கள், வக்கீல்கள், வக்கீல் உதவியாளர்கள், இப்படி உலகமெங்கும் பரவி என்னைப் பற்றிய தவறான செய்தியைப் பரப்ப வேண்டும் என்பது தான் பொய்யன் பீ.ஜை.யின் கேடுகெட்ட நோக்கம்.

அவரது சொத்து சுகத்தை நான் பறித்துக் கொண்டதால் என்மீது வெறுப்பு ஏற்படவில்லை. அவரைப் போல் நான் ஒரு பிரிவு தனி இயக்கம் வைத்துக்கொண்டு அவரைப்போல் ஆர்ப்பாட்டம். பந்த், சாலை மறியல், துக்க தினம் என கெடுபிடி செய்து மக்களின் இன உணர்வைத் தூண்டி வசூல் வேட்டையில் இறங்கினாலும், அவருக்குப் போட்டியாக வருகிறேனே என்பதால் என் என்மீது ஆத்திரம்ட வரவில்லை. இது எதுவுமே இல்லை. பின் கோபத்திற்குக் காரணம்? அவர் வளர்க்க விரும்பும் புரோகித இனத்தை நான் வேரோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் அந்நஜாத் மாத இதழை வெளியிடுவதால், என்னைப் பற்றிய பொய்ச் செய்திகள் மூலம் தவறான எண்ணம் மக்கள் மனதில் பதிந்து என்னையும், எனது பேச்சையும், எழுத்தையும் மக்கள் வெறுக்க வேண்டும். எனது புரோகித ஒழிப்பு முயற்சி கைகூடாமல் போக வேண்டும் என்பதே அவரது குறிக்கோள. அதற்காக வேண்டியே இப்படி அவதூறுகளைப் பரப்பி வருகிறார். இதோ பொய்யன் பீ.ஜை. எழுதுகிறார் பாருங்கள்.

“நான் அபூ அப்தில்லாஹ்வை அப்பழுக்கு இல்லாதவன் என்று நீதிமன்றத்தில் கூறவில்லை.அவர் பரிசுத்தவான் என்றும் கூறவில்லை.
திருவாளர் பரிசுத்தத்தின்(?) நோக்கம் புரிகிறதா? அதாவது “1987லிலிருந்து 2010 இன்று வரை நான் அபூ அப்தில்லாஹ் பற்றி பரப்பிய பொய்கள், அவதூறுகள் இவற்றை நான் நீதி மன்றத்தில் மறுத்துக் கூறவில்லை. அப்படி அவதூறு பரப்பி வருவது உண்மைதான். ஆனால் சொத்து விஷயத்தில் பிரச்சனை இருந்தது என்றுதான் நான் கூறி இருக்கிறேன்” என்பதே பொய்யன் பீ.ஜை.யின் வாக்குமூலம்.

திருவாளர் பரிசுத்தம்(?) அவர்களே(?) சொத்து விஷயத்தில் பிரச்சினை இருந்தது என்று நீதிமன்றத்தில் கூறினேன் என்கிறீரே அதையாவது நான்கு நடுநிலையாளர்கள் முன்னால் நிரூபிக்கத்
தயாரா?

அப்படிநீர் நிரூபிக்க முன்வராதவரை நீர் அண்டப்புளுகன், ஆகாசப் பொய்யன், கடைந்தெடுத்த அயோக்கியன், மக்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றி வயிறு வளர்க்கும் வஞ்சகன், மார்க்க வியாபாரி, 1986-87களில் சமூகத்தில் ஏற்பட்ட பெரும் விழிப்புணர்வைக் கெடுத்து, சமத்துவ சமுதாயம் அமைவதைத் தடுத்து, நான்கு பிரிவுகளாக இருந்த சமுதாயத்தை பதினொரு பிரிவுகளாக்கிய மாயாவி, சண்டாளன், அபூ ஜஹீலின் வாரிசு என நான் கூறிவருவது அனைத்தும் 100% உண்மை என நீர் ஒப்புக் கொண்டதாகத்தான் சிறிது சுயமாகச் சிந்திப்பவனும் விளங்கிக் கொள்வான். நீர் பரப்பி வரும் அவதூறுகள், பொய்கள் பற்றி பொது மேடையில் சந்திக்கத் திராணி இருக்கிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
பொய்யன் பீ.ஜை. என்ற மன நோயாளி, மூளையற்றவன் என்னைப் பொய்யன் என்றும், மன நோயாளி என்றும் மூளையற்றவன் என்றும் எழுதி மகிழ்வடைகிறான். திருடன் மற்றவர்களைத் திருடன் என்றும், பொய்யன் மற்றவர்களைப் பொய்யன் என்றும் மன நோயாளி மற்றவர்களை மனநோயாளி என்றும் மூளையற்றவன் மற்றவர்களை மூளையற்றவன் என்றும் கூறி மகிழ்வது ஊரறிந்த உண்மைதான். இந்த அடிப்படையில் பொய்யன் பீ.ஜை. தனது பரிதாப நிலையை வெளியிட்டுள்ளான். யார் பொய்யன், மன நோயாளி, மூளையற்றவன் என்று சிறிது நோட்டமிடுவோம்.

1983-ல் நான் எதைச் சொன்னோனோ அவற்றில் எதையும் கூட்டாமல் குறைக்காமல், அந்தர்பல்டி அடிக்காமல் இன்று 2010 வரை கடந்த 27 வருடங்களாக கூறி வருகிறேன். சமுதாயத்தில் ஆலிம்-அவாம் என்ற வேறுபாடு – பிளவு இல்லை. மவ்லவி-ஆலிம் என்று பெருமை பேசுகிறவர்கள் அபூ ஜஹீல் வர்க்கம். சமுதாயத்தை ஆலிம் -அவாம் என்றும், மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள், அமைப்புகள் என பிளவுகளை – பிரிவுகளை உண்டாக்குவது எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக இருக்கின்றன. அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; ஆதத்தின் சந்ததிகள் அனைவருக்கும் சொந்தமானது.

அல்குர்ஆனை அனைத்து மக்களும் விளங்கும் நிலையிலேயே அல்லாஹ் இறங்கி அருளி இருக்கிறான். விளங்க மிக எளிதானது. தெளிவானது. நேரானது, கோணல்களோ, முரண்பாடுகளோ சிரமமானதோ இல்லை. அரபி மொழி கற்றவர்கள் மட்டுமே குர்ஆனை விளங்க முடியும் என்ற வாதம் அபூ ஜஹீலின், தாருந் நத்வாவினரின் வாதம். அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இப்புரோகிதர்கள் இடைத்தரகர்களாக வருவது 7:3, 33:36,66,67,68 இறைக் கட்டளைகள்படி கொடிய ஹராம். அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் எத்தகைய மவ்லவியோ, ஆலிமோ, அல்லாமாவோ வரவே முடியாது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாக நேரடியாக அல்குர்ஆனை, ஆதாரபூர்வமான ஹதீஸ்களை பார்த்து, சிந்தித்து, விளங்கி அதன்படி செயல்பட வேண்டும். “ஃபஸ்அலூ அஹ்லத்திக்ரி” என்று அல்குர்ஆனில் இருப்பதற்கு இந்த மவ்லவிகள் ஆலிம்களிடம் கேளுங்கள் என்று கூறுவது தவறு. அப்படியானால் “அஹ்லல் இல்மி” என்றிருக்க வேண்டும். இந்த மவ்லவிகள் கூறுவதை அப்படியே ஏற்று அதன்படி நடப்பதாக இருந்தால் “கல்லிதூ அஹ்லல் இம்மி” என்றிருக்க வேண்டும்.

அப்படி அல்குர்ஆனில் இல்லை. “ஃபஸ்அலூ அஹ்லத்திக்ர்” என்றே இருக்கிறது. இங்கு திக்ர் என்று குறிப்பிடப்படுவது அல்குர்ஆன், இன்ஜீல், ஜபூர், தவ்றறாத் போன்ற நெறி நூல்களையே, தெரியாத ஒருவுர் வந்து கேட்டால் இந்த மவ்லவிகள் அது பற்றிய குர்ஆன் வசனம், ஆதாரபூர்வமான ஹதீஸ் இவற்றையே எடுத்துக் கொடுக்க வேண்டும். மற்றபடி தங்களின் சொந்த கற்பனையில் உதித்த சரக்குகளையோ, கற்பனைகளையோ, பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையே எடுத்துக் கூறி அதன்படி மக்களை நடக்கச் செய்து அவர்களை நரகில் கொண்டு போய் தள்ளக் கூடாது. இவற்றையே கடந்த 27 வருடங்களாகத் தொடர்ந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் கூறி வருகிறோம். இப்போது நம்மை மனநோயாளி, பொய்யன், மூளையற்றவன் என்று கூறும் மன நோயான பொய்யன் பீ.ஜை.யின் கடந்த 25 வருட அந்தர் பல்டிகளையும், ஆகாசப் பொய்களையும் மூளையற்ற நிலையையும் பாருங்கள்.

1986ஏப்ரலில் அந்நஜாத் முதல் இதழ் வெளியானது. 1986 மே இரண்டாவது இதழில் எனது ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆக்கம் வெளியானது. அதை பீ.ஜை.யிடம் ஒப்படைத்தேன். எனக்குத் தெரியாமல் எனது அனுமதி இன்றி இரவோடு இரவாக அவரே ஆசிரியர் என்று போட்டு ஒரு முன்னுரையை சேர்த்திருந்தார். அதில் தராவீஹ் தொழுகையை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலும் இமாம்களின் முடிவுகளின் அடிப்படையிலும் ‘அறிஞர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஆராய்கிறார்” என்று எழுதி அச்சிலும் ஏறி என் பார்வைக்கு வந்தது. ஏன் பீ.ஜை. என்னிடம் கேட்காமல், “அறிஞர்” என்று போட்டீர்கள். நாம் வெளியிடும் பத்திரிகையில் நம்மை நாமே பீற்றிக் கொள்வதில் அர்த்தம் இருக்கிறதா? என்று கேட்டேன்.

சமுதாயத்தில் நடைமுறையில் இல்லாத ஒரு கருத்தை முதன்முதலாக எடுத்து வைக்கிறீர்கள். “அறிஞர்” என்று போட்டால்தான் அதற்கு வெயிட் இருக்கிறது மக்களும் ஆர்வமுடன் பார்ப்பார்கள் என்று தனது செயலை நியாயப்படுத்தினார். அப்போதே பீ.ஜை. ஆட்களின் மதிப்பு கெளரவம் படிப்பு இவற்றை வைத்து மார்க்கத்தைத் தீர்மானிப்பது தவறு. இதுவே தக்லீதுக்கு – கண்மூடிப் பின்பற்றலுக்கு வழி வகுக்கிறது. யார் சொன்னாலும் சொல்வது குர்ஆனில் நபி வழியில் இருக்கிறதா? என்று பார்த்து விளங்கி அதன்படி செயல்படுவதே சரியாகும். நேர்வழியாகும். நான் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் படித்திருந்தும் அதைப்போடுவதில்லை. ஹஜ் செய்திருந்தும் அதைப்போட்டுக் கொள்வதில்லை. இதுபற்றி 30.10.1984-ல் கிறித்தவ குருத்துவ மடத்தில் பேசும்போது தெளிவுபடுத்தியுள்ளேன். யாரை வைத்தும், எந்தப் பேரறிஞனை வைத்தும் மார்க்கம் இல்லை. மார்க்கம் குர்ஆன் ஹதீஸை கொண்டு மட்டுமே என்று ஆரம்பத்திலிருந்து தெளிவாகக் கூறி வருகிறேன் என்று அவருக்கு விளக்கினேன்.

1986வ் பீ.ஜை. என்னை “அறிஞர்” என்று குறிப்பிட்டு எழுதியது எனக்கு “ஐஸ்” வைத்து என்னைக் காக்கா பிடித்துச் சாதித்துக் கொள்ளும் சுயறல நோக்கத்துடனேயே என்பது 1987லிலேயே அம்பலமாகிவிட்டது.
இப்படி என்னுடன் பழக ஆரம்பித்தவுடனேயே என்னை ‘அறிஞர்” என்று குறிப்பிட்டவர் இன்று பொய்யன்,மனநோயாளி, மூளையில்லதாவன் என வாந்தி எடுத்துள்ளார் பீ.ஜை.

அந்நஸாத் ஜூன் 1986 இதழ் பக்கம் 2,3ல் “புரோகிதர் முறையை மாற்றியமைத்து மக்கள் தாங்களே தங்களின் தீனுடைய காரியங்களை நடைமுறைப்படுத்தும் நிலைமைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம். நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை” என்று எழுதியவர்தான் இன்று புரோகித இனத்தை நியாயப்படுத்தி ஆலிம்-அவாம் என சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார். புரோகித மதரஸாக்களை உருவாக்கி புரோகிதர்களை சப்ளை செய்து வருவதுடன் மக்களை இது விசயத்தில் தூண்டி கொள்ளை கொள்ளையாக வசூலும் செய்து வருகிறார். ஏகத்துவ மாத இதழ் டிசம்பர் 2009 தலையங்கமே இதற்கு ஆதாரம்.

அது மட்டுமல்ல, அதே இதழ் அதே பக்கம் 3-ல் “ஆனால் நான் இதற்காக ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவுமில்லை. வாங்குவதாகவும் இல்லை” என அண்டப்புளுகை கூறிவிட்டு சம்பளம், போனஸ், அன்பளிப்பு என 15 மாதங்களில் சுமார் 30 ஆயிரம் என வாங்கினார். ஒரு சகோதரர் விசயம் தெரிந்து பதிவுத் தபாலில் உண்மை நிலையை குட்டதற்குப் பதில் அளிக்காமல் ஊமை ஷைத்தானாக இருந்தார்.

ஜூன் 1986 இதழ் பக்கம் 35 தீர்ப்புகள் என அவரது பெயரிலேயே கஸர் தொழுகை பற்றி ஆய்வு செய்து ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தவர்.குறிப்பிட்ட அந்த ஹதீஸை வத்தே பேணுதல் என்ற பெயரால் 25 கிலோ மீட்டர் பயணம் செய்தால்தான் கஸர் செய்ய முடியும் என அல் ஜன்னத்தில் பல்ட்டி அடித்தார்.

அந்நஜாத் ஆகஸ்ட் 1986 பக்கம்12-ல் “எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை” என்று தெளிவாக எழுதியவர் தான் அந்தர்பல்ட்டிகள் பல அடித்து பல இயக்கங்கள் உருவாகக் காரணமாகவே இருந்து வருகிறார்.

அந்நஜாத் ஜன – பிப். 1987 பக்கம் 101-ல்
“நஜாத் வாட்சு ரிப்பேரர் சொன்ன அர்த்தங்கள் சரியில்லையாம்! எந்த அர்த்தம் சரியில்லை என்று புள்ளி விபரத்துடன் விளக்கம் தருவாரா? வாட்ச் ரிப்பேர் செய்து ஹலாலான முறையில் சாப்பிடக் கூடியவர் மார்க்கத்தைச் சொல்லக் கூடாதா? மார்க்கம் என்ன குடும்பச் சொத்தா? மக்களிடம் யாசகம் பெற்று தீனை அடகு வைப்பவர்கள் தான் மார்க்கத்தைச் சொல்ல வேண்டுமா?

இப்படி 1987-ல் சொன்னவர் 2010-ல் இன்று அபூ அப்தில்லாஹ் மனநோயாளி, அப்பழுக்குள்ளவர், அசுத்தமானவர் என்று கூறுகிறார் பொய்யன் பீ.ஜை. அன்று ரஹ்மத் ஆசிரியரை எதை வைத்து இகழ்ந்து பேசினாரோ அதே செயலை இன்று இவர் செய்கிறார். மக்களிடம் யாசகம் பெற்று தீனை அடகு வைக்கும் இவர் மட்டும்தான் நேர்வழியில் இருப்பதாகவும், மார்க்கத்தைச் சொல்லும் உரிமை பெற்றவராகவும் பிதற்றுகிறார். குர்ஆன், ஹதீஸுக்கு நாங்கள்தான் சொந்தக்காரர்கள் என 53:32, 4:49 இவற்றிற்கு முரணாகப் பீற்றுகிறார்.

அன்று : அந்நஜாத் ஜன.-பிப். 1987 பக்கம் 2 தலையங்கம் “அவதூறுகள் வசைமொழிகள், தனி நபர் விமர்சனங்கள், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள், எழுத்துக்கள் இவைகளை மூலதானமாகக் கொண்டு, மக்களின் அறியாமையில் குளிர்காய்ந்தவர்கள் தங்களின் பல முனைப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்தியத்திற்கெதிராகச் சுயநலவாதிகள் செயல்பட்டது போல், அதே வழிமுறைகளையும், அதே தந்திரங்களையும் கையாளத் துவங்கி விட்டார்கள். இதன் மூலம் திருகுர்ஆனின் இனிய போதனைகளை, திருத்தூதரின் அழகிய நடைமுறைகளை மக்களிடம் சென்றடையாமல் தடுத்து விடலாம் என்று கனவு காண்கின்றனர்.

இன்று: அந்நஜாத்தில் வரும் குர்ஆன், ஹதீஸ் போதனைகள் மக்களிடம் சென்றடையாமல் ததஜ தலைமைப் புரோகிதர் தடுத்து வருவது எதைக் காட்டுகிறது? அன்று புரோகிதத்தை எதிர்த்தவர் இன்று புரோகிதத்தை ஆதரிக்கிறார் என்பதுதானே! அந்நஜாத் தன் பணியைச் சரியாக நிறைவேற்ற வல்ல இறைவனை இறைஞ்சும்படி சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அன்று வேண்டியவர் இன்று அந்நஜாத் குர்ஆன், ஹதீஸை மட்டும் சொள்வதால், புரோகிதத்தை ஆதரிக்காததால் அதை ஒழித்துக்கட்ட படாதபாடு படுகிறார். அவதூறுகள் பரப்புகிறார். இப்படி எண்ணற்ற ஆதாரங்களை அந்நஜாத் 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரையுள்ள இதழ்களில் காட்ட முடியும். அந்நஜாத் 1986லிலிருந்து கொண்ட கொள்கையில் அணுவளவும் மாறாமல் உறுதியாக இருக்கிறது. பொய்யன் பீ.ஜைதான். அந்தர் பல்டி பல அடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள் மனநோயாளி, பீ.ஜை.யா? அபூ அப்தில்லாஹ்வா? பொய்யன் பீ.ஜை.யா? அபூஅப்தில்லாஹ்வா? இந்த அந்தர் பல்டிகள் எல்லாம் நம்முடன் மட்டும்தானா? நம்மிடமிருந்து விலகி இக்பால் மதனியுடன் ஐக்கியமானது என்னாயிற்று? ஆரம்பத்தில் அவரை எப்படிப் புகழ்ந்ததார்? பின்னர் எப்படி இகழ்ந்தார்? அதேபோல் கமாலுத்தீன் மதனி, சையது முஹம்மது மதனி, அப்துல் காதிர் மதனி, யூசுப் மிஸ்பாஹி, பஸ்லுல் இலாஹி, முஹ்யித்தீன் உலவி, ஹாமித்பக்ரி, முஜீர்புர்ரஹ்மான் உமரி, அப்துர் ரஹ்மான் மன்பீ, ஹைதர் அலீ, ஜவாஹிருல்லாஹ், பாக்கர் போன்ற நூற்றுக்கும் அதிக மானோர் பற்றி முன்னர் எப்படி வானளாவப் புகழ்ந்தார். பின்னர் எப்படிப்பட்ட இழிமொழிகளைக் கொண்டு இகழ்ந்தார் என்பதை நாடறியும், இவரை தெரிந்து கொள்ளுங்கள் மேலும் சி.டிக்கள் பொய்யன் பீ.ஜையின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களை அம்பலப்படுத்தி வருகின்றன.

முன்னர் பாக்கர் பற்றி கடலூரில் நூற்றுக்கும் அதிகமான கூட்டத்தில் பல குறைகளைச் சொல்லி விட்டு, பின்னர் கடலூர் சகோதரர்களோடு அப்படிக் கூறவில்லை என்று முபாஹலாவே செய்த யோக்கிய(?) சிகாமணி, பாக்கர் பற்றி குறை சொல்லவே இல்லை என்று முபாஹலாவே செய்த பொய்யன் பீ.ஜை. இப்போது பாக்கர் பற்றி என்னென்ன கூறித் திரிகிறார் என்பதையும் நாடறியும். இந்த நிலையில் பொய்யன் பீ.ஜை.யை நேர்வழி காட்டும் சத்தியசீலன் என்று குருட்டுத் தனமாக நம்பி அவர் பின்னால் செல்லும் கூட்டத்திற்கு சுய சிந்தனை இருப்பதாகவோ, உண்மையை உணரும் ஆற்றல் இருப்பதாகவோ, எண்ண முடியுமா? நபி(ஸல்) அவர்களது காலத்தில் அபூ ஜஹீலை நம்பி அவன் பின்னால் சென்றவர்களைவிட பரிதாபத்திற்குரியவர்கள். காரணம் பொய்யன் பீ.ஜை.யே தன்னை அபூ ஜஹீலை விடக் கொடியவன் என்று அவரே அடையாளம் காட்டியதையும் அவரின் முன்னாள் சஹாக்கள் அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

“அல்லாஹ் பல சந்தர்ப்பங்களில் நினைத்துப் பார்க்காத வகையில் எனக்குப் பேரருள் புரிந்துள்ளான். அதுபோல் இப்போதும் பேரருள் புரிந்தான்” என்று பொய்யன் பீ.ஜை. பீற்றிக் கொள்கிறார். ஆம்! மார்க்கத்தை நன்கு விளங்கிய பின்னர் பேர், புகழ், பதவி, மோகம், உலக சக வாழ்க்கை இவற்றையே குற்றச் சாட்டுகள் என பாவங்களிலேயே மூழ்கி இருக்கும் பொய்யன் பீ.ஜை.யை அல்லாஹ் விட்டுப் பிடிப்பது எதற்காக என்பதை 2:200, 4:115, 7:175-179, 43:33-35, 47:25, 23:52லிருந்து 56 வரை போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த வசனங்கள் எல்லாம் காஃபிர்களுக்காக இறங்கியது எனப் பல புரோகிதர்கள் தங்களை நம்பி தங்கள் பின்னால் வருபவர்களை ஏமாற்றி வருவது போல், பொய்யன் பீ.ஜை. புரோகிதனும் தன்னை நம்பி தன் பின்னால் வருபவர்களை ஏமாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

“குற்றவாளிக் கூண்டிலும் நிற்கவில்லை. சத்தியப் பிரமாணமும் எடுக்கவில்லை” என பொய்யன் பீ.ஜை. உணர்வில் எழுதி இருப்பதை ஆதாரமாக வைத்தே அவரது பொய் வாக்குமூலம் செல்லாது என்று வழக்குத் தொடர முடியும். அது சரி வாக்குமூலம் கொடுத்த 21.11.2009 சனியன்று கரண்ட் கட்: வேறு வழி இல்லாமல் சேம்பரில் அன்று முழுவதும் விசாரணை நடந்தது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனப் பீற்றிக் கொள்வது போல் பீற்றிக் கொள்கிறார். 24.11.2009 செவ்வாய் அன்று கரண்ட் இருக்கவே கோர்ட் வளாகத்தில் வைத்து தீர்ப்புச் சொல்லாமல் அதே சேம்பரில் வைத்தே தீர்ப்புச் சொல்லப்பட்டது. அதுவும் பென்ச் கிளார்க்கே தீர்ப்பை வாசித்தார். 161படி விசாரித்து போலீஸ் அதிகாரி அவரே எழுதாமல் அவருக்குக் கீழ் இருந்த ஆய்வாளரைக் கொண்டு எழுதப்பட்டதை ஏற்க முடியாது என வாதிட்டவர். இதற்கு என்ன சொல்வார் பொய்யன் பீ.ஜை.? நான் பீ.ஜை. மீது வழக்குத் தொடர்ந்தது 2002-ல் பீ.ஜை. 24.3.99, 161 விசாரணை அடிப்படையில் கோர்ட்டில் ஆஜராகி, குறுக்கு விசாரணைக்கு ஆளானது 26.2.2004ல் திருச்சியில் இது பற்றி தன் மீது வழக்கு நடக்கிறது. நீதிமன்றத்தில், தான் 24.3.99-ல் வாக்குமூலத்தில் சொன்னதையே சொன்னால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அந்தர்பல்டி அடித்து பிறழ் சாட்சியாகி ‘நஜாத் பத்திரிக்கையை விட்டு நான் விலகியதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றி போலீசாரிடம்ட தெரிவித்தேனா இல்லையா என்பது தற்போது நினைவில் இல்லை”…. “நஜாத் பத்திரிக்கையை விட்டு நான் விலக பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம் அந்த பத்திரிகையின் பொருளாளர் ஒரு சொத்து வாங்கியது தொடர்பாக எனக்கும் அவருக்கும் எழுந்த கருத்து வேற்றுமையாகும். பத்திரிகையில் பணியாற்றும்போது அதன் பொருளாளர் தன் பெயரில் சொத்து வாங்கியதும் எங்களுக்குள் பிரச்சினையும், கருத்து வேற்றுமையும் எழக் காரணமாயிற்று” என்று கூறியது கோர்ட்டில் பதிவாகியுள்ளது.

இந்த வாக்குமூலம் உள்ள சான்றிட்ட நகல் ம.சா.ஆ. 9 ஆக திருச்சி கோர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையில் நீதிபதி முன் அளித்த விசாரணை, குறுக்கு விசாரணையின்போது பொய்யன் பீ.ஜை. “நஜாத் பத்திரிகையை விட்டு நான் விலக பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணமட் அந்த பத்திரிகையின் பொருளாளர் ஒரு சொத்து வாங்கியது தொடர்பாக எனக்கும் அவருக்கும் எழுந்த கருத்து வேற்றுமையாகும். பத்திரிகையில் பணியாற்றும் போது அந்த பொருளாளர் தன் பெயரில் சொத்து வாங்கியதும் எங்களுக்குள் பிரச்சினையும், கருத்து வேற்றுமையும் எழக் காரணமாயிற்று” என்று பகிரங்கமான பொய்யயைக் கூறியுள்ளார்தானே.

அவர் கோவையில் நீதிபதி முன் நான் என் பெயரில் சொத்து வாங்கியதாகச் சொல்லியதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி என் பெயரில் வாங்கிய சொத்து எது? எந்த பதிவு அலுவலகத்தில் என்ன தேதியில் பதியப்பட்டது என்பதைப் பகிரங்கமாக அவரது உணர்வு இதழில் வெளியிட்டு தன்னுடைய உண்மை நிலையை மக்களுக்கு அறியத்தரட்டும். அப்படி உணர்வில் வெளியிடத் தவறினால், நான், பொய்யன் பீ.ஜை. அண்டப் புளுகன், ஆகாசப் பொய்யன், அவதூறு மன்னன், 1987லிருந்து சமுதாயத்தை மேலும் மேலும் பிளவுபடுத்திய மாபாவி, சண்டாளன் என்று கூறி வருவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

கோவை, கோர்ட்டில் மேலே கண்டபடி வாக்குமூலம் கொடுத்தவர் இப்போது கள்ள வலைதளத்திலும், அபகரிக்கப்பட்ட உணர்வு இதழிலும் என்ன எழுதியுள்ளார். தான் கோவை நீதிமன்றத்தில் நீதிபதி முன் கொடுத்த வாக்குமூலத்தை மறைத்து ‘நஜாத் பெயரில் சொத்து வாங்கியது தொடர்பாக பிரச்சனை வந்தது. அதுவும் நஜாத் பத்திரிக்கையில் இருந்து விலகக்காரணமானது” என்று பொய்யாக எழுதியுள்ளார். பொய்யன் பீ.ஜை. இப்போது உணர்வில் எழுதியுள்ளதையாவது நான்கு நடுநிலையாளர்கள் முன் அவரால் நிரூபிக்க முடியுமா? உண்மையாளர் என்றால், மூளையுள்ளவர் என்றார், திராணி இருந்தால் முன் வரட்டும்.

வழக்கில் பொய்யன் பீ.ஜை. வென்று விட்டதாகவும், நான் பொய்யன் என்று நீதிபதி தீர்ப்பு அளித்துவிட்டார் என தம்பட்டம் அடிக்கிறார். கோர்ட் தீர்ப்பின் முக்கிய பகுதியைப் பாருங்கள். இந்நிலையில் எ.சா.1 ஆக விசாரிக்கப்பட்ட எதிரி அவரது சாட்சியத்தில் அந்நஜாத் பத்திரிகைக்காக வாங்கப்பட்ட இடத்தை அதன் பொருளாளரான ம.சா.1 தனது பெயரில் பதிவு செய்து கொண்டதால் அப்பத்திரிகையிலிருந்து வெளியேறி விட்டதாக கோவை குண்டு வெடிப்பு வழக்கில் புலனாய்வு அதிகாரியிடம் தான் எந்த வாக்மூலமும் கொடுக்கவில்லை என்று தெளிவுபட கூறியுள்ளார்.

எ.சா.1ன் மேற்படி சாட்சியம் ம.சா.1ன் தரப்பில் எதிர்க்கப்படவில்லை. எனவே ம.சா.1ன் எதிர்க்கப்படாத சாட்சியம் ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியம் ஆகும்.
விசயம் புரிகிறதா? எனது வக்கீல் பொய்யன் பீ.ஜை.யை குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந்தால் பொய்யன் பீ.ஜை.யின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில் ஏறி இருக்கும். அதற்குரிய அவர் கைப்பட எழுதிய கடிதங்களே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனது வக்கீல் குற்றம் சாட்டப்பட்ட பொய்யன் பீ.ஜை.யை குறுக்கு விசாரணை செய்ய மறுத்தது ஏன் என்பது பொய்யன் பீ.ஜைக்கு தெரிந்த இரகசியமாகும்.

நீதிமன்றத்தில் பீ.ஜை.யின் நேரடி வாக்குமூலம் எனது வக்கீலால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு மறுக்கப்படாததால், அது ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியம் ஆவது போல், மக்கள் மன்றத்தில் நேரடியாக ஆஜராகி எனது குற்றச்சாட்டுக்களை பொய்யன் பீ.ஜை. மறுக்காதவரை அக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஏற்கத்தக்கவை-உண்மை என்பதில் சந்தேகமுண்டா? அவரால் இதை மறுக்க முடியுமா?

பொதுமக்களும், அவரது குருட்டுப் பக்தர்களும் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.அல்குர்ஆன் 4:112 கூறுவது போல் தான் செய்யும் அனைத்துக் குற்றங்களையும் மற்றவர்கள் மீது சர்வசாதாரணமாகத் தூக்கிப் போடுகிறவர் பொய்யன் பீ.ஜை.பொதுச் சொத்தை எனது பெயரில் பதிவு செய்து கொண்டதாகக் கடந்த 23 வருடங்களாக அவதூறு பரப்புகிறவர் எத்தனைப் பொதுச் சொத்துக்களை தனது பெயரிலும், தனது கைத்தடிகளின் பெயரிலும் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பதற்குத் ததஜவிலிருக்கும் அவரின் பக்தர்களில் சிலரே தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டவுடன் சுமார் ஏழு பொதுச் சொத்துக்களைப் பொய்யன் பீ.ஜை. அபகரித்து வைத்திருக்கிறார் என பகிரங்கமாக நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். விரும்புகிறவர்கள் நாச்சியார் கோவில் திருநரையூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு, துபை 050-3448322/0509737002, 055-3073765 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு பொய்யன் பீ.ஜை.யின் பொய் முகத்தை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, 15 மாதங்கள் நான் அவருடன் தங்கி, பிரயாணம் செய்து, கொடுக்கல் வாங்கல் செய்து அறிந்து கொண்ட துணிந்து பொய்கள் கூறும் புத்தியை, சூழ்ச்சி செய்யும் புத்தியை, பேர் புகழில் ஆசை கொண்ட புத்தியை, பொறாமை கொள்ளும் புத்தியை, பேர் புகழில் ஆசை கொண்ட புத்தியை, பொறாமை கொள்ளும் புத்தியை, இன்னும் பல இழி குணங்களை அறிந்து கொண்டது போல், தொழுகையற்ற, நோன்பற்ற பெரும்பாவி என அறிந்து கொண்டதை, பல வருடங்கள் பழகிய முன்னாள் சகாக்கள், தற்போதைய சகாக்கள் என அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள்.

பொய்யன் பீ.ஜை.க்கு அல்லாஹ்வைப் பற்றியோ, மறுமையைப் பற்றியோ உண்மையான நம்பிக்கை இருக்கிறதா என்பது ஐயத்திற்குரியதே. அல்லாஹ் அல்குர்ஆன் 49:14, 2:8-20 இறைவாக்குகளில் கூறி இருப்பதற்கு ஒப்ப அவரை இவ்வுலகில் முஸ்லிமாக ஏற்றுக் கொள்ள மட்டுமே கடமைப்பட்டிருக்கிறோம். இப்படி ஏன் சொல்கிறோம் என்றால் அல்லாஹ்வையும், மறுமையையும் பற்றி உறுதியான நம்பிக்கை இருக்கும் எவரும் இப்படித் துணிந்து பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, அல்லாஹ் மீது ஆணையிட்டே பொய்களையும், அவதூறுகளையும் அவிழ்த்து விடுவது, பரப்புவது முபாஹலா செய்வது ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

1959 லிலிருந்து இன்று 2010 வரை கடந்த 51 வருடங்களாக தர்கா மவ்லவிகள், தரீக்கா மவ்லவிகள், மத்ஹபு மவ்லவிகள், பரேல்வி மவ்லவிகள், தேவ்பந்த் மவ்லவிகள், ஸலஃபி மவ்லவிகள், மதனிகள், இந்தியாவில் தமிழகம், கேரளா, டெல்லி, மேவாத், குஜராத், இலங்கை என பல தரப்பு மவ்லவிகளுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அவர்களிடம் பல தவறான கொள்கைகள், செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் இவற்றை எல்லாம் கவனித்திருக்கிறேன். ஆனால் பொய்யன் பீ.ஜை.யைப் போல் இழி குணங்களைக் கொண்ட பிரிதொருவரை நான் வாழ்நாளில் சந்தித்ததில்லை. வாக்களித்து, நம்பிக்கையூட்டி கழுத்தறுத்தவரைக் கண்டதில்லை.

1985ல் முதன்முதலாக பீ.ஜை.யை கோவையில் சந்தித்த ஒரு சகோதரர் “இவர் கரும் பாப்பானைப் போல் இருக்கிறார். கரும் பாப்பானையும், பாம்பையும் கண்டால் முதலில் கரும் பாப்பானையே கொல்ல வேண்டும். பாம்பு விஷத்தை விட கொடித விஷமுடையவன் கரும் பாப்பான’” என்றார். 1985-ல் இதைப் பெரிதாக நான் நினைக்கவில்லை 1987லிலேயே அந்த சகோதரர் சொன்னது உண்மை என நான் அறிந்து கொண்டேன்.

எங்களுக்கு இஸ்லாம் அல்லாத இயக்கம் இல்லை என்று 1986-ல் தெளிவாக அறிந்து அறிவித்தவர். இன்று அபூ அப்தில்லாஹ் இயக்கமே இல்லாமல் செயல்படச் சொல்கிறார். இது நடைமுறைச் சாத்தியமா என அவரது குருட்டு பக்தர்களை ஏமாற்றி வருகிறார். அல்லாஹ்வும் அவனும் தூதரும் இந்த சமுதாயத்திற்குக் கருணையுடன் கொடுத்தருளிய உலகளாவிய பேரியக்கமான ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அதுவும் பிரிவு ஜமாஅத்துதான். அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் எனக் கூறித் தனது பக்தர்களை ஏமாற்றி வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்.

ததஜ தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான் குர்ஆன், நபிவழியில் உள்ளதுபடி நேர்வழியில் இருக்கிறது. மற்ற முஸ்லிம்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். குஃப்ர், ஷிர்க்கில் இருக்கிறார்கள், அவர்கள் பள்ளிகள் அனைத்தும் மஸ்ஜிதுல்ழிராரைச் சேர்ந்தவை. நமது பள்ளிகள் மட்டுமே தவ்ஹீத்-ஏகத்துவப் பள்ளி என பிதற்றுகிறாரே, இந்த தவ்ஹீதுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஒரேயொரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? நிச்சயமாகக் காட்ட முடியாது.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்-ஏகத்துவ வாதிகளின் ஜமாஅத் எனக் கூறுவது தர்கா, தரீக்கா, குஃப்ர், ஷிர்க்கில் மூழ்கி இருப்பதை விட மிக மிகக் கொடிய குஃப்ர், ஷிர்க்கை ஏற்படுத்துவது என்பதற்கு நம்மால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் காட்ட முடியும்.

தவ்ஹீத்வாதி – தவ்ஹீத் ஜமாஅத் என முஸ்லிம் சமுதாயத்திலிருந்து பிரித்துக் காட்டுவது, நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம் என பெருமை பாராட்டுவது 53:32, 4:49, 42:21, 49:16, 3:103,105, 6:153, 159, 30:32, 42:13,14, 49:14, 2:8-20 போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்கினால், அதாவது மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மார்க்க வியாபாரிகளான இந்தப் புரோகித மவ்லவிகளின்(?) சுய விளக்கம் எதையும் ஏற்காமல், மேலே குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களையும், “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பற்றிய ஆதாரபூர்வமான ஹதீஸையும், “யார் நமது தொழுகையை தொழுகிறாரோ, நமது கிபுலாவை முன் நோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம்: முஸ்லிம்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவருக்கும் உண்டு” என்ற ஹதீஸையும் படித்து விளங்குகிறவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் தவ்ஹீத்வாதி என்று கூறுவது கொடிய கு.ஃப்ரையும் அதாவது நிராகரிப்பையும், கொடிய ஷிர்க்கையும் அதாவது அல்லாஹ்வுக்கு இணை வைத்தலையும் ஏற்படுத்தும் என்பதைத் தெளிவாக விளங்க முடியும்.

தர்கா, தரீக்கா சம்பந்தப்பட்ட குஃப்ர், ஷிர்க்கை அவர்கள் குர்ஆன், ஹதீதை மட்டும் கொண்டு நிலைநிறுத்தவில்லை. காரணம் அது சத்தியமில்லை. அதனால்தான் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகிய நான்கும் மார்க்க அடிப்படை ஆதாரங்கள் என சாதிக்கிறார்கள்.

அதற்கு மாறாக தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் எனப் பீற்றுவோர் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயளவில் பீற்றிக் கொண்டு குர்ஆன், ஹதீஸ், லாஜிக், பாலிஸி என்ற நான்கைக் கொண்டு செயல்பட்டு வழிகேட்டில் செல்கிறார்கள்.

அப்படியானால் தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் என தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது தர்கா, தரீக்கா, சடங்குகளில் ஈடுபடுபவர்களின் குஃப்ர், ஷிர்க்கை விட மிகக் கொடிய குஃப்ர், ஷிர்க்கை ஏற்படுத்துவதாகும் என்பதை சுய சிந்தனையாளர்கள் விளங்க முடியும். பொய்யன் பீ.ஜை. பின்னால் கண்மூடிச் செல்பவர்கள் விளங்குவது ஒருபோதும் சாத்தியமில்லை. அவர்கள் சுயமாகச் சிந்தித்தால் அல்லவா விளங்கப் போகிறார்கள். அவர்கள் தான் சிந்திப்பதற்கே தயாரில்லையே. சிந்திக்கத் துணியாதவர்கள் எப்படி நேர்வழி பெற முடியும்?

ஆனால் நாம் மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மார்க்க வியாபாரிகளான இந்தச் சுயநலப் புரோகித மவ்லவிகளின் சுயவிளக்கங்களை நிராகரித்து நேரடியாகப் படித்து, சிந்தித்து விளங்குவார்களானால், தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனத் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது தர்கா, தரீக்காகாரர்களின் குஃப்ர், ஷிர்க்கைவிட மிகமிகக் கொடிய குஃப்ர், ஷிர்க் என்பதை விளங்க முடியும்.

தர்கா, தரீக்கா குஃப்ர் ஷிர்க்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் தவ்ஹீத்வாதிகள் என தங்களைத் தாங்களே கூறிக் கொள்கிறவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தையே தங்கள் கையில் எடுக்கிறவர்கள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை அல்லாஹ் மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கிறான். அந்த அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்கிறவர்கள் அல்லாஹ்வுக்கு இணையான அல்லாஹவாகிறார்கள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை அல்லாஹ் மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கிறான். அந்த அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்கிறார்கள் அல்லாஹ்வுக்கு இணையான அல்லாஹ்வாகிறார்கள் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறும் நூற்றுக்கும் மேலான இறைவாக்குகளை நிராகரித்து, ஷிர்க்கில் மூழ்கும் கொடிய செயல் என்பதை அறிய முடியாதவர்கள் தர்கா, தரீக்காகாரர்களைவிட பெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா? பதில் எங்கே?

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::