Tuesday, February 16, 2010

பழனிபாபா

தேதி 01- 08- 1996

என் இனிய தோழர்களே!

நீண்ட நெடுநாளுக்குபின் உங்களுடன் பொது தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது இந்த தொடர்பறுந்த இரண்டு ஆண்டுகளுக்குள் என்மீது பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் பல அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர்.

எல்லாமே ஆதாரங்கள் இல்லாத அவதூறுகள்

ஃபஸாத் கொலையைவிட கொடியக் குற்றம்- (அல் குர் ஆன்) என்று திருமறை கூறியும் அதன் வழியில் நடப்பதாக மார்த்தட்டும் சிலர் அதற்கு முரண்பட்ட வேலைகளையே செய்து வந்துள்ளனர்.


முதல் குற்றச்சாட்டு தடாசிறைவாசிகள்

தடா கைதிகளுக்கு என்று பல லட்சம் ரூபாய் வசூலித்து அதை அவர்களுக்கு தராது உல்லாச வாழ்வு வாழ்கிறேனாம்.

இதில் துளியளவேனும் ஆதாரம் உண்டா? ஒரு லட்சரூபாய் முழுமையாய் தந்த எவராவது ஒரு நபரின் விலாசத்தை சொல்ல முடியுமா?

உண்மையான நிலவரம் என்னவென்று ஏற்கனவே அனுப்பிய சுற்றறிக்கையில் (ரமலானின் போது) தெளிவாக கூறியுள்ளேன்.

சென்ற ரமலானுக்குமுன் சட்டப்பாதுகாப்பு நிதி கேட்டு ஒரு சுற்றறிக்கை தயார் செய்து அதை 10,000 நகல் எடுத்து நமது தோழர்கள் உள்நாடு வெளிநாடு என்று அனைவருக்கும் தபாலில் அனுப்பினேன்.

வெளிநாட்டு சந்ததாரர் விலசங்களை வைத்து 3716 பேருக்கு ஒரு கவருக்கு ரூ13/- (பதிமூன்று) தபால்தலை ஒட்டினேன். மொத்தம் ஸ்டாம்பு செலவே 3716 x 13 = ரூ48308/-. இதர செலவுகள் உள்பட சுமார் ரூ 50,000. செலவிட்டு காத்திருக்க காத்திருக்க வந்தது ஊதியத்தை உதிரக் காணிக்கையாக்கிய உத்தமர்கள் அனுப்பியது ரூ 22,545 (இருபத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று நாற்பத்து ஐந்து மட்டுமே)

இதில் இமாம் அலியின் சகோதரி பிரசவத்துக்கும் மருந்துக்கும் அறுவைசிகிச்சைக்கும் என சுமார் ரூ15,000மும் ரபிக்பாய் வீட்டுக்கு மீதியையும் தந்தேன்.

மேலே உள்ளது ஒருதுளி மட்டுமே. ஆனால் புதிதாக கிளம்பி உள்ள முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கிளப்பிய வதந்தியோ பலகோடி வசூலித்து விட்டேன் என்று தடா சிறைவாசிகளிடம் கூறி அவர்களும் அதை நம்பி 6 பேர் கைப்பட கடிதம் எழுதி அதையும் ஊர் முழுக்க வினியோகித்து உள்ளனர்.

ஏற்கனவே சென்னை சிறையில் உள்ளவர்கள் 3 அணிகளாக உடைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்று P.J கோஷ்டி, மற்றொன்று பாஷா கோஷ்டி, இன்னொன்று பாபா கோஷ்டி

ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு TOO MANY COOKS WILL SPOIL THE SOUP பலசமயற்காரனும் பண்ணாட்டு பண்ணி பண்டத்தை கெடுத்த கதையானது.

ஆரம்பத்தில் கோவை + சென்னை சிறைவாசிகள் அனைவருக்குமே நானே எனது சொந்த செலவில் சில திறமையான அதுவும் தடா வழக்குகளில் (ராஜிவ் காந்தி, பத்மநாபா கொலைவழக்குகளில்) ஆஜராகி அனுபவப்பட்ட எக்ஸ்பர்ட் வக்கில்களாக பார்த்து பீஸ் கொடுத்து நியமித்தேன் 6 மாதமானபின்பு திடீரென்று நஜாத் பிரிவினர் அரசியல் பிரவேசம் என்று களம்புகுந்தனர். முதலில் அவர்கள் எடுத்த எடுப்பில் ஒருமுதலீடு செய்ய சில தடா சிறைவாசிகளை தத்து எடுத்தனர்.

ஆந்திராவிலிருந்து ஒரு வக்கீல் நியமித்தனர். என்னை கலந்து ஆலோசிக்காமலே திடீரென்று திறந்த கோர்ட்டில் வக்கீலை மாற்றுவதாக கூறினார்கள். அதனால் நான் வைத்த ஏற்கனவே வக்காலத்து போட்ட வக்கீல்களுக்கு பேருத்த அவமானம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வக்காலத்துக்களை வாபஸ் பெற்றனர்.

CBIஎதை நினைத்ததோ அது அப்படியே நிறைவேறியது.

கூட்டாக ஒரு JOINT EFFORT ஒரு குழுவின் கூட்டு அமைப்பு மூன்றாய் உடைக்கப்பட்டது.

இது கிரிமினல் வழக்குகளில் வழக்கமாய் CBI கடைபிடிக்கும் ஒரு தந்திரம். ஒரே அமைப்பாய் ஒரே குழுவாய் செயல்பட்டாலொழிய கொலை வழக்குகள் வெற்றி பெறுவது கடினம். மத்திய CBIயும் CBCIDயும் (மாநில புலனாய்வு) செய்த சதிக்கு அப்பாவி சிறைவாசிகள் அறியாமலே பலியாயினர்.
இன்று 4 வழக்கறிஞர் குழுக்கள் தனித்தனியே செயல்படுகிறார்கள். நான்கு குழுக்களும் கலந்து ஆலோசிக்காது அவரவர் போக்கில் யார் பெரியவர் என்று காடிக்கொள்வதில்தான் காலம் கடக்கிறது.

கோவை பாஷா குருப் சில வக்கீல்களையும் ரஹீம் அஸ்லம் இரு வக்கீல்களையும். நான் ரபீக் அஹமது, இமாம் அலி, ஷகாபுதீன், அமினுதீம், ஷரிப் ஆகிய ஐந்துபேர்களுக்கும் ஆரம்பத்தில் வைத்த(ராஜீவ் கொலைவழக்கு நடத்தி வரும்) அதே வக்கீல்களையும், ஹைதரலிக்கு அரசு இலவச வக்கீலையும் வைத்தது.

இந்த 4 வக்கீல்களுக்கும் தெரியும் தனித்தனியே வழக்கை நடத்தினால் நிச்சயம் வழக்கு நாஸ்த்தி ஆகிவிடும். எனவே நடந்தது நடந்து விட்டது வக்கீல் S துரைசாமி அவர்கள் தலைமையில் கலந்து ஆலோசித்து கூட்டாய் செய்ய வேண்டும் என்று எண்ணி நானே முன்னின்று 4 வக்கீல் குழுக்களையும் ஒன்றுகூட வைத்து திரு துரைசாமி அவர்கள் அலுவலகத்தில் கூடி பேசி முடிவெடுத்தோம். ஆனால் நஜாத்காரர்களின் தலையீட்டில் அதுவும் முரண்பாடுக்கு உள்ளானது.

எனக்கு வேதனையாக இருக்கிறது பல வழக்குகளை சுமார் 30 ஆண்டுகாலம் நடத்தி வரும் என்போன்ற சட்ட அனுபவமுள்ளவருக்கு இதன் கஷ்டம் + நஷ்டம் புரியும் "கைர்" அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய நான் என் வழிக்கு யார் ஒத்துப்போகிறார்களோ அவர்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு மீதி உள்ளவர்களைவிட்டு நான் விலகிக்கொண்டாலும் கண்காணிக்க தவறாதவனாகவே இன்றளவும் உள்ளேன்....

ஏற்கனவே ரமலானுக்கு முன் அனுப்பிய தடாகைதிகளில் இமாம் அலி ரபிக்பாய் அஸ்லம் ஷகாபுதீன் அமீனுதீன் ஆகியோருக்கு மட்டுமே நான் உதவுவதாக கூறியுள்ளேன்...

இன்றுள்ள நிலையில் தீடீரெம்று மார்தட்டும் சில அமைப்புகள் குறிப்பாக தடாகைதிகளை நாங்கள் தான் ஜாமீனில் எடுத்தோம் என்று கூறி அதையே முதலீடாக்கி பிழைப்பு நடத்துவதுடன் இல்லாது ஜிஹாத் தோழர்களையும் குழப்ப ஆரம்பித்தனர்- பலர் எனக்கே கடிதமும் எழுதி உள்ளனர். அதனால் ஒரு தன்னிலை விளக்கமளிப்பது நலமாயிருக்கும் என்று பல நல்ல நண்பர்கள் வேண்டிக் கொள்ளவே நானும் இதை கூற முற்படுகிறேன்.

இந்த மூன்று பிரிவு தடா கைதிகளில் 3வது வகையினர் நெடுநாள் சிறையில் இருந்தால் அவர்களை தடா நீதிபதியே கண்டிஷன் பெயிலில் குற்றத்தன்மையைப் பொறுத்து இடைக்கால ஜாமீனில் விடவேண்டும் என்று 3 மாதம் முன்பு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பென்ச் ஒரு தீர்ப்பை நல்கி உள்ளது.

அதன் அடிப்படையில் தான் இந்த 3வது பிரிவிலுள்ள குறைந்த அளவு குற்றத்தன்மை பிரிவுகளுக்கு உட்பட்டவர் ஜாமின் பெறுகிறார்கள். இதன் தீர்ப்பிலும் வழக்கு வாதாட்டத்திலும் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரியும். (இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பம்பாய் சிறைவாசிகளுக்கு பொறுந்தாது என்றும் அதே தீர்ப்பில் ஒரு வரி உள்ளது)

இதை பெரிதாக்கி ஏதோ செய்யவே முடியாததை செய்து விட்டதாக த.மு.மு.க தம்பட்டம் அடித்துக் கொண்டது. நகைப்பிற்குறிய முனாபிக்தனம்.

இதே த.மு.மு.க ஏன் கோவை சிறைவாசிகளுக்கு ஜாமீன் கேட்டு எடுக்கவில்லை. கோவை தடாகைதிகள் எந்த கொடுஞ் செயலையும் செய்யாதவர்கள் சென்னை தடா சிறைவாசிகளாவது ஒரு குண்டு வைத்து 11 பேர் மரணமடையச் செய்த கொலைபாதகத்தை செய்த தீவிரவாதிகள் (அப்படித்தான் CBI கூறியுள்ளது) என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

ஆனால் கோவை தடாசிறைவசிகள் குற்றம் ஏதையாவது செய்யக்கூடும் என்று கருதப்பட்டு கடுங்காவலில் வைக்கப்பட்டவர்கள். உலகிலேயே குற்றமே செய்யாது குற்றச்சம்பவமே ஏதும் நடக்காதபோது நடத்திவிடக்கூடும் என்று கருதி காவலில் தடாவில் சிறைவைக்கப்பட்ட கொடுமை கோவையில் தான் நடந்தது அதுவும் முஸ்லீம் இளைஞர்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டது.

இதை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டுவந்திருக்கலாம் (உதாரணமாக தாராபுரத்தை சார்ந்த ஒரு இளைஞரையும் ஈரோட்டை சார்ந்த ஒரு இளைஞரையும் ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற ஆறு மாதத்தில் தடாவில் கைது செய்து சென்னை சிறைக்குள் வைத்தது. அந்த இருவரையும் விடுவித்து (3மாதத்தில்) நமது முக்குல முரசு பத்திரிக்கையில் போட்டதை நினைவு கூர்க)

ஆனால் கோவை சிறைவாசிகள் நாம் வைத்த வக்கீல்களை நிராகரித்து விட்டு நஜாத் ஆட்களோடு சேர்ந்து கொண்டு நமக்கு ஒத்துழைக்க மறுத்த போது அவர்களையும் ஒதுக்கி விட வேண்டிய சூழ்நிலை வந்தாலும் அவர்களையும் வுடுவிக்க வேண்டும் என்று தற்போதைய மாநில அரசுக்கு பல்வேறு முறைகளில் எடுத்துக்கூறி வருவதை நான் நிறுத்தவில்லை என்பதையும் பணிவுடன் கூறிக் கொள்கிறேன்.

இதில் உள்ள வேறுபாட்டைக் கூர்ந்து கவனிக்கவும்:-

கோவை சிறைவாசிகள் - மாநில அரசு

சென்னை சிறைவாசிகள் - மத்திய CBIயால் சிறைப்பட்டவர்கள்.

இந்த சிறைவாசிகளின் புரிவின்மையாலும் ஒத்துழைப்பின்மையாலும் அழக்கு நசிவடைவதாலும் நான் பட்ட மனக்கஷ்டமும் பிறகஷ்டன்ங்களும் கொஞ்ச நஞ்சமல்ல அத்தனையும் விரிவாய் எழுத இது தருணமும் இல்லை.

இதுதான் சுருக்கமாக சொல்ல முடிந்தது. இதுதான் அல்லாஹ் மீது ஆணையாக நடந்த உண்மைகள். நிலைமை இவ்வாறு இருக்க என்னை கண்டு பேசியே இராத என்னோடு பழகியே இராது சிலர் வீண்வதந்திகளை கிளப்பி விட்டு விட்டதுடன், நான் ஆடம்பர வாழ்வு வாழ்வதாகவும் மார்க்கத்துக்கு புறம்பான வாழ்வு வாழ்வதாகவும் சில சிறைவாசிகளைவிட்டு எழுதி அதை வினியோகித்தும் வருகிறார்கள்.

அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் 6 பேர்களில் பாஷாவை தவிர மற்ற 5 பேர்களை அதற்கு முன் கண்டது கூட கிடையாது. அவர்களும் வெளியில் இருக்கும்போது என்னோடு ஒரு நிமிடம் கூட பழகியவர்கள் அல்ல சிறைக்குள் இருப்பவர்களுக்கு எப்படி வெளியில் நடப்பதை அறிய முடியும்? கண்ணில் பார்காது அபாண்ட பழி கூறுபது முறையா? அவர்களுக்கு தெரியும் நான் அப்படிப்பட்டவனல்ல என்று பின் யார் தூண்டி எழுதுகிறார்கள்? பாவம் வாங்கும் காசுக்கு விசுவாசமான பொய்களை கூறுகிறார்கள் சூழ்நிலை அப்படி.

ஏற்கனவே அவர்கள் எனக்கு ஒத்துழைத்தபோது உதவிகள் புரிந்தேன். பின்னர் இவர்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் உதவி பெறுவது கண்டு பிரதான குற்றவாளிகளாகக்கப்பட்டவர்களுக்கு மட்டும் உதவுவது என்று நானே முடிவெடுத்து சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளேன். அதன்பின் பாபா உதவவில்லை உதவவில்லை என்று கூப்பாடு போடுவது முனாபிக்தனம் என்னோடு ஒத்துழைக்க மறுக்கும் நபர்களுக்கு நான் ஏன் உதவ வேன்டும்?

இப்போது உதவிகள் பெறுபவர்களில் இமாம் அலியே தானே சிலரைவைத்து வசூலித்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு உதவவேண்டாம். அதற்கு பதில் தன் வழக்கறிஞ்ருக்கு மட்டும் பீஸ் கொடுத்தால் போதும் என்று சொல்லி அனுப்பியதால் கடந்த இரண்டு மாதமாக அவருடைய வழக்கறிஞரை தவிர அவருடைய குடும்பத்தினருக்கு உதவிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்துக்கே படியளக்க நான் ஒரு டாட்டாவோ பிர்லாவோ அல்ல.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுமார் ஆயிரம் பள்ளிவாசலுக்கு மேல் "பயான்" செய்தும் இரண்டே இரண்டு மசூதிகள் R.Sமங்கலம் + ராயபுரம் மட்டும் தலா ஆயிரம் ரூபாய் சிறைவாசிகளுக்கு உதவிகள் புரிந்தன! வேறு யாராவது உதவியதாக ஒரு 100 ரூபாய் உதவியாக ஒரு விலாசம் கூறமுடியுமானால் உடனே நான் பொது வாழ்க்கையினை இத்துடன் முடித்துக் கொள்ளத் தயாராக உள்ளேன்.

" இது அல்லாஹ் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன்"

இதைப்படிக்கும் அனைவரும் உங்கள் ஊர் ஜமாத்துக்கு எழுதி இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

த.மு.மு.கவை நிறுவி கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்தவர் குணங்குடி ஹனிபா! அவரே என்னிடம் வந்து தான் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகிக்கொண்டு முழுக்க முழுக்க சமுதாயப் பணியாக நடத்தப் போவதாக கூறிக் கொண்டு நஜாத் இயக்கத்தினர்களுடன் சென்றார் அவருக்கு விடைகொடுத்து அனுப்பினேன். சில மாகங்கலேயே இருந்த தலைவர் பதவியும் கையில் இருந்த த.மு.மு.க வையும் பறிக் கொடுத்து விட்டு ஆபாண்ட பழி சுமத்தப்பட்டு அப்பாவியாய் திரும்ப வந்து ஜிஹாது பணிகளை செய்கிறார்.

அதுமட்டுமல்ல அவரிடம் பலமுறை கூறியுள்ளேன் யாரோ காபீரான டாக்டருக்கு உதவும் போது நான், ஏன் இஸ்லாமான இயக்கத்துக்கு ஒத்துழைக்க மறுக்க போகிறேன் என்று கூறி உள்ளேன்.

ஒரு முஸ்லீமை இன்னொரு முஸ்லீம் சாடுவது செத்த சகோதரனின் சவத்தை உண்பதற்கு சமம் அல்-குர் ஆன். (ஆனால் முனாபிக்கை சாடலாம்)

மேலும் டாக்டர் சேப்பன் அவர்கள் நடத்தி வந்த "உணர்வு" என்ற மாத இதழை த.மு.மு.க. தத்து கேட்டப்போது டாக்டர் சேப்பன் என்னிடம் ஏதாவது ஆட்சேபனை உண்டா என்று கேட்டபோது தாராளமாக தாருங்கள் டாக்டர் எங்கும் எதிலும் எப்போதும் எவர்மூலமாவது இஸ்லாம் ஒலித்தால் சரியே என்று அவரை தரும்படி ஊக்குவித்தேன் (இதை அவருக்கே டெலிபோன் செய்து சென்னை 8279905 எண்ணுடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்).

நிலமை இப்படி இருக்க ஏதோ த.மு.மு.க தமிழகத்தில் வளராது பழனிபாபா தடுக்கிறான் என்று வதந்திகளை திட்டமிட்டு உலவவிடுவது நயவஞ்சகத்திலும் கடுமையான நயவஞ்சகம்.

ஜிஹாத் அமைப்பை உடைத்து துடைத்து எரிந்து விட்டு ஏவராவது முன்னுக்கு வந்து விடலாம் என்று கருதினால் அது கார் உள்ளவறை பார் உள்ளவறை காலம் உள்ள்வரை நிச்சயம் முடியாது.

கடந்த 6 ஆண்டுகளாய் ஜிஹாத் அமைப்பை ஒடுக்க மத்திய மாநில அரசுகளும் ஆதிக்க சக்திகளும் ஆரிய வர்க்கங்களும் முயன்றதைவிட முஸ்லீம் லீக்குகளும் முஸ்லீம் அமைப்புகளும் செய்யாத ஜாலம் இல்லை. இருந்தாலும் ஜிஹாத் கமிட்டியின் உறுதிமிக்க இளைஞனின் உறுதியின் இறுதித் துளிகளைக்கூட தொடமுடியாததுதான் நடைமுறையில் உணர்ந்த நிலைமை.

ஜிஹாத் அமைப்பின் அரசியல் அடிப்படை லட்சியம் என்ன?

ஜிஹாத் அமைப்பின் இறுதியான அரசியல் இலக்கு என்ன? என்ற கேள்விக்கு நான் இன்றுவரை பதில் அளித்தது கிடையாது. அதன் அரசியல் இலக்கு என்ன என்று, இன்று ஒவ்வொரு தமிழ் முஸ்லீம் இளைஞனும் உணர்ந்தாக வேண்டும்.

நாம் கடந்த 25 ஆண்டு காலமாக அனுபவித்த கொடுமைகள் இழந்த இழப்புகள் நம் வாரிசுகளும் சந்திக்கவே கூடாது. நமக்கு ஏற்பட்ட கசப்பான நெருடல் காற்று நமது தலைமுறையிலேயே விடைக்கண்டாக வேண்டும். விடியலுக்கான வித்திட்டாக வேண்டும். அதற்கு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியே ஆகவேண்டும். அரசியல் அதிகாரம் அரசியலில் அதிகாரப்பகிர்வு - அதை உரிய மரியாதயோடு நமக்குள்ள சரிசமமான உரிமைகளை பெற்றாக வேண்டும். இதுதான் ஒரே வழி.

அது என்னை அவ்வளவு சுலபமா? என்பவன் அரசியலில் அனுபவமற்ற ஆழ்ந்த அனுபவஞானமற்ற தாழ்வு மனபான்மைக்காரனின் ஈனச்சுரத்தில் ஒலிக்கும் "ஈமானற்ற" சொல்.

என் 30 வருட அரசியல் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட உண்மையினை தமிழக முஸ்லீம் மக்கள் அனைவரும் உணர்ந்தாக வேண்டும். அதை நாமும் உணர்த்தியே தீர வேண்டும்.

கடந்த 30 வருடத்தில் 6 பொது தேர்தல்களைக் கண்டேன். அவற்றில் நேரிடையாக பங்கேற்று பணியேற்று செயல்பட்டவன் நான். M.G.Rஉடன் ஒரு பொதுத்தேர்தல் கலைஞருடன் 3 பொதுதேர்தல்கள் ராமதாஸ் உடன் 2 தேர்தல்கள். ஆக 6 பொதுத் தேர்தல்களில் பங்கேற்றுப் பணியாற்றிய போது சேர்த்த புள்ளி விபரங்களைத் தொகுத்து வந்த போது ஒரு உண்மை புலப்பட்டது. அது என்னவென்றால் தமிழகத்தின் 2வது மிகப்பெரிய இனம் முஸ்லீம்கள்! முஸ்லீம் மக்கள் எந்த அரசியல் கட்சியின் தயவும் இன்றி தங்கள் இனத்தில் ஒருவரை ஒன்றாய் நியமித்து தேர்தலை சந்தித்தால்... சுமார் 240 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறலாம் அதாவது 60க்கும் மேற்ப்பட்ட முஸ்லீம் MLAக்களை யார் தயவும் இன்றி தேர்ந்தெடுக்கலாம்.

அதாவது பெறும்பாலும் மும்முனைப் போட்டி ஏற்படும் வாய்ப்புவரும்போது ஒரே ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் 1லட்சம் பேர் என்றால் செலுத்தப்படும் வாக்கில் செல்லுப்படியாவது 70 ஆயிரம் 25,000 வாக்குகள் பெறுவோர் வெற்றி பெற்று வருவது உறுதி ஆக ஒரு தொகுதியில் ஒரு சட்டமன்ற வேட்பாளர் ஒரு சட்டமன்ற வேட்பாளர் மும்முனைப்போட்டியில் பெற வேண்டிய வாக்கு 25 ஆயிரம் வாக்குகளே! இது நடைமுறையாக உள்ளது.

ஆனால் சுமார் 60 குறிப்பிட்ட தொகுதிகள் அதாவது மேலப்பாளையம், அறந்தாங்கி, கடலாடி, அறவக்குறிச்சி, வாணியம்பாடி, ராமநாதபுரம், திருச்சி 1, கோவை மேற்கு, மதுரை மத்திய தொகுதி, சேலம் 1, கூடலூர்(நீலகிரி), தஞ்சை, பாபநாசம், பூம்பூகார், காட்டுமன்னார்கோவில், சென்னையில் சேப்பாக்கம், ராயபுரம், ஆயிரம்விளக்கு, துறைமுகம், திருவல்லிகேணி போன்ற தொகுதிகளில் முஸ்லீன் வாக்காளர்கள் மட்டும் 65 முதல் 75 ஆயிரம். மேலும் சில தொகுதிகளில் 25 முதல் 40 ஆயிரம் கிழே உள்ள பட்டியலில்:-

1) 20 தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் 65000 முதல் 85000 வரை

2) 20 தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் 45000 முதல் 65000 வரை

3) 20 தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் 25000 முதல் 40000 வரை

இதுவன்றி ஏகமாய் சுமார் 100 தொகுதிகளில் தொகுதிக்கு 20 ஆயிரம்பேர் (திண்டுக்கல், ஆத்தூர்,பெரம்பலூர் போன்று) உள்ளனர்.

ஆக எப்படி குறைத்துப் போட்டாலும் தொகுதிக்கு ஒரு முஸ்லீம் MLAவைத் தேர்ந்தெடுக்க உறுதி பூண்டு வாக்களித்தால் 60க்கும் மேற்பட்ட MLAக்களும் 4 MPக்களும் 2 ராஜ்யசபா MPகளும் யார் தயவும் இன்றி தமிழகத்தில் தட்டிபெறும் ஆற்றல் அமைப்பு உள்ளவர்கள்.

இதை ஏன் அரசியல் கட்சியில் இன்றுவரை கூறு போட்டு நம் பங்கை சுரண்டிக் கொழுக்க முஸ்லீம்கள் விட்டு வைத்தார்கள் என்றால், நான் ஏற்கனவே சொன்னதுபோன்று தாழ்வு மனப்பான்மை, சுயபலம் உணராமை, சுய உரிமை கோராமை, சுய உணர்வின் புரியாமை, அறியாமை இவைதான் காரணம்.

என் கணக்கு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ள ஆதாரமான ஒன்று. இன்னும் பல ஆதாரங்களை தொகுத்து எடுத்து அந்த 60 தொகுதிகளில் வாழும் இஸ்லாமிய இல்லங்களுக்கு நூலாக்கி தர வேண்டும். உதாரணமாக அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) தொகுதியில் கடந்த 20 ஆண்டுகாலமாய் கள்ளர் இனத்தை சார்ந்த திருநாவுக்கரசு வெற்றி பெறுகிறார். அங்குள்ள கள்ளர்கள் மூன்றாவது சிறுபான்மையினர் 15 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள்.

ஆனால் அறந்தாங்கி தொகுதியில் வரும் கோட்டப்பட்டிணம், மிமீஸால், கோபாலப்பட்டிணம், அம்மாபட்டிணம், ஆவணம் கைகாட்டி காசீம், புதுப்பேட்டை, அறந்தாங்கி உட்பட முஸ்லீம் வாக்காளர் பட்டியலில் எண்ணிப் பார்த்தால் 69,719 அறுபத்தொன்பதாயிரத்து எழுநூற்றி பத்தொன்பது பேர் முஸ்லீம் வாக்காளர்கள் கிட்டத்தட்ட 70ஆயிரம் பேர் (இதில் 10 ஆயிரம் பேர் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றிருந்தால் கூட உத்தேசமாக) 60 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட அறந்தாங்கியில் இதுவரை ஏன் ஒரு முஸ்லீம் வெற்றி பெறவில்லை.

வெற்றி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும் ஏன் நிற்க்கக்கூடத் தயக்கம்

உண்மையான காரணம் அவ்வளவு பேர் அங்கு நாம் உள்ளோம் என்பதே நூற்றுக்கு இரண்டு முஸ்லீம்களுக்கு கூட தெரியாத ஒன்றாக திரையிடப்பட்டதுதான் மூலகாரணம் அதேபோல் கடலாடியில் கீழக்கரை, ஏர்வாடி, ஒப்பிலான், மாரியூர், கோரைக்குளம் வாக்காளர்கள் 82619 பேர் 82ஆயிரத்து ஆறநூற்றி பத்தொன்பது இஸ்லாமிய வாக்காளர்கள் இங்கு ஏன் முஸ்லீம்கள் வென்று வாகை சூடமுடியவில்லை அது ரிஸர்வு தொகுதி!

இன்றைய அமைச்சர் ரகுமான்கான் வென்ற ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேவிப்பட்டினம், சித்தார்பேட்டை, அண்டகுளம், பனைக்குளம், சின்னக்கடை உட்பட ஏகமாய் 63313 (அறுபத்து மூவாயிரத்து முன்னூற்று பதிமூன்று) முஸ்லீம் வாக்காளர்கள். இளையான்குடியிலும் மங்கலம், திருப்பாலக்குடி, ஆனந்தூர் உட்பட 65266 (அறுபத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி அறுபத்திஆறு) முஸ்லீம் வாக்காளர்கள் இருந்தும் முஸ்லீம்கள் வெல்லமுடியவில்லை. இதை உணர்த்த ஆளில்லை. இதை உணர்த்துபவனை ஆதரிக்க ஆளில்லை. அல்லது அனைத்து அரசியல் கட்சிகளும் இதை விரும்புவது இல்லை. முஸ்லீம்களுக்கு 60தொகுதிகள் என்றால் 2ல் மூன்றுபங்கு பெரும்பான்மையை எந்த தனிக்கட்சியும் பெறமுடியாது எந்த மசோதாவும் சட்டமாகாது இதுதான் உண்மை.

இந்த சதியில் இருந்து மீண்டு எழ முஸ்லீம்களுக்கு நாம் நமது பலத்தை கற்பித்தாக வேண்டும். அதற்கு யாராவது ஒருவர் தன்னை அர்பணித்து அல்லும் பகலும் அயராது அஞ்சாது அலுக்காது பணி ஆற்றவேண்டும். அது சுலபமான பணிகள் அல்ல! வாக்காளர் பட்டியல் மட்டுமே முழு ஆதாரமல்ல! ஜனன மனன(மரண) கணக்கு (சென்ஷஸ் ரெக்கார்டு) எடுத்து 18 வயது பூர்த்தியானவர்களின் வாக்குகளை பதியும்படி கூறவேன்டும்.

வாக்காளர் பட்டியலில் விடுப்படாது இருக்கும் விழிப்புணர்வை ஊட்டியாக வேண்டும். ஒரு சட்டமன்ற வாக்காளர் பட்டியல் வெளியாருக்கு ரூபாய் 2000மும், வேட்ப்பாளருக்கு ரூபாய் 1000மும் விலை. அதை 240 தொகுதிகளிலும் வாங்க தேர்தல் கமிஷனுக்கு 240 X 2000 = 480000 சுமார் 4 3/4 லட்சம் ரூபாய்கள் அதை கம்யூட்டரில் கொடுத்து முஸ்லீம் வாக்காளர்களை அடையாளமிட்டு (பெயரை மட்டும் வைத்து) பிரித்தெடுத்து தொகுத்து விட்டு சென்ஷஸ் போர்டில் ஜனன மனன(மரண) கணக்கும், 18வயது பூர்த்தியான கணக்கும் எடுத்து தொகுத்து நூலாக்கினால் ஒரு நூல் குறைந்த பட்சம் 15 ரூபாய் ஆகும் அதை 5 லட்சம் பிரதிகள் எடுத்து மலிவுப்பதிப்பாக வினியோகித்து படிப்பிக்க வேண்டும் அதன்பின் பிரச்சாரம் செய்தாக வேண்டும்.

இதற்கு சிலரின் ஒத்துழைப்பு போதுமானது. இதை தனிமனிதனாய் செய்யவே முடியாது. இது ஒரு கூட்டு முயற்சி. அந்த முயற்சிக்கு ஒவ்வொரு ஜிஹாத் கமிட்டியினரும் ஒத்துழைக்க வேண்டும்.

உடலால் இயலாதவர்கள் ஊதியத்தின் ஒரு பகுதியை சட்டப்பாதுகாப்பு நிதியாக அனுப்பி என் லட்சியப்பயணம் வெற்றிபெற (இன்ஷா அல்லாஹ்) உங்கள் ஊக்குவிப்பை ஒரு 5 ஆண்டுகளுக்குள் வரும் 2001ல் அடுத்த பொதுத்தேர்தலில் நிச்சயம் கணிசமான அளவு முஸ்லீம் MLAக்கள் சட்டபன்றத்தின் ஆட்சிஅதிகாரத்தை நிச்சயம் கைப்பற்றி இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.

இந்த லட்சிய இலக்கிணை அடையும் தூய பணியில் யாரும் குறுக்கிடாது அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் இதை குறை பேசுபவரையே வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்த வேண்டும். இதை எக்காரணம் கொண்டும் தொய்வடையவிடாது தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளை கிளப்பி அது குறித்த மக்கள் கருத்தினை திரட்டி விழிப்புணர்வு ஊட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

இந்த ஆர்வத்தை குறைக்கும் எந்த சிறு சொல்லைக்கூட இஸ்லாமியர்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாது. எங்கும் எப்பவும் இதுபற்றிய சிந்தனையே இருக்கும்படி கட்டுக்கோட்புகலையாது ஒரே குறிக்கோளில் என் பயணத்தை துவக்கிடவேண்டும் இதற்கு மாற்று கருத்து கூறும் இஸ்லாமிய அமைப்புகளை இனத்துரோகிகளாக முத்திரை குத்த வேண்டும்.

அதுவரை யார் பகையும்(அரசியல் கட்சிகளின் குறுக்கீடு) இன்றி பயணித்தாக வேண்டும். வீட்டுக்குள்ளேயே பாம்புகளை நடமாட விட்டு விட்டு வெளியே தேளடிக்க போகாத பணியாக்கிடவேண்டும். வரும் 5 ஆண்டுகளில் நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரமாயிரம் எத்தனையோ மேடுபள்ளங்களைக் கடந்தாக வேண்டும். நான் கண்ணுரங்கும் முன் கடக்க வேண்டிய தூரம் நீளமாக ஆழமாக அகலமாக உள்ளது. ஆனாலும் அல்லாஹ்வின் பேரருளால் அடைய முடியும் என்ற ஆர்வம் தனியாது உள்ளது.

வரும் 5 ஆண்டுகளுக்குள் எனது இலக்கு என்பது மிகமிக குறுகிய காலம். என் பயணப்பாதை ஆபத்தானது அரசியலில் இதுவரை நம்மை சுரண்டி உண்டு கொழுத்த யாருக்கும் இந்த என் பயணம் பயத்தை உண்டு பண்ணத்தான் செய்யும்.

இது இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் சக்திமிக்கது. கேரளாவை தவிர எங்குமே எந்த மாநிலத்திலுமே முஸ்லீம்களிக்கு உரிய பங்கை வாழ்வுரிமையை உள்ளார்த்தமாய் உள்ளது உள்ளபடி தந்ததாக வரலாறே இல்லை.

இன்றுவரை காஷ்மீர் முஸ்லீம்கள் ஆயுதந்தாங்கியும் பெறமுடியாத வாழ்வுரிமையை நான் வெறும் காகிதம் தாங்கி பெற முடியும் என்று காட்டும் பணியில் கடும் பயணத்தை நிராயுதபாணியாக ஆனால் நிச்சயத்த இலக்குகளுடன் பெற்றாக வேண்டும் என்ற வேட்கையில் செய் அல்லது செத்துமடி என்று செயல் படுத்தபுறப்படுகின்றேன். என் உடல் உயிர் பொருள் ஆவி அத்தனையும் அர்பணித்து என் ஐம்பதாவது வயதில் இன் பயனத்தை துவக்கி உள்ளேன்.

இது நம் வாரிசுகளுக்கு நாம் விட்டுச் செல்லும் வாழ்வுரிமை இது நமக்கு உரிய உரிமைப்பங்கு. இது நம் ஜீவாதார உரிமை இது நம் அடிப்படை உரிமை அவைகள் கடந்த 50 வருடமாக மறுக்கப்பட்டு மறைக்கப்பட்ட மரக்கடிக்கப்பட்ட உரிமைப் போர். அதை மீட்டெடுக்க புறப்பட்ட புனிதப்போர்.

எத்தனை நாள் எத்தி எத்தி வாழ்வது தம்பி? ஏன் வாழ வேண்டும்? என்ன இல்லை நமக்கு?

நமக்குரிய பங்கை நாம் எடுத்தாக வேண்டும். 50 வருஷம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாறுவது "அறிவீனம்" எனவே புத்துணர்வுடன் புயல் வேகத்தில் புனிதப் பயணத்தில் புறப்பட்டே தீர வேண்டும் புண்களை சுமந்து மண்களில் புழுக்களைப் போலான நம் சமூக மக்களின் சமூகநீதியில் நாம் சாதித்துகாட்டியாக வேண்டும்.

சதிகார அதிகார வர்க்கங்களுக்கு இது அடிவயிற்றில் புளியை கரைக்கும் ஆனால் என்னை தடை செய்ய முடியாது என்பது அந்த அரசியல் அயோக்கியர்களுக்கு புரியும். அதனால் என் பயணத்தை முடக்க முடியாவிடில் என்னயே முடிக்கப்பார்பார் அதற்கு நம்மில் சிலரையே கொம்பும்சீவீ விடுவார்! எனவே வெளி எதிரிகளைவிட உள்துரோகிகளிடம் மிக மிக எச்சரிக்கையாய் இருக்கும்.

இது ஒரு MULTI VERIOUS DEED பல முகாந்திரப்பணி மக்களை திரட்டுவது உணர்த்துவது நூலுக்காண ஆய்வுகளை தொகுத்து ஆதாரங்களை பிரிப்பது பதிப்பது நூலாக்குவது பயணங்கள் பிரச்சாரங்கள் பதிப்பகங்கள் இதனூடே கண்காணிப்புகள் கவனங்கள் தருவதும் பெருபதுமாக செல்லும் போதே நமது புனிதபோராளி வார இதழ் (இன்ஷா அல்லாஹ் விரைவில்) மூலம் உங்களுடன் தொடர்பு கொள்வது இப்படி நான் பயணித்தாக வேண்டும் இந்தப் பணியில் என் கவனத்தை சிதறடிக்காது இருக்க என்னைத் காயப்படுத்தாது களங்கப்படுத்தாது என்னை ஊக்குவிய்யுங்கள் உபசரியுங்கள் உற்சாகமூட்டுங்கள்.

என் பயணம் பல்வேறு தரப்பட்ட பாதை இது ஒரு ஒற்றையடிப்பாதை பல காட்டு மிருகங்களைக்கடந்து சென்றாக வேண்டும். காலச்சூழலையும் கடக்கவேண்டும். அரசியல் கட்சிகள் என்னைப் பொருத்தமட்டிலும் சவாரிக்குதிரைகள்.

எத்தனை குதிரைகளை நான் மாற்றினேன்

எத்தனை நிறங்கள் கொண்ட குதிரைகளை நான் மாற்றினேன் என்று எண்ணாதே எந்த குதிரையில் பயணித்தாலும் அது சவாரிக்குதிரையோ சண்டிக்குதிரையோ நான் சவாரிக்கலாம். ஆனால் குதிரைகளை மாற்றுவேனே ஒழிய பாதைகளை அல்ல! அது சிறாத் என்ற நேரான பாதையின் நேர்மையான இலக்கு நோக்கிய மறுமைக்கு பயனளிக்கும் மறுமலர்ச்சி நிறைந்த மாசற்ற பாதை லட்சியம் என்பதை மட்டும் மறந்து விடாதே. இன்ஷா அல்லாஹ் என் பயணத்தின் பலனை உணரும் காலம் வெகு விரைவில் வரும் அன்று எனக்காக உன் கரம் ஏந்தி துவாக் கேள் அது போதும் தம்பி ஆயிரம் காயங்கள் அது ஆற்றி விடும் ஆற்றல் தரும் எனக்கு தற்போது என்னை வாழ்த்தி வழியனுப்பு என் சூடு தணியும் முன் உனக்கு மகுடத்தை சூட்டியாக வேண்டும் செல்கிறேன் ஃபிஅமானில்லாஹ்.

உங்கள் ஊழியன் நிறம் மாறாதவன்

பழனிபாபா

குறிப்பு: த மு மு க என்ற இடத்தில் PJ என்று படிக்கவும்

என் இனிய முஜாஹித்தீனோரே

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

எத்தனை அரசுகள் மாறினாலும் முஸ்லீம்கள் மீதுள்ள குரோதமனப்பான்மையை மட்டும் மாற்றிக் கொள்ளாது.

செய்தி ஒன்றில் நான் 1990 முதல் தலைமறைவாய் இருந்தேனாம் நாகை லாட்ஜில் பிடித்ததாம் போலீஸ் சுமார் 7 ஆண்டுகளில் 4 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் 80 முறைகளுக்கு மேல் சாதாரண இந்திய குற்றவியல் சட்டங்களாலும் கைது செய்யப்பட்டு பலமுறை திருச்சி மத்திய சிறையிலேயே நான் வைக்கப்பட்டிருக்கிறேன். இதைவிட வேடிக்கை பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்றும், R.S.Sஅலுவலக குண்டு வெடிப்பின் போதும் நான் நாகை போலீஸாரால் நாகூரில் வைத்தும் ஆழியூரில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளேன். இது உலகறிந்த விஷயம். அப்போதெல்லாம் 90 ஆண்டு போடப்பட்ட வழக்கு பற்றி எனக்கு தெரிவிக்காத கேடு கெட்ட அரசுகள் 7 ஆண்டுகள் தலைமறைவாய் இருந்தேன் என்று கூறி நாகை மாஜிஸ்ட்ரேட் முன் என்னை கைது செய்து நிறுத்தி செய்தி போட்டு மகிழ்கிறது. இது யாரை மகிழ்விக்க? R.S.S., B.J.P கும்பலுக்கு தி.மு.க அரசு தரும் அண்டர்கிரவுண்ட் சிக்னல்.

நம்மை பொருத்தவரை இவைகள் குப்பைகள் இது மாதிரி இன்னும் ஆயிரம் வழக்குகள் ஜோடிக்கப்பட்டாலும் அவைகளால் நம் நிழலைக் கூட தீண்ட முடியாது இன்ஷா அல்லாஹ்.

என் இனிய சகோதர இளைஞர்களே! என்னை ஒடுக்குவதில் மத்திய மாநில அரசுகள் கடந்த 20 ஆண்டுகளாய் பல்வேறு அடக்கு முறைகளை அவிழ்த்து விடுவதும், அதைவிட நமக்கெதிரே இஸ்லாமிய அமைப்புகளும் அரசுக்கு துணை போவதும் எதற்காக? யார் நன்மைக்காக? என்று சிந்திக்கும் மனதுள்ள ? சிந்தித்துப் பார்?

ஜெயா அரசில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாம்! இரண்டாண்டுகள் கழித்து நிலுவையிலிருந்த வழக்கை கருணாநிதி அரசு அனுமதி தந்து வழக்கு தொடரப்பட்டதாம்! இப்படி ஒரு 20 வழக்குகளை இந்த அரசு தோண்டி உள்ளது.

அரசியல் காழ்ப்புணவுடன் தொடரப்பட்ட வழக்குகள் உடன் வாபஸ் பெறப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். வாபஸ் பெற்றார். ஆனால் முஸ்லீம்கள் மீதுள்ள வழக்குகளை மட்டும் நிலுவையில் வைத்தார். காரணம் கேட்டதற்கு மதக் கலவரம் வேறு, அரசியல் காரணம் வேறு என்று அதிமேதாவி பதிலளித்தார்.

பா.ம.க. மேடையில் பேசிய டாக்டர் ராமதாஸ், டாக்டர் சேப்பன், தலித் எழில்மலை பேராசிரியர்கள் சுப.வீரபாண்டியன் மற்றும் தீரன் இவர்கள் மீது உள்ள வழக்குகளை மட்டும் வாபஸ் பெற்ற கருணாநிதி அதே மேடையில் பேசிய K.M.ஷரிப் மற்றும் பழனிபாபா ஆகிய இரு முஸ்லீம்கள் மீது மட்டும் வழக்கு நீடிக்க உத்தரவிட்டார். பா.ம.க மேடை என்ன மதமேடையா?

தம்பி நரிகளின் நிறம் மாறும் இடம் மாறும் ஆனால் குணம் மாறாது - இது இயற்கை நியதி!

இன்று கூட தடா வழக்குகளில் 6 வழக்குகள் மட்டும் வாபஸ் பெறப்படும். ஆனால் அது (I.P.C.)இந்தியன் பீனல்கோடு முறை மட்டும் தொடரும்.

அது என்ன 6 வழக்குகள் மட்டும் தலைக்கொரு சீவக்காய்! தாடிக்கொரு சீவக்காய்?

இந்த 6 வழக்கு பட்டியலில் R.S.S.வெடி விபத்து வழக்கும் ராஜீவ் கொலை வழக்கும் வராதாம்? மாறாக ராஜகோபாலன் கொலை வழக்கு வருமாம். இது வடிகட்டிய மோசடி இன்னும் 2 மாதமானால் ராஜகோபாலன் கொலை வழக்கு குப்பைக்கு தானே போய்விடும் என்பது வழக்கு படித்த எவருக்கும் தெரியும். ஏற்கனவே திசை மாறி சென்ற புயல் அது.

கோவை தடா வழக்கு உட்பட இந்த ஆறு வழக்கும் I.P.C,வழக்காக தொடருமாம். என்ன கிரிமினல் மூளை பார்! வழக்கு தொடர பெயர் சூட்டுவது மட்டுமே தடாவில் விசாரணை முறைகள் தடா சட்டம். ஆனால் தண்டனை I.P.C,யில் தான் வழங்கப்படும் ஒரு சிறைவாசியின் விலங்கு மட்டும் உடைபடும். சிறை தொடரும் என்பது போல அறுவை சிகிச்சையை வெற்றி பெற வைத்தேன். ஆனால் ஆயுள் முடிந்து விட்டது என்ற கதை - இதை ஊரை ஏமாற்ற உலுத்தன் செய்யும் உபாயம்!

இந்த 6 செத்த வழக்கை இவர்கள் வாபஸ் வாங்குவது ஏன் தெரியுமா? அடுத்த ஒரிரு மாதங்களில் பத்மநாபா கொலை வழக்கில் தடா குற்றம் சாட்டப்பட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட 6 தி.மு.க அனுதாபிகளை காப்பாற்ற முன்னோடி மோசடி.

பிள்ளையார் ஊர்வலத்தில் கூட ராமகோபலனின் இந்து முன்னணிக்கு பதில் தரின் இந்து மக்கள் கட்சி ஊர்வலம் போனது. ஆனால் அப்பாவி முஸ்லீம்களிடையே தான் எதோ பெரிய சாதனை செய்து காட்டி விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

ஐஸ் ஹவுஸ் பகுதி வழியே ஊர்வலம் போகாது தடுத்து விட்டதாக விளம்பரப்படுத்திக் கொண்டது அரசு. ஆனால் 1994ம் ஆண்டு நான் தொடுத்த வழக்கின் முடிவே அது என்று இந்து உட்பட அனைத்து முன்னணி ஏடுகளுக்கும், ராமகோபால வகையறாவுக்கும், உங்களுக்கும் தெரியும். இன்று இவர் கொடுத்த பாதை அன்று நீதிபதி கனகராஜ் என் வழக்கில் கொடுத்த பாதை.

இவருடைய சாதனைப்பட்டியலில் இன்னொரு அம்சம் R.S.S.வெடி விபத்து வழக்கில் 5 பேருக்கு ஜாமின் தந்த நீதிபதியை மாற்றினார். இதுவரை இவ்வழக்கில் 4 நீதிபதிகளை மாற்றிய பெருமை இவருக்கு சாரும்.

என் இனிய இஸ்லாமிய தோழனே! நாசவன் குப்பையை கிளறினால் மயிர்தான் மிஞ்சும்! இது 50 வருட தொடர்கதை.

எந்த அரசியல் இயக்கங்களும் இஸ்லாமியருக்கு உரிய பங்கை உண்மையான அளவீடுகளுடன் அவர்களுக்கு உரிய பங்கை சரிசமமாக பகிர்ந்தளிக்க இதுவரை கடுகளவு முயற்ச்சியும் செய்யவே இல்லை. இந்திய இஸ்லாமிய இயக்கங்களும் அதுகுறித்து வாய் திறக்கக் கூட கவலைப்பட்டது கூட கிடையாது. மாறாக எவன் நம்மை சுரண்டுகுறானோ அவனுக்கு முதுகு சொரிவதை பெருமையாய் கருதி எச்சில் இலைகளுக்கு ஏங்கித் தவிக்கும் எத்தர் கூட்டங்களாக ஏமாளிகளின் எஜமானர்களாகவே இருந்து வந்ததே கண்கூடு!

ஜிஹாத் அமைப்பு மட்டும் வித்தியாசமான, விவேகமான கோணத்தில் இப்பிரச்சினையை அணுகியது. அது கண்டு டெல்லி சர்காரிலிருந்து தமிழக கோட்டை வரை ஜிஹாத் அமைப்பை ஒடுக்கி நசுக்கிட ஒன்றாய் ஒருமித்து நின்றும் இன்னும் ஒரு அணுவைக் கூட நமக்கு கெடுதியாக்கிட இயலவில்லை. தங்கள் குப்பை சட்டங்களால் ஒன்றும் செய்ய இயலாது ஒய்ந்து போன ஆனாலும் வர்க்கம் முடிவில் மிக கேவலமான தந்திரங்களை ஏவி விட்டனர். சில இஸ்லாமிய அமைப்புகளை நமக்கெதிராய் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏவி விட்டனர். எச்சி, எலும்புகளுக்கு எதையும் செய்யும் சில அமைப்புகள் அதயும் செய்தனர். ஆனால் ஜிஹாத் அமைப்பு மிக தெளிவாய் எதிரிகளையும் துரோகிகளையும் நிறம் பிரித்து வீட்டுக்குள் இருக்கும் விஷப்பாம்புகளுக்கும் வெளியிலிருக்கும் தேள்களுக்கும் உள்ள அளவீடுகளை அறிவிப்பு செய்துள்ளோம்.

"ஜிஹாத் அமைப்பு என்பது பழனிபாபா என்ற தனிமனிதனின் மேடை பேச்சு மட்டுமே அதனால் எதையும் சாதிக்க இயலாது"- என்று விஷமத்தனமான விவேகமற்ற பிரச்சாரத்தை வேகமாய் செய்கின்றனர்.

வரலாறு தெரியாத வடிகெட்ட முட்டாள்களின் வாதம் இது.

கியூபா விடுதலைக்கு குரல் தந்து விதை நட்டவன் ஃபிடல்காஸ்ரோ, லிபியா விடுதலைக்கு வித்திட்ட உமர்முக்தார், தென் ஆப்ரிக்க விடுதலைக்கு தனிமனிதனாய் தனித்து நின்ற நெல்சன் மண்டேலா, சிங்கப்பூர் விடுதலைக்கு வித்திட்ட லீ குவான்யூ, இந்தோனேசியா சுகர்னோ, மலேசியா துங்கு அப்துற் ரஹ்மான், அமெரிக்க லிங்கன் - பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துக்கு இந்திய மண்ணில் முதல் விதை நட்ட ராபர்ட் கிளைவ், பிரஞ்சுப் புரட்சிக்கு துள்ளி எழுந்த நெப்போலியன் ஸ்டாலின், முஸோலினி சர்ச்சில், மார்டின் லூதர்கிங், கன்பியூசியஸ், சீஸர், ஆண்டனி, அலெக்ஸாண்டர், சாக்ரட்டீஸ், பித்தகோரஸ், செகுவாரா, மாசெதுங், மகாத்மா காந்தி, முகப்பது அலி ஜின்னா, பர்மாவின் ஆங் சாங் சூக்கி, நமது பெருமானார் (ஸல்) அவர்களும், ஏசுநாதரும், புத்தரும் தனிமனிதனாகவே துவங்கிய இயக்கங்களால்தான் உலகளாவிய இயக்கத்தை தோற்றுவிக்க முடிந்தது.

சிறு விதையினுள் பெரும் விருச்சகமே உள்ளது என்ற எதார்த்தத்தை உணராத மடையர்களின் வாதங்களை உதறி எரிந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முகம்மது அலி ஜின்னா பிரிவினையின் பக்கமும் ஏனைய முஸ்லீம் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரஸின் பக்கமும் நின்றார்கள். ஜின்னா தனிமனிதனாய் நின்றார் வென்றார். ஆனால் அபுல்கலாம் ஆஸாத், ஜாகிர் ஹுசைன், பக்ருதீன் அலி அஹமதுவும் இன்னும் பல தலைவர்களும் கூட்டாய் நின்று காங்கிரஸோடு கூடி நின்றனர். என்ன சாதித்தார்கள்.

இந்தியாவில் அன்றைய முஸ்லீம் ஜனத்தொகை 10 கோடி - அதில் 3 கோடிக்கும் குறைவானவர்கள் அதிலும் குறிப்பாக மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் ஜின்னா பின்னால் போனார்கள். பாகிஸ்தான் என்று பெயர் மாறி ஜீவாதார உரிமையுடன் வாழ்கிறார்கள். குறிப்பாக மதச்சுதந்திரம் முழுமையுடன் உள்ளது. அதே நேரம் இந்திய யூனியன் பகுதியில் மிஞ்சிய 7 கோடி பேர் காங்கிரஸ் கபோதிககளுடன் கைகோர்த்தோம் இன்று ..... நமது உரிமைகள் படிப்படியாய் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு மிரட்டப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாத்தாரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். மதசார்பின்மை என்பது காற்றில் பறந்த கதையானது. ஒரே ஒரு அம்பேத்கார் தமது தாழ்த்தப்பட்ட 9 கோடி மக்களுக்கு 150 பாராளுமன்ற ரிஸர்வு தொகுதிகளை பெற்றுத் தந்தார். ஆனால் பல முஸ்லீம் தலைவர்கள் ஒன்று கூடி நின்றும் ஒரு சீட்டு கூட பெற முடியாது முடிவில் மனப்பாடுகளுடன் மரணமடைந்தனர். சில தலைவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூட வெளியே சொல்லமுடியாது போனது. முடிவில் அபுல் கலாம் ஆஸாத் ஒரு நூல் எழுதி அதை தான் மரணமடைந்து 30 ஆண்டுகளுக்கு பின் வெளியிடும் படி உயில் எழுதி ஒளித்து வைத்து விட்டு போன கதையும் ராஜீவ் அரசு அந்நூலை வெளியிடலாமா வேண்டாமா என்று பாராளுமன்ற சர்ச்சை மூலம் முடக்கிப் போட்டதை நாடறியும்.

நேருவுடன் கைகோர்த்து நின்ற ஷேக் அப்துல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. காஷ்மீரில் வைக்காது கொடைக்கானலில் தங்கக் கூண்டில் தவிக்க வைத்தனர். ஹைதராபாத் நிஜாமும் ஆற்காடு நவாபும் ராணுவத்தால் பணிந்து குனிந்து போயினர். ராணுவங்களில் முஸ்லீம்கள் சேராது சீக்கியர்களையும் கூர்க்காக்களையும் சேர்த்தனர். கேரள முஸ்லீம்கள் மாப்பிள்ளைமார் கலகக்காரர்களாய் ஒழிக்கப்பட்டனர். மராட்டிய முஸ்லீம்கள் சேரிகளில் குடிபுகுந்தனர். பீகாரிலும், உ.பி.யிலும், குஜராத்திலும் முஸ்லீம்கள் மீது கலவரம் பயத்தை ஏவி முடக்கிஒ போட்டனர். அன்று மிரண்ட முஸ்லீம்கள் (கேரளா தவிர) வேறு எங்கும் தலைதூக்காது இன்னும் கூனிக் குறுகி குனிந்து வாழ்கிறார்கள். இதுதான் சுருக்கம்

இதற்கான தீர்வு என்ன?

இந்த போலி பய உணர்விலிருந்து மீளும் வழி எது?

இழந்த உரிமைகளைப் பெறுவது எப்படி?

இதற்கான ஒரே பதில் " ஒன்றுபடு " - " ஒதுங்கிக் கூடு " பிற அரசியலை புறக்கணி முதலில் தமிழகத்தில் களம் அமைப்போம் வழிகாட்டுவோம். பிற மக்கள் தானே திருந்துவர்.

இந்தியாவெங்கும் 26 கோடி முஸ்லீம்கள் இருந்தும் பாராளுமன்றத்தில் என்றுமே 10 எம்.பி.களுக்கு மேல் போனதே கிடையாது.

பஞ்சாயத்து தேர்தல்களில் கூட முஸ்லீம்கள் பெரும்பான்மையாய் உள்ள பகுதிகளை ரிஸர்வு தொகுதியாக்கியும் பெண்கள் தொகுதியாக்கியும் முடக்கிப் போட்டார்கள்.

சீக்கியர்கள் 2 கோடிக்கும் குறைவே ஆனாலும் 1985ல் இந்திரா படுகொலைக்கு மறுநாள் டெல்லியில் நடந்த கலவரத்தில் 3000 பேருக்கும் மேல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சீக்கிய அகாலிதள்கள் தொடர்ந்து போராடி நஷ்ட ஈடு பெற்றதுடன் வழக்கு மன்றம் மூலம் பி.சி.சுக்லா உள்பட பலரை கம்பி எண்ண வைத்தார்கள்.

ஆனால் பிவாண்டியில், மீரட்டிலும், பாகல்பூரிலும், பம்பாய், லக்னோ, டெல்லி, சூரத், சென்னை, கோவை போன்ற பல ஊர்களில் பல்லாயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பலமுறை கொள்ளையடிக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இன்றுவரை ஒருவனும் தண்டிக்கப்படவில்லை. மாறாக அத்வானிகளும், பால்தாக்ரேக்களும் தங்கத்தேர்களில் பவனி வருவதைத்தான் காண்கிறோம்.

இந்திரா காந்தியை சீக்கியர்கள் கொன்றார்கள்.

ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொன்றார்கள்

மகாத்மா காந்தியை பார்ப்பனர்கள் கொன்றார்கள்

இன்று இவர்கள் எல்லாம் தேசபக்தர்கள் யாரையுமே கொல்லாத நாமோ தேச விரோதிகளானதுடன் உரிமைகளை கேட்கக் கூட முடியாத பாவிகளாக்கப்பட்டோம்.

எழுதினால் ஏடுகள் பத்தாது எனக்குள் ஒரு எரிமலையே புதைந்துள்ளது. தம்பி

நாமும் நமக்குறிய பங்கினைப் பெற வேண்டும் அதற்கு எந்தப் பாதை சிறந்தது - முடிவானது உறுதியான இலக்குடையது. பலநாள் சிந்தித்தேன் - சிந்தித்தேன் - இரு வழிகள் உண்டு.

அறவழி - மறவழி

மறவழி என்பதன் முதன் பொருள் ஆயுத்மேந்துவது - இதைப் பற்றியும் சிந்தித்தேன் ஆனால் இந்திய சூழலில் அது ஒத்துவராது. சீக்கியர்களை நவீன ஆயுதம் ஏந்திய எந்த அமைப்பும் ஆசியா கண்டத்தில் கிடையாது. இன்று சீக்கியர் போராட்டம் தோல்வி கண்டது. அரசியல் சூதாடிகளாலும் ஆள்காட்டி துரோகிகளாலும் அது முடக்கப்பட்டு முனை மழுங்கிப் போய் இன்று பல்வேறு குழுக்களாய் இருந்த அகாலிகள் ஒன்று கூடி அறவழியில் நிற்கிறார்கள். காஷ்மீர் போராளிகள் குழு சிதறடிக்கப்பட்டது. போடோலாண்ட், நாகாலேண்ட், உல்பா போன்று எத்தனையோ ஆயுதப் போராட்டம் முனை மழுங்கியே போனது. பல உயிர்கள் பலியானது தான் மிச்சம்.

இந்திய அரசியல் நரிகளுக்கு சரியான தீர்வு ஜனத்தொகை விகிதாச்சரம். ஆமாம் பாராளுமன்றத்தில் நமக்குள்ள பங்கை தட்டிப்பறிப்பது சட்ட மன்றங்களில் நமக்குள்ள பங்கை பிறர்க்கு விட்டு விடாது கைப்பற்றுவது - இது தான் தீர்வு இதை செய்து விட்டால் மற்றவை தானே நடக்கும்.

பால்தாக்ரே பல கொலை செய்தவன் இருந்தும் மராட்டிகளின் ஜாதிய உணர்வை கட்டுக்குள் வைத்திருப்பதால் அவன் நினைத்ததை சாதிக்கிறான். சட்டம் அவன் கால்தூசியைக் கூட தொட நடுங்குகிறது.

மராட்டிகளின் பால்தாக்ரேக்கு இருக்கும் உணர்வு பிகாரிலும், உ.பி.யிலும் லல்லுபிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் போன்ற யாதவர்களின் இன உணர்வு, கன்சிராமின் தாழ்த்த்ப்பட்டோர் உணர்வு, தேவகவுடாவின் கன்னட ராஜ்குமார் லிங்காயத்து ஜாதிக்குள்ள உணர்வு, கேரளாவில் ஈழுவர்களுக்கு உள்ள உணர்வு, ஆந்திராவில் கமார் (நாயுடு) ஜாதிக்குள்ள உணர்வு, குஜராத் மார்வாடிக்குள்ள உணர்வு, பஞ்சாப் சீக்கியனுக்கு உள்ள உணர்வு, அஸ்ஸாம் கனபரீஷத்துகளுக்கு உள்ள உணர்வு, நாகலேண்ட் நாகாகளுக்கு உள்ள உணர்வு, மிஜோராமிலும் கோவாவிலும் கிருஸ்துவர்களுக்கு உள்ள உணர்வு, போடோக்குளுக்கு உள்ள உணர்வு, காஷ்மீர் பார்ப்பானிய பண்டிட்டுகளுக்கு உள்ள உணர்வு, வங்காளத்து வங்காளிகளுக்கு உள்ள உணர்வு -

இந்திய முஸ்லீம்களுக்கு இல்லாது போனது ஏன்? ஏன்? ஏன்? கொதிப்பறிய உணர்வுகளுடன் கொடுமைகளைச் சுமந்து குனிந்து வாழ வேண்டிய கட்டாயம் என்ன? சரியான தீர்வுகள் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லை?

இந்தியாவில் 30 மாநிலங்களில் மாநிலத்துக்கு 5 முஸ்லீம் எம்.பி.க்கள் என்றால் கூட 30 X 5 = 150 பேர் பாராளுமன்றத்தில் பங்கு வகிக்கலாமே இதை செய்ய முனைவது யார்?

ஆனால், இதுவரை முஸ்லிம்கள் அங்கு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்டதே இல்லை. இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் நன்னிலம், கடலாடி, கோவை மேற்கு, மதுரை மத்திய பகுதி, திருச்சி 1, சேலம் 1, அரவாக்குறிச்சி, குடியாத்தம், புவனகிரி, ராணிப்பேட்டை, வாணியம்பாடி, பேரணான்பட்டு, வேலூர் 1, ஆற்காடு, சென்னை துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, எழும்பூர், பூங்காநகர், ராயபுரம், திண்டுக்கல், நத்தம், பெரியகுளம், மேலப்பாளையம், காயல்பட்டிணம், இராமநாதபுரம் இப்படியாக 30 தொகுதிகள் இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் கொண்ட தொகுதி. இது போன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சட்டமன்ற தொகுதிகளை கணக்கிட வேண்டும்.

மேற்கண்ட நம் கணக்கு வாக்காளர் பட்டியல் ஆதாரமான ஒன்று. இன்னும் பல ஆதாரங்களைக் தொகுத்து எடுத்து, அதை அந்தந்த 60 தொகுதிகளில் வாழும் இஸ்லாமிய இல்லங்களுக்கு நூலாக்கி தரவேண்டும். உதாரணமாக அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கள்ளர் இனத்தைச் சார்ந்த திருநாவுக்கரசு வெல்கிறார்.

அங்குள்ள கள்ளர்கள் மூன்றாவது சிறுபான்மையினர் 15,000-க்கும் குறைவாகவே உள்ளனர். ஆனால் அறந்தாங்கி தொகுதிக்குள் வரும் கோட்டைப்பட்டிணம், மிமிஸால், கோபாலபட்டிணம், அம்மாபட்டிணம், ஆவணம்கைகாட்டி, காசிம் புதுப்பேட்டை, அறந்தாங்கி உள்பட வாக்காளர் பட்டியலை எடுத்துப் பார்த்தால், முஸ்லிம் வாக்காளர்கள் கிட்டத்தட்ட 70,000 பேர் உள்ளனர். இப்படி அதிகபட்சமான வாக்காளர்கள் இருந்தும் அறந்தாங்கி தொகுதியில் இதுவரை ஏன்? ஒரு முஸ்லிம் வெற்றி பெற முடியவில்லை? வெற்றி பெறுவது ஒரு புறமிருக்கட்டும், ஏன் தேர்தலில் போட்டியிடவே தயக்கம்?

உண்மையான காரணம் முஸ்லிம்கள் அவ்வளவு பேர் அங்கு உள்ளோம் என்பதே நூற்றுக்கு இரண்டு முஸ்லிம்களுக்குக் கூடத் தெரியாது. நன்றாக திரையிடப்பட்டது தான் மூலக்காரணம்.அதே போல் கடலாடியில், கீழக்கரை, ஏர்வாடி, ஒப்பிலான், மாரியூர், கோரைக்குளம் போன்ற ஊர்களில் முஸ்லிம் வாக்காளர்கள் 82,617 பேர்கள். இங்கு ஏன் முஸ்லிம்கள் வென்று வாகைசூட முடியவில்லை? அதை ரிஸர்வு தொகுதியாக்கி நம்மையெல்லாம் ஏமாற்றி இளிச்சவாயய்களாக்கி விட்டார்கள். ரகுமான்கான் வென்ற ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேவிபட்டிணம், சித்தார்கோட்டை, அண்டகுளைம், பனக்குளம், சின்னக்கடை உட்பட ஏகமாய் 63,313 முஸ்லிம் வாக்காளர்கள்.

இளையான்குடியிலும் ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலக்குடி, ஆனந்தூர் உட்பட 62,266 முஸ்லிம் வாக்காளர்கள் நாம் ஏன் வெற்றிபெற முடியவில்லை? இதை உணர்த்த ஆளில்லை. இதை உணர்த்துபவனை ஆதரிக்க ஆளில்லை அல்லது அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புவது இல்லை. முஸ்லிம்களுக்கு 60 தொகுதி என்றால் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிடிகளை தனிக்கட்சி பெறமுடியாது. எந்த மசோதாவும் சட்டமாகாது!

மேலும் 30 தொகுதிகளில் எண்பதாயிரத்துக்கும் உட்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் அறுபதாயிரம் வாக்காளர் கொண்ட 23 தொகுதிகள் இறுக்கிப் பிடித்தால் நமக்கு நாமே ஒன்றாய் ஒரு முகமாய் கூடி நின்று வாக்களித்தால் சுமார் நூறு சட்டமன்ற தொகுதிகளை பெறலாம். எந்த அரசியல் கட்சியின் காலடியில் விழாது, பல்லாக்கு தூக்காது, பல்லவி பாடாது, பல்லிளிக்காது எளிதில் வெற்றி பெறலாம்.

முஸ்லிம்களால் நூறு தொகுதிகளை பெறமுடியும் என்பதை காட்டிவிட்டால் எல்லா அரசியல் இயக்கங்களும் உங்கள் காலடியை கழுவி நிற்பர். கையில் வெண்னையை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுது கொண்டே அலைந்து அழுகிப் போகும் கூட்டமாய் நாமிருக்க வேண்டுமா? சுமார் 10 பாராளுமன்றத் தொகுதிகளை வெல்வதோடு 16 தொகுதி எம்.பி.க்களின் வெற்றியை நிர்மானிக்கும் வலுவுள்ளவர்கள் நாம். தமிழகத்திலுள்ள 6 மேயர்களும் முஸ்லிம்களாகவே இருக்க முடியும்!

ஒரு மேயர் சென்னை தவிர ஏனைய தொகுதிகளில் வெற்றிபெற ஒன்றரை இலட்சம் வாக்காளர்கள் வாக்கு போட்டால் போதும். ஆனால், மதுரையில் மூன்று இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் மாநகர வாக்காளர் பட்டியலில் உள்ளனர். நெல்லை 2.5 இலட்சம் வாக்காளர்கள். திருச்சியில் மூன்று இலட்சம் வாக்காளர்கள். சேலம் 2.5 இலட்சம் வாக்காளர்கள். சென்னையில் முஸ்லிம் வாக்காளர்கள் 20 இலட்சம் பேர். ஆனால், ஸ்டாலின் வென்றது 13 இலட்சம் வாக்குகளில், சென்னை மெட்ரோ நகரில் 186 மசூதிகளும் ஒன்றாய்கூடி ஒரு முஸ்லிமை மேயராக நிறுத்தி, கூட்டாக வாக்களித்திருந்தாலே சுமார் 18 இலட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் வாக்களித்து இருந்தாலே அந்த இஸ்லாமிய மேயர் வென்றிருப்பார். அதற்கொன்றும் மலையை தோண்டி எலியை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஐக்கிய ஜமாத் ஏற்படுத்தி கூட்டறிக்கை தயார்செய்து ஜும்மாக்களில் அறிவித்திருந்தால் போதும். ஒவ்வொரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுக்குத்தான் வாக்களிப்பான் என்று உறுதி பூண்டால் போதும் 10 பைசா செலவின்றி ஒரு முஸ்லிம் மேயர். இது அரசியலில் பெரும் மாற்றத்தை உண்டு செய்யுமா? இல்லையா? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பாருங்கள்.

சுமார் 20 இலட்சம் இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்ட 14 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சென்னை மாநகரில் இரண்டு இலட்சம் வாக்காளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் பிரிந்து சிதைந்து சீரழிந்து போனாலும்கூட ஐக்கிய ஜமாத் நிறுத்தும் ஒருவர், மீதியுள்ள 18 இலட்சம் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற செய்தியை கேட்ட அரசியல் சட்சிகள் ஒவ்வென்றும் முஸ்லிம்களைத் தாங்க ஆரம்பிக்கும். தலைநகரில் தலையில் தொப்பியோடு தலை நிமிர்ந்து நடக்கும் முஸ்லிமை எவனும் மதிப்பான்!

சென்னை வாசிகளுக்கு, ஏனைய நெல்லை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற மாநகர்களில் வென்றிருக்கும் இன்றைய மேயர்கள் ஒன்றரை இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளிலேயே வென்று உள்ளனர். ஆனால், இஸ்லாமிய வாக்குகள் இரண்டு இலட்சத்துக்கும் மேல் உள்ளன. 6 மேயர்களும் இஸ்லாமியர்களாகவே தேர்ந்தெடுக்கலாம். இது இன்ஷா அல்லாஹ் நிச்சயம், சத்தியம் சாத்தியமானது. ஆறு மேயர்களை நீங்கள் கைபற்றினால் நான் சொல்லும் 64 எம்.எல்.ஏ.க்களையும் ஐந்து எம்.பி.க்களையும் நீங்கள் வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

தமிழக சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆட்சி அதிகாரம் உங்கள் கைகளுக்கு வரும்போது உங்கள் தயவின்றி எந்த மசோதாவும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு அமைப்பாக நீங்கள் உருவாகிவிடுவீர்கள். இதையே கர்நாடகமும், ஆந்திராவும், பீகாரும், மகாராஷ்டிராவும் ஏனைய பிற மாநிலங்களும் பின்பற்றும் போது 540 பாராளுமன்ற தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் நீங்கள் இப்போது இருப்பதைப் போல இரு மடங்காக இருப்பது உறுதி செய்யப்படும். நான் சொன்னதை ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து பாருங்கள். நான் சொல்வது ஒரே இரவில் சாத்தியப்படும் சாத்தியங்களே. செய்ய வேண்டியதும் முடிவெடுப்பதும் நீங்களே! நீங்கள் நீங்களாகவே ஒன்றுபடுங்கள். வாழ்க்கை உங்களுக்கு வசப்படும். உங்கள் மார்க்க உரிமைகள் பாதுகாக்கப்படும்.

மராட்டிய பால்தாக்கரேவும், பீகாரின் லல்லு பிரசாத் யாதவும், குஜராத்தின் குஜராத்தியரும், உ.பியின் முயலாம் சிங் யாதவும் மற்றும் கன்ஷிராமும், கர்நாடக ராஜ்குமாரும், தமிழகத்தில் ரஜினியைவிட ஜனகட்டில் முஸ்லிம் இனமக்கள் குறைவானவர்கள் இல்லை. யானைக்கு தன்பலம் தெரியாத போது அது அரை அங்குல அங்குசத்துக்கு அடங்கிப் போவது போல, உங்கள் பலம் தெரியாமல் எல்லாவற்றிற்கும் பணிந்க்டு போகிறீர்கள்! என் அன்பின் பினைப்புகளே, ஒரிறை மார்க்கத்தை கை கொண்டு ஒழுகும் முஸ்லிம் மக்களே, என்னுடைய முப்பதாண்டுகள் அரசியல் அனுபவத்திலிருந்து பிழிந்தெடுத்த சாற்றையே உங்களுக்கு தருகிறேன்.

நான் எனது கொள்கையில் உறுதியாய் உள்ளது போல் நீங்களும் உறுதி கொள்ளுங்கள். வருகின்ற தேர்தலுக்கு முன் நாம் இந்த முடிவை சாத்தியப்படுத்தியாக வேண்டும். அதற்கு விரைவான பிரச்சாரத்தில் பட்டிதொட்டி எங்கும் நான் கூறியுள்ள கருத்துக்களை பரப்பிட வேண்டும். பள்ளிவாசல்கள் தோறும் இந்த கருத்துக்கள் அடங்கிய சிறுநூல் பரவிட வேண்டும்.


முஸ்லிம்களுக்கு மானம் மார்க்கத்தைவிட பெரியது. நாம் மானமிழந்து வாழ்வதைவிட மரணத்தைத் தழுவுவது மேலானது என்பதை உணர்ந்தாக வேண்டும். நாயாக நக்கி நாலுநாள் வாழ்வதைவிட, சிங்கமாய் கர்ஜித்து சில மணித்துளிகள் வாழ்ந்து மடிவது சீரான வாழ்வு, சிறப்பான உயர்வு. இது நமது மரபு, இது நமது மார்க்கம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும். இதை உணராமல் ஊர்வலம் போவது, ஆர்ப்பாட்டம் செய்வது, கடைகளை அடைத்து நமக்கு நாமே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்வது போன்ற தேவையற்ற செயல்களால் வெகுவிரைவில் ஒடுக்கப் படுவோம், அலைக்கழிக்கப்படுவோம், சிதறடிக்கப்படுவோம், கேவலமாய் சித்தரிக்கப்படுவோம். நமது விடியலை நம் கையில் வைத்துக் கொண்டு, நாடு பூராவும் நடைபிணமாய் நாம் அலைய வேண்டியதே இல்லை! நாம் ஒன்றுபட்டால் நம் பின்னால் நூறு அரசியல் கட்சிகள் நாயாய் அலையும். நம்மைப் பிரிக்க நயவஞ்சகமாய் முயற்சி செய்யும், எல்லா சக்திகளுக்கும் நாம் புரட்சியை வென்றெடுக்க முடியும்!

ஒரு மாவட்டத்தில் குறைந்தது 400 முதல் 600-வரை உள்ள மசூதிகளை ஒன்று சேர்த்தால் நமக்கு மிக எளிதானது. தமிழகம் எங்கும் உள்ள (வக்பு செயப்பட்ட 8,600 மசூதிகளும், வக்பு செய்யப்படாத 2000-க்கும் மேலான மசூதிகளும்) சுமார் 10,600-க்கு மேல் உள்ள மசூதிகளுக்கு உட்பட்ட ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒன்றுபட்டு, அல்லாஹ்வின் பயம்கொண்டு, பெருமானார்(ஸல்) வழிக்கொன்டு, தூய கலிமா உண்மை, ஏகன் அல்லாஹ் உண்மை, குர் ஆன் உண்மை, ரசூல் உண்மை, மண்ணரை வாழ்வு உண்மை, மறுமை உண்மை, சொர்க்கம் உண்மை, நரகம் உண்மை என்று சதா சர்வகாலமும் பேரறிவாளன் அல்லாஹ்வின் நேரடிப் பார்வையில் நாம் உள்ளோம் என்ற அச்ச உணர்வுடன், தூய நிய்யத்துடன் ஒன்றுபட்டால், இந்த நாட்டில் நம்மால் எதையும் சாதிக்க இயலும்.

நான் கூறியுள்ள இது அழகான தீர்வு, ஆபத்தற்ற தீர்வு, அமைதியான தீர்வு, அதிகாரத்தை நாம் கைப்பற்ற இதைவிட எளிய தீர்வு இருப்பதாக எனக்கு புலப்படவில்லை. நாம் ஆட்சி அதிகாரத்தைக் கை பற்றாமல் இந்த மண்ணில் (இந்தியாவில்) நம்மால் எதையும் சாதிக்க முடியாது. எதுவும் நமக்கு சாத்தியமாகாது!

இதை நாம் சாதிக்க முனைந்தோமானால் நமக்கு பல்வேறு இடையூறுகளை அரசே ஏற்படுத்தும். நம்மில் சிலரை கொம்புசீவிவிட்டு ஊக்குவிக்கும். நமக்கெதிராய் உற்சாகப்படுத்தும், எவரையும் எடுபிடிகளாக்கி ஏவிவிடும் அவர்களை புறக்கணித்துவிட்டு, நாம் அவர்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தி ஒதுக்கிவிட்டு, உறுதி கொண்ட நெஞ்சோடு, நாம் ஒன்றுபட கடைசிவரை முயலவேண்டும். நமது இனத்தவர்கள் உருகுலையாது ஏகன் அல்லாஹ்வின் தக்வாவுடனும், இந்த மெளனப்புரட்சி, அமைதி வழியில் அடையும் விதமாக வென்றெடுக்க வேண்டும். நம் உயிருக்கும் மேலான எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வழியில் உறுதியாய் நில்லுங்கள், இம்மையையும், மறுமையையும் வெல்லுங்கள்.

இன்று தமிழகத்தில் உள்ள பல முஸ்லிம் அபைப்புகள் பிழைப்புவாதி அமைப்பாகவும், பிழையான அணுகுமுறைகளை உடையதாகவும் இருக்கின்றன. இவைகள் வீண் விளம்பர ஸ்டண்ட் அடிப்பதும், பெருமைக்குப் பணியாற்றுபவையாகவும் உள்ளன. பல அமைப்புகள் (பிற) கட்சிகளின் அடிவருடிகளாகவும் உள்ளன. இம்மாதிரி அமைப்புகள் நாளடைவில் குறுகிப் போகும் வாய்ப்புகளே அதிகம். இந்த அமைப்புகளில் திட்டவட்டமாக மக்களின் விடியலுக்கு தீர்வு கண்ட இயக்கங்கள் எதுவுமே இல்லை. இன்றுள்ள அமைப்புகள் தான் தோன்றித்தனமான தங்கள் போக்கினை கை விட்டுவிட்டு நாளை மறுமையில் ஏகன் அல்லாஹ்வின் தர்பாரில் நிற்கப் போவது உறுதி என்ற அச்சம் கொண்டு, சமுதாயத்தை ஒருங்கினைக்கவும் தீர்க்கமான, தீர்வான திட்டங்களை இஸ்லாமிய மக்களிடம் சென்றடையவும் பாடுபட்டால் ஒழிய நமது இனம் வளராது.

இந்த வாழ்வுரிமை சாசன திட்டத்தை அமைதியாக தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு நாம் உறுதியுடன் இருந்து, இதுவே நமது பணி, இதுவே நமது இலக்கு, இதுவே நமது இலட்சியம், அதுவரை யாருடைய கூப்பாடுகளுக்கும், மேற்பூசலுக்கும் நாம் செவிசாய்க்காது செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் இம்மையில் வெற்றியும், அழகான வாழ்வும், மறுமையில் ஏகன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றவர்களாகவும் மண்ணறையில் இருந்து நாம் எழுப்பப்படுவோம். இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தும் வீணான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நமது இலட்சியத்தை திசை திருப்பிவிடும்!

எனவே என்னருமை இஸ்லாமிய சமுதாயமே, மார்க்க உலமாக்களே, இமாம்களே, பள்ளிவாசல் நிர்வாகிகளே, இளைஞர்களே, வியாபார பெருமக்களே, தாய்மார்களே நீங்கள் எல்லோரும் தொய்வில்லாமல் நம் வருங்கால வாரிசுகளின் வாழ்வுரிமையை வடிவமைக்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொள்ளுங்கள்! அந்த எண்ணத்திலிருந்து எள்முனை அளவுகூட எக்காரணம் கொண்டும் மாறாதிருங்கள்! இதைப் படித்த மறுநிமிடமே. உங்கள் பணிகளை துவங்கிடுங்கள்! இந்த வாழ்வுரிமை சாசனத்தை ஒரு முறைக்கு நூறுமுறை படியுங்கள். மனதில் அசை போடுங்கள். சிலர் செவிகளில் போட்டு சிந்தையில் ஏற்றுங்கள்! நடைமுறைக்கு ஒத்துப் போகும். நம் விடியலுக்கு விடை நிச்சயம் தோன்றும் இன்ஷா அல்லாஹ்! நன்றி
பழனி பாபா.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::