Thursday, February 4, 2010

அமைதியாக ஒரு அழைப்புப் பணி

பீஸ் விஷன் ஆஃப் இஸ்லாம் நடத்திவரும் சர்வதேச இஸ்லாமிய மாநாடு மற்றும் கண்காட்சி இவ்வருடம் பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் ஏற்பாடாகி இருந்தது.

கடந்த 13ந் தேதியிலிருந்து 17ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியின் துவக்க நாளன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தீன் காசிமி புரஃபெஷனல் கூரியர் நிறுவனர் அஹ்மது மீரான், எஸ்.எம். இதாயத்துல்லாஹ் உட்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.







இந்தியாவை விஞ்ஞான ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும், பொற்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் எதிர்கால மாணவச் செல்வங்களை உருவாக்குவோம் என்று ஆங்கிலத்தில் பேசி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் பீஸ் விஷனின் தலைவர் ஜாகீர் அஹ்மது.

மூத்த வழக்குரைஞர் அபிபுல்லாஹ் பாஷா பேசுகையில், ""இஸ்லாம் என்பது அன்பு, அமைதிக்கான தூது. அது வெறுப்புக் குரியதல்ல. அமைதி, மனித நேயம், அன்பு ஆகியவற்றையே அது மனித குலத்திற்குப் போகிக்கிறது'' என்றார்.







பீஸ் நிகழ்ச்சியில் மக்கள் ரிப்போர்ட் பத்திரிக்கை அவரைத் தொடர்ந்து, ""தமிழ் என் மொழி. நான் தமிழில்தான் பேசுவேன்'' என்றபடியே மைக் பிடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் அலி, ""நான் சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின்போது எழுந்து "உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என்று சொன்னேன். சபாநாயகர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தார்கள். மறுநாளும் இதே முகமனைச் சொன்னேன். அப்போது சபாநாயகர் மட்டும் "உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என்று மறுமொழி சொன்னார். மூன்றாவது நாளும் மீண்டும் அதே முகமனைச் சொன்னேன். அனைத்து உறுப்பினர்களும், "உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என்று பதில் சொன்னார்கள். இப்போதெல்லாம் நான் பேச எழுந்ததுமே உறுப்பினர்களே முந்திக் கொள்கிறார்கள். இதனை சட்டமன்றத்தில் நான் செய்த அழைப்புப் பணியாகவே கருதுகிறேன்'' என்றார்.



அடுத்துப் பேச வந்த தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், ""நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரையை மேற்கொள் காட்டிப் பேசினார். நபிகள் நாயகம் கொண்டு வந்த தூதுச் செய்தியை சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் இன்னும் அனைத்து வடிவத்திலும் மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு என்பது தவிர்க்க முடியாது; மறுக்க முடியாது. அந்த முயற்சியை பீஸ் விஷன் முன்னெடுத்திருக்கிறது.

ஜாகீர் நாயக் கூட இந்த கண்காட்சியை கண்டபின்தான் தனது தொலைக்காட்சிக்கு பீஸ் டி.வி என்று பெயர் சூட்டியுள்ளார்"" எனக் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர்.,

""அமைதியைப் பற்றி பேச வந்திருக்கி றோம். ஆனால் இந்த அமைதிக் கண்காட் சிக்கு தடை ஏற்படுத்துகிறார்கள்! தடை ஏற்படுத்துபவர்கள் யார் என்று பார்த்தால்.... யார் அல்லாஹ்வையும், ரசூலையும் ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள்தான் என்பது ஆச்சரியமாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள். உங்கள் மத்தியில் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதைப் பின்பற்றும் காலம் வரை நீங்கள் வழி தவறமாட்டீர்கள் என்று! என்றைக்கு இதைப் பின்பற்றுகிறோமோ அன்றைக்குத்தான் இந்தச் சமுதாயம் நேர்வழி பெறும்.

திருமறைக்குர்ஆன் மனித குலத்திற்குச் சொந்தமானது. முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. ஆனால் அது மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளதா? பட்டுத் துணியில் போர்த்தி வைக்கப்பட்டுள்ளது. அதை யாரிடம் தர வேண்டுமோ அங்கே தந்திருந்தால் நம்மை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று சொல்வார்களா?

முன் சென்ற சமுதாயம் சோதிக்கப்பட்டது போல, நீங்களும் சோதனை செய்யப்படுவீர்கள். சோதிக்கப்படாமல் சொர்க்கம் சென்று விடலாம் என்று எண்ணுகிறீர்களா என இறைவன் கேட்கிறான்.

மார்க்கத்தை ஏ.சி. அறையில் அமர்ந்து சொல்ல முடியாது. நடைமுறை அதுவல்ல. நபி (ஸல்) அவர்கள், அடிவாங்கினார்கள், கல்லடிபட்டார்கள். எத்தனை பேர் அடிவாங்கி இருக்கிறீர்கள்? வெட்டுப் பட்டிருக்கிறீர்கள்? ஊர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள்? இவையெல்லாம் நடைமுறையில் ஏற்படும். சோதனைகள் ஏற்பட வேண்டும்.

மூமின்கள் நபிமார்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என ஏங்கித் தவிக்கும் அளவிற்கு சோதிக்கப்பட்டார்கள். ஜாகீர் நாயக் மற்றும் பீஸ் விஷன் சகோதரர்களுக்கு சொல்லுகிறேன்.

இந்த மாநாட்டுக்கு பல தடைகள் ஏற்பட்டபோதும், கேட்கக் கூடிய கூட்டத்தை அல்லாஹ் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான். தாஃவா மட்டும்தான் இறுதியில் புரட்சியை ஏற்படுத்த முடியும். நாம் தொப்புக் கொடி உறவுகளான அத்தனை பேரிடமும் மூடி மறைக்கப்பட்ட குர்ஆனை கொண்டு போய் சேர்ப்பிக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் நாங்கள் இலவசமாக பிறமக்களிடத்தில் சேர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். சகோதர ஜாகீர் நாயக்கிற்கு ஒரு வேண்டுகோள். இந்த மேடையில் பிற சமய மக்களுக்கு குர்ஆன் வழங்குவதை நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறி விடை பெற்றுக் கொள்கிறேன்'' என்று பேசி முடித்தார்.

மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரங்குகள் இந்தக் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மவுண்ட் ரோடு மதரஸôயே ஆஸம் பள்ளிக்குக் கூட வளாகத்தில் ஏற்படாகியிருந்த கண்காட்சி சில இடைஞ்சலகளின் காரணமாக கடைசி நேரத்தில் ஈஞ்சம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. 13ந் தேதி தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்பு தான் போலீஸ் அனுமதியும் கிடைத்திருக்கிறது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::