Showing posts with label இல்லறம். Show all posts
Showing posts with label இல்லறம். Show all posts

Sunday, May 20, 2018

இல்லறத்தின்   இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின்    இதயங்கள் பெண்கள்!

இல்லறத்தின் இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்!

Image result for இயற்கையும் இல்லறமும்!
https://marhum-muslim.blogspot.in/
இல்லறத்தின்   இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின்    இதயங்கள் பெண்கள்!
[ வாழ்க்கை என்பது நிலவு! சிலசமயம் இருட்டும், சிலசமயம் முழுமையான ஒளியைத்தரும். இருட்டைக்கண்டு இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டால் வாழ்க்கையில் முழுமையான ஒளியைக் காணமுடியாது.
வாழ்க்கை என்பது ஒரு இருட்டறை! அதில் அன்பும், காதலும் இரண்டு ஒளி விளக்குகள். இந்த விளக்குகள் இல்லையானால் அந்த வாழ்க்கையில் பயன் இல்லை, ஒளியில்லை.
வாழ்க்கை என்பது விளைநிலமாகும். மண்வளத்தையும், அது பராமறிக்கப்படும் விதத்தைப் பொருத்தே பயிர்கள் வளர்ந்து பலன் தருவதுபோல் மணவளத்தைப் பொருத்தே இன்பம் உண்டாகிறது.
வாழ்க்கை என்பது இரண்டு கயிறுகளால் இணைத்துக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ள ஊஞ்சல். அது தானாக ஆடாது. நாம் உந்தித்தள்ளினால்தான் ஆடும். அதிலே ஆடும்போது நம் உள்ளமெல்லாம் இன்ப ஊஞ்சலாடும்.]
Image result for இயற்கையும் இல்லறமும்!இல்லறத்தின் இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்!
மணம்புரிந்து மாறாத இன்பம் காணத்துடிக்கும் மணமக்களே!
வாழ்க்கை என்பது வசந்தகாலப் பூங்கா. அன்பிலே பிறந்து அறத்தால் வளர்ந்து, பண்பிலே சிறந்து பாரில் உயர்ந்தது இல்லற வாழ்க்கை. இந்த இல்வாழ்க்கை வானிலும் விரிந்தது, தேனிலும் இனிமை மிக்கது, தென்றலிலும் சுகமானது, நிலவினும் குளிர்ச்சியானது, நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பது.
இல்லறத்தின் தலைவர்கள் ஆண்கள் - இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்.
தன்னந்தனியாக ஆடிக்கொண்டிருந்த முல்லைக்கொடிக்கு ஒருகோல். நேற்றுவரை தனித்திருந்த கன்னிக்கு ஒரு கணவன்! கொடியைத் தாங்கும் கோலுக்கு ஒரு இன்பம்! குமரியைத் தழுவும் கணவனுக்கோ பேரின்பம்!
சூழ்ந்து வீசிக்கொண்டிருக்கும் இனிய காற்றிலே ஆடிக்கொண்டிருக்கும் நறுமலரைப் பாருங்கள். அந்த நறுமலர் இனிய மணத்தை அள்ளி வீசுகிறதல்லவா! அந்த நறுமணந்தான் இல்லற வாழ்க்கையின் இனிய மணம்.
பரந்து விரிந்து கிடக்கும் நீலப்பெருங்கடலிலே, பேரிரைச்சலிட்டுக்கொண்டு பொங்கி எழும் அலைகள், அந்தப் பேரலைகள் கரையைக் கண்டதும் அமைதியாகச் சென்றவிடுகிறதல்லவா! அந்த அமைதி தான் அடுக்கடுக்காகத் துன்பங்கள் ஆர்ப்பரித்து வந்தாலும் அதை அடக்கி ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லற வாழ்க்கைக்கு உண்டு என்பதைக்கூறும் பேரமைதியாகும்.
Image result for இயற்கையும் இல்லறமும்!உயர்ந்த மலையிலிருந்து உருவெடுத்து உருண்டோடி வரும் நீர்வீழ்ச்சியைப் பாருங்கள். எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் தெளிந்த நீரோடையாகச் செல்கிறதல்லவா! அந்தத் தெளிவுதான் மனிதன் எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் கலங்கக்கூடாது என்பதை உணர்ந்து கொள்வது இல்லற வாழ்க்கையின் தெளிவாகும்.
வானமண்டலத்திலிருக்கும் மேகக்கூட்டங்களைப் பாருங்கள்! அவை ஒன்றோடு ஒன்று இணையும்போது ஏற்படுகின்ற இடியோசையையும் கேளுங்கள். இன்பமும் துன்பமும் ஒன்றோடொன்று மோதும்போது ஏற்படுகின்ற நிலையை உங்களுக்கு உணர்த்தும். அதைக்கண்டு கலங்கிவிடாதீர்கள். இடிஇடித்து மழை பெய்யும் என்பார்கள். ‘துன்பம் வந்தல் துணிந்துநில், இன்பம் பிறக்கும்’ என்பதைத்தான் இது உணர்த்துகிறது.
வளைந்து வளைந்து தோன்றும் மலைத்தொடர்கள், நெளிந்து நெளிந்து செல்லும் சிற்றாருகள், வானமண்டலத்தில் மிதந்து செல்லும் மேகக்கூட்டங்கள், வண்ண ஒளியை வாரி வாரி வழங்கும் நிலவு, கூடுகின்ற மேகம், கொட்டுக்கொட்டென்று கொட்டுகின்ற மழை, பூங்காவில் பூத்துப்பூத்துச் சொரியும் மலர்கள், பளிங்குப் பாறைகள், பாலைவனக் காட்சிகள், இருண்ட இரவுகள், இருளகற்றும் ஞாயிறு, இவையெல்லாம் வாழ்க்கையின் தத்துவங்களை மனிதர்களுக்கு வாரி வாரி வழங்குவதை கவனியுங்கள்.
உயர்ந்த மலைபோல் உள்ளம் வேண்டும். நெளிந்து செல்லும் சிற்றருவிபோல் அவ்வுள்ளம் தெளிவோடு இருக்க வேண்டும். தெளிவோடு இருக்கும் உள்ளத்தில் மேகக்கூட்டம்போல் கருணை தோன்ற வேண்டும். கருணை பிறரை வாழ வைக்கத் தொண்டு என்னும் மழையைப் பெய்யவேண்டும்.
Image result for இயற்கையும் இல்லறமும்!தொண்டு செய்யும் உள்ளத்தில் காரிருளை விரட்டும் வண்ணநிலவைப்போல் ஒளி மிகுந்திருக்க வேண்டும். ஒளிசிந்தும் உள்ளம் பிறருக்கும் வாழவழி காட்ட வேண்டும். இதனால் பாலைவனம் போன்றிருக்கும் பலர் உள்ளத்தில் பசுமை உண்டாக்கப் பாடுபட வேண்டும். கயவர்களுக்குப் பாறையாகத் தோன்றும் இல்லற வாழ்க்கை தம்பதிகளுக்கு கவினுறுசோலையாகத் திகழ வேண்டும்.
இதைத்தான் இயற்கை மனிதர்களுக்கு உணர்த்தி நிற்கிறது. இன்பத்திற்கும் துன்பத்திற்கும், காதலுக்கும் மோதலுக்கும், தன்னலத்துக்கும் பொதுநலத்துக்கும், செல்வத்துக்கும் வறுமைக்கும், முதலுக்கும் முடிவுக்கும் இல்லறத்துக்கும் துறவறத்துக்கும், இயற்கை கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம் ஏராளம்! பாடத்தை நன்கு கற்றுத் தெளிந்து விடை எழுதிவிட்டால் வாழ்க்கைத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம்.
நல்ல விதைகளை ஊன்றினால் நல்ல மரங்கள் தோன்றி நல்ல கனிகளைத் தரும். நல்ல எண்ணங்களை உருவாக்கினால் நலமான வாழ்க்கை அமைந்து இன்பத்தைத் தரும்.
Image result for இயற்கையும் இல்லறமும்!நல்ல வாழ்க்கையை உருவாக்குவதும் மனிதர்கள்தான். குருவிக்கூட்டைப்போல் பிய்த்து எறிபவர்களும் மனிதர்கள்தான். மனிதர்கள் அறிவுக்கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது அவர்களின் அகத்தில் துன்பம் பேயாட்டம் போடும். தூங்கிவழிந்து கொண்டிருக்கும்போது துன்பம் அவர்களை மூட்டைப்பூச்சிபோல் துன்புறுத்தும். மூடிய கண்ணைத் திறந்து அகன்ற விழிகளால் அறிவை அரவணைத்து சோர்வை உதறித் தள்ளிவிட்டால் துன்பங்கள் எங்கோ பறந்துவிடும்.
வாழ்க்கை என்பது நிலவு! சிலசமயம் இருட்டும், சிலசமயம் முழுமையான ஒளியைத்தரும். இருட்டைக்கண்டு இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டால் வாழ்க்கையில் முழுமையான ஒளியைக் காணமுடியாது.
வாழ்க்கை என்பது ஒரு இருட்டறை! அதில் அன்பும், காதலும் இரண்டு ஒளி விளக்குகள். இந்த விளக்குகள் இல்லையானால் அந்த வாழ்க்கையில் பயன் இல்லை, ஒளியில்லை.
வாழ்க்கை என்பது விளைநிலமாகும். மண்வளத்தையும், அது பராமறிக்கப்படும் விதத்தைப் பொருத்தே பயிர்கள் வளர்ந்து பலன் தருவதுபோல் மணவளத்தைப் பொருத்தே இன்பம் உண்டாகிறது.
வாழ்க்கை என்பது இரண்டு கயிறுகளால் இணைத்துக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ள ஊஞ்சல். அது தானாக ஆடாது. நாம் உந்தித்தள்ளினால்தான் ஆடும். அதிலே ஆடும்போது நம் உள்ளமெல்லாம் இன்ப ஊஞ்சலாடும்.
www.nidur.info

Friday, April 18, 2014

தவறான எண்ணங்கள்...!

தவறான எண்ணங்கள்...!

[ விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டுபிடித்தார்கள்.
இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகும், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன.
முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.]
மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body இமேஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது.
முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த நம்பிக்கைகள் எந்த காலகட்டத்தில் உருவானவை என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டுபிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகிறது என்பது கண்டறியப்படாத காலகட்டத்தில், அம்மை என்றொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவதும் நம்பினார்கள்.
இதுபோல் பல நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள். ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகும், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன. இண்டெர்நெட்டில் நூற்றுக்கணக்கான சைட்கள் இதுபற்றி இருக்கின்றன என்றால், உலகம் முழுக்க இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு காலூன்றியுள்ளது பாருங்கள்.
இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.
அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.
சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் து}ண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.
முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள்.
ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது. மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.
சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் து}ரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஒப்ரிக்கல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.
போலி டாக்டர்களும் மருந்து தயாரிப்பவர்களும் இந்த பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பயன்படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விடுகிறது’’ என்று மேலும் அதிகம் பயங்காட்டி காசு சம்பாதிக்கிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண்மை. மேலும் எந்த மருந்து மாத்திரைகள் மூலமும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப்புறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.
இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.
பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.
தொகுப்பு : தளவாய் சுந்தரம்,


நன்றி - குமுதம்

Tuesday, May 14, 2013

சபலம் தேவையா?

சபலம் தேவையா?

''நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.''
இந்த செய்தியில் தொடர்புள்ளவர்கள் நட்பை கேவலப்படுத்துகிறார்களா? அல்லது நம்பிக்கையை கேவலப்படுத்துகிறார்களா? அல்லது உறவுகளின் புனித தன்மையை கேவலப்படுத்துகிறார்களா? எல்லாவற்றையுமே என்று கசப்பாகவே நினைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.http://www.marhum-muslim.com/
திருமணம் ஆன பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்க முடிவதில்லை என்று பல நேரம் நினைத்துப் பார்ப்பேன். வயதில் உள்ள ஆணும் பெண்ணும் நெருக்கமாக பழகினால் அது பாலியில் உறவில் முடிந்துவிடும் என்று இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. எத்தனையோ சினிமாக்கள் நட்புக்கும் பாலினத்திற்கும் தொடர்பில்லை என்று காட்டிவிட்டார்கள். ஆனால், அது பொய்யான கற்பனையே!
நட்பு என்பது அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம், நெருங்க நெருங்க ஒத்த பாலினம் என்றால் இருவருக்கும் ஒரின ஈர்ப்பு மாதிரி ஈர்ப்பு இல்லை என்றால் ஒண்ணும் ஆகாது. ஆனால் எதிர்பாலினம் நட்பு கொள்ளும் போது ஈர்ப்பு இயற்கையிலேயே அமைந்துவிடுவதால் அன்பின் வெளிப்பாட்டில் தன்னையே கொடுக்கலாம், அல்லது உரிமை எடுத்துக் கொண்டு அடையலாம் என்றெல்லாம் சபலமாக ஆகிவிடும் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.
என் நண்பர் ஒருவர் முன்பு ஒருமுறை அழகாக சொன்னார், 'ஒருவன் பாலியல் விசயத்தை தவறான வழியின் மூலம் ஈடுபடாமல் இருக்கிறான், குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றுதான் பொருள் என்று! அதாவது சூழ்நிலை அது போல் அமையாமல் போனால் அவன் யோக்கியனாகவே இருப்பான்' என்ற பொருளில் சொன்னான். திகைத்தேன். அவர் சொன்னது சரியா தவறா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
வலிய வாய்ப்பு கிடைத்தால் எத்தனை பேர், சினிமா கதா நாயகர்கள், விரக பார்வையுடன் நெருங்கும் பெண்களுக்கு அட்வைஸ் மழை பொழிவது போல் செய்வார்கள் என்று தெரியவில்லை. நடப்பில் விழுக்காட்டு அளவில் ஆண்கள் தான் பெண்களை அதிகம் தூண்டுகிறார்கள்.
பெண்களை குறை சொல்ல முடிந்தால் எதோ ஒரு சபலம் என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். அதற்கு முழுப் பொறுப்பையும் ஆண் வர்க்கம் தான் ஏற்கவேண்டும். ஆண்களில் கேடுகெட்ட குணத்தை வைத்துதான் 'அண்ணன் மனைவியை அம்மா' என்ற பொருள்படவே நினைக்கும் அளவுக்கு தமிழ் சமூகத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள், நண்பர் மனைவியை ஏன் தன் சகோதரி என்று கருதமுடியவில்லை? கட்டுப்பாடு அற்றவர்களுக்கு எந்த உறவும் தடையில்லை போலும்.
உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு எந்த சபலமும் ஏற்படாது. பழக்கத்தை வைத்து தவறாக நடந்தால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள். அடிக்க வேண்டும்.
ஒரு சிலரின் ஈன செயலை வைத்து எல்லோரையும் எடை போட முடியாது. ஆனாலும் அந்த ஒரு சிலரில் ஒரு சிலருக்கு தவறுகள் நடப்பதற்கு சூழலே முக்கிய காரணமாக அமைந்துவிடும். மெக சீரியல்களும், சினிமாக்களும் சமூக சீரழிவுகள் பெருகுவதற்கு சொல்லிக் கொடுக்கின்றன. சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு தவறுதான்.
On another note : இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்ற ஒரு சங்கதி : தெரிந்த ஒருவர் தன் மாமியாரை உரசி உரசி பேசுவார், தவறான இடங்களில் தொடுவார், வேண்டுமென்றே மேலே படுவார். அப்படி ஒரு வக்கிர நினைப்பு, பெண்டாட்டி நன்றாக இருக்கும்போதே!! மாமியார் அவரை ஒரு முறை நன்றாக திட்டிய பிறகே அவருக்கு புத்தி வந்தது.
பல மெகா சீரியல்களின் பேச்சுகள் மட்டும் காதில் விழும்... அதிலேயே இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் அதிகம் எடுத்தாளப்படுகிறது.
எந்தவொரு நிலையிலும் ஆண் ஆணாகத்தான் இருப்பான். அதற்கு வசதி இருக்கும் பட்சத்தில் பெண்ணை அடையவே அவன் மனம் விரும்பும்.
தவறு யார் செய்திருந்தாலும், தண்டணையின் பெரும்பகுதியை பெண்ணே அனுபவிக்கிறாள். எனவே தவறுகள் நடைபெறாமலிருக்க அதற்கான வாய்ப்புக்களை முழுதும் அடைத்து விடுவதே (அல்லது அத்திசையில் முயற்சிப்பதே) சரியானது. அதாவது பெண்கள் அல்லது பொறுப்பிலுள்ளவர்கள், ஒரு அன்னிய ஆணுடன் பெண் தனித்திருக்கும் வாய்ப்புகளை முழுவதும் தவிர்க்க முயற்சிப்பதே சிறந்தது.
திருமணம் ஆன ஆண்கள் கூட வேறொரு பெண் தன்னை நேசித்தால் தன் ஆண்மையின் பெருமையாகத்தான் நினைக்கிறான். உறவுகள் புரிந்து கொள்ளப்படாதவரை...
பெண் என்பவள் யார்? அவள் தன்மைகள் என்ன? என்பதையும் புரிந்து கொள்ளப்படாதவரை இத்தகைய சமூக அவலங்கள் தொடர்கதைதான்.
-கோவி.கண்ணன்

Saturday, January 19, 2013

பாலுறவு ஆசைக் குறைபாடு' ..!

பாலுறவு ஆசைக் குறைபாடு' ..!



 பாலுறவில் ஏற்படும் பாதிப்புகள்
திருமணமாகி, தம்பதிகளாக வாழும் இளைஞர்களும், இளம்பெண்களும் கூட இப்போது `பாலுறவு ஆசைக் குறைபாட்டால்' பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்போதாவது ஒருமுறை கூட செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லாமல் போவதையும்- அல்லது அந்த ஆசை குறைந்து போவதையும், `பாலுறவு ஆசைக் குறைபாடு' என்கிறோம். ஆசை இருந்தாலும் பாலுறவு கொள்ளும் திறன் குறைந்துபோனால் அதனை `பாலுறவு திறன் குறைபாடு' என்கிறோம்.
  யார் யாருக்கு பாலுறவு ஆசை குறையும்? 
மன இறுக்கத்தில் இருப்பவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கும் திறன் குறையும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஆசை குறைகிறது. சிலருக்கு மாதவிடாய் காலத்தில் ஆசை குறையும். குறிப்பிட்ட சில நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளாலும் தற்காலிக குறைபாடு ஏற்படுவதுண்டு.பாலுறவில் விருப்பம் இல்லாமல் இருக்கும்.
ஆண்களில் 45 சதவீதம் பேர், `தங்களுக்கு ஒற்றைத் தலைவலியால் ஆசை குறைகிறது' என்று குறிப்பிடுகிறார்கள். சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரையில், நாட்பட்ட நிலையில் அதிக களைப்பு, மயக்கம், படபடப்பு போன்றவைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் அவர்களால் செக்சில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. உறவின்போது அவர்களுக்கு தானாக சிறுநீர் கசிவதும் புதுவித நெருக்கடியை உருவாக்கும். அவர்களுக்கு ரத்த ஓட்டம் போதிய அளவில் இருக்காது. சீராகவும் இருக்காது. அதனால் அவர்களது மூளை தேவையான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தாது.
பாலுணர்வு உறுப்புகளும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேகமாக செயல்படாது. வயதிற்கும்- பாலுணர்வு செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. மனிதனின் ஆயுள் முன்பைவிட இப்போது மருத்துவத்தால் அதிகரித்திருக்கிறது என்றாலும், மனிதர்கள் ஆயுளின் பெரும்பகுதியை நோயுடன் கழிக்கும் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்திய புள்ளிவிவரப்படி பெண்களின் சராசரி வயது ஆண்களைவிட ஆறு ஆண்டுகள் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் நம் நாட்டு நடுத்தரவயது பெண்கள் மாதவிலக்கு முற்றுப்பெற ஆரம்பித்ததுமே, `தாம்பத்ய உறவுக்கும்` ஒரு முற்றுப்புள்ளி விழுந்து விடுவதாக நினைக்கிறார்கள். இது தவறான எண்ணமாகும். உண்மையில் நடுத்தர வயதைக் கடந்தாலும் பெண்களுக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருக்கவே செய்யும்.
அவர்களது துணைவர்கள் தான் வயது மூப்பின் காரணமாக தாம்பத்ய திறன் குன்றியவர்களாகிறார்கள். தற்போது எடுக்கப்பட்ட சர்வே படி ஐம்பது வயதுக்கு உள்பட்ட திருமணமான ஆண்களில் 98 சதவீதம் பேருக்கு செக்ஸ் செயல்பாட்டில் ஆர்வம் போதுமான அளவு இருக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் 50 வயதைக் கடப்பதில் இருந்து படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது.
50 வயதைக் கடந்த பின்பு ஆண்களைவிட வேகமாக பெண்களின் ஆசை குறைந்துவிடுவதாகவே தற்போதைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 50 முதல் 60 வயதில் பெண்களின் செக்ஸ் ஆர்வத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு நாட்டம் குறைந்து விடுகிறது.
அந்த பருவத்தில் அவர்களுக்கு பெண்மை ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து விடுவதே அதற்கு காரணம். இதனால் பிறப்பு உறுப்பில் வறட்சி, வலி, நோய்த் தொற்று, தசை நெகிழ்வு இல்லாத நிலை போன்றவைகள் தோன்றுகின்றன. அப்போது நிலவும் குடும்பச்சூழல்களும் பாலுறவு வேட்கையை மட்டுப்படுத்தி விடுகிறது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட கணவர், மனைவி இருவருக்குமே நரம்பு மற்றும் உடல் பலகீனங்கள் ஏற்படுகின்றன. மனஇறுக்கமும் தோன்றுகிறது. அதனால் செக்ஸ் தொடர்பு அவர்களுக்கு அச்சமூட்டும், அல்லது அவசியமற்றது என்று எண்ணத்தோன்றும்.
செக்ஸ் ஆர்வமின்மை தம்பதிகளில் இருவருக்கோ, ஒருவருக்கோ ஏற்பட்டால் முதலில் அவர்கள், `இதுவும் ஒரு நோய்த்தன்மை போன்றதுதான், இதற்கும் மருத்துவ விஞ்ஞானத்தில் தீர்வு இருக்கிறது' என்று நம்ப வேண்டும். பின்பு அந்த ஆர்வமின்மை மனரீதியான பிரச்சினையா? உடல்ரீதியான குறைபாடா என்பதை மருத்துவரீதியாக கண்டறிய முன்வர வேண்டும். பின்பு அதற்கான சிகிச்சைகளை செக்ஸாலஜிஸ்ட்டிடம் பெற வேண்டும்.
செக்ஸ் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள மிக முக்கியமான தேவை கணவன், மனைவி இடையே இணக்கமான காதல் உணர்வு. கோபம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை தவிர்த்து விட்டு தனது இணையுடன் முழுமனதோடு உறவுகொள்ள முன்வர வேண்டும். மனம்விட்டுப்பேசி தங்கள் மகிழ்ச்சியை தாங்களே மீட்டெடுப்பது மிக அவசியம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்