Thursday, October 31, 2013

நிமிருங்கள்...!

இன்றைக்குத் தகவல் தொடர்பு அவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. தொலைபேசி முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதுதான் உண்மையிலேயே தகவல் தொழில்நுட்பப் புரட்சி எனலாம்.
நிமிருங்கள்...!இன்று செல்போன் என்பது பேசும் கருவியாக மட்டுமில்லை. பலவிதமான பயன்பாடுகளுடன் இருக்கிறது. அதில் இருக்கும் மிக முக்கியமான பயன்பாடு இன்றைக்கு விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் சமூக வலைத்தளங்கள்.
உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட 10 சமூக வலைத்தளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் ஃபேஸ் புக்கிற்கு மட்டும் 50கோடிக்கும் மேலான பயனாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும் இளைஞர்களும்தாம்.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா 7ஆவது இடத்தில் இருக்கிறது. சமூக வலைத்தளங்களை இவ்வளவு பேர் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அது மிகச் சுதந்திரமான களமாக இருப்பதுதான். அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள முடியும். உலகமயமாக்கலால் தனித் தனி மனிதர்களாகச் சுருங்கிப் போய்விட்ட சமூகத்தைச் சமூக வலைத்தளங்கள் ஒன்றிணைக்கின்றன.
சமீபத்தில் எகிப்து. லிபியாவில் போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகளில் சமூகவலைத்தளங்களின் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டிலும் முக்கியமான பல மக்கள் போராட்டங்களுக்கு ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் ஆதாரமாக இருந்தன. இன்று மனிதர்கள் கூடிச் சந்திப்பதோ உரையாடுவதோ அரிதான ஒன்றானதாகிவிட்ட காலத்தில் ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக அது சாத்தியப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஃபேஸ்புக் நண்பர்கள் சில குழுக்களை அமைத்து நேரடியாகச் சந்தித்து உரையாடுகிறார்கள்; பல்வேறு வகையாகச் செயல்படுகிறார்கள். இது பழங்குடிச் சமூகத்தின் நடவடிக்கையை ஒத்தது என மானுடவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை ஓர் உயிரியாகப் பாவிக்கிறார்கள். தங்கள் சுக/துக்கங்களை அதனுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட தனிமை என்பது பலவிதமான மனப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.
இம்மாதிரியான தனிமைக்குச் சமூக வலைத்தளங்கள் ஆதரவாக இருக்கின்றன. 3 வருடஙகளாக துபாயில் தனிமை இருக்கும் பாலா தனக்கு ஃபேஸ்புக் ஒரு நண்பனைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்.
சமூக வலைத்தளங்களில் வாயிலாகச் செய்திகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இதன் வாயிலாக பராக் ஒபாமாவுடன்கூட நண்பர் ஆக முடியும். இந்த அடிப்படையில் இவை உண்மையான ஜனநாயக அமைப்பு எனலாம். இவை ஒரு பக்கம். மற்றொரு பக்கம் இந்தச் சமூக வலைத்தளங்கள் இன்றைய சமூகத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் ஏராளம். பெரும்பாலான பயனாளர்கள் 24 மணி நேரத்தையும் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதற்காகச் செலவிடுகிறார்கள். ரயிலில், பேருந்தில், எங்காவது காத்திருக்கும்போது எப்போது பார்த்தாலும் குனிந்தபடி சமூக வலைத்தளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேலே இயங்கிக் கொண்டிருக்கும் புறவுலகம் பற்றி எந்தக் கவனமும் இன்றிச் செல்கிறார்கள்.
ஒரு விஷயம் பற்றிய தாங்கள் எதிர்வினையை சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். சட்டென நாம் செய்யும் எதிர்வினை பெரும்பாலும் சரியாக இருக்காது. நேரடியான உரையாடல் என்றால் அதை விலக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இங்கு பதிவிடும்போது சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரும் மனக் கசப்பு ஏற்படுகிறது. அதுபோலச் சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்கள் ஒருவிதமான கீழ்த்தரமான எண்ணத்துடனே பார்க்கப்படுகிறார்கள்.
"குடும்பப் பெண்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குவைத்திருக்க மாட்டார்கள் என்ற அடிப்படைவாதிகளின் மனோபாவம்தான் இது" என்கிறார் கல்லூரி மாணவியான ஐஸ்வர்யா. முதலில் சமூக வலைத்தளங்கள் கணக்கு தொடங்குவதற்காகச் சுயவிபரங்களைக் கேட்கிறது. இதை நமக்கு மட்டும் பார்க்கும்படியாக அமைக்க முடியும். ஆனால் அனைவரும் பார்க்கும்படியாகவே எல்லோரும் தருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இடையே மிகக் குறுகிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.
முன்பின் அறிமுகமில்லாதவர்கள் சாட்டிங் மூலமாக அறிமுகமாகி அவர்களிடம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு உங்கள் கடவுச் சொற்களை அவர்களை யூகிக்க முடியும். இப்படியாக ஃபேஸ்புக்கில் மட்டும் 10 கோடி கணக்குகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன (Hack) எனத் தகவல் உள்ளது. பாராட்டு என்ற சொல் மறையும் அளவுக்கு ஃபேஸ்புக் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்போது ஃபேஸ்புக்கிற்கு வெளியில் எல்லோரும் லைக் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். செல்போனிலும் சமூக வலைத்தளத்தை இயக்கும்படியான தொழில்நுட்பம் வந்துவிட்டதால் 24 மணி நேரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் உள்ளவர்களோடு பேச நேரமில்லாமல் போகிறது. இன்று பல அலுவலகங்களில் சமூக வலைத்தளங்கள் பார்க்க அனுமதி இல்லை. பணியாளர்கள் வலைத்தளங்களைப் பார்ப்பதிலேயே கவனமாக இருப்பதால் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது.
2009இல் பெரும் நிறுவனங்களில் மேற்கொண்ட ஓர் ஆய்வு 60 சதவீதப் பணியாளர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது. கால அவகாசம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு கூட இம்மாதிரியான கால அவகாசம் அனுபவிக்கக்கூடிய ஒன்றாக இருந்திருக்கிறது. இன்று உள்ள பரபரப்பான வாழ்க்கை அவகாசம் என்பதற்கு இடமளிப்பதே இல்லை. ஒரு செய்தியைப் பாரிமாறிக்கொள்ள நண்பர்களின், உறவினர்களின் வீடு தேடிச் சென்று சாவகாசமாகப் பேசிக்கொண்டிருப்பது என்பதெல்லாம் மனதிற்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய விஷயம்.
இன்று நமக்குக் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நாம் இந்தச் சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறோம். ஒரு இறந்த செய்தியை ஃபேஸ்புக்கில் யாரோ பதியும்போது அதற்கு லைக் போட்டுக்கொண்டிருக்கிறோம். பேருந்துப் பயணத்தின்போது காணும் சுவாரஸ்யமான நிலக் காட்சிகளை, சூழலை அனுபவிப்பதை விட்டுவிட்டு லைக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
நாம் எந்த ஊருக்குப் போனாலும், சுவிட்சர்லாந்து சென்றாலும் சரி. சொந்த ஊருக்குச் சென்றாலும் நாம் இருப்பது இந்தக் கையடக்க உலகத்திற்குள்தான். இந்தப் பழக்கம் குழந்தைகளையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இது போதைப் பழக்கத்தைவிடத் தீவிரமானது. பலர் ஃபேஸ்புக் லைக்குகளுக்காகப் படம் எடுக்கிறார்கள்; அதற்காகவே சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். உறவுகளிடம் இருந்தும் வாழும் சமூகத்திடமும் இருந்து விலகிப் போய்விடுகிறார்கள். சமூக வலைத்தளங்களுக்காக நாம் இன்று வாழ்வை ஒப்பனையாக்குகிறோம்.
கால அவகாசம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. ஒரு பத்து வருடத்திற்கு முன்புகூடக் கால அவகாசம் அனுபவிக்கக்கூடிய ஒன்றாக இருந்திருக்கிறது. இன்று உள்ள வாழ்க்கை அவகாசம் என்பதற்கு இடமளிப்பதே இல்லை.
ஒரு செய்தியைப் பாரிமாறிக்கொள்ள நண்பர்களின், உறவினர்களின் வீடு தேடிச் சென்று சாவகாசமாகப் பேசிக்கொண்டிருப்பது என்பதெல்லாம் மனதிற்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய விஷயம். இன்று நமக்குக் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நாம் இந்தச் சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறோம். ஒருவரின் இறந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பதியும்போது அதற்கு லைக் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
பேருந்துப் பயணத்தின்போது காணும் சுவாரஸ்யமான நிலக் காட்சிகளை, சூழலை அனுபவிப்பதை விட்டுவிட்டு லைக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறோம். நாம் எந்த ஊருக்குப் போனாலும், சுவிட்சர்லாந்து சென்றாலும் சரி. சொந்த ஊருக்குச் சென்றாலும் நாம் இருப்பது இந்தக் கையடக்க உலகத்திற்குள்தான். இந்தப் பழக்கம் குழந்தைகளையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இது போதைப் பழக்கத்தை விடத் தீவிரமானது.
பலர் ஃபேஸ்புக் லைக்குகளுக்காகப் படம் எடுக்கிறார்கள்; அதற்காகவே சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். உறவுகளிடம் இருந்தும் வாழும் சமூகத்திடமும் இருந்து விலகிப் போய்விடுகிறார்கள். சமூக வலைத்தளங்களுக்காக நாம் இன்று வாழ்வை ஒப்பனையாக்குகிறோம்.
அளவுடன் பயன்படுத்துங்கள்
குணசீலன், மனநல மருத்துவர், திருச்சி: இன்றைக்குச் சமூக வலைத்தளப் பழக்கம் ஒரு போதை பழக்கத்தைப் போல பரவியிருக்கிறது. வீட்டில், அலுவலகத்தில் எங்கும் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதிலே பலர் செலவிடுகிறார்கள்.
இன்றைக்கு உள்ள பரபரப்பான வாழ்க்கையில் நமக்கு ஆசுவாசம் கொள்ள கிடைக்கும் நேரமே மிகக் குறைவு. அதையும் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதிலே செலவிடுவது நல்லதல்ல. வீட்டிற்குள் நுழைந்ததுமே தங்கள் கைப்பேசியில் சமூக வலைத்தளங்களைப் பார்த்துக்கொண்டேதான் வருகிறார்கள். சாப்பிடும்போதும்கூட கவனமின்றி கைப்பேசியைப் பார்த்தபடியே சாப்பிடுகிறார்கள். இது ஒரு வகையில் நோய்தான்.
இதனால் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாட முடியாமல் போகிறது. பல மனப் பிரச்சினைகளுக்கு உரையாடல் சிறந்த தீர்வாகும். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஓய்வு நேரத்தையும் கழிப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. சமூக வலைத்தளங்கள் பல்வகையில் நமக்குப் பயன்படுகின்றன. அதை அளவுடன் பயன்படுத்த வேண்டும். வீண் அரட்டைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
-ஜெரீ ஜெய்
நன்றி: தமிழ் ஹிந்து


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.