Saturday, June 1, 2013

ஜனாஸா-குளிப்பாட்டுதல்

ஜனாஸாவை குளிப்பாட்ட வேண்டிய ஒழுங்குகள்
1 மரணமானவர், தன்னை இன்ன நபர்தான் குளிப்பாட்;ட வேண்டும் என்று வசிய்யத் செய்திருந்தால் குறித்த அந்நபர் குளிப்பாட்டுவதுதான் சிறந்தது.
2 வசிய்யத் செய்திராத பட்சத்தில் தந்தை, அல்லது தந்தையின் தந்தை அல்லது மகன் அல்லது மகனின் மகன் போன்ற நெருக்கமான உறவினர்கள் குளிப்பாட்டுவதே சிறந்தது.
ஜனாஸாவை குளிப்பாட்ட வேண்டிய ஒழுங்குகள்
அதே போல் பெண் ஜனாஸாவாக இருந்தால் அவர் இன்ன நபர்தான் தன்னை குளிப்பாட்ட வேண்டும் என்று வசிய்யத் செய்திருந்தால் குறித்த அந்நபர் குளிப்பாட்டுவதுதான் சிறந்தது.
அவ்வாறு வசிய்யத் செய்திராத பட்சத்தில் ஜனாஸாவின் தாய் அல்லது தாயின் தாய் அல்லது மகள், மகளின் மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் குளிப்பாட்டுவதே சிறந்தது.
3 ஆண் ஜனாஸா ஆண்களாலும் பெண் ஜனாஸா பெண்களாலும் குளிப்பாட்டப்படல் வேண்டும்.
4 குளிப்பாட்டுபவர்கள் அது பற்றி நன்கு அறிந்தவர்களாகவும் நன்நடத்தை உடையவர்களாகவும் இருப்பது சாலச்சிறந்தது.
5 மனைவியைக் கணவனும், கணவனை மனைவியும் குளிப்பாட்டலாம்.

6 குளிப்பாட்டுவதற்கு ஒருவரும் அவருக்கு உதவியாளர்களாக ஜனாஸாவின் குடும்பத்தவர்களில் இருவரும் இருப்பது விரும்பத்தக்கது.
7 ஏழு வயதிலும் குறைவான சிறுவர்களின் ஜனாஸா இரு தரப்பினராலும் குளிப்பாட்டாப்படலாம்.
8 குளிப்பாட்டுபவர் கை, கால், மூக்கு, வாய் போன்றவற்றிற்கு பாதுகாப்பு உறை அணிந்து கொள்வது நல்லது.
9 ஜனாஸாவை குளிப்பாட்டுகின்ற போது ஒரு துண்டை கையில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
10 வயிற்றை மிருதுவாக மூன்று முறை அழுத்தி அழுக்குகள் வெளியேறும் இடங்களை கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். அத்தோடு பல், மூக்கு போன்றவற்றை சுத்தம் செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

11 முன், பின் துவாரங்களைக் கழுவி சுத்தம் செய்த பின் ஒழுவின் உறுப்புகளை முதலில் கழுவி ஜனாஸாவின் வலது பக்கங்களை முற்படுத்தி குளிப்பாட்டுதலை ஆரம்பிக்க வேண்டும்.
12 மூன்று முறை அல்லது ஐந்து முறை அல்லது ஏழு முறை என ஒற்றைப் படையாக தேவைக்கேற்ப குளிப்பாட்டலாம். குளிப்பாட்டும் போது சோப்பு, இலந்த இலை போன்றவற்றையும் பயன் படுத்தலாம்.
13 இறுதியாக கற்பூரம் போன்ற வாசனை கலந்த நீரால் கழுவுவது சிறப்பானது. முஹ்ரிமாக (இஹ்ராம் கட்டிய நிலையில் மரணித்தவர்) இருந்தால் நீரில் வாசனை கலக்கக்கூடாது .
14 நீர் குளிராக இருப்பின் இளம் சூடான நீரில் குளிப்பாட்டலாம்.
15 குளிப்பாட்டிய பின் தூய்மையான துணியால் உடலை நன்கு துடைக்க வேண்டும்.
 ஜனாஸா-குளிப்பாட்டுதல்
16 தலை, நெற்றி, மூக்கு, கண், கை, முழங்கால், கக்கம் போன்ற இடங்களுக்கு அத்தர் போன்ற வாசனைப் பொருட்களை பூசுவதோடு முன் பின் துவாரங்களுக்கு வாசனை பூசிய பஞ்சை வைக்க வேண்டும்.
17 குளிப்பாட்டுபவர் குளி;ப்பாட்டுவதற்கு முன்னால் ஒழுச் செய்து கொள்ளவதும். குளிப்பாட்டிய பின்னர் தான் குளித்துக் கொள்வதும் சுன்னத்தாகும்.
18 ஜனாஸாவின் அங்கங்கள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
19 ஷஹீதாக மரணித்தவர் குளிப்பாட்டப்படுவதில்லை. அவர் ஜனாபத் குளிப்புக் கடமையான நிலையில் இருந்தாலும் சரியே.
20 நான்கு மாதங்களுக்கும் குறைவான சதைக்கட்டியாக இருந்தால் அதைக் குளிப்பாட்டவோ, கபனிடவோ தேவையில்லை. சிலர் ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது ' அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்..." எனும் கலிமாவைச் சொல்லியவாறு குளிப்பாட்டுகிறார்கள். இதுவோ அல்லது வேறு ஏதாவது வார்த்தைகளோ கூறியவாறு குளிப்பாட்டுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.
நன்றி: முகநூல்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.