Sunday, December 23, 2012

மோடி ...மோடி ..மாயை..!

[ மிகச் சிறந்த நிருவாகி மோடி என்று மொத்த சங்குகளையும் குத்தகை எடுத்து ஊதுகிறார்களே, இவ்வளவுப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் எப்படி தலை சிறந்த நிருவாகியாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு இதுவரை மோடியோ அவரது வாடகை ஒலிபெருக்கிகளோ நாணயமான முறையில் பதில் கூறியிருக்கிறார்களா?http://www.marhum-muslim.com/
இந்தியாவின் உச்சநீதிமன்றமே நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டிய ஒரு பேர் வழியா இந்தியாவின் பிரதமர்? குஜராத் கலவரத்துக்குப் பின் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி மனந்திறந்து கூறவில்லையா? எந்த முகத்துடன் வெளி நாடுகளில் காலடி எடுத்து வைப்பேன்? என்று கூனிக் குறுகிப் போய் கருத்தினை எடுத்து வைக்கவில்லையா?
உலகில் அதிக அளவில் முசுலிம்கள் வாழும் மிகப் பெரிய நாடு இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு இதுபோன்ற இந்து மதவெறியர்தான் பிரதமராக வர வேண்டும் என்று கருதுவதேகூட ஒரு காட்டு விலங்காண்டித்தனம்தான்.]
குஜராத் மாநிலத் தேர்தல்பற்றி பார்ப்பன ஊடகங்கள் விழுந்து விழுந்து எழுதுகின்றன. மோடி அமோக வெற்றி பெறுவார் - இந்த வெற்றி குஜராத்தோடு நிற்காது - அவரை டில்லிக் கோட்டைவரை கொண்டு போய்ச் சேர்க்கும் என்று கோரஸ் பாடுகிறார்கள்.
ஆனால் ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியாது - தெரியும் - மிக நன்றாகவே தெரியும் - மோடி மதச் சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர் மிக முக்கியமான இந்த மய்யப் புள்ளியை அழித்துவிட்டு எழுதுபவர்கள், பிரச்சாரம் செய்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக, விளம்பரம் பெற்ற மேதைகளாக இருந்தாலும் அற்பமானவர்கள் என்றுதான் கருதப்படுவார்கள்.
2002இல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச முறைப் பயங்கரவாதம் மன்னிக்கத் தக்கதா?
இரண்டு கேள்விகள் இருக்கின்றன. ஒன்று, தம் மாநிலத்தில் வாழக் கூடிய மக்கள், அவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தாலும் அவர்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். அதனை மோடி செய்தாரா? இல்லை - அவருக்கு அதில் சம்பந்தமேயில்லை என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவார்களேயானால், இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர்.
மோடி முதல் அமைச்சராக இருக்கக் கூடிய குஜராத்தில் 2000-த்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்களே - அதற்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டாமா?
மிகச் சிறந்த நிருவாகி மோடி என்று மொத்த சங்குகளையும் குத்தகை எடுத்து ஊதுகிறார்களே, இவ்வளவுப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் எப்படி தலை சிறந்த நிருவாகியாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு இதுவரை மோடியோ அவரது வாடகை ஒலிபெருக்கிகளோ நாணயமான முறையில் பதில் கூறியிருக்கிறார்களா?
அந்த வெறிபிடித்த மனிதர், சிறுபான்மையினர் வேட்டையாடப்பட்டு, அகதி முகாம்களில் தங்கி யிருந்த நிலையில்கூட, அதனைக் கொச்சைத் தனமாக விமர்சித்த ஆபாச மனிதன் அல்லவா!
மக்கள் தொகையைப் பெருக்க வைக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று நாலாந்தர மனிதனாக வாந்தி எடுக்கவில்லையா?
இப்பொழுதுகூட பிஜேபி சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டவர்களுள் ஒரே ஒருவர்கூட முசுலிம் இல்லை என்பது எதைக் காட்டுகிறது?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அகமது பட்டேலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மோடி தேர்தல் கூடத்தில் எப்படி சொல்லுகிறார்? அகமதுமியான் என்று உச்சரிக்கிறார். பொருள் புரியவில்லையா? அகமது பட்டேல் அல்ல அவர் ஒரு மியான் - அதாவது முசுலிம் என்று வாக்காளர்களுக்கு தெரியப்படுத்துகிறராம்.
உலகில் அதிக அளவில் முசுலிம்கள் வாழும் மிகப் பெரிய நாடு இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு இதுபோன்ற இந்து மதவெறியர்தான் பிரதமராக வர வேண்டும் என்று கருதுவதேகூட ஒரு காட்டு விலங்காண்டித்தனம்தான்.
இந்தியாவின் உச்சநீதிமன்றமே நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டிய ஒரு பேர் வழியா இந்தியாவின் பிரதமர்? குஜராத் கலவரத்துக்குப் பின் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி மனந்திறந்து கூறவில்லையா? எந்த முகத்துடன் வெளி நாடுகளில் காலடி எடுத்து வைப்பேன்? என்று கூனிக் குறுகிப் போய் கருத்தினை எடுத்து வைக்கவில்லையா?
சி.என்.என். அய்.பி.என்., தொலைக்காட்சியில் 5 நிமிடம் உட்கார்ந்து ரெகான்தப்பார் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியேறிய வீராதி வீரர்தான் இந்த நரேந்திர தாஸ், தாமோதர தாஸ் மோடி என்பதை மறக்க வேண்டாம்!
இங்கே இருக்கும் சோ ராமசாமி போன்ற பச்சை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் மோடியைத் தூக்கி நிறுத்த ஆசைப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன?
நன்றி விடுதலை

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::