Wednesday, October 31, 2012

பான் பராக்.....தேவையா?

http://www.marhum-muslim.com/

அடிக்கடி எச்சில் துப்புபவரா?
* பான், குட்கா விபரீதம் உஷார்
* “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’
* “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’
* “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’

இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, பொது இடங்களில், வீட்டில் ஆங்காங்கு சொத்…சொத் என்று எச்சில் துப்புவதும், சிவப்பு சாயங்களை வாய் ஒழுக துடைத்துக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டதைப் பார்த்திருப்பீர்கள். சிகரெட் பிடித்தால் மட்டும் தான் புற்றுநோய் வரும் என்று எண்ண வேண்டாம்; சிகரெட் அல்லாத புகையிலை வஸ்துக் களை வாயில் போட்டு மென்றாலும், அடக்கிக் கொண்டாலும் கூட, வாய் புற்றுநோய் வரும்.

டீன் போய் இப்போது சிறுசுகளுக்கும் பத்தாண்டுக்கு முன் வரை, ஐம்பது வயதை தாண்டியவர் களுக்குத் தான் புற்றுநோய் ஆபத்து இருந்தது. ஆனால், சில ஆண்டாக, முப்பது வயதில் இருந்தே புற்றுநோய் அபாயம் பரவியது. கடந்த நான்காண்டில், நிலைமை என்ன தெரியுமா? 15 வயதில் இருந்து முப்பது வயதுள்ளவர்களுக்கு இந்த பகீர் நோய் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் எடுத்த சர்வேயில் இன்னும் புதிய விபரீதம் தெரியவந்துள்ளது. அது தான், 14 முதல் 30 வரை உள்ள வயதுடையவர்களுக்கும் வாய்ப்புற்றுநோய் பரவி வருகிறது என்பது தான் அந்தத் தகவல். இப்போதும், பெற்றோர்கள் விழித்துக்கொள்ளவில்லை எனில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், இப்படிப்பட்ட நோய்களால் பீடிக்கப்படும் கொடூரம் இன்னும் அதிகமாகும் என்பது நிபுணர்கள் எச்சரிக்கை.

பரவி வரும் பான் கலாசாரம்

பான், குட்கா போடும் கலாசாரம் ஏதோ பேஷன் போல பரவி, இப்போது, பள்ளிச் செல் லும் மாணவர்கள், கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள், கணக்கு முதல் கம்ப்யூட்டர் வரை பணியில் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் என்று பல தரப்பினரையும் தொற்றிவிட்டது.

காலையில் வீட்டை விட்டு கிளம்பியதும், வாயில் பான், குட்கா அடக்கிக் கொண்டு தான் நகருவது என்ற பழக்கம், பலரிடம் வெறியாகிவிட்டது. “இது கெட்டது தான்’ என்று தெரிந்தும், இதைச் சிலர் தொடர்கின்றனர்.

சில மாதங்களுக்குப் பின், சாப்பாடு இல்லாவிட்டாலும், இந்த பாக்கெட் இருந்தால் போதும், என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இளைஞர்களிடம் மிக வேகமாக பரவி வரும் கேடுகெட்ட கலாசாரம் இது. தனி மனிதனை அழிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தை சீரழிக்கும் சுகாதார அரக்கன் இது.

சொத்… சொத்… எங்கும்

இப்படி பான் சுவைப்பவர்களை பார்த்திருக்கறீர்களா? எப்போது பார்த்தாலும், வாயில் நீர் சுரந்த வண்ணம் இருப்பர். அதனால், அவர்கள் எச்சிலை துப்பியபடியே இருப்பர். எச்சிலை, எக்காரணம் கொண்டும் அவர்களால் விழுங்க முடியாது. பொது இடங்களில் இப்படிப்பட்டவர்களை கவனித்திருந் தால் நீங்களே, எவ்வளவு கேவலம் என்று உணர்வீர்கள். ஐந்து நிமிடத்தில், நூறு தடவையாவது எச்சிலை துப்பியிருப் பர். பஸ் நிறுத்தங்களில், கடையோரங்களில் , தியேட்டர் களில்,கோவில் அருகே இந்த எச்சில், சிவப்பு சாயங்களைக் காணலாம்.

சுவை தெரியாமல் போகும்

இப்படி குட்கா, பான் போடுவது, ஆரம்பத்தில் வேண்டுமானால் விறுவிறுப்பாக இருக்கும்; ஆனால், வாயில் பாதிப்பு ஆரம்பித்தால் தான், அதன் விபரீதம் புரியும்.
* ஆரம்பத்தில் வாய் நமநமக் கும்; அடுத்து, வாயில் சுவர்ப் பகுதிகளில் மரத்துப்போன நிலை ஏற்படும்.
* குட்கா தவிர, எந்த உணவுகளின் டேஸ்ட்களும் தெரியாமல் போய் விடும். இதை உணரும் போது தான், சிலருக்கு பயம் ஏற்படும்.
* பற்களில் பாதிப்பு வரும்; அதுவே, வயிற்றுக்கோளாறு வரை பரவும். வாய் நாற்றம் எடுக்கும்; நாக் கும் நிறம் மாறும்.
*இதன் உச்சகட்டம் தான் வாய்ப்புற்றுநோய்; இது வந்துவிட்டால் பெரும் பாதிப்பை சந்தித்தாக வேண்டும்.
நீங்கள், பான் பராக், குட்கா போட்டு வருபவரா? உங்கள் ஆரோக்கியம் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்துக்கும் மிக நல்லதாக இருக்கும். செய்வீர்களா?

மறுமையை நம்புபவராக இருந்தால் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::