Saturday, June 2, 2012

சாரே ஜஹான் சே அச்சா ...!

http://www.marhum-muslim.com/ 
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு எதை தேசிய கீதமாக வைக்கலாம் என்று மகாத்மா காந்தி ஜி மற்றும் நேரு ஆகியோர் சாரே ஜஹான் சே அச்சா பாடலை வைக்கலாம் என்று சொன்னார்கள் . அதற்க்கு சில இந்து பிரிவினர் மறுப்பு தெரிவிதது வந்தே மாதரம் பாடலை வைக்க சொன்னார்கள் அதனால்காந்தி ஜி மற்றும் நேரு பேச்சு வார்த்தை நடத்தி இருவருக்கும் பாதகம் இல்லாமல் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ஜன கன மனகன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்கள் .ஆனால் இன்றும் நாம் சாரே ஜஹான் சே அச்சா பாடலை யாராலும் மறக்க முடியவில்லை

நீங்களே ஒரு முறை இந்த பாடலை முனு முணுத்து பாருங்கள் எவ்வளவு வீர தீரமாக இருக்கு என்று . இன்றும் குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற வற்றிற்கு இந்த பாடலையும் போட்டு கேட்பவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள் .இன்றும் குடியரசு தின விழா ,சுதந்திர தின விழாவில் இராணுவ அணிவகுப்பில் இந்த பாடலின் இசையே கொண்டு தான் துவக்கம் செய்கிறார்கள் . முஸ்லிம்களின் பங்கு ஒன்று இரண்டு இல்லை விடுதலை போராட்டத்தில் சொல்லிக்கொண்டே போகலாம் , ஆனால் அதுவெல்லாம் மறுக்க படுகிறது மறைக்க படுகிறது என்று நினைக்கும் போது தான் எங்களுடைய முஸ்லிம் மக்களின் நெஞ்சம் துடிக்கிறது . சுதந்திரத்துக்கு இரத்தம் சிந்திய மக்கள் .இன்று சில கயவர்களால்
சுதந்திர இந்தியாவில் இருந்து கொண்டே இரத்தம் சிந்தி கொண்டு இருகிறார்கள் .

அல்லாமா இக்பாலை பற்றி

அல்லாமா இக்பால் ஒரு மிக சிறந்த கவிஞர் .அவர் இங்கிலாந்தில் நடை பெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட இதியயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு .அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அவரை இத்தாலி அரசு தன் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தது அவரும் அழைப்பை ஏற்று இத்தாலிக்கு சென்றார் அல்லாமா இக்பால் வருகையே அறிந்த முசோலினி அவரை சந்திக்க விருப்ப பட்டார் .பின்பு இருவரும் சந்தித்து கலந்து உரையாடினார்கள் பின்பு முசொளினின் பாராட்டையும் பெற்றார் .

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என்ற பிரிவினைகள் இல்லாமல் இருந்தது. அப்போது இந்தியா என்பதை விட, இந்துஸ்தான் என அழைக்கவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் விரும்பினர். இதில் ஒருவர் தான் முகமது இக்பால். அல்லாமா இக்பால் என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்ட இவர், ஒரு உருது கவிஞர். இவர் உருது மொழியில் எழுதிய பி...ரபல பாடல் தான், சாரே ஜாஹன் சே அச்சா.
விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர்.

மௌலானா அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பாலின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார்.

இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் தனது படிப்பை முடித்துக் கொண்ட இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.
இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்

இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய இக்பாலின் இந்த கவிதை 1904ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இட்டிஹத் என்ற வாரஇதழில் வெளியானது. பின்னர் அதுவே ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுக்க பயன்படும் முக்கிய கருவியாக மாறியது. தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளும் பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட முறையில் பாடி சுதந்திர தாகத்தை மக்களுக்கு புகட்டினர்.

கடந்த 1965ம் ஆண்டு, இந்த கவிதைக்கு சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் இசை அமைத்து, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பாடினார். அதன்பின் மிகவும் பிரபலமடைந்த இப்பாடலின் மெட்டு, இந்திய முப்படைகளின் அணிவகுப்பின் போது வாசிக்கப்படும் முக்கிய இசை என்பது யாவரும் அறிந்ததே.

பாடலின் கருத்து:
-----------------------------
இந்துஸ்தான் அல்லது இந்திய நாடு, உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளை விட சிறந்தது. அது நாம் வசிக்கும் தோட்டம், நாம் அதில் உள்ள நைட்டிங்கேல் பறவைகள். அந்நிய நாடுகளில் வசித்தாலும் நமது தாய்நாட்டின் நினைவு இதயத்தை வருட்டிக் கொண்டிருக்கும்.

உயர்ந்த, வானாளாவிய மலை தொடர்கள், அவை நமக்கு அரண்களாக மாறின. மனதை மயக்கும் ஆயிரக்கணக்கான ஆறுகள், அவை நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டன. நம் ஒவ்வொருவரிடையே ஏற்படும் பேதங்களை பொறுத்துக் கொள்ள மதங்கள் நமக்கு வழிகாட்டவில்லை.

இந்துஸ்தானில் வாழும் நாம் இந்தியர்கள், இந்துஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

உலக சாம்ராஜ்ஜியங்களான கிரேக்கம், எகிப்து, ரோம் ஆகியவை அடையாளம் தெரியாமல் மாறி மறைந்தன.

ஆனால், நமது அடையாளங்கள் மட்டும் இன்றும் மாறவேயில்லை. அப்படியே நூற்றாண்டுகள் மாறினாலும், காலங்கள் கைவிட்டாலும் நமது வளர்ச்சி மறையாது என்று போகிறது இந்தப் பாடல்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::