அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும் பொழியபடட்டுமாக...
அல்லாஹுவின் அளப்பரிய கருணையினால் நேற்றைதினம் கோவை கோட்டைமேடு
இக்பால் திடலில் நடைபெற்ற சிறைவாசிகள் விடுதலைக்கான இன அழிப்புக்கு எதிரான
இசுலாமிய இளைஞர் இயக்கம் நடத்திய கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் மிகப்பெரிய வெற்றியாகி உள்ளது...
தூய்மையான எண்ணத்துடன் முன்நெடுக்கபடக்கூடிய எந்த செயலும் அல்லாஹுவின் உதவியை
பெரும் என்பதற்கு நேற்றைய கூட்டமும் ஒரு உதாரணம்... கோவை நிகழ்வுக்கான ஏற்பாடுகள்
துவங்க பட்டதில் இருந்தே அதனை தடுக்க வேண்டும் என்பதற்கான எல்லா வகையான முயற்சிகளும்
சிலரால் எடுக்கப்பட்டது... என்னை பற்றியும் சகோதரர் உமர்கயான் அவர்களை பற்றியும் பலவாறாக
அவதூறுகள் பரப்பட்டது... ஆனால் எந்த இடத்திலும் நானோ சகோ.உமரோ உணர்சிவசபடவில்லை
கவலைகொள்ளவில்லை... காரணம் எங்களிடம் உண்மையும் சத்தியமும் இருந்தது...
என்னுடன் நட்புடன் இருந்தவர்களில் ஒரு சிலர் என்னை தொடர்புகொண்டு நான் குழப்பம் விலைவிப்பதாகவும்
பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் பேசினார்கள்... ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார்...
நான் பொறுமையை கடைபிடித்தேன்... இன்றைக்கு கோவை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடந்துள்ளதால்
அந்த மமதையில் அவதூறு பரப்பியவர்கள் எவரையும் நாங்கள் இழிவுபடுத்த போவதில்லை... ஏனெனில்
இந்த வெற்றி எனக்கோ சகோ.உமருக்கோ அல்லது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க
தோழர்களுக்கோ கிடைத்த வெற்றியல்ல... அப்பாவிகளின் விடுதலை என்கிற கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி...
இந்த கோரிக்கையை நாங்கள் மட்டுமல்ல உண்மையான எண்ணத்துடன் எந்தவிதமான ஆதாய நோக்கமும்
இல்லாமல் எவர் முன்னெடுத்தாலும் அல்லாஹ் வெற்றியைத்தான் தருவான்... ஆகையினால் இந்த வெற்றி
என்னையா சகோ.உமரையோ எந்த வகையிலும் சஞ்சலபடுத்தாது... எத்தகைய தடுமாற்றத்தையும் தந்துவிடக்கூடாது
எனபதுதான் எங்களின் தற்போதைய துஆ... நீங்களும் எங்களுக்காக துஆ செய்யுங்கள்...
நிகழ்ச்சியை தடுக்க சூழ்சிகளை மேற்கொண்ட சகோதரர்களுக்கும் அல்லாஹ் நேர்வழியை காட்டட்டும்...
அவர்களை அடையாளபடுத்தி அசிங்கபடுத்த நாங்கள் இழிவானவர்கள் அல்ல... இதோ எங்களின் அடுத்தகட்ட
வேலைகளை சகோ.உமர்கயான் துவங்கிவிட்டார்... சூழ்ச்சிகாரனுக்கு எல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன்
அல்லாஹ்தான் என்பதை மீண்டுமொருமுறை நிருபித்துளான்...
சிறைவாசிகளின் விடுதலை செய்தி வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் இன்ஷாஅல்லாஹ்...
இதில் எந்த இழப்பு வந்தாலும் கவலைபடபோவதில்லை... ஏனெனில் இது அல்லாஹுவிர்க்கான பணி...
அவனே அனைத்திற்கும் போதுமானவன்...
இந்த இனிய தருணத்தில் கூட்டத்தின் வெற்றிக்காக ஊன் உறக்கம் இல்லாமல் பணியாற்றிய இன அழிப்புக்கு
எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க தோழர்களுக்கும்... இசுலாமிய இளைஞர் ஜமாஅத் நிறுவனர் சகோ.மை.வீரர் அப்துல்லாஹ்
விசிக உழவர் அணியின் மாநில துணை செயலாளர் தோழர் உலக நம்பி... விசிக, மமக, இதஜ, எஸ்.டி.பி.ஐ,பெரியார் திக
ஆகிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகளுக்கும்... இணைத்தளம் மூலமாக பரப்புரைகளை மேற்கொண்ட
சகோதரர்களுக்கும்... மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்...
பல்வேறு பணிசுமைகள் தொடர் பயணங்கள் என ஓய்வில்லாத போதும் சிறைவாசிகளின் விடுதலையில்
தனக்கிருக்கும் அக்கறையை பதிவு செய்திட வருகை தந்த அண்ணன் எழுச்சிதலைவர் தொல்.திருமாவளவன்
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் என் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் எஸ்.எம்.பாக்கர்
மனித நேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் சகோதரர்.அன்சாரி, எஸ்.டி.பி.ஐயின் பொதுசெயலாளர்
அண்ணன் ரபீக் அஹமது பெரியார் திக பொதுசெயலாளர் தோழர்.இராமகிருட்டிணன் தலைமைதாங்கி நிகழ்ச்சியை
நடத்தி தந்த அய்யா ப.பா.மோகன் கோவை சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் சகோ.கிட்டான் புகாரி
சகோ.சம்சுதீன் ஆகியோருக்கும்... நன்றி...
இவற்றுகெல்லாம் மேலாக எல்லாவிதமான தடைகளையும் உடைத்து சத்தியத்தை வெற்றிபெற செய்திட்ட
எல்லாம் வல்ல ஏக இறையவனுக்கும் நன்றி...நன்றி...நன்றி...
அன்புடன்
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
Mohamedessa Essa அன்பிற்குரிய சகோ..இத்துடன் கோவை-நேரடி ஒளிபரப்புவீடியோ லிங்க் இணைத்துள்ளேன்...பாருங்கள்http://www.ustream.tv/
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment