Monday, March 26, 2012

தமிழக பட்ஜெட்-2012

தமிழக பட்ஜெட்-2012


தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள்

ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு கட்டில் வசதி

ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடு

7000 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த சிறப்புத் திட்டம்


சென்னை பெருநகர வளர்ச்சிக்கு ரூ. 500 கோடி

மதுரை மாநகராட்சியில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 250 கோடி

மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்

1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்

கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்க ரூ. 55 கோடி ஒதுக்கீடு

மதுரை, கோவையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்

அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் புதுப்பிக்க ரூ. 6.83 கோடி

தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருது

தமிழ் ஆராய்ச்சிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு

புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு

மருத்துவத் துறைக்கு ரூ. 5569 கோடி

பழனி, ஸ்ரீரங்கம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்-புதிய திட்டம்

1006 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் புதுப்பிக்கப்படும்

மேலும் 50 கோவில்களுக்கு திருக்கோவில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

கோவில் சொத்துக்களை மீட்கர நடவடிக்கை எடுக்கப்படும்

தானே புயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டமைப்பை சீரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு

ரூ. 8000 கோடியில் உடன்குடி மின் திட்டம் செயல்படுத்தப்படும்

உடன்குடி திட்டத்திற்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு

வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர வழியில்லை

புதிய பேருந்துகள் வாங்க ரூ. 508 கோடி நிதி

அனைத்துப் அரசு பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்

மோனோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடமாக வண்டலூர்-புழல் இணைக்கப்படும்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு

விரைவில் சென்னையிலும் அரசு கேபிள் சேவை

2வது கட்ட சென்னை புற வழிச் சாலை மேம்பாட்டுத் திட்டம்- மாநில அரசே நிறைவேற்றும்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்பேட்டைகளுக்கு மாற்றப்படும்

ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய முதலீடுளை ஈர்க்க புதிய திட்டம்

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

உணவு மானியத்திற்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு

துவரை உள்ளிட்ட பருப்புகள் சலுகை விலையில் தரப்படும்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்

ரூ. 50 கோடியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம்

3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்

காண்டூர் கால்வாய் திட்டம் 2013 ஆகஸ்ட்டில் நிறைவடையும்

காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்

நதி நீர் இணைப்புக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு

அணைகளை மேம்படுத்த ரூ. 50 கோடி

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தர நீதிமன்றங்களாக்கப்படும்.

2012-13ல் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்

விவசாயிகளின் வட்டி்ச சலுகைக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு

சங்கரன்கோவில், விழுப்புரத்தில் கறிக்கோழி, முட்டைக் கோழி வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்

கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 814.03 கோடி ஒதுக்கீடு

ரூ. 244 கோடியில் 12,000 பேருக்கு கறவைப் பசுக்கள், 1.5 லட்சம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடு அல்லது செம்மறியாடு

நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி

10 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்

ஓட்டுப் பயிற்சிப் பள்ளி அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு

நீதித்துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 736 கோடி

வேளாண்துறைக்கு ரூ.3804.96 கோடி ஒதுக்கீடு

சாலைப் பாதுகாப்பு நிதி ரூ. 65 கோடி உயர்வு

டி.கல்லுப்பட்டி, ஆலங்குளம், சின்னசேலத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள்

தீயணைப்புத் துறைக்கு ரூ. 197.58 கோடி ஒதுக்கீடு

ரூ.400 கோடியில் 4340 கூடுதல் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்

சென்னை போக்குவரத்துக் காவலுக்கு 87 கூடுதல் ரோந்து வாகனங்கள் ஒதுக்கீடு

சென்னையில் ரூ. 150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம்

ரூ. 20.75 கோடியில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு

நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 22.49 கோடியில் லேப்டாப், பிரிண்டர்கள் வழங்கப்படும்

ரூ. 1.93 கோடியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள்


பேரிடர்களை சமாளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.

தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டத் திருத்தம்
தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வீடுகள் கட்ட ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::