சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ’ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ‘சோ’,’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை பா.ஜக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய் கூட்டணி உருவானால் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். இதில் சிலர் ரகசியமாக ரஜினியை முன்மொழிந்துள்ளனர்.
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. ஒரு தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் பிரவேசமான பாரதிய ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற செய்ய பார்பனர்கள் முயற்சிப்பது என்னவோ சரி. ஆனால் அதில் ரஜினிகாந்த்க்கு என்ன வேலை என்பது புரியாத மர்மம்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களும், சாமியார்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எப்படியாவது ஆட்சியை பிடித்து அவர்களை வெளியே கொண்டு வரவும் அதே நேரம் தங்களது வர்ணாசிரம ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நிலை நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடியை தமிழகத்தில் காலூன்ற செய்யும் வேலையைத்தான் இவர்கள் சிரத்தையோடு செய்து வருகின்றனர். ஜெயலலிதா மற்றும் சோ, சுப்பிரமணிய சாமி, குரு மூர்த்தி, பாலசந்தர் இவர்கள் எல்லாம் யார் என்று நமக்கு தெரியும். அந்த கூட்டத்தில் ரஜினிகாந்தும் சேர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. தங்களது பயங்கரவாத முகம் வெளியே தெரிந்து விட்டதால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பிரதம வேட்பாளர் தேவைப்படுகிறது அது ஜெயலலிதாவாகவோ அல்லது ரஜினிகாந்தாகவோ இருக்கலாம்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment