Thursday, November 3, 2011

சரித்திரச் சுவடுகள். ஹபீப் இப்னு ஸைத் (ரலி)

எனக்கு காது கொஞ்சம் மந்தம் என்றார் அந்த இளைஞர். அவனது கரங்களை வெட்டுங்கள் என்று உத்தரவிடப்பட்டது. இளைஞரது கைவெட்டப்பட்டு தரையில்வீழ்ந்து ரத்தம் சொட்டியது. அவர் துடிக்க வில்லை துவண்டு விடவும் இல்லை.

எனக்கு காது மந்தம்ன்னு சொல்றது புரியவில்லையா? மீண்டும் கம்பீரமாக ஒலித்தது இளைஞரின் குரல். அவனது காலை வெட்டுங்கள் என்று கடூரமான குரலில் கட்டளை பிரப்பிக்கப்பட்டது. கால் வெட்டப்பட்டபோதும் அந்த இளைஞர் கதறவில்லை கெஞ்சவில்லை. எனக்கு காது கேட்காது மந்தம் எனக்கு காது கேட்காது மந்தம் என்று திரும்ப திரும்ப அந்த இளைஞர் சொல்லும் போதெல்லாம் அந்த இளைஞரின் உடலில் ஒரு பகுதி வெட்டி எறியப்பட்டது.

பாதிக்கும் மேற்ப்பட்ட உறுப்புகள் வெட்டப்பட்டதும் இளைஞரின் உடல் ரத்த சகதியில் விழுந்தது அவரது உடலை விட்டும் உயிர் பிரிந்தது...இன்னாலில்லாஹ்
அந்த இளைஞரின் உதடுகளில் இருந்து வெளிவந்த இறுதி வார்த்தை “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்என்று சாட்சி கூறுகிறேன்.

காது மந்தமாக இருப்பவரை கொல்வது அந்த நாட்டின் சட்டமா? அல்லது பெரும் குற்றம் செய்து விட்டு அதை மறைக்க அந்த இளைஞர் காது மந்தம் என்று நாடகமாடினாரா? அல்லது கலிமாவை முழங்கியதால் காஃபிர்கள் செய்த சித்ரவதையா? ஏன் இவ்வாறு நடந்தது? எதற்க்காக வெட்டி கொள்ளப்பட்டார்? யார் அவர்?

அகபா உடன் படிக்கை:
நபித்துவம் பெற்ற பனிரெண்டாம் ஆண்டு அப்போது நபிகளாருக்கு வயது ஐம்பத்தி இரண்டு இன்பத்திலும் துன்பத்திலும் பெரும் பங்கு வகித்த மனைவி கதிஜா(ரலி) அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள் அண்ணலாருக்கு பக்க பலமாக இருந்த்த அன்னாரின் பெரிய தகப்பனார் அபுதாலிபும் இறந்து விட்டார்கள் அதுவரை சிறுசிறு இடையூறுகள் கொடுத்து வந்த “மக்கத்து காஃபிர்கள் நபிகளாரை கொல்வதற்க்கு சதிதிட்டம் தீட்டி அதற்க்கான தருனத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த்த காலக்கட்டம்.

புனித யாத்திரை செய்வத்தற்காக மதினாவிலிருந்து மக்காவுக்கு வந்த யாத்ரீகள் குழு ஒன்று ‘அகபா என்னும் பள்ளத்தாக்கில்” நபிகளாரை ரகசியமாக சந்தித்தது
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது. பல்வேறு வகையான உடன்படிக்கைகள் எடுக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு செல்வது என்ற முடிவும் அப்போதுதான் எடுக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கையில் எழுபத்தி மூன்று ஆண்களும்” இரண்டு பெண்களும் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு வரும் தமது உடல் உயிர் பொருள் அனைத்தையும் விட நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாகவும் அன்னாருக்காக அன்னாரின் கொள்கைக்காக தமது உயிரையும் கொடுக்கத்தயாராக இருப்பத்தாகவும் சத்தியப்பிரணாமம் செய்தார்கள்.

சத்தியப் பிரணாமம் செய்த இரண்டு பெண்மனிகளில் ஒருவர் உம்மு உமாரா என்று அழைக்கப்படும் நுஸைபா பின்த் கஅப்(ரலி) என்பவர் ஆவார். இவரது இரு மகன்களும் சத்திபிரணாமம் செய்தனர். சிறுவர்களாக இருந்த அவர்களில் மூத்தவர் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஸைத். இளையவர் பெயர் ஹபீப் இப்னு ஸைத்.

வெற்றி:
சிறுவராக இருந்த காரணத்தால் ஹபீப் இப்னு ஸைத்(ரலி) அவர்களால் பத்ரு மற்றும் உஹத் யுத்தங்களில் பங்கேற்க்க இயலவில்லை அதைத்தவிர மற்ற அனைத்து யுத்தங்களிலும் அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கத்திற்க்காக கலந்து கொண்டு போராடினர். சிறு பிராயத்தில் தாம் செய்து கொடுத்த சத்தியபிரணாமத்திற்க்கு ஒப்ப நடந்து கொண்டார்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைவதை பார்க்கும் போது. உமது ரட்சகனை துதித்து புகழ்வீராக. அவனிடம் பாவமன்னிப்பும் கோருவீராக. நிச்சயமாக அவன் மன்னிப்பு கேட்பதை ஏற்பவன் (அல் குர் ஆன்: 110:1-3) என்ற இறை வசனத்திற்கு ஏற்ப அல்லாஹ்வின் மாபெரும் உதவியில் இஸ்லாம் வென்றது மதீனாவைத் தலைநகராக கொண்ட இஸ்லாமிய அரசு உருவானது. சுற்றுபுரத்தில் வசித்துவந்த அரபிகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றனர்.

போலி நபி முஸைலமா:
ஹிஜ்ரி 9ம் ஆண்டு நஜ்து என்னும் பகுதியை சேர்ந்த பனூ ஹனீஃபா என்ற கோத்திரத்தாரின் குழு ஒன்று மதீனாவுக்கு வந்தது நபி(ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றது தங்கள் பகுதியில் மக்கள் எல்லம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்கள் நபிகளாரின் உபதேசத்தை பெற்ற பிறகு மீண்டும் ஊர் திரும்பினார்கள்.

இந்த குழுவில் முஸைலமா இப்னு ஹபீப் என்பவனும் இருந்தான். ஊர் திரும்பியதும் மக்களை கூட்டி தன்னை ஒரு நபி என்று பிரகடனம் செய்தான் அல்லாஹ் குறைசியர்களுக்கு முஹம்மதை நபியாக அனுப்பியதை போல. பனூ ஹனீஃபாவாகிய உங்களுக்கு என்னை நபியாக ஆக்கி உள்ளான் என்று அறிவிப்புச் செய்தான் தமது குலத்துக்கு தனி நபி இருப்பது நமக்கு பெருமையே என்று எண்ணிக்கொண்டு “ஹனீஃபா குலத்தவர்கள்” முஸைலமாவின் பின்னால் அணி திரண்டார்கள் அவனை நபியாக ஏற்றுக்கொண்டார்கள்.

கடிதம்:
தனக்குப் பின்னால் கூட்டம் திரண்டதை கண்ட முஸைலமா நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினான் இரண்டு நபர்கள் மதீனாவுக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தனர் அந்த கடிதத்தில்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு, அல்லாஹ்வின் தூதர் முஸைலமா எழுதுவது. உம்மீது சாந்தி உண்டாவதாகுக.உமது தூதுத்துவத்தில் நானும் கூட்டாளியாக நியமிக்கப்பட்டு உள்ளதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். குறைசியர்களாகிய நீங்கள் பாதிப் பகுதியையும். நாங்கள் பாதிப்பகுதியையும் அரசாள வேண்டும் என்பது நியதி. ஆனல் குறைசியர்களாகிய நீங்கள் வரம்பு மீறிவிட்டீர்கள் இதற்கு தக்க பதிலை எதிர் பார்க்கிறேன். இப்படிக்கு முஸைலமா. என்று எழுதப்பட்டு இருந்தது.

கடிதம் கொண்டு வந்த இருவரையும் நோக்கிய நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் இருவரும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டார்கள் முஸைலமா சொல்வதை நாங்கள் ஏற்கிறோம் என்று இருவரும் பதில் அளித்தார்கள் தூதுச் செய்தியாளர்கள் கொல்லப்படக்கூடாது என்ற நடைமுறை மாத்திரம் இல்லாவிட்டால் உங்களது தலை உருண்டிருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினார்கள்”.

ஹபீப் இப்னு ஸைத்(ரலி)
நாளுக்கு நாள் முஸைலமாவின் அட்டூழியம் பெருக அவனை எச்சரித்து கடிதம் ஒன்றை தயார் செய்தார்கள் கடிதத்தை கொண்டு செல்ல ஹபீப் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கடிதத்தோடு முஸைலமாவின் முன் வீர மகன் ஹபீப் இப்னு ஸைத் (ரலி) நின்றார் கடிதத்தை வாங்கிய முஸைலமா கடும் கோபம் கொண்டான் அந்த கடிதத்தில்...

“அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதர் முஹமது, பொய்யன் முஸைலமாவுக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவர்கள் மீது சாந்தி உண்டாவதாகுக. மொத்த பூமியும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது என்பதை அறிந்துகொள் தான் நாடுபவர்களுக்கே அவன் அதனை உரிமையாக்குகிறான். மறுமை நாளின் நற்கூலி அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவர்களுக்கு மட்டுமே! என்று எழுதியிருந்தது.

கடிதம் படிக்கப்பட்டதும் “இவனைப்பிடித்து சிறையில் அடையுங்கள் நாளை காலையில் அவைக்கு கொண்டுவாருங்கள் என்று கொக்கரித்தான்” ஹபீப் இப்னு ஸைத்(ரலி) சிறையில் அடைக்கப்பட்டார். அவையில் மறுநாள் அவைகூடியது. மக்கள் கூட்டம் நிறம்பி வழிய முஸைலமா அரியனையில் அமர்ந்து இருந்தான். எதிரில் சங்கிலியால் பினைக்கப்பட்ட நிலையில் ஹபீப் இப்னு ஸைத்(ரலி) நின்று கொண்டிருந்தார் அப்போது.

முஸைலமா: முஹம்மது யார்? அல்லாஹ்வின் தூதரா?. ஹபீப்: (கம்பீரமாக) ஆம் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சிபகர்கிறேன். முஸைலமா: (கோபத்துடன்) நானும் அல்லாஹ்வின் தூதர்தான் என்று சாட்சி கூறுகிறாயா?. ஹபீப்: (நையாண்டியாக) எனக்கு கொஞ்சம் காது மந்தம் நீ சொல்வது எனக்கு கேட்கவில்லை. முஸைலமா: (உதடுகள் துடிக்க) அவனது கரங்களை வெட்டுங்கள்.

காவலன்: அப்படியே ஆகட்டும் (வெட்டப்பட்ட பகுதியில் இருந்து இரத்தம் கொட்டியது). முஸைலமா: (மீண்டும்) முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறாயா? ஹபீப்: (அழுத்தமாக) ஆம் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன். முஸைலமா: நானும் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறாயா?. ஹபீப்: நான்தான் சொன்னேனே எனக்கு காது மந்தம் என்று நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு கேட்கவில்லை. முஸைலமா: (கண்கள் சிவக்க) வெட்டுங்கள் அவனது கால்களை. காவலன்: அப்படியே ஆகட்டும் (வெட்டினான்) கூடியிருந்த மக்கள் திகைப்பில் வியர்த்திருக்க...

அஷ்ஹது அன்ன முஹம்மது ரசூலுல்லாஹ் என்று கூறியவராக வஃபாத் ஆனார். சிறுவயதில் நபிகளாரிடம் செய்த சத்தியப் பிரணாமத்தை நிறைவேற்றினார் ஹபீப் இப்னு ஸைத் (ரலி) அவர்கள்.

படிப்பினை:
உடம்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அறுத்தாலும். துண்டு துண்டாக வெட்டி எடுத்தாலும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரையும் நபியாக ஏற்க்கமாட்டேன் என்ற ஹபீப் இப்னு ஸைத் (ரலி)யை போலவே ஸஹாபாக்கள் அனைவரும் திகழ்ந்த்தனர்.

உலக ஆதயங்களுக்காக உழன்று கொண்டிருக்கும் நாம் உத்தம நபியின் போதனைக்காக உயிரையும் இழக்க தயாராக இருக்க வேண்டாமா?.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம்மைவிட தமது பிள்ளைகளைவிட. உலகில் உள்ள அனைத்தையும்விட என்னை அதிகம் நேசிக்காதவரை. நீங்கள் இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது.ஆதார நூல்: முஸ்லிம்

அன்பிற்கினிய எனது வலைப்பூவின் வாசக சகோ.க்களே உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாளின் வாழ்த்துக்கள். இந்த பதிவு நமது வலைப்பூவின் 900. பதிவாகும் குர் ஆன் ஹதீஸ் களுக்கு முரண்படத வகையிலேயே பதிவுகளை தேர்வு செய்கிறேன் முரண்பாடுகளை கண்டால்
தயவு செய்து பின்னூட்டம் செய்யுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Muhammad Irshad said...

ஹபீப் இப்னு ஸைத் (ரலி) அவர்கள் பற்றி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த செய்தியை நமது முஸ்லிம் தாய்மார்களின் கவனத்திற்குக் கொண்டுவருவது மிகவும் பிரயோசனம் தரும் என்று கருதுகிறேன்.

ஹபீப் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் உள்ளத்தில் வேரூன்றியிருந்த இந்த ஆளமான மார்க்கப் பற்றின் பின்னணி அவர்களின் தாயார் உம்மு அம்மாரா என்ற பெயரில் பிரபல்யமானக நஸீபா (ரழி) அவர்களின் மார்கப்பற்றை அடிப்படையாகக் கொண்டது.

அன்னார் பைஅதுல் அகபாவில் கலந்துகொண்ட பெண்களில் ஒருவர். அன்னாரது கணவன் ஸைத் பின் ஆசிம் அவர்களது இரு மகன்களான அப்துள்ளாஹ் பின் ஸைத் ஹபீப் பின் ஸைத் ஆகியோருடன் பைஅதுல் அகபாவிலும் பத்ர் உஹத் ஆகிய யுத்தங்கிலும் கலந்து கொண்டவர்கள். அன்னாரின் உடலில் பனிரெண்டு இடத்தில் யுத்தக் காயங்கள் இருந்ததாக வரலாற்றில் கதிவு செய்யப்பட்டுள்ளது.