Thursday, October 27, 2011

தேவை இல்லா இரண்டு ரத யாத்திரை!

சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும்.
உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. 
அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும். உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து பெட்ரோலியம் ப்ரோடக்ட்டுகள் உபயோகித்து வேகமாக செல்லும்
மோட்டார் வாகனங்கள் இருக்கும்போது இது என்ன புதுக்கதை" என்று கேட்கத்தோணும். 
ஆமாம் எதிகை மோனை இல்லாத புதுகவிதைபோல இதுவும் காவிச்சட்டை தலைவர்கள் கண்டுபிடித்த புதுகதைதான்.

1990ஆம் ஆண்டில் காவிச் சட்டை தலைவர்களால் பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட துவங்கப்பட்ட ஏர் கண்டிஷன் பொருத்தப்பட்ட சொஹுசு வாகன யாதிரைதான் ரத யாத்திரையாகும்.அயோத்தியில் பாபரி மஸ்ஜிதும் 1992 இல் இடிதாச்சு, அதன் பின்பு மத்தியில் அரியணையிலும் 1996 ஆம் ஆண்டு ஏறியாச்சு. அதன் பின்பு 2002 இல் கோத்ர ரயிலில் தீ பிடித்ததும் மனித வேட்டையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொன்று குவித்தாச்சு . அப்போதெல்லாம் ரத யாத்திரிகைக்கு வேலையில்லை என நினைத்திப்பிருப்பர்கள் போல இந்த புது காந்தி குள்ள வாதிகள்.குஜராத்தில் போலி என்கவுண்டர் என்ற பெயரில் சொஹ்ரபுட்டின் அவரது மனைவி கவுசர் பீ மற்றும் இஷராத் ஜஹான் போன்ற முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட போது ஹஜாரே என்ன செய்து கொண்டிருந்தார் என்று நாடு நிலையாளர்கள் கேள்வி எழுப்பாமளிலையே!கோத்ரா சம்பவத்திற்கு பின்பு கொல்லப்பட்ட எண்ணற்ற முஸ்லிம்கள் பற்றி விசாரணை நடத்த இப்போது ஹசாரே அணியில் உள்ள பிரபல வக்கீல்கள் சாந்தி பூசனும் அவர் அருமை மகனுமான பிரசாந்த் பூசன் நீதி விசாரணைக் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தொடுக்கவில்லியே அது ஏன்? ஆனால் மனத் துணிச்சல் உள்ள பெண் வழக்கறிஞர் ச்டீல்வாத் மட்டும் வழக்குத் தொடர்ந்தாரே அது எப்படி என்று பலர் கேட்காமளில்லையே!
பல தொண்டு நிறுவனங்களின் நிர்வாகியான ஹசாரே அணியின் கேஜ்ராவாளுக்கு வெளிநாட்டிலுருந்து பெறப்பட்ட பணம் எவ்வளவு என்றோ அல்லது கிரேன்பேடி, கேஜ்ராவால் மற்றும் பூசன் குடும்பச் சொத்தை இதுவரை அறிவிக்கவில்லையே அது ஏன்?
அது போன்ற கேள்வி எழக்கரணம் சாந்தி பூசன் முன்னாள் ஜன சங் மத்திய அமைச்சராக இருந்தவர். கிரேன் பேடியும் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அதுபோன்று ஹசறேவும் இதுவரை தனது சொத்து பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றே சொள்ளபடுகிறேதே!
மத்திய பிரதேச மாநிலத்தில் ப.ஜ.க. தலைவர் ஒருவருக்கு 300 அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வந்ததே ஏன் அங்கே சென்று ஹசாரே அணி ஆர்பாட்டம் செய்யவில்லை? அது மட்டுமா அந்த மாநிலத்தில் உள்ள முதல்வர் பற்றி செய்தி வெளியிட்ட பெண் நிருபர் ஷீலா மசூது என்பவர் சுட்டுக் கொல்லபட்டரே ஏன் அங்கே சென்று ஆர்ப்பாட்டம் ஹசாரே அணி செய்யவில்லை?
சரி பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி மறுபடியும் ஒரு ரத யாத்திரை என்று கூறியிருக்கிறரே அது ஏன் என்று பாமர மக்கள் கேட்காமலில்லையே! அது தான் காவி உடை நாணயத்தின் மறு பக்கம். கர்நாடகாவில் முதலில் எட்டியூரப்பவிற்கு எதிராக அமைச்சர் ஜனார்தன ரெட்டி மற்றும் அவர் சகோதரர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொது எட்டியூரப்பாவினை ஏன் ப.ஜ.க பதவி நீக்கம் செய்யவில்லை? எட்டியூரப்பவினை தொடர்ந்து ஜனார்தன ரெட்டியினை சி.பி.ஐ. கைது செய்த உடன் ஏன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்று பொது மக்கள் கேட்கவில்லையா? பாராளு மன்றத்தில் ஆயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்துக் காட்டிய ப.ஜ.க. முன்னால் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனரே அதற்கு அத்வானியின் பதில் இது வரை சொல்லவில்லையே? அது ஏன் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைதானே!
முன்னால் ப.ஜ.க. தலைவர் பங்காரு லக்ஷ்மணன் கையூட்டுப் பெறும்போது ஒரு டி.வீ. சேனல் படம் போட்டு காட்டியதே அப்போது அவரை கட்சியிலிருந்து ப.ஜ.க. நீக்கியதா இல்லையே? இப்போது கூட டூ ஜி ஊழலில் அருண்குமார் மற்றும் அருண் சோரி பெயர்கள் அடிபடுகிறேதே அவர்களை கட்சி நீக்கியதா, இல்லையே! ஒடிசா மாநிலத்தில் ராஜ்ய சபா தேர்தலில் ஆளும் பி.ஜே.டி கட்சியுடன் சேர்ந்து பணம் கொடுத்து வெற்றி பெட்டதாக கூறப்படுகிறதே அப்படி பணம் வாங்கிய பி.ஜே.பே. எம்.எல்.ஏக்கள் கட்சியினை விட்டு நீகப்பட்டனரா, இல்லையே!மத்திய பிரதேச ப.ஜ.க. அரசு அரசின் 300 ஏக்கர் நிலத்தினை அந்த மாநில ப.ஜ.க தலைவர் நடத்தும் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததாக ஊடகங்கள் சொன்னதே அப்போது ஏன் எந்த யாத்திரையும் நடத்தவில்லை?
ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம் தான் மிக சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநித்துவ சபை. அந்த சபை உறுப்பினர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததால் ஹஜாரேயின் அணியினரான பிரசாந்த் பூசன், கிரேன் பேடி மற்றும் கேஜ்ராவால் போன்றோருக்கு உரிமை மீறல் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அது எப்படி தவறாகும்? ஒரு நாட்டுக்கொடி மேல்நோக்கிதான் பறக்க விட வேண்டும். ஆனால் கிரேன் பேடி முன்னால் காவல் துறை அதிகாரி. அவர் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும்போது தேசியக்கொடியினை பெரிய கம்பில் கட்டி கீழ் நோக்கி வீசுவதினை அனைவரும் தொலைகாட்சியில் பார்த்திருக்கலாம். அதனை எப்படி சரி என்று சொல்லாம்? சில ஆயிரம் பேர்களை கூட்டி அவர்களுக்கு சாதகமான காரியம் சாதிக்க நினைத்தால், 15 சதவீத மக்கள் உள்ள முஸ்லிம்கள் பத்து சதவீத ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதிக்கீடு செய்ய நீதிபதி ரங்கநாத மிஸ்ரா சொல்லியபடி கொடுங்கள் என்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை? காரணம் அந்த தலைவர்களிடையே ஒற்றுமை இல்லையே?
ஹசாரே என்ன நாட்டின் சுதந்தர வீரரா? இல்லையே? ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்று ஊடகங்கள் சொல்கின்றன. அத்வானி நாட்டின் சுதந்திர போராட்ட வீரரா? அவர்களுக்கு ஏன் அந்த முக்கியத்துவம்? 1965 ஆம் ஆண்டு ராணுவத்தில் ஹசாரே போன்று முன்னால் எஸ்.பீ. முஹம்மது இக்பாலும் இருந்து நாட்டுக்காக போராடினார். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் விடுதலை புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்தார். அவரை எந்த அரசும் ஞாபகப் படுத்துகிறதா, இல்லையே! ஏன் இந்த பாரபட்சம்?
ஹசாரே என்ன பேட்டை முதலாளி காயிதே மில்லத் போன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் செல்வதினை தொலைத்தவரா? இல்லையே!
அல்லது1924 இல் பள்ளிப் பருவத்தில் மாணவராக இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதினால் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஜெயிலில் ஓராண்டு வாடிய தியாகி அப்துல் சலாம் போன்று தியாகம் செய்தாரா? இல்லையே!
ஹசாரே அணியில் இருந்த சுவாமி அக்னிவேஷ் மற்றும் நடுநிலை எழுத்தாளரும், உயர்ந்த மேகசய்சே அவார்ட் வாங்கியவருமான அருந்ததி ராய் முதலில் ஹசாரே அணியில் இருந்தனர் பின் அவரை சில சுயநல வாதிகள் தங்கள் ஆளுகையில் வைத்து அதன் படி ஆட்டி வைத்ததால் ஹசாரே அணியிலிருந்து விலகவில்லையா? அது சரி, குஜராத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வர் சுரேஷ் மேஹ்தாவும், சடப்பியாஹ்வும் குற்றம் சாடியுள்ளனரே அதனால் தானே குஜராத்தில் ஊழலை விசாரிக்க லோகயுக்தா கவர்னர் நியமித்ததும் எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளாரே ஏன் அங்கே சென்று அத்வானியும், ஹஜாரேயும் ரத எதிரியோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்லது உண்ணாவிரதமோ செய்யவில்லை? முன்பு அத்வானி ரத யாத்திரையும், கரசேவகையும் தடுத்து நிறுத்த உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்க் போன்ற ஒரு முதல்வரும், லாலுப் பிரசாத் யாதவ் போன்ற பீகார் முதல்வரும் இல்லையே என்ற தைரியத்தில் அத்வானி தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அதுபோல ஹஜாரேயும் தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அவர்களுடைய திட்டத்தின் பின்னணியில் பல கும்பல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக .ஆர்.எஸ். எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் காங்கிரசில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதகவும் ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு முத்தாப்பு வைத்ததுபோல ஆஜ்மீர்,மலேகான்,ஹைதராபாத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்புகளில் சம்பத்தப்பட்ட அபினவ் பாரத் என்ற அமைப்பினரின் ஒன்பது பேர்களுடைய ஜாமீன் மனுவினை போலிசார் எதிர்க்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே ரத யாத்திரை மூலம் அயோத்தியில் நாசவேலையை நடந்தது போல மறுபடியும் ஒரு நாச வேலை நடக்ககூடாது என்றும் பலரும் எதிர்பார்ப்பது இயற்கைதானே! அதற்குத்தானே மத்திய அரசு மத எதிர்ப்பு தடைச் சட்டம் கொண்டு வருகிறது. அதனை ஏன் ப.ஜ.கவும் அதன் கூட்டணிகளும் எதிர்க்கிறார்கள்.
இரு ரத யாத்திரைகளின் பின்னணியில் மூன்று மறைமுக திட்டம் உள்ளதாக நடுநிலையாளர்கள் எண்ணுகிறார்கள்:
1) 2004 ஆம் ஆண்டினுக்குப் பின்பு மத்தியில் ப.ஜ.க ஆட்சியினைப் பிடிக்க முடியவில்லை. வருகின்ற தேர்தலில் மோடியினை முன் நிறுத்தி ஆகவே இதுபோன்ற ரத யாத்திரை நடத்தி சிருபான்மையினரினைடியே பயத்தினை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் ஆட்சியினை பிடிப்பது.
2) அதன் பின்பு மத சார்பற்ற அரசியலமைப்பினை மாற்றி பெரும்பைமையினர் பயன்படும் மத சார்பான சட்டத்தினை கொண்டு வருவது.
3) அப்படியும் முடியவில்லையென்றால் நாடு முழுவதும் ஹசாரே டெல்லியில் நடத்திய தர்பார் போன்று நாடெங்கும் சடத்தி மத்திய அரசினை மாற்றுவது.
இந்த கருத்திற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல அமெரிக்க காங்கிரசின் அறிக்கையில் வலது சாரி ஹிந்து அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு அச்சாரமாக மலேகான், ஆஜ்மீர்,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தொடர்புள்ள அபினவ் பாரத் அமைப்பு தீவிரவாதிகளின் ஜாமீன் மனுவினை காவல் துறையினர் எதிர்க்க மாட்டார்கள் என்றும் ஊடகங்கள் சொல்லுகின்றன.
ஆகவேதான் இந்த தேவை இல்லா இரண்டு ரத யாத்திரையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றேன். அது சரிதானே!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::