Saturday, September 17, 2011

ஹாக்கிங்!


அமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட
இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.


இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.


ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.


இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.


மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.


ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.


அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::