Friday, September 9, 2011

முஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2


3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :
1. பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்கூறுகிறான்: ''(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலம் யிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணு காதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன் 2:222)
மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.
''(மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.
மனைவி மாதவிடாயாக இருக்கும் நிலையில் கணவன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டாலும் மர்ம உறுப்புக்கள் சேராதவிதத்தில் மனைவியிடம் இன்பம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
''பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் உடலுறவைத் தவிர (விரும்பிய) மற்றதை செய்து கொள்ளுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.
''ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை'' என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.
மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ''பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 56:79)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ர் இப்னு ஹஸ்கி என்பவருக் கும் எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர யாரும் முஸ்ஹஃபைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.'' (நூல்: நஸயீ)
இது பிரபலமான, சரியான ஹதீஸாகும். துய்மையா னவர்களைத் தவிர மற்றவர்கள் முஸ்ஹஃபைத் தொடக் கூடாது என்பதே நான்கு இமாம்களின் கருத்தாகும்.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. மறந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் அத்தியாவசிய மான நிலையில் வேண்டுமானால் குர்ஆனை ஓதலாம்.
4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ''ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் 'தவாஃப்' மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
5. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் ஒரு பெண் பள்ளிவாசலில் தங்குவதும் கூடாது.
''மாதவிடாய்ப் பெண்ணிற்கும், குளிப்பு கடமையான வர்களுக்கும் பள்ளிவாசலில் தங்குவதை நான் அனுமதிக்க வில்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, இப்னுமாஜா)
''நிச்சயமாக பள்ளிவாசல் மாதவிடாய் பெண் ணிற்கும், குளிப்பு கடமையானவருக்கும் ஆகுமானதல்ல, என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட நபிமொழியில் இடம் பெறுபவர்கள் பள்ளிவாசலில் தங்காது அவசியத்தேவைக்காக அதைக் கடந்து செல்வது மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு 'மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ)
அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ªர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை.
மஞ்சள், கலங்கல் நிற இரத்தம் :
மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்¡ர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க் கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள்.
''நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.'' (நூற்கள்: புகாரி, அபூ தாவூது)
இந்த விஷயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் ஹதீஸின் சட்டமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்களிடம் கருதப்படுகிறது.
மாதவிடாய்க் காலத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான இரத்தமும் வெளியானால் அதுவும் மாதவிடா யாகவே கருதப்படும்.
மாதவிடாய் முடிவை ஒருபெண் அறிவது?
1. இரத்தம் நின்றுவிடுவதன் மூலம் அதை அவள் அறிந்து கொள்வாள், இதற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன. ஒன்று மாதவிடாய் இரத்தம் நின்றபின் தொடரும் தண்¡ர் போன்ற வெள்ளை நிற திரவப்பொருள். சிலசமயம் பெண்களின் உடற்கூறைப் பொறுத்து வௌ;வேறு நிறங்களிலும் வெளியாகும்.
2. மர்ம உறுப்பு, திரவங்கள் ஏதும் இன்றி காய்ந்த நிலை யில் காணப்படுவது. அதாவது இரத்தம் வெளியாகும் இடத்தில் பஞ்சு அல்லது துணியை வைத்துவிட்டு வெளியே எடுக்கும்போது அதில் எவ்வித இரத்த முமில்லாமல் காய்ந்த நிலையில் காணப்படுவது.
4. மாதவிடாய் நின்றுவிட்ட பெண் என்ன செய்யவேண்டும்.
மாதவிடாய் நின்றதும் குளிப்பது கடமையாகும். மாதவிடாய் நின்றதற்கான குளியலை நிறைவேற்றுவதாக நினைத்து (நிய்யத் வைத்து)க் கொள்ளவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ''மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு! அது நின்றதும் குளித்துவிட்டு தொழுது கொள்!'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
குளிக்கும்போது அசுத்தத்திலிருந்து தூய்மையாகப் போவதாக மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் பிஸ்மில்லாஹ் சொல்லி தன் உடல் முழுவதும் தண்¡ர் ஊற்ற வேண்டும். தலைமுடியின் அடிப்பாகங் களை நனையும்படிச் செய்யவேண்டும். தலைமுடி அடர்த்தியாக இருந்து, சடை பின்னப்பட்டிருக்குமானால் அதை அவிழ்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் தண்¡ரை தலையில் ஊற்றினாலே போது மானது. இலந்த இலை, மற்றும் உடலை சுத்தம் செய்கிற பொருட்களை உபயோ கிப்பது சிறந்தது. குளித்தபின் பஞ்சில் நறுமணத்தை எடுத்து இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
முக்கிய விஷயம்
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண், அல்லது பிரசவமான பெண் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் சுத்தமாம் விடுவாளானால் அந்த நாளின் லுஹர், அஸர், தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு சுத்தமாம்விடும் பெண் அந்த இரவின் மக்ரிப், இஷா தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். இதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது இரண்டாவது தொழுகையின் நேரம் முதல் தொழுகையின் நேரமாக உள்ளது.
இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பில் 22ழூ ழூ434 ல் கூறுகிறார்கள்.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் பகலின் கடைசிப் பகுதியில் தூய்மையாகி விடுவாளானால் அன்றைய லுஹர், அஸர் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். இரவின் கடைசியில் தூய்மையாகி விடுவாளா னால், மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை சேர்த்துத் தொழவேண்டும். என மாலிக் ஷாஃபியீ, அஹ்மத் போன்ற பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், அப+ஹ{ரைரா, இப்னு அப்பாஸ்(ரழி) போன்ற நபித்தோழர்களும் இவ்வாறே கூறியுள்ளனர்.
'லுஹர்' தொழுகைக்கான நேரம் எஞ்சியிருக்கும் நிலையில் பகலின் கடைசிப் பகுதியில் தூய்மையாகும் பெண், 'அஸர்' தொழுகைக்கு முன்பாக 'லுஹர்' தொழவேண்டும். 'மக்ரிபு'டைய நேரம் எஞ்சி இருக்கும் நிலையில் தூய்மையாகும் பெண் 'இஷா'விற்கு முன் 'மக்ரிப்' தொழவேண்டும்.
தொழுகைக்கான நேரம் வந்த பிறகு அதை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒரு பெண் மாதவிடாய்க் காரியாக ஆம்விட்டால், அல்லது அவளுக்கு பிரசவத்தீட்டு ஏற்பட்டுவிட்டால் அவள் அத்தொழுகையை (தூய்மையானதும்) திரும்பத் தொழவேண்டியதில்லை.
ஆதாரத்தின் அடிப்படையில் இமாம் அப+ஹனீஃபா மற்றும் இமாம் மாலிக் அவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், அந்த பெண் மீது அந்தத் தொழுகையை நிறைவேற்றுவது கடமையில்லை. திரும்ப தொழ வேண்டு மென்பதற்கும் புதிய கட்டளை வேண்டும். ஆனால் இங்கு எந்த கட்டளையும் இல்லை, காரணம் அந்தப்பெண் அந்தத் தொழுகையை அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் பிற்படுத்தினாலே தவிர நேரம் கடந்தும் தொழாமல் இருக்கவில்லை.
தூங்கிவிட்டவன் அல்லது மறந்து விட்டவன் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது (களா) திரும்பத் தொழவேண்டும் என்ற அடிப்படையில் அல்ல. தூக்கத்திலிருந்து எழும்போது அல்லது அந்தத் தொழுகை யைப் பற்றிய நினைவு வரும்போதுதான் அதன் நேரம் அவனுக்கு (உண்டாகின்றது) வருகிறது என்பதை அறிய வேண்டும்.


உதிரப்போக்கு :
மாதவிடாய் நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் பெண்களுக்கு வெளியாகும் உதிரப்போக்கை சாதாரன மான இரத்தம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். மாதவிடாய் இரத்தமும், இந்த இரத்தமும் ஒன்றுபோல் காணப்படுவதால் இரண்டயையும் பிரித்து அறியும் விஷயத்தில் சில சிரமங்கள் உள்ளன.
உதிரப்போக்கு தொடர்ச்சியாக இருந்தால் மாத விடாய் இரத்தம் எது, சாதாரனமான இரத்தம் எது, எந்த இரத்தம் வருவதால் தொழுகையை விட வேண்டும் என்பதையெல்லாம் தெரிவது கடமையாகும். பெண் களுக்கு உதிரப்போக்கு மூன்று நிலைகளில் உள்ளது.
1. ஒரு பெண்ணுக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்படுவ தற்கு முன்பு ஏற்கனவே மாதத்தின் ஆரம்பத்திலோ, நடுவிலோ அல்லது கடைசியிலோ, ஐந்து, எட்டு, அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் மாதவிடாய் ஏற்படும் வழக்கமுள்ளவளாக இருப்பாள். இந்நாட்கள் தான் அவளுடைய மாதவிடாய் நாட்கள் என்பதை அறிந்து கொள்வாள். அந்நாட்களில் அவள் தொழுகை மற்றும் நோன்பை விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் அவள் குளித்துத் தூய்மையாகி தொழுகை யைத் தொடரவேண்டும். அதற்குமேல் தொடரும் உதிரப்போக்கை சாதாரனமான இரத்தம் எனக் கருதவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ''உன்னுடைய மாதவிடாய் நாட்களின் அளவு நீ தொழாமல் இருந்துகொள்! அதன் பின்னர் குளித்துத் தூய்மையாகி தொழுகையைத் தொடர்ந்து கொள்!'' என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
2. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் இத்தனை நாட்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தெரியாது இருக்கும்போது, இரத்தத்தின் நிறம், வாடை ஆகியவற்றை வைத்து உதிரப்போக்கு எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது கருப்பு நிறமாகவோ, நாற்றமுடையதாகவோ இருக்குமானால் மாதவிடாய் இரத்தம் என கணிக்கப்படும். மாதவிடாய் இரத்ததைப் பொறுத்த வரையில் அது சிகப்பு நிறமாகவும் இருக்கும். இதை வைத்து ஒரு பெண் தனக்கு ஏற்பட்டுள்ளது மாதவிடாய் இரத்தம்தான் என்பதை அறிந்துகொண்டு அந்நாட்களில் தொழுகை, நோன்பை விட்டு விட வேண்டும். அவள் எதை மாதவிடாய் இரத்தம் எனத் தீர்மானிக்கிறாளோ அந்நாள் முடிந்ததும் குளித்து
விட்டு தொழுகை மற்றும் நோன்பை கடைபிடிக்க வேண்டும்.
இதற்கு ஆதாரம் ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸாகும்.
மாதவிடாய் அறியப்படும் விதத்தில் கறுப்புநிற முடையதாக இருந்தால் தொழுகையை விட்டுவிடு, வேறு நிறத்தில் இருந்தால் நீ உளு செய்து தொழுது கொள். (அபூ தாவூது, நஸயீ)
3. மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் என்ற வழக்கம் இல்லாத ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் மற்றும் உதிரப்போக்கை பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுமானால், ஒரு மாதத்தில் அதிகப்படியாக மாதவிடாய் ஏற்படும் நாட்களாக ஆறு அல்லது ஏழு நாட்களை மட்டும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். அதுதான் அதிகமான பெண் களின் மாதவிடாய் நாட்களாகும்.
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''அது ஷைத்தானால் ஏற்படும் தீட்டாகும். நீ ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! மாதத்தில் 24 அல்லது 23 நாட்கள் தொழுகை நோன்பு ஆகியவற்றை நிறைவேற்றிக்கொள்! அது உனக்கு போது மானதாகும். இவ்வாறே மற்ற பெண்களைப் போன்று நீ மாதவிடாய் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்!ம் என்று கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, நஸயீ, திர்மதி, இப்னுமாஜா, அஹ்மது)
சுருங்கக் கூறினால், மாதவிடாய் இத்தனை நாட்கள் தான் என பழக்கப்பட்டவள் அந்நாட்களை மட்டுமே மாதவிடாய் நாட்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இரத்ததையும் வேறுபடுத்தி அறியக்கூடியவள் அதன்படியே செயல்படவேண்டும். இந்த இரண்டு நிலையிலும் இல்லாத ஒருவள், ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணின் விஷயத்தில் வந்துள்ள மேற்கண்ட மூன்று நபிமொழிகளையும் பின்பற்றியவளாகக் கருதப்படுவாள்.
ஷைகுல்இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார். உதிரப்போக்குள்ள பெண்களுக்காக கூறப்பட்ட விஷயங்கள் ஆறு:
1. வழக்கம்: வழக்கமாகக் கடைபிடித்து வரும் ஒன்று உறுதியானதாகும். இங்கு மாதவிடாய் தான் அடிப் படையே தவிர மற்றவை அல்ல.
2. பிரித்தறிதல்: கருப்பான கட்டியான துர்நாற்றமுள்ள இரத்தம் மாதவிடாயாக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஏனெனில் சிகப்பு நிற மாதவிடாய் இரத்தத்தை பிரித்தறிய முடியும்.
3. அதிகமான பெண்களின் வழக்கத்தை கவனித்தல்: ஒரு தனிநபர் பொதுவாக அதிக மக்களின் வழக்கத்தைக் கடைபிடிப்பதுதான் அடிப்படை.
இந்த மூன்று அடிப்படைகளுக்கும் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று கூறிவிட்டு மற்ற அடையாளங்களைக் குறிப்பிடுகிறார்.
''இது விஷயத்தில் ஹதீஸில் வந்துள்ள அடை யாளங்களை வைத்து கவனிப்பதுதான் சரியானதாகும், மற்றவற்றை விட்டுவிட வேண்டியதுதான் என 'நிஹாயா'' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதிரப்போக்குடைய பெண் அவள் சுத்தமானவள் என்ற முடிவின் படி அவள் கடைபிடிக்க வேண்டியவை.
1. முன்பு குறிப்பிட்ட விளக்கத்தின் பிரகாரம் மாதவிடாய் முடிந்ததும் குளிப்பது அவள்மீது கடமையாகும்.
2. ஒவ்வொரு தொழுகையின் போதும் இரத்தம் வெளியாகி அசுத்தமாக உள்ள இடத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தம் வரும் துவாரத்தை பஞ்சு போன்ற பொருளால் அடைத்து அது விழுந்து விடாதபடி கட்டி வைக்கவேண்டும். பின்னர் தொழுகையின் நேரம் வந்ததும் உளூ
செய்து தொழவேண்டும்.
உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, இப்னுமாஜா)
உதிரப்போக்குடைய பெண்ணிடம், ''பஞ்சை அந்த இடத்தில் வைத்துக் கட்டிக்கொள்!'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதற்கென்றே தற்போது மருத்துவமுறையில் செய்யப்பட்ட பாதுகாப்பான பஞ்சுகள் (யீயனள) கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரசவ இரத்தம் :
பிரசவ இரத்தம் என்பது பிரசவத்தின் போதும், பிரசவம் முடிந்த பின்பும் கற்பப்பையிலிருந்து வெளியா கும் இரத்தமாகும். இந்த இரத்தம் கற்பக் காலத்தில் கற்பப்பையில் தேங்கியிருந்த இரத்தமாகும். பிரசவம் ஆம்விட்டால் இந்த இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகும்.
பிரசவத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வெளியாகும் பிரசவத்தின் அடையாள இரத்தமும் பிரசவ இரத்தமாகவே கருதப்படும். இது அதிகமாகவும் பிரசவம் நிகழும் போது தான் வெளியாகும்.
மனித தோற்றம் பெற்று குழந்தை வெளியாவது பிரசவம் எனப்படும். மனித தோற்றம் பெறுவதற்கு குறைந்தது 81 நாட்களோ, அதிகப்படியாக மூன்று மாதங்களோ ஆகும். இதற்கு முன்பாக (81 நாட்கள்) ஏதும் வெளியா னால் அதோடு இரத்தம் வந்தால் அந்த இரத்தத்தை உதிரப்போக்கு இரத்தமாகவே கருத வேண்டும். இது கெட்ட இரத்தம், இதற்காக தொழுகை, நோன்பைவிட வேண்டியதில்லை, சாதாரனமான உதிரப் போக்குடைய பெண்ணின் சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.
பிரசவத்திற்குப் பின்னர் வெளிப்படும் இரத்தம் அதிகப்படியாக நாற்பது நாட்கள் வரை நீடிக்கும்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிரசவத்தினால் உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் நாற்பது நாட்கள் தொழாமல் இருந்துவிடுவார்கள்'' என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)
நாற்பது நாட்களுக்கு முன் இரத்தம் நின்று தூய்மையாகிவிட்ட பெண் குளித்துத் தொழுகையைத் தொடர வேண்டும். பிரசவ இரத்தத்தின் குறைந்த நாட்கள் எத்தனை என்பதற்கு வரம்பு ஏதும் இல்லை.
நாற்பது நாட்கள் கழிந்த பின்பும் இரத்தம் நிற்காதி ருந்தால் அந்நாட்கள் அவளுடைய மாதவிடாய் நாட் களாக இருக்குமானால் அந்த இரத்தத்தை மாதவிடாய் இரத்தமாகக் கருதவேண்டும். மாதவிடாய் நாட்களாக இல்லாமலிருப்பின் அதை சாதாரனமான உதிரப்போக் காக எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்பது நாட்கள் கழிந்த பின்னர் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கக்கூடாது.
பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள்
பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கு மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான்.
1. பிரசவ இரத்தம் வெளியாகும்போது அவளுடன் அவளுடைய கணவன் உடலுறவு கொள்வது கூடாது. உடலுறவைத் தவிர மற்ற இன்பங்களை அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. பிரசவ இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை வலம் வருவது கூடாது.
3. பிரசவ இரத்தின்போது விடுபட்டுப்போன நோன்பு களை மற்றநாட்களில் நோற்கவேண்டும். பிரசவ இரத்தம் வெளியாகும் பெண்கள் குர்ஆனை தொடு வதும் அதை ஓதுவதும் கூடாது, குர்ஆன் மறந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலே ஒழிய
4. மாதவிடாய் இரத்தம் நின்ற பெண் குளிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே பிரசவ இரத்தம் நின்றதும் குளிப்பது பெண்கள் மீது கடமையாகும்.
இதற்கான ஆதாரங்கள்:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிரசவமான பெண் நாற்பது நாட்களுக்கு தொழாமலிருந்து விடுவாள்கி என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூ தாவூது, நஸயி, இப்னுமாஜா, திர்மிதி)
இமாமுல்மஜ்த் இப்னு தைமிய்யா முன்தகா எனும் தம் நூலில் 1ழூ ழூ184 வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸின் பொருள் பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும் பெண் நாற்பது நாட்கள் தொழாமல் இருக்குமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறாள். நபி(ஸல்) அவர்களின் மனைவி அறிவிக்கும் செய்தி முரண்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மாதவிடாய், பிரசவ உதிரப்போக்கு விஷயத்தில் ஒரு காலத்திலுள்ள பெண் களின் பழக்கம் ஒன்று பட்டிருக்க முடியாது என்றே கூறவேண்டும்.
''நபி(ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் பிரசவத்தின்போது நாற்பது நாட்கள் (காத்து) இருப்பார் கள். அந்நாட்களின் விடுபட்டுப்போன தொழுகையைத் தொழுது கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் அப்பெண் களுக்குக் கட்டளையிட மாட்டார்கள்'' என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)
குறிப்பு: ஒருபெண்ணிற்கு பிரசவ உதிரப்போக்கு நாற்பது நாட்களுக்கு முன்பே நின்றுவிடுமானால் அவள் குளித்துவிட்டு தொழுகை மற்றும் நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றிய பின் நாற்பது நாட்கள் முடிவதற்குள் திரும்பவும் உதிரப் போக்கு ஏற்படுமானால் அது பிரசவத்தினால் ஏற்படும் உதிரப்போக்காகவே கருதப்படும். உதிரப்போக்கு நின்றிருந்த நாட்களில் தொழுத தொழுகை மற்றும் நோன்பு போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும். செய்து முடித்து விட்ட அக்கடமைகளை மீண்டும் செய்ய வேண்டிய தில்லை.
பார்க்க: ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீமின் ஃபத்வாத் தொகுப்பு 2ழூ ழூ102.
ஷேக் அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பத்வாத் தொகுப்பான அஸ்ஸாது என்ற நூலின் விளக்கவுரை பக்கம்: 1ழூ ழூ405
பெண்களுக்கான இயற்கை உதிரப்போக்கு பக்கம்: 55,56
ஃபதாவா ஸஅதிய்யா பக்கம்: 137
ஷேக் அப்துர் ரஹ்மான் பின் சஅதி கூறுகிறார்கள்: மேற்கூறப்பட்ட விஷயங்களிலிருந்து பின்வரும் அடிப் படைகள் புலனாகின்றன, பிரசவத் தீட்டிற்கான காரணம் பிள்ளைபேறு ஆகும். தொடர் உதிரப்போக்கு என்பது நோயினால் ஏற்படுவதாகும். மாதவிடாய் இரத்தம்தான் ஒரு பெண்ணிற்கு அடிப்படையாக வரும் இரத்தம், அல்லாஹ்வே மிக அறிந்தவன். (நூல்: இர்ஷாத் உலுல் அப்ஸார் வல்அல்பாப்1 பக்கம்:24)
மாதவிடாய் நிற்க மருந்து உண்ணுதல்:
ஒருபெண் தன்னுடைய ஆரோக்கியம் பாதிப்பிற் குள்ளாகமல் இருக்கும் வரை அவள் மருந்து உண்ணுவதில் தவறு இல்லை. மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் இரத்தம் நின்றிருக்கும் நாட்களில் தொழுகை மற்றும் நோன்பு போன்ற வணக்கங்களை அவள் நிறைவு செய்யவேண்டும். சுத்தமான மற்ற பெண்களுக்கான சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.
கருக்கலைப்பு :
இஸ்லாமிய பெண்மணியே! உன்னுடைய கருவறை யில் அல்லாஹ் படைத்ததை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உனக்கு உள்ளது அதை நீ மறைப்பது கூடாது.
''அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அந்தப் பெண் கள் நம்புவார்களாயின் தங்கள் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.'' (அல்குர்ஆன் 2:228)
எந்த நிலையிலும் கருக்கலைப்புச் செய்வதற்கு சூழ்ச்சி செய்யாதே! கர்ப்பமான நிலையில் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது உனக்கு கடினமானதாக இருக்கு மானால் அல்லது கருவுக்கு கேடு ஏற்படுமானால் அம்மாதத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ உனக்கு சலுகை வழங்கியுள்ளான். இக்காலத்தில் பரவியுள்ள கருக்கலைப்பு மற்றும் அறுவைச் சிம்ச்சைகள் தடுக்கப் பட்டதாகும். கருவறையில் உள்ளதற்கு உயிர் ஊதப் பட்டப்பின்னர் கருக்கலைப்பால் கருவான அக்குழந்ததை இறந்துவிடுமானால் நியாயமான காரணமின்றி உயிரைக் கொலைசெய்த குற்றத்திற்கு அப்பெண் ஆளாம் விடுகின்றாள். இதன் மூலம் குற்றவியல் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளதோ அதைப் பெற்றுக் கொள்வதற்கு அவள் தகுதியாகிவிடுகிறாள். இதன் பரிகாரமாக இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையை அவள் உரிமை விட வேண்டும். அதற்கு சக்தி பெற வில்லையெனில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். என இமாம்கள் சிலர் கூறியுள்ளனர். இச்செயல் உயிருடன் புதைப்பதற்குச் சமம் என அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கருவறையில் உள்ள குழந்தை இறந்துவிட்டது என்று தெரியாத வரை அதைக் கலைப்பது கூடாது என ஷேக் முஹம்மத் இப்ராஹீம் தம் ஃபத்வாத் தொகுப்பில் 11ழூ ழூ151 ல் குறிப்பிட்டுள்ளார்.
சவூதியில் உள்ள மார்க்க அறிஞர்களின் சபை 20.06.1407 ஹிஜ்ரியில் வெளியிட்டுள்ள தன் தீர்மானம் 140ல் பின்வருமாறு கூறியுள்ளது.
1. இஸ்லாம் கூறக்கூடிய மிக நெருக்கடியான எந்தவித மான காரணமும் இல்லாதபோது கருக்கலைப்புச் செய்வது கூடாது.
2. முதல் ஆரம்ப நாற்பது நாட்களில் குழந்தை வளர்ப்பு சிரமம் என்பதற்காகவோ அல்லது அவர்களை வளர்ப் பதும் அவர்களுக்கு கல்விபோதிப்பதும் முடியாது என்ற பயத்தின் காரணத்திற்காகவோ, அல்லது அவர் களின் எதிர்காலத்தைப் பயந்தோ அல்லது தங்களிடமுள்ள குழந்தைகள் போதும் என்று கருதியோ கருக்கலைப்பு செய்வதுகூடாது.
3. கருவறையில் உள்ளது சதைக்கட்டியாக இருக்கும் நிலையில் அது கருவில் இருப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்துநேர்ந்துவிடும் என உறுதியான மருத்துவ சான்று இல்லாதவரை கருக்கலைப்பு செய்வது கூடாது. எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு கடைசியாகத்தான் இந்தமுடிவிற்கு வரவேண்டும்.
4. கற்பத்தின் மூன்றாவது நிலையான நான்கு மாதகாலம் ப+ர்த்தியான பின்பு ஏதோ காரணங்களினால் குழந்தை தாயின் கற்பத்தில் இருப்பது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்குழு உறுதிசெய்யாத வரை கருவைக் கலைப்பது கூடாது. கற்பத்திலுள்ள குழந்தையைக் காப்பாற்றுவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபிறகே இந்த முடிவிற்கு வரவேண்டும். இந்த நிபந்தனைகளோடு கருவைக் கலைப்பதற்கு காரணம், இரண்டு விதமான தீங்குகளில் பெரியதீங்கை தடுத்து நிறுத்துவது கடமை என்ற அடிப்படையிலும், இரண்டு நலன்களில் சிறந்ததை தேர்வு செய்யவேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் உறுதியோடும் இறையச்சத்து டனும் செயல்படுமாறு இச்சபை கேட்டுக்கொள்கிறது.
''பெண்களுக்கான இயற்கை இரத்தம் என்ற பெயரில் உள்ள நூலில் ஷேக் முஹம்மத் இப்னு உஸைமீன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ''கருவறையில் உள்ளதை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உயிர் ஊதப்பட்ட பின்னர் கருக்கலைப்புச் செய்வது சந்தேகமின்றி தடை செய்யப்பட்டதாகும். நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்ததாகக் கருதப்படும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யில் தடைசெய்யப்பட்டுள்ள உயிரை கொலைசெய்வது விலக்கப்பட்டதாகும். மேற்கூறப்பட்டதில் பக்கம் - 60
'அஹ்காமுன்னிஸா' என்ற நூலில் பக்கம் 108 ல் இப்னு ஜவ்ஸி குறிப்பிடுகிறார்: திருமணம் செய்வதன் நோக்கமே மகப்பேறுக்காகத்தான். எல்லா நீரிலிருந்தும் குழந்தை ஏற்பட்டுவிடாது. குழந்தை உருவாக்கப்பட்டு விட்டால் நோக்கம் நிறைவேறிவிடும். அதைக் கலைப்பது அடிப்படை நோக்கத்திற்கு மாற்றம் செய்வதாகும். கருவறையில் உயிர் ஊதப்படுவதற்கு முன்னால் கற்பத்தின் ஆரம்ப காலத்தில் கருக்கலைப்பு செய்வது பெரிய பாவமாகும். உயிர் ஊதப்பட்ட பின்னர் செய்யப்படும் கருக்கலைப்பை விட குறைந்த குற்றம்தான் இதற்கு. உயிர் ஊதப்பட்டதை கலைப்பது இறைநம்பிக்கையாளன் ஒருவனைக் கொலை செய்த குற்றத்திற்கு சமமானதாகும்.
''உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, மறுமையில் வினவப்படும் எக்குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது என்று.'' (அல்குர்ஆன் 81:8,9)
இஸ்லாமியப் பெண்ணே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! எந்த நோக்கத்திற்காகவும் இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணியாதே வழிகெடுக்கும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதே! மார்க்கத்திற்கும், அறிவிற்கும் பொருந் தாத தவறான பழக்க வழக்கங்களைக் கண்டு ஏமாந்து விடாதே!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::