Sunday, August 21, 2011

ஹசாரேபோராட்டம் .சங்பரிவார் பிண்ணனி!!!!


imagesCA7JYJEB
புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.
ஹஸாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹஸாரேவின் போராட்டத்தை கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹஸாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்ப்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
ஹஸாரேவின் போராட்டத்திற்கு சைபர் உலகில் பெருமளவிலான பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடியுமாவர்.
தகவல் உரிமைச்சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹஸாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியை கொலைச் செய்த கொலைக்கார கும்பலான ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவையாகும். இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹஸாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.
யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹஸாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்க்பரிவார அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால் ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹஸாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடுச்செய்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.
ஹஸாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிப்பெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹஸாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப்போவதாக பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.
முன்பு கறுப்புப்பணத்திற்கு எதிராக போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::