Saturday, August 20, 2011

காஷ்மீரும் மறைக்கப்படும் உண்மையும்!!!!!!!3


ஜூலை 22 மாலை 6 மணிக்கு ஜம்மு நகர் வந்து சேர்ந்தோம். காஷ்மீர் என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு என மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கியது. ஜம்மு என்பது தரைப்பகுதி. அதாவது ஊட்டிக்கு கீழே மேட்டுப்பாளையம் இருப்பது போல. இங்கு பிராமணர்கள் அதிகம். லடாக் என்பது புத்தர்கள் நிறைந்த பகுதி. சீனாவின் எல்லையை ஒட்டியிருக்கிறது. மொத்த காஷ்மீரில் லடாக்கின் பரப்பரளவுதான் அதிகம். ஆனால் மக்கள் தொகை குறைவு. மொத்தம் ஒன்னேகால் லட்சம் பேர்தான் வாழ்கிறார்கள்.

டெல்லியிலிருந்து செல்பவர்கள் தரைவழியாக செல்லவேண்டுமெனில் ஜம்முதான் நுழைவாயில். அங்குதான் சோதனைச் சாவடிகளும், அரசுப் படைகளின் கெடுபிடிகளும் அதிகம். நாங்கள் நிகழ்ச்சி நடைபெறும் தோடா (DODA) நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது முக்கியப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டோம்.

துருவித் துருவி விசாரித்தார்கள். பிறகு எங்களது வாகனத்தை ஓரம் கட்டச் செய்து நிறுத்திவிட்டார்கள். பலமுறை பேசியும் பயனில்லை. எங்களைப் போல பல காஷ்மீரிகளின் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. அப்படி நிறுத்தப்பட்டவர்களிடம் பேச்சு கொடுத்தோம். முஸ்லிம்களாக இருந்தால் இப்படித்தான் செய்கிறார்கள் என்றனர்.

எங்களோடு வந்த வழக்கறிஞர் வாசுதேவன் தான் முஸ்லிமில்லை என்பதை எடுத்துக் கூறினாலும், அவரோடு நாங்கள் இருப்பது மட்டுமே அனைத்துக்கும் தடையாக இருந்தது. எங்களது முதல் அனுபவமே கசப்பாக அமைந்தது. இங்கே தினம் தினம் காஷ்மீரிகள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்களோ என அறிந்து வருந்தினோம்.

நாங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தகவல் அனுப்பி, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் பரபரப்பாகி அதற்கான முயற்சிகளில் இறங்கினர். ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு வேறொரு அதிகாரி வந்தார். அவரிடம் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், வழக்கறிஞர்கள் ஜெய்னுல் ஆபிதீன், வாசுதேவன் ஆகியோரும் முறையிட்டனர். பிறகு ஓ.யூ.ஆர். அவர்கள் எங்களுக்கான இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்ட அரசு அழைப்பிதழை அவரிடம் காட்டினார். அதன்பிறகே எங்களுக்கு அனுமதி கிடைத்தது.
 உடனே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. அப்பாடா... என்று வேகமாக புறப்பட்டோம். கடுமையான மலைப்பாதைகளில் கார் வேகமாக சென்றது பயத்தை கிளப்பியது.

நாங்கள்  டிரைவரிடம் மெதுவாக போகச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுக்கு இது சாதாரணமாக இருந்தது.

மதியமும் சாப்பிடதாததால் இரவில் ஒரு உணவகத்தில் ரொட்டிகளை உண்டோம். இரவு 12 மணியளவில் ஒரு இடத்தில் காரை டிரைவர் நிறுத்தினார். இதற்கு மேல் அவர் ஸ்ரீநகர் செல்வதால் இங்கு இறங்கி தங்க சொன்னார். காலையில் வேறொறு வண்டியல் ஏறி தோடாவுக்கு போகுமாறு அறிவுறித்தினார். நாங்கள் அங்கே ஒரு மலிவு விலை விடுதியில் தங்கினோம். காலையில் தொழுது விட்டு அந்த ஊரின் கடைத்தெருவுக்கு வந்தோம். அங்கு ராணுவ வீரர்கள் வாகனங்களோடு சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

தோடா செல்லும் ஒரு டெம்போ வேன் வந்தது. அதில் கூட்டமாக இருந்தது. வேறு வழியின்றி ஏறிக்கொண்டோம். அது அடுத்தடுத்து மூன்று மலைகளை ஏறி இறங்கி எங்களையெல்லாம் திகிலூட்டீய படியே சென்றது.

மிக மோசமான சாலைகளும், வளைவுகளும் பயமுறுத்தியது. மிக உயரத்தில் இருந்து எட்டி பார்த்த போது ஒரு நதி கீழே ஒரு கோடு போல ஓடிக்கொண்டிருந்தது. அது சினாப் நதி என்றார்கள். அங்கே ஜெய பிரகாஷ் நாராயணன் பெயரில் அணைக்கட்டு பணிகள் நடந்து கொண்டிந்தது. மூன்று மணி நேர பயனத்திற்கு பிறகு ஜூலை 25 காலை 10 மணிக்கு தோடா நகர் வந்து சேர்ந்தோம்.

எங்களது கருத்தரங்க நிகழ்ச்சி காலை 11.00 மணிக்கு தொடங்கியது. டாக்டர் அஜ்மல் அவர்கள் எங்களை கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைத்தார். நாங்கள் தங்கிய விடுதி ஒதுக்கு புறமாக ஒரு மலையடிவார அருகில் இருந்தது. நாங்கள் குளித்து விட்டு 1 மணிக்கு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தோம்.






SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::