Monday, July 4, 2011

இஸ்லாமிய சேனல் உதயம்!!!!!!!

[ அல்லாஹ்வுடைய பயம், நரகத்தின் பயம், மறுமையின் பயம், அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக நாம் நிறுத்தப்பட்டால்? நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பதியப்படுகிறது. இவ்வாறாக சிந்தனை இல்லாத முஸ்லிம் பெண்கள் இன்று வாழ்த்து வருகிறார்கள். பெண்களை சுற்றி நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத பெண்கள் அன்னிய மாற்று மத ஆண்களுடன் காதல் செய்து ஏமாற்றப்படும் நிலைமை. இதற்க்கு காரணம் பெண்களுக்கு இஸ்லாம் அதன் தூய வடிவில் செல்லவில்லை. குர்ஆனை அவர்கள் சிந்திக்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவைகள் வாழ்க்கையே படித்தது இல்லை. முன்மாதிரி பெண்களாக வாழ்ந்த நபி தோழிகளின் தியாகம் தெரியவில்லை. இதற்காக முழுக்க முழுக்க இஸ்லாம் சம்மந்தமாக ஒரு சேனல் முதலில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, முதல் ராஜபாளையம் வரை துவங்க திட்டமிட்டுள்ளது ISLAM NEWSBOOK. இந்த சேனலில் இஸ்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்க்கை முறைநபி தோழர்கள், தோழிகள் செய்த தியாகம், குர்ஆனும், இஸ்லாமும், அறிவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு, பெண்களுக்கான மறுமை, நரகம் பற்றிய பயம், குழந்தைகளுக்கான ஆரம்ப இஸ்லாமிய பாடங்கள். மாற்று மத சகோதரர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள், தாவா பணி, இஸ்லாமிய மாநாடுகளின் நேரலை, முழுக்க முழுக்க இஸ்லாமிய அறிவை வளர்க்கும் சேனலாக கொண்டு வர இருக்கிறது. இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய ரமலான் முதல் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம். இது முழுக்க முழுக்க லாப நோக்கத்திற்கு இல்லாமல் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அனைவரும் தூய வடிவில் அறிந்திடவும், பெண்கள் இஸ்லாத்திற்கு உட்பட்டு வாழவும் இந்த சேனல் துவங்கவுள்ளது.] ஒரு சமுதாயத்தின் கண்ணீர்! அன்பு சமுதாய உறவுகளே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த தலைப்...பு ஒரு வித்தியாசமான தலைப்பு உங்களிடம் வேண்டுவது நீங்கள் அனைவரும் இந்த கட்டுரை (தகவலை) முழுவதும் படிக்க வேண்டும். முக நூல் சகோதரர்களே முஸ்லிம் சமுதாயத்தை அழிப்பதற்கு இன்று உலகில் முஸ்லிம் அல்லாத மதங்களை சார்ந்த அனைவரும் துடித்து வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தின் மீது தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு புறம் முஸ்லிம்களை சுற்றி உலக அரங்கில் என்ன நடந்து வருகிறது என்று கூட தெரியாமல் தனது வேலை, குழந்தைகள், தனது குடும்பம் இவ்வாறாக பல முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு கூட்டம் எந்த திரை அரங்கில் என்ன படம் ரிலீஸ் என்று கவனமாக கூர்ந்து பார்த்து கொள்ளும் கூட்டம். இன்னொரு கூட்டம் டிவி-ல் போடக்கூடிய நாடகத்தில் மூழ்கி இருக்கும் கூட்டம், இவ்வாறாகத்தான் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியா மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் இவ்வாறாகத்தான் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் அதிகம் என்று சொல்லலாம். ஆனால் கொஞ்சம் இதை எல்லாம் விட்டு கொஞ்சம் உலக சிந்தனைக்கு சென்றால், அல்லாஹ் ஒருவன், முஹம்மது இறைவனின் தூதர் என்று தனது வாழ்வில் சொல்லி கொண்ட ஒரு காரணத்திற்க்காக தனது குடும்பம், குழந்தைகளை பறிகொடுத்து தூங்க சென்றால் நாளை விடியுமா? இல்லை மரணமா என்று சொல்லும் அளவிற்கு பாலஸ்தீனில் முஸ்லிம்களின் நிலை. அது மட்டும் அல்ல முதல் கிப்லா என்று சொல்லப்படும் சுலைமான் நபி அவர்களால் கட்டப்பட்ட மஜிதுல் அக்சா உண்மையான கட்டிடம் எது என்று தெரியாத முஸ்லிம்கள் ஏராளம். இது மிக வேதனை. சரி உண்மை கட்டிடம் எது என்று இணையதளம் சென்று தேடல் உதவியால் தேடினால் AL -SAKHRAH என்று சொல்லப்படும் பள்ளிவாசலைதான் கட்டுகிறது. இதுவும் யூதர்கள் சதிதான். பெருபாலான முஸ்லிம்கள் மஜிதுல் அக்சா எது என்றே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். காரணம் முஸ்லிம் சமுதாயம் மூட நம்பிக்கை, டிவி,சினிமா, இப்படியாக தனது வாழ்க்கையே கொண்டு சொல்வதுதான். இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை மிக மோசமான நிலை கல்வி அறிவு இல்லாத ஒரு சூழல் சிறுபான்மை சமுகத்திற்காக அமைக்கப்பட்ட சச்சார் குழு முஸ்லிம் சமுதாயத்தில் பள்ளிக்கூடத்திற்கு சென்றிராத முஸ்லிம் பிள்ளைகள் அதிகம். பட்டியல் சாதியினருடன் ஒப்பிடும்போது கூடச் சற்றுதான் குறைவாக உள்ளது. படிப்பைப் பாதியில் நிருத்திவோரின் வீதமும் முஸ்லிம்களின் மத்தியில்தான் அதிகம். இடை நிலைக்கல்வியை தாண்டி மேலே செல்லச் செல்ல இது அதிகருக்கிறது. 6 -14 வயதுகளிலுள்ள மொத்த முஸ்லிம் பிள்ளைகள் 25 சதம் பேர் பள்ளிக்குச் சென்றதில்லை அல்லது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றார்கள். இவ்வாறாக முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் கல்விக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியே பற்றி கூறும் பொது 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல் புகாரி 80) இவ்வாறாக இந்தியாவில் கல்விக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியாவில் ஊடகம் செயல்படுக்கிறது .வலிமை மிகுந்த இந்த துறை இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும்,இஸ்லாத்திற்கு எதிராகவும் பயன்படுத்தபடுகிறது.தொலைக்காட்சி,சினிமா,இணையதளம்,இன்னும் பல முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது. முஸ்லிம்கள் தனது உயிருக்கும் மேலாக மதிக்கப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையை சித்திரை வரைந்தும், நாட்டில் எங்கு குண்டுகள் வெடித்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றும் கட்டுவது வழக்கமாக கொண்டுள்ளது இந்த ஊடகம். முஸ்லிம்களுக்கு ஒரு ஊடகம் இல்லாத நிலையே இதற்க்கு காரணம்.அது மட்டுமா மறைக்கப்படும் வரலாறுகள்.அறிவியல் வளர்ச்சிக்கு பங்காற்றிய முஸ்லிம்கள்,அறிவியல் என்றதும் கலிலியோ,கிரகாம் பில் இவர்கள்தான் நினைவுக்கு வரும் ஆனால் இவர்கள் கண்டு பிடிப்பதற்கு முன் பல துறைகளில் முஸ்லிம்கள் சாதனை படித்து இருக்கிறார்கள் காலித் இப்னு யாசித் (இரசவாதம்) திபத் இப்னு ஹூதா (வானியல்), அஹமது அபூலி (மருத்துவம்). இவ்வாறாக இன்னும் பல விஞ்கானிகள் முஸ்லிம்களில் உண்டு. ஆனால் உலக அரங்கில் இவை மறைக்கப்படுகிறது. இதை போல 800 ஆண்டு இந்தியாவை ஆண்ட முஸ்லிம் சமுதாயம் இரு பரிதாவ நிலையில் இருக்கிறார்கள். அலாவுதீன் கல்ஜியின் தளபதி மாலிக்காபூர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த பொது பாண்டிய நாட்டில் வீரபாண்டியனின் குதிரைப்படை தளபதியாக இருந்தவர் ஒரு முஸ்லிம்.அந்த படையுள் 5 ஆயிரம் போர் வீரர்கள் இருந்தார்கள். மாலிக்காபூர் "நீயும் முஸ்லிம் நானும் முஸ்லிம், நாம் எதற்கு சண்டை போட்டு கொள்ள வேண்டும் நீ இந்த போரில் இருந்து விலகி கொள் என்று கூறியதும் வீரபாண்டியனின் குதிரைப்படை தளபதியாக இருந்த அந்த முஸ்லிம் நாங்கள் முஸ்லிம்களாயினும் பாண்டிய நாட்டு மக்கள் இந்த நாட்டின் வெற்றி எங்கள் வெற்றி. இந்த நாட்டின் தோல்வி எங்கள் தோல்வி .இஸ்லாம் எங்கள் நாட்டுக்கு துரோகம் செய்யக் கூடாது என்று கற்று கொடுத்து இருக்கிறது. நாளை போர்க்களத்தில் சிந்திப்போம் என்று அந்த முஸ்லிம் கூறினார். இந்த வரலாறு எத்தனை முஸ்லிம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் தெரியும்? காரணம் நமக்கென்று ஒரு ஊடகம் இல்லாத ஒன்றுதான். அடுத்து இன்றைய முஸ்லிம் பெண்கள் நிலை? பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா, கதிஜா ரளியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா; இவர்களை முன்மாதிரியாக நினைத்து வாழக்கூடிய பெண்கள், சினிமா, நாடகம்,, fm ரேடியோ, சன் மியூசிக் இவ்வாறாக தனது நரக வாழ்க்கைக்கு தயாராகும் நிலைமையில் வாழும் சுழல்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5196) அல்லாஹ்வுடைய பயம், நரகத்தின் பயம், மறுமையின் பயம், அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக நாம் நிறுத்தப்பட்டால்? நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பதியப்படுகிறது. இவ்வாறாக சிந்தனை இல்லாத முஸ்லிம் பெண்கள் இன்று வாழ்த்து வருகிறார்கள். பெண்களை சுற்றி நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத பெண்கள் அன்னிய மாற்று மத ஆண்களுடன் காதல் செய்து ஏமாற்றப்படும் நிலைமை. இதற்க்கு காரணம் பெண்களுக்கு இஸ்லாம் அதன் தூய வடிவில் செல்லவில்லை. குர்ஆனை அவர்கள் சிந்திக்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவைகள் வாழ்க்கையே படித்தது இல்லை. முன்மாதிரி பெண்களாக வாழ்ந்த நபி தோழிகளின் தியாகம் தெரியவில்லை. இதற்காக முழுக்க முழுக்க இஸ்லாம் சம்மந்தமாக ஒரு சேனல் முதலில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, முதல் ராஜபாளையம் வரை துவங்க திட்ட மிட்டுள்ளது ISLAM NEWSBOOK. இந்த சேனலில் இஸ்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்க்கை முறைநபி தோழர்கள், தோழிகள் செய்த தியாகம், குர்ஆனும், இஸ்லாமும், அறிவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு, பெண்களுக்கான மறுமை, நரகம் பற்றிய பயம், குழந்தைகளுக்கான ஆரம்ப இஸ்லாமிய பாடங்கள்.மாற்று மத சகோதரர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள்,தாவா பணி, இஸ்லாமிய மாநாடுகளின் நேரலை, முழுக்க முழுக்க இஸ்லாமிய அறிவை வளர்க்கும் சேனலாக கொண்டு வர இருக்கிறது. வரக்கூடிய ரமலான் முதல் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம். இது முழுக்க முழுக்க லாப நோக்கத்திற்கு இல்லாமல் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அனைவரும் தூய வடிவில் அறிந்திடவும், பெண்கள் இஸ்லாத்திற்கு உட்பட்டு வாழவும் இந்த சேனல் துவங்கவுள்ளது. ஆக இஸ்லாத்திற்கு என்று தமிழகத்தில் இல்லாத சேனல் ஒன்று இன்ஷா அல்லாஹ் துவங்க இருப்பதால் உங்கள் ''துஆ''க்களை செய்யவேண்டுகிறோம். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் பிள்ளை என்று அல்லாஹ்வுடைய வார்த்தைக்கு எதிராக உலகில் சொல்லும் கிறித்துவ உலகம் அனைத்து மொழிகளிலும் அவர்களுக்கு என்று சேனல் இருக்கிறது. இப்படிப்பட்ட இறை மறுப்பாளர் நரகம் செல்லும் இந்த கூட்டம் அவர்களின் தாவா உலகில் எவ்வாறு வேகமாக இருக்கிறது என்று பாருங்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் இறைவனால் சிறந்த சமுதாயம் என்று போற்ற பட்ட சமுதாயம் நாம் அப்படி என்றால் நம்முடைய தாவா எவ்வாறு விரியமிக்கதாக இருக்க வேண்டும் என்று அன்பான உறவுகளே சிந்திக்க வேண்டும். ஆக அன்பான சகோதரர்களே இந்த சேனல் ஆரப்பம் செய்வதற்கு போதிய பணம் இல்லாத ஒரு சுழலில் இருக்கிறது ISLAM NEWSBOOK . இந்த சேனல் ஆரம்பம் செய்ய 80,000 ரூபாய் செலவு இருக்கிறது. மாதம் ரூ 10,000 இணைப்புக்காகவும், கம்ப்யூட்டர் மற்றும் மென் பொருள்(சாஃப்ட்வேர்) சேனல் Box இவை அனைத்தும் வாங்குவதற்கு 80,000 ரூபாய் செலவு வருகிறது. உங்களால் கம்ப்யூட்டர் இந்த சேவைக்கு தருகிறேன்,மென் பொருள்(சாப்ட்வேர்)வாங்கிதருகிறேன்,இணைப்புக் கட்டணம் நான் பொறுப்பு ஏற்று கொள்கிறேன் என்ற ஒரு எண்ணம் இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் அந்த உதவியும் செய்யலாம். அல்லாஹ் கூறுகிறான்; 9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்). நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்குஉதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார். (நூல்: புகாரி 30) இன்ஷா அல்லாஹ் இந்த சேனல் நோன்பு 1 முதல் துவங்க இருப்பதால் தொடர்புக்கு +919171765552

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::