Friday, July 1, 2011

பாதுகாப்பு ஒத்திகையா??

த துவேசம்!!!!

ந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து,தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்த ஒத்திகை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 'ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் 48 மணி நேர சோதனையை போலீசார் நடத்தினார்கள். அந்த ஒத்திகையில் கூட மதத்துவேஷம் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. பொதுவாக தீவிரவாதிகளுக்கு மதம் என்பது இல்லை. கோயிலை தாக்க முற்படும் தீவிரவாதி இருக்கிறான் என்றால், மஸ்ஜிதையும்-சர்ச்சையும் தாக்கும் எண்ணமுள்ள தீவிரவாதியும் நாட்டில் இருக்கவே செய்வான். இப்படிப்பட்ட வழிபாட்டு தளங்களை தாக்கும் முயற்ச்சியை முறியடிப்பது காவல்துறை ஒத்திகையின் நோக்கம் என்றால், அந்த ஒத்திகை கோயிலில் மட்டுமன்றி, மசூதி- சர்ச் ஆகியவற்றிலும் நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் காவல்துறையோ இந்திய நாட்டில் கோயில்களுக்கு மட்டுமே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை காட்டும் வகையில் கோயிலில் மட்டும் ஒத்திகை நடத்தியுள்ளது.
 
திருச்செந்தூர் கோயிலில்  5இடத்தில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அவற்றை அகற்ற காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து  வெடிகுண்டு குழு ஆய்வாளர்  மற்றும் மோப்ப நாய் சகிதமாக அதிரடியாக கோயிலுக்குள் நுழைந்தனர் காவல்துறையினர். இதனால்   கோயிலுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடந்தனர். அவர்களைகோயிலிலிருந்து வெளியேற்றினர். ஒருமணி நேர தேடுதலுக்குப்பின் வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர்  கைப்பற்றினர்.பலமணி நேர தேடுதலுக்குப்பிறகு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்த இடம் தெரியவந்தது. ஆபரேஷன் ஹம்லா என்ற இந்த சோதனை வெறும் ஒத்திகை என தெரிந்ததால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்கிறது செய்தி.
 
ஏற்கனவே சங்கபரிவாரங்கள் கோயிலை தாக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி என்று ஓயாமல் ஒப்பாரி வைப்பதும்-  ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு, அந்த கோயிலை தகர்க்க சதி- இந்த கோயிலை தகர்க்க சதி என்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதன் மூலமும் முஸ்லிம்கள் கோயிலை தகர்க்கும் எண்ணமுடையவர்கள் என்ற சிந்தனையை  மக்கள் மனதில் பதிய வைத்துள்ள நிலையில், இந்த ஒத்திகை மூலம் காவல்துறையும் தன் பங்குக்கு முஸ்லிம்கள் மீதான துவேஷ சிந்தனைக்கு வித்திட்டுள்ளதாகவே  மக்களால் கருதப்படுகிறது. ஆனால்  உண்மையில் இதுவரை இந்தியாவில் எந்த கோயிலிலும் தீவிரவாதிகள் தாக்கியதாக சான்றுகள் இல்லை. ஆனால் மசூதிகளும்-தர்காக்களும்-சர்ச்சுகளும் இந்துத்தவா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட    வரலாறுதான் உண்டு. எனவே இனியாகிலும்  தமிழக காவல்துறை நடுநிலை பேணட்டும்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::