Wednesday, June 15, 2011

சிரிப்பு!!!!!!

சிரிப்பு!!!!
*சிரிக்கும் தன்மையை மனிதனுக்கு இறைவன் தான் ஏற்படுத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சிரிப்பது ஒரு மோசமான செயல் என்றால் அத்தன்மையை ஏற்படுத்தியவன் நான் தான் என்று இறைவன் தன்னை புகழ்ந்து கூறியிருக்க மாட்டான். *அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான். அல்குர்ஆன் (53:43) *அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள். அல்குர்ஆன் (80:32) *அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அல்குர்ஆன் (75:22) *நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளி¬ருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை. அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 4522 *நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் நபியவர்களுக்கு சிரிப்பூட்டிக் கொண்டே இருந்துள்ளார். சிரிப்பூட்டியதற்காக இவரை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி 6780 *ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர் ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : அபூதாவூத் (4346) பொய் சொல்¬ சிரிக்கவைக்கக் கூடாது *பிறரை சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாக சொல்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று. நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக்கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாக பரவியிருக்கிறது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (1913) *நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : திர்மிதி (2237). அஹ்மத் ஆபித்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::