Saturday, June 4, 2011

முஸ்லிம்களின் கவனத்திற்க்கு!!!!!!!!

ங்களின் கவனத்திற்க்கு!!!






o ஜாதி வாரி கணக்கெடுப்பு - முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு!

o வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை... போன்றவற்றை கீழே கண்டெடுத்தால்...
o ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு!
தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிசம்பர் மாதம் வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும். "முஸ்லிம்" என்பது பதிவது தவறு.
இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்.
o லெப்பை
o ஸெய்யது
o தக்கனி முஸ்லிம்
o அன்ஸார்
o ஷேக்
o மாப்பிள்ளை
o துத்திகோலா
முக்கிய குறிப்பு:
ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது "ஸாயிபு,
பட்டாணி, ஷரீப், பரிமா" என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம்
(நாட்டாண்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் தெரிந்து கொள்வோம்
கீழே கண்டெடுத்தால்
இந்தியாவில் வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்.... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
டெல்லி: வருடத்துக்கு ரூ. 5 லட்சக்குக்குக் கீழ் வருமானம் ஈட்டுவோர் இனிமேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் மாத வருமானம் வாங்கும் 85,000 பேர் பயனடைவார்கள்.

இந்தியாவில் மாத வருமானம் வாங்குவோர் கட்டும் வருமான வரி தான் மத்திய அரசுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. இதை சம்பளத்தைத் தரும்போதே பிடித்தம் செய்து விடுகிறார்கள் (tax deduction at source-TDS).
இந்த வரியையும் கட்டிவிட்டு, ஆண்டுதோறும் வருமான வரி அலுவகத்துக்குப் போய் மணிக்கணக்கில் வரிசையில் நின்று, 'நான் வரி கட்டிவிட்டேன்' என்று உறுதிப்படுத்த வருமான வரிக் கணக்கையும் (tax returns) தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், மாத ஊதியம் அல்லாமல், கணக்கிலும் காட்டாமல் லட்சக்கணக்காக வருமானம் ஈட்டுவோரை கேட்க ஆளில்லை. இவர்களாகப் போய் வருமான வரியைக் கட்டினால் தான் உண்டு.
இந் நிலையில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று ம்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுதிர் சந்திரா கூறியுள்ளார்.
2011-12ம் நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரும். அதாவது 2010-11ம் நிதியாண்டில் ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக வருமானம் ஈட்டுவோர் 2011-12 நிதியாண்டில் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
ஏற்கனவே கூடுதலாக வரி கட்டிவிட்டவர்கள், அதை ரீபண்ட் பெற வேண்டுமானால் மட்டும் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் ஆண்டு ஊதியம் ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும், மற்ற வகையில் கூடுதல் வருமானம் ஏதாவது ஈட்டினால், அந்த விவரத்தை பணி செய்யும் இடத்தில் தெரிவித்து, வருமான வரி விலக்கை பெறலாம். அப்போது பணியாளர்களுக்கு தரப்படும் பார்ம்-16 ஆவணமே வருமான வரிக் கணக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::