25, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது!
25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி
அறிவித்துள்ளது. வரும் 29-ந்தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத்தப்பட
உள்ளது. வரும் புதன்கிழமை முதல் 25 பைசா, 50 பைசா நாணயங்களை யாரும்
பயன்படுத்தவும் இயலாது.
யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை
வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ்
வங்கி அறிவித்துள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் 25
பைசா, 50 பைசா நாணயங்களை கொடுத்து பணம் பெறலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment