Saturday, May 14, 2011

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்-திங்கள்கிழமை ஜெ. பதவியேற்பு?

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்-திங்கள்கிழமை ஜெ. பதவியேற்பு?


சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறாது என்று தெரிகிறது. மாறாக நாளை இக் கூட்டம் நடக்கும் என்றும், அதைத் தொடர்ந்து 16ம் தேதி, திங்கள்கிழமை, முதல்வராக ஜெயலலிதா
Jayalalitha
பதவியேற்பார் என்றும் தெரிகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 118 இடங்களைவிட மிக அதிகமான தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக சென்னை வருமாறு அதிமுக தலைமைக் கழகம் நேற்று பிற்பகலில் உத்தரவிட்டது.

அதன்படி மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு சென்னைக்குக் கிளம்பினர். பலர் நள்ளிரவுக்கு மேல் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

இதையடுத்து இன்று பிற்பகலில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவே என்று தெரிகிறது.

இக் கூட்டம் நாளை தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அக் கூட்டத்தில் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக (முதல்வராக) எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடு்ப்பர். அதைத் தொடர்ந்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்

இதையடுத்து திங்கள்கிழமை அவர் முதல்வராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது.

பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா:

ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

ஜெயலலிதா பதவியேற்புடன் அமைச்சர்கள் குழுவும் பதவியேற்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே நாளை ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாகப் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.


எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை:

இந் நிலையில் இன்று மாலை தலைவர்கள் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

முதலில் ஸ்பென்சர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அவர் பின்னர் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::