இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் முஸ்லிம்கள்
முஸ்லிம்
மாணவர்களிடையே குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில்
நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். முஸ்லிம்களுக்கும், இதர
சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை
(கல்வி உதவித்தொகை) அறிவித்த போதும் குஜராத் அரசு அதனை நடைமுறைப்படுத்த
மறுத்துவிட்டது.இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் சிறுபான்மை சமூக மாணவர்கள்
இந்த உதவித்தொகையை இழந்து வருகின்றனர்.
புதுடெல்லி:’வைப்ரண்ட்
குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க ஹிந்துக்கள்
மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில்
பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அவுட்லுக்கின் ஏப்ரல் இதழில் -’குஜராத் ஒன் ஸைட் ஆஃப் டிவைட்’ என்ற
பெயரில் பிரக்யா சிங் எழுதிய கட்டுரையில் குஜராத்தில் முஸ்லிம் எல்லா
துறைகளிலும் பாரபட்சத்தை அனுபவிக்கும் சூழ்நிலைகள் புள்ளிவிபரங்களுடன்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை ஹிந்துக்களை விட 800
மடங்கு அதிகமாகும். ஒ.பி.சி பிரிவினரை விட இது 50 சதவீதம் அதிகமாகும்.
அறுபது சதவீத ஹிந்துக்களும் முஸ்லிம்களுடன் நகரங்களில்தான் வசிக்கின்றனர்.
கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை ஹிந்துக்களை விட
200 மடங்கு அதிகமாகும்.
குறைந்த வருமானங்களை தரும் சுயத் தொழில்களை குஜராத்தில் வாழும்
முஸ்லிம்கள் செய்துவருகின்றனர்.இவர்களுக்காக உயர் கல்வியிலோ தொழில்
துறையிலோ இடஒதுக்கீடு இல்லை.
குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும்.
வங்கிக் கணக்கில் 89 சதவீத பங்கும் ஹிந்துக்களுடையதாகும்.மொத்தமாக
விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் ஹிந்துக்களுக்கே
கிடைத்துள்ளது.
மிக அதிகமான வழிப்பறைக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும்
பாதிக்கப்படுவதும் முஸ்லிம்களே.பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள்
படிக்க அனுமதி கிடைப்பது கடினமாகும்.முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில்
போக்குவரத்து நன்றாக இல்லை. பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் இல்லை.
வளர்ச்சியின்
ஒரு பகுதியாக துவங்கப்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில்
பெரும்பாலோர் ஹிந்துக்களாவர்.வீடுகளில் வைத்து மேற்கொள்ளும் பீடி
சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், எம்ப்ராய்டரி, பட்டம்
தயாரித்தல்,அகர்பத்தி தயாரித்தல் ஆகியவற்றைத்தான் முஸ்லிம்கள் மேற்கொண்டு
வருகின்றனர். குஜராத் முஸ்லிம்களின் இன்னொரு வேலை ரிக்ஷா இழுப்பதாகும்.
நன்றி: பாலைவனத்தூது
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment