Sunday, April 3, 2011

த.த.ஜ-சீட்டு கேட்ட கதை

ம்மாவிடம் சீட்டுக் கேட்ட கதை தெரியுமா?
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமியற்றினால் தான் திமுகவை ஆதரிப்போம் எனக்கூறி வந்த தனிநபர் ஜமாஅத், அதிலிருந்து அந்தர்பல்டியடித்து தேர்தல் அறிக்கையில்  கருணாநிதி பரிசீலிப்போம் என்று கூறிவிட்டார். எனவே திமுகவுக்கு அதரவு  என்று எடுத்த நிலைப்பாடு குறித்து உணர்வு வார இதழில் எழுதும்போது,

''ததஜவை  பொறுத்தவரையில் தனக்கோ தனக்கு வேண்டியவர்களுக்கோ தேர்தலில்  சீட்டுகள் வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை  எக்காலத்திலும் வைத்தது இல்லை என்று எழுதியுள்ளார்கள். இது அப்பட்டமான பொய்யாகும்.


ஆனால் கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்த தனிநபர்  ஜமாஅத், அப்போது தங்களை ஜெயலலிதாவோடு 'நெருக்கி' வைத்த ஜெகவீரபாண்டியன் என்பவருக்கு அதிமுக சீட்டு தரவேண்டும் என்று கடிதம் எழுதி, அக்கடிதத்தை  அப்போதைய பொதுச்செயலாளர்  மூலம் ஒ. பன்னீர் செல்வத்தின்  வாயிலாக ஜெயலலிதாவிற்கு அனுப்பப்பட்டதா இல்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அப்படி ஒரு கடிதம் எழுதவில்லை என்று தனிநபர் ஜமாஅத் கூறத் தயாரா?
 
இல்லை வழக்கம் போல,ஜெயலலிதாவிடம் கடந்த தேர்தலில் பணம் வாங்கியது பற்றிய விவகாரம் கிளம்பியபோது, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது பாக்கரும்-முணீரும்- அலாவுதீனும் தான். எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று அண்ணாச்சி ஜகா வாங்கியது போல், இந்த கடித விவகாரமும் பாக்கர் செஞ்ச வேலைம்மா; எனக்கு தெரியாது என்று ஜகா வாங்கப்போகிறாரா? அப்படி ஜகா வாங்கினால் ஜமாஅத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத தலைவராகவா இருந்தார் என்ற கேள்வியல்லவா எழும். அதுசரி! அப்படியெல்லாம் அண்ணன்கிட்ட கேள்வி கேட்க ஆளுண்டா?

-முகவை அப்பாஸ்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::