கடந்த சனிக்கிழமை
கடந்த சனிக்கிழமை (22.01.2011) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் உத்தரவுக்கிணங்க அல் கலீல் நகரின் அனேகமான நுழைவாயில்களும் பாதைகளும் மூடப்பட்டதோடு, அப்பிரதேசத்தில் உள்ள கடைகளை அடைக்குமாறு பலஸ்தீனர்களான கடை உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் சிலர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடுமையாக அடித்து இம்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் பக்கபலத்தோடு யூத ஆக்கிரமிப்பாளர்கள் நடைபாதைகளில் நடமாடிய பலஸ்தீனர்கள் மீது கற்களையும் வெற்றுப் போத்தல்களையும் எறிந்துத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியெங்கும் அல்லோலகல்லோலப்பட்டதோடு, வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்தன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் இதே பிரதேசத்தில் அமைந்துள்ள இப்றாஹீம் பள்ளிவாயிலில் பகல் நேரத் தொழுகைக்காகச் சென்றிருந்த பலஸ்தீனர்களைப் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுத்து, அனைத்து நுழைவாயில்களையும் அடைத்துள்ளனர். 'சனிக்கிழமைகளில் முஸ்லிம்களைத் தொழுகைக்காக அங்கு அனுமதிப்பதற்கில்லை' என்று அதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் இத் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை வன்மையாக ஆட்சேபித்த பலஸ்தீனர்கள், 'இப்றாஹீம் பள்ளிவாயில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமே தவிர யூத மத வழிபாட்டுத்தலம் அல்ல. எனவே, அவர்கள் இப்படியான அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை (22.01.2011) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் உத்தரவுக்கிணங்க அல் கலீல் நகரின் அனேகமான நுழைவாயில்களும் பாதைகளும் மூடப்பட்டதோடு, அப்பிரதேசத்தில் உள்ள கடைகளை அடைக்குமாறு பலஸ்தீனர்களான கடை உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் சிலர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடுமையாக அடித்து இம்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் பக்கபலத்தோடு யூத ஆக்கிரமிப்பாளர்கள், நடைபாதைகளில் நடமாடிய பலஸ்தீனர்கள் மீது கற்களையும் வெற்றுப் போத்தல்களையும் எறிந்து, தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியெங்கும் அல்லோலகல்லோலப்பட்டதோடு, வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்தன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் இதே பிரதேசத்தில் அமைந்துள்ள இப்றாஹீம் பள்ளிவாயிலில் பகல் நேரத் தொழுகைக்காகச் சென்றிருந்த பலஸ்தீனர்களைப் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுத்து, அனைத்து நுழைவாயில்களையும் அடைத்துள்ளனர். 'சனிக்கிழமைகளில் முஸ்லிம்களைத் தொழுகைக்காக அங்கு அனுமதிப்பதற்கில்லை' என்று அதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் இத் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை வன்மையாக ஆட்சேபித்த பலஸ்தீனர்கள், 'இப்றாஹீம் பள்ளிவாயில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமே தவிர, யூத மத வழிபாட்டுத்தலம் அல்ல. எனவே, அவர்கள் இப்படியான அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி;இந்நேரம்.காம்
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment