Thursday, January 13, 2011

ன்றிணையும் சூரியனும் சந்திரனும்


சந்திரன் மற்றும் பூமியின் ஆயுள் காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒரு கால கட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றினைந்து விடும் என்று கூறுகிறார்கள். இது பற்றிக் குர்ஆன் ஏதாவது கூறுகிறதா என்று பார்ப்போம்: -

 இக்கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய விண்வெளி ஆய்வாளர்கள் கூறுவதைச் சற்று பார்ப்போம்.

சூரியனின் தன்மைகள்:- ஹைட்ரஜன் பெருமளவும் ஹீலியம் ஓரளவும் அடங்கிய ஒரு மிகப்பொய நெருப்புப் பந்து தான் சூரியன். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள், மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் மொத்த எடையில் 98 சதவிகிதம் சூரியனின் எடையாகும். பூமியி
ன் எடையை விட, சூரியனின் எடை 3, 30,000 மடங்கு அதிகமாகும். பூமியின் அளவை (Size) விட 109 மடங்கு பெரிதாகும்.

சூரியனின் வெளிப்புறத்தில் எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் சுவாலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையிலும் பரவிச் செல்கின்றது. இவ்வாறு எரிந்துக்

கொண்டிருப்பதற்கு காரணம், சூரியனின் உட்புறத்தில் (Core) நிகழ்ந்துக் கொண்டிருக்கும் நியூக்ளியர் ரியாக்ஸன் (Neuclear Reaction) என்ற செயலின் முலம் ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. இதன் காரணமாக ஏராளமான வெப்பம் உருவாகிறது.

சூரியனின் உட்புறம் ஓர் அணு உலையைப் போல் இருக்கிறது. இதனின் வெப்பம் 15 மில்லியன் (1-1/2 கோடி) டிகி சென்டிகிரேட் ஆகும். ஒரு வினாடிக்கு 50,00,000 (5 மி
ல்லியன்) டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் நியூக்ளியர் ரியாக்ஸன் என்ற செயலின் முலம் எரிந்து ஹீலியம் அணுக்களாக மாறுவதாகவும், கணக்கிட்டுள்ளனர். ஹைட்ரஜன் என்ற சூரியனின் எரிபொருள் இன்னும் 5 பில்லியன் (5 Billion) ஆண்டுகளுக்கு தேவையான அளவு அதில் இருப்பதாகக் கணித்துக் கூறுகின்றனர்.

இவ்வாறு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறும் போது எராளமான மின் காந்த வெப்பக் கதிர்களை (Electromagnetic Radiation) உருவாக்குகிறது. இந்த வெப்பக் கதிர்கள் சூரியனின் வெளிப்புறத்தை நோக்கிச் செல்கிறது. அதனால் சூரியனின் வெளிப்புறம் பல ஆயிரகக்கணக்காண கிலோ மீட்டா நீளமுடையய தீச் சுவாலைகளுடன் எரிந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியனின் மத்தியில் உற்பத்தியான இந்த வெப்பக் கதிர்களே, சூரியன் மிக மிக பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும் சூரியக் குடும்பத்தில், சூரியனின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அதனதன் பாதைகளில் சுற்றிவரும் கோள்களையும், சந்திரன்களையும், ஆஸ்ராயிட்ஸ் (Astroids) எனப்படும் விண்கற்களையும் வெப்பமைடயச் செய்வதற்கு இந்த வெப்பக் கதிர்களே காரணமாக இருக்கின்றன. இந்தக் கதிகளின் முலமே சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பிரகாசமாக இருக்கின்றன.

சந்திரனின் தன்மைகள்:- சூரியனிலிருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கும் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பூமியின் துணைக்கோளாகும். பூமியின் எடையில் 1.2 சதவிகிதம் எடையே இருக்கும் சந்திரன் பூமியை விட மிகச்சிறியதாகும். இதன் பகல் நேர வெப்பநிலை 107 டிகி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் பாலைவனப் பகுதியின் சராசரி பகல் நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு அதிகமாகும். சந்திரனின் இரவு நேர வெப்பநிலை 153 டிகி சென்டிகிரேட் ஆகும். அதா
வது பூமியின் துருவப் பகுதியின் இரவு நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு குறைவாகும்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவைகளின் முடிவு:- இந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் முடிவு உண்டா என்று இவற்றின் தோற்றம் 

குறித்து ஆராய்ந்து அறிந்த நவீன விண்வெளி ஆய்வாளர்களைக் கேட்போமேயானால் அவாகள் ஆம் அவற்றுக்கும் அழிவு உண்டு என்றே கூறுகிறாகள். நமது சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி நட்சத்திரமண்டலத்தை (Milkyway galaxy) ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் அவற்றில் ஆயிரக்கணக்கான இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதகை கண்டனர். இது போல மற்ற விண்ணடுக்குகளிலும் (Galaxies) ஆயிரக்கணக்கில் இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதைக் கண்டனர். இந்த டெட் ஸ்டார்களை அவைகள் எப்படி இறந்திருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒவ்வொரு நட்சத்திரமும் எப்படி இறக்கின்றன என்ற கோட்பாட்டை (Theory) வரையறுத்தனர். ராயல் கிரின்விச் அப்ஸர்வேட்டர் என்ற விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசியர் சர். மார்டின் ரீஸ் என்பவர் கூறுகிறார்:- பொதுவாக நட்சத்திரங்கள் இறக்கும் போது அவைகளில் பெரும்பாலானவைகள் வெடித்துச் சிதறி அதன் மூலம் மிகப்பொய வாயுக்களடங்கிய நெபுலாக்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த நெபுலாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இப்பேரண்டத்தில் நிலைத்திருக்கும். இந்த நெபுலாக்களிலிலிருந்தே புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றது. அளவில் மிகப்பெரிய நட்சத்திரங்களே (Big Stars) இவ்வாறு வெடித்துச் சதறி சுப்பர் நோவா என்பதைத் தோற்றுவிக்கிறது. ஆனால் சூரியன் அளவில்
மிகச் சிறியது. இதன் இறப்பு என்பது ஈப்பாற்றலினால் ஏற்படக்கூடியது என்று கூறினார்.

அவர்களுடைய இக்கோட்பாட்டின்படி, 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இந்த சூரியன் தற்போது தான் நடுத்தர வயதை அடைந்துள்ளது. தற்போது சூரியன், 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட மிகத் தீவிரமாக (more violent than before) இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், எதிகாலத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கின்றனா. இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் அதி தீவிர வெப்பக்கதிகளினால் இந்த பூமியில் உள்ள கடல் நீர் அனை

த்தும் ஆவியாகி விடும் என்கின்றனர். சூரியனின் மத்தியிலுள்ள அதன் எபொருளான ஹை
ட்ரஜன் வாயுக்கள் தீர்ந்ததும், சூரியனின் முடிவு ஆரம்பமாகின்றது. அப்போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துக் கொண்டே செல்லும். இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு, சூரியனைச் சுற்றி வருகின்ற கோள்களும், சந்திரன்களும், எண்ணற்ற விண்கற்களும் சூரியனுடன் இணைந்து விடும். அதன் பின் ஒரு கட்டத்தில் சூரியன் வெடித்துச் சிதறி பற்பல துண்டுகளாகிவிடும். எஞ்சிய அடாத்தியான பகுதி ஒளியிழந்து வெண்மை நிறமாகக் காட்சியளிக்கும். இதனை ஒயிட் ட்வார்ப் (white dwarf) என்கின்றனர்.

இந்த விஞ்ஞானிகள் கூறக்கூடிய காலக்கணக்குகள் எல்லாம் அவர்களின் கணிப்புகளே. இவைகளின் மீது நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் இன்று ஒரு கோட்பாட்டைக் கூறும் அறிவியலாளாகள் நாளை இன்று கூறியதற்கு
நேர்மாற்றமான மற்றொரு கருத்தைக் கூறுவர். இதனால் நாம் அவர்களைக் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் அவர்கள் அறிந்ததைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். சூரியனின் முடிவு எப்போது ஏற்படும் என்பதில் நமது சிந்தனையைச் செலுத்தாமல் (ஏனென்றால் உலக முடிவு நாள் எப்போது ஏற்படும் என்பது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான் {அல் குர்ஆன் 31:34}) அவாகள் கூறும் மற்ற கருத்துக்களை நாம் சிந்திப்போமேயானால் நமக்கு ஆச்சரியமளிக்கக் கூடிய வகையில் இறைவனின் வசனங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதை கூறியிருக்கிறது என்பதை அறிகிறோம். இனி இறைவனின் திருவசனம் இவைபற்றி என்ன கூறுகின்றது என்பதைப் பாப்போம்.

'கியாம நாள் எப்போழுது வரும்?' என்

று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி- சந்திரனும் ஒளியும் மங்கி- சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் '(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?' என்று மனிதன் கேட்பான். 'இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!' (என்று கூறப்படும்)' (அல் குர்ஆன் 75:6-11)

1400 ஆண்டுகளுக்கு முன்னால் குர்ஆன் கூறிய கருத்தான சூரியனும், சந்திரனும் ஒன்றிணைந்துவிடும் என்ற உண்மையை நோக்கி இன்றைய விஞ்ஞானம் செல்வதை நாம் உணர்கிறோம்..

முழுமையான ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது.

நன்றி=                                                                     -இணையத்தளம்
  A gச்uide to understand the real islam

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::