பேராசிரியர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்)சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டது நாம் அறிந்ததே.
அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்ட செய்தி இந்துதுவாவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது அவர்களது நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகிறது.அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டுதல் ,தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுதல்; போன்றவை இருந்ததாக போராசிரியர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்)நம்மிடம் தெரிவித்திருந்தார்.அவரின் சென்னை பயண விபரங்களை சகோதரர் சிக்கந்தரிடம் நேற்று (16-03-10) மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி பெற்றிருந்தார்.
இன்று(17-03-10)காலை சுமார் 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பேராசிரியர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்)வை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பாக்கர்,பொது செயலாளர் முஹம்மது சித்தீக்,து.பொது செயலாளர் செய்யது இக்பால், மாநில செயலாளர்கள் முஹம்மது ஷிப்லி,இனாயத்துல்லாஹ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.அவரின் குடும்பத்தின் சர்பாக மகன் சுரதாவும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
சுரதா(மகன்)கருத்து தெரிவிக்கையில்: எனது தந்தை இஸ்லாத்தை ஏற்று கொண்டதை நாங்கள் முழு மனதாக வரவேற்கிறோம். எங்கள் குடும்பத்தில் எந்த வித எதிர்ப்பும் இல்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
பேராசிரியர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) கருத்து தெரிவிக்கையில்: நீண்ட நாளைய ஆய்வின் முடிவே நான் இஸ்லாத்தை ஏற்றது. எதிர்ப்பவர்கள் எதிர்கட்டும் அதைபற்றி கவலை இல்லை நான் சென்னை வருவதற்க்கு முன்பு காவல்துறையிடம் இதைபற்றி தகவல் தெரிவித்திருக்கிறேன் என்றார்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment