24.03.1999ல் பீ.ஜை. கோவையில் போலீஸ் அதிகாரி முன்னால் கொடுத்த வாக்குமூலம் நகல்
26.02.2004 ல் பீ.ஜை. கோவையில் நீதிபதி முன் கொடுத்த வாக்குமூலம் நகல்
xண
மாண்புமிகு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1, திருச்சி.
C.C.No. 138/03.
K.M.H.ஷாகுல் ஹமீது, மனுதாரர் / எதிரி
த/பெ. K.M.A.ஹத்தாத்.
எதிராக
P.ஜெய்னுலாபுதீன்,
த/பெ. பீர்முகமது, எதிர் மனுதாரர்கள் / புகார்தாரர்
எதிரியின் தரப்பில் கு.வி.மு.ச. பிரிவு 314ன் கீழ் தாக்கல் செய்யும் எழுத்து மூலமான வாதுரை.
I. புகார்தாரர் வழக்கு :
புகார்தாரர் மக்கள் மத்தியில் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதற்காக ஒரு பத்திரிகை நடத்தினாரென்றும், அதற்கு முன்பு பிரசுரங்கள் மூலம் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தாரென்றும், இதைப் பார்த்த எதிரி புகார்தாரரை தொடர்பு கொண்டு புகார்தாரர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாரென்றும், பின்பு எதிரி அந்த பத்திரிகையின் ஆசிரியரானாரென்றும்,மேற்கூறிய பத்திரிக்கைக்கு துபாயிலிருந்து இரண்டு அமைப்புகள் உறுதி அளித்ததின் அடிப்படையில் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டதென்றும், அந்த பத்திரிகை மூலம் புகார்தாரர் பரபரப்பை ஏற்படுத்தினா ரென்றும், அதனால் எதிரி பொறாமைக் கொண்டு புரோகிதம் இனி அழிக்கப்பட்டுவிடும். அதனால் எதிரிக்கு புகார்தாரர் மீது வெறுப்பு ஏற்பட்டதென்றும், எதிரி புரோகிதத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு புரோகித சபை ஆரம்பிக்கப்பட்டதென்றும், அதற்கு புகார்தாரர் நடத்திய பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டுமென்று கேட்டபொழுது அதற்கு புகார்தாரர் பத்திரிகை நோக்கத்திற்கு விரோதமானதென்று நிராகரித்து விட்டதாக அதை மனதில் வைத்துக் கொண்டு எதிரி பத்திரிகையிலிருந்து விலகிவிட்டாரென்றும், எதிரி, அவர் பத்திரிகையில் இருக்கும் பொழுதே புகார்தாரர் மீது அவதூறுகளை கூறி வந்தாரென்றும், உதாரணமாக, பத்திரிகைக்கு வந்த பணத்தை புகார்தாரர் கையாடியதாக பொய்யாக சொல்லி வந்தாரென்றும், துபாயிலிருக்கும் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் செயலாளராக இருக்கும் குத்புதீன் என்பவருக்கும் இந்த அவதூறு செய்திகளை கடிதமாக எழுதினாரென்றும், உள்ளுரிலும் அவதூறுகளை பரப்பினாரென்றும், புகார்தாரருக்கு வந்த கடிதத்தை புகார்தாருக்குத் தெரியாமல் படித்தாரென்றும், சில கடிதங்களை எதிரி எடுத்துச் சென்றாரென்றும், தணிக்கைக் கமிட்டியில் ஒருவராக இருந்து, கணக்கு வழக்கு பார்த்த பொழுது ஒரு பைசா கூட தவறாக எடுக்கப்பட்டதாக நிரூபிக்கப்படவில்லையென்றும், அதற்கு தன்னிடம் கணக்கு உள்ளது என்றும், எதிரி அதன் பிறகும் அவதூறு பரப்பி வந்தாரென்றும், மேலும், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டதில் 62 பக்கங்களுக்கு ஒரு வாக்குமூலம் கொடுத்தார் என்றும், அந்த வாக்குமூலத்தில் பத்திரிக்கைக்காக வாங்கப்பட்ட சொத்தை புகார்தாரர் தன் பெயருக்கு எழுதிக் கொண்டாரென்று அப்பட்டமாக ஒரு பொய்யை சொல்லியுள்ளாரென்றும், அதனால் இஸ்லாமிய மக்களிடமிருந்து நேரிலும், தொலைபேசி மூலமும் இஸ்லாமிய சொத்தை அபகரித்துக் கொண்டீர்களா என்று கேட்பதாகவும், மேற்கூறிய பத்திரிகை நடத்தி வருவதால் புகார்தாரர் ஒரு பிரபலமானவர் என்றும்,எதிரி தொடர்ந்து அவதூறுகளை பேசி வருவதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு புகார்தாரர் செய்யும் நல்ல காரியங்களுக்கு முட்டுக்கட்டை ஏற்படுவதாலும், இந்த வகையில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக எதிரி மீது புகார்தாரர் தன் வழக்கில் கூறியுள்ளார். எனவே, எதிரி மீது இ.த.ச. பிரிவு 500ன் கீழுள்ள குற்றச்சாட்டை சொல்லியுள்ளார். புகார்தாரர், தன் வழக்கை நிரூபிப்பதற்காக 5 சாட்சிகளை விசாரித்துள்ளார்.
அ.சா. 1. : சாகுல் ஹமீது புகார்தாரர்.
அ.சா. 2. : அகமது இப்ராஹிம்.
அ.சா. 3. : குத்புதீன்,
அ.சா. 4. : திப்பு சுல்தான்
அ.சா. 5. : பன்னீர்செல்வம்
II. அ.சா. 1 சாகுல் ஹமீது புகார்தாரர் சாட்சியம்:
அ.சா. 1. தனது சாட்சியத்தில் அந்நஜாத் பத்திரிக்கையை தான் நடத்துவதாக சொல்லிவிட்டு பின்பு, அந்த பத்திரிகைக்கு தான் துபாய் அமைப்புகளால் நியமிக்கப்பட்டவர் என்று சாட்சியம் அளித்துள்ளார். அந்த பத்திரிகைக்கு நிதி உதவி துபாய் அமைப்புதான் கொடுத்து வருகிறது என்று சொல்லியுள்ளார். பத்திரிகை சம்பந்தமாக சொத்து வாங்குவது போன்றவைகளை அமைப்பை கேட்டுதான் செய்ய வேண்டும் என்று சாட்சியம் அளித்துள்ளார். இக்பால் மதானிக்கும், தனக்கும் சலபி சம்மந்தமாகத்தான் பிரச்சனை வந்தது என்று சொல்லியுள்ளார். எதிரி போலிஸில் வாக்குமூலம் கொடுத்தது நேரடியாகத் தெரியாது என்றும் சாட்சியம் அளித்துள்ளார். 20.07.1988ம் தேதி எஸ்.கே. எழுதிய கடிதத்திற்கு பதில் என்று அந்நஜாத் பத்திரிக்கையில் ஒரு ஆர்ட்டிக்கிள் வெளியிடப்பட்டது. நிலவகை செலுத்தியதற்கு ரூ.10.09.000/- ஒரு வருட காலத்திற்குள் செலுத்தவேண்டும் என்று அந்த அமைப்பு உத்திரவு போட்டார்கள் அதை நான் ஏற்றுக் கொண்டேன் என்று அந்த ஆர்ட்டிக்களில் சொல்லப்பட்டுள்ளது. நிலம் வாங்கவில்லை என்று சொல்வதும் உண்மை. நிலம் வாங்கியதாக ஒப்புக் கொண்டதும் உண்மை. தன் பெயரில் உரிமையாளர் என்று பதிவு செய்ய துபாயிலிருக்கும் அமைப்பு எழுத்து மூலமாக எந்த தகவலும் அனுப்பவில்லை என்று சாட்சி ஒத்துக் கொள்கிறார். துபாய் அமைப்பு பணம் கொடுத்து பத்திரிக்கை நடத்தச் சொன்னதை தன் பெயரில் பத்திரிக்கை நடத்தினேன் என்று சொன்னால் அது உண்மைதான் என்று சாட்சி ஒத்துக் கொள்கிறார். இவ்வாறு தானே எல்லா சங்கதிகளையும் அ.சா.1னே ஒத்துக் கொள்வதால் மேற்கூறிய சங்கதிகளை எதிரி பிறரிடம் சொன்னதாகச் சொல்வது அ.சா.1யை எப்படி அவதூறும், அவமானப்படுத்துவதாகும். மேலும் புகார்தாரர் எதிரிக்கெதிராக சொல்லும் எந்தவித குற்றச்சாட்டும் அடிப்படையில்லாதது. இது சம்மந்தமாக அ.சா.1னிடம் ஆவணங்கள் உள்ளது என்று ஒத்துக் கொள்கிறார். ஆவணங்கள் இருந்தும் அத்தகைய ஆவணங்களை அ.சா.1 நீதி மன்றத்தில் ஆஜர் செய்யவில்லை. இதிலிருந்து புகார்தாரர் தனது சாட்சியத்திலிருந்து எதிரிக்கெதிராக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.
அ.சா. 2 சாட்சியம்:
அ.சா. 2 தனது சாட்சியத்தில் தனக்கும், அ.சா.1க்கும் நேரடியாக பழக்கம் இல்லை என்றும், எதிரியிடமும் நேரடியாக பழக்கம் இல்லையென்றும் சாட்சியம் அளித்துள்ளார். இவருடைய சாட்சியம் அ.சா.1ன் சாட்சியத்தை ஒத்து சாட்சியம் அளிக்கவில்லை. மேலும் இந்த சாட்சி தனது சாட்சியத்தில் எதிரிக்கெதிராக எந்த ஒரு குற்றச்சாட்டையும் சொல்லவில்லை.
அ.சா.3 சாட்சியம்:
அ.சா.3, தனது சாட்சியத்தில், தான் துபையில் பணி புரிந்தவரென்றும், துபாயில் இஸ்லாமியர் இளைஞர் இயக்கத்தில் இருந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் அவர் துபாயில் பணி புரிந்ததைக் காட்டுவதற்கும், துபாயில் இஸ்லாமியர் இளைஞர் இயக்கத்தில் இருந்ததைக் காட்டுவதற்கும் எந்த ஒரு ஆவண ஆதாரமும் கனம் கோர்ட்டார் முன்பு தாக்கல் செய்யவில்லை. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம் பற்றி தனக்கு நேரடியாகத் தெரியாது என்று சாட்சியம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தை தன்னிடம் யார் காட்டினார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் சாட்சியம் அளித்துள்ளார். தனக்கு அந்நஜாத் பத்திரிகை படிக்கும் பழக்கமுண்டு என்று சாட்சியம் அளித்துள்ளார். 20.07.1987ம் ஆண்டு துபாய் ஜமாத்காரர்களுக்காக வாங்கிய நிலத்தை தன் பெயருக்கு சாகுல்ஹமீது வாங்கிக் கொண்டார் என்றும், அது தெரிந்த பிறகு அந்த நிலத்திற்குரிய தொகையை திருப்பி செலுத்திவிடுவதாக அந்த பதிப்பில் வெளிவந்த விபரம் தனக்கு தெரியாது என்று சாட்சியம் அளித்துள்ளார். இந்த சாட்சியத்திலிருந்து, இந்த சாட்சி. அ.சா.1க்கு ஆதரவாக எவ்வளவு தூரம் செயல்படுகிறாரென்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த சாட்சியின் சாட்சியமும் எதிரிக்கெதிரான குற்றச் சாட்டை பொறுத்து சரிவர சாட்சியம் அளித்துள்ளார். இந்த சாட்சியத்திலிருந்து, இந்த சாட்சி அ.சா.1க்கு ஆதரவாக எவ்வளவு தூரம் செயல்படுகிறாரென்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த சாட்சியின் சாட்சியமும் எதிரிக்கெதிரான குற்றச் சாட்டை பொறுத்து சரிவர சாட்சியம் அளிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அ.சா. 4 சாட்சியம் :
இவருடைய சாட்சியமும், சாட்சிகளின் சாட்சியத்தை ஒத்து சாட்சியம் அளிக்கவில்லை. மேலும் இந்த சாட்சியும் தனது சாட்சியத்தில் எதிக்கெதிராக எந்த ஒரு குற்றச்சாட்டையும் சொல்லவில்லை.
அ.சா. 5 சாட்சியம்:
எதிரி கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலத்தை தான் எழுதவில்லை என்றும் நிசாமுதீன் என்ற ஆய்வாளர்தான் எழுதினார் என்றும் அவர் எழுதியதில் தான் கையெழுத்து மட்டும் செய்தேன் என்றும் வாக்குமூலத்தை கொடுத்தவரும், வாக்குமூலத்தை எழுதிய ஆய்வாளரும் அந்த வாக்குமூலத்தில் கையெழுத்திடவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார். கோவை சிறப்பு நீதி மன்றத்தில் எதிரி பிறழ் சாட்சியாக மாறியுள்ளாரென்று இந்த சாட்சி ஒத்துக் கொள்கிறார். இந்த சாட்சியின் சாட்சியத்தின் மூலமும் எதிரிக்கெதிரான குற்றச் சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
எனவே மேற்சொன்ன சாட்சிகளின் சாட்சியங்களிலிருந்தும், இ.த.ச. பிரிவுகள் 499 மற்றும் 500ல் சொல்லியுள்ள உட்கிடை கூறுகள் பற்றி சாட்சிகள் தங்களது சாட்சியங்களில் சொல்லாததினாலும் மேற்சொன்ன எதிரிக்கெதிரான குற்றச்சாட்டுக்களை புகார்தாரர் எவ்வித சந்தேகமுமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டார். எனவே சந்தேகத்தின் பலனை எதிரிக்குச் சாதகமாக கொடுத்து எதிரியை மேற்சொன்ன குற்றச்சாட்டிலிருந்து விடுதலைச் செய்யுமாறு பிரார்தித்துக் கேட்டுக்க கொள்கிறேன்.
IN THE COURT OF HONOURABLE JUDICIAL MAGISTRATENo.1
TIRUCHIRAPALLI
C.C.No.: 138 / 2003
K.M.H. Shahul Hameed alias Aboo Abdullah COMPLAINANT
Versus
P. Zainulabudee ACCUSED
WRITTEN ARGUMENTS SUBMITTED ON BEHALF OF THE COMPLAINANT
UNDER SECTION 314 OF Cr. P.C.
1. The charge against the accused is that while giving a Statement before the Investigating Officer PW 5 in respect of Coimbatore Bomb Blast case, he had made defamatory statements against the complainant as follows.
“நஜாத் பத்திரிக்கை முதல் வருடத்திலேயே 5000 பிரதிகள் விற்பனையானது. பத்திரிக்கைக்காக வாங்கப்பட்ட சொத்தை பொருளாளர் தன் பெயரிலேயே பதிவு செய்து கொண்டதால் அந்த துரோகத்தை பொறுக்கமாட்டாமல் நான் நஜாத் பத்திரிக்கையிலிருந்து ஒரு வருடத்திலேயே வெளியேறிவிட்டேன்”
“பொருளாளராக திருச்சியை சார்ந்த சாகுல் ஹமீது என்கிற அபூ அப்தில்லாஹ்வையும் என்னை ஆசிரியராகவும் IAC காரர்கள் நியமித்தார்கள்”
This Statement under Section 161 Cr. P.C. as recorded by PW 5 and made by the accused was having no relationship whatsoever with the Coimbatore Bomb blast Case. This statement made in the said case was forming part of the charge sheet which has been circulated to all the other accused persons who had been more than167 in number and through them , this statement had been made public to various palces including Gulf countries where there are persons interested in Islamic affairs in India.
2. The complainant has been running a crusade against Prohits among Muslims. There shall be no mediator between God and the Man in the form of a Prohit or Poojari in Tamil. On the other hand, the accused has been advocating Prohits’ mediation in Islamic religion. Consequent to the publication of the above defamatory item in the Statement under Section 161 of Cr. P.C. in the said case, many persons began to enquire the complainant as to whether he had committed misappropriation as alleged by the accused. The complainant is not a ‘Moulavi’ (Prohit for Muslims) while the accused is a Moulavi. These publications of the defamatory statement created a bad name as against the complainant. The complainant was able to explain the truth that the allegations of appropriating the land which he has purchased. He has deposed in extenso about the charge against the accused. Besides, he had also examined witnesses on his side as P.Ws.2to 5
3. The defamation had been committed in words and published by the accused through the prosecution papers furnished to the 167 accused in Coimbatore Bomb Blast Case. The complainant had sent a notice dated 20.07.2002 to the accused Exhibit Pl and the accused also sent a reply notice.
4. It is not disputed by the accused that his statement to PW 5 did not include the above defamatory version. Besides, the other witnesses PWs 2 to 4 had clearly brought out the effect of such statement in the society, especially, Islamic circles, not only in India, but also abroad (U.A.E. & K.S.A.)
5. PWs 5 has stated clearly that the statement attributed to the accused was really made before him. It is quite clear in common sense point of view that the above quoted statement had been published widely and the same had caused greatest havoc to the complainant. The complainant could not explain to one and all the actual truth.
6. The truth remains that though the statement made by the accused was irrelevant with Coimbatore Bomb Blast case, yet, he made the same only with a view to please detractors against the complainant.
7. The complainant had established his case beyond any reasonable doubt.
Statement of PW. 1:
PW 1 had admitted in the cross examination as follows;
நிலம் வாங்கவில்லை என்று சொல்வதும் உண்மை
நிலம் வாங்கியதாக ஒப்புக்கொண்டதும் உண்மை.
If this is to be treated as an admission, the same has to be taken as a whole without dissecting the same.
This does not mean that the complainant had admitted that the land that was purchased for An Najaath magazine was registered in his name. If the complainant had really registered the land purchased for the magazine in his name, the same could have been taken out as document and produced before this Honourable Court by the accused. On the other hand, it is on the part of the accused to defend the case upon any of the ‘Ten Exceptions” under Section 499 of Indian Penal Code. Once it is established that the statement was defamatory and it was false and it was made by the accused, it is for the accused to establish that his case comes under the ‘Ten Exceptions”. But the accused had not done anythingt in that regard. In the entire cross examination and even in his Statement under Section 313 of Cr. P.C. go only to establish that he had not identified any exception for his accusations against the complainant.
8. The only defence of the accused was that he did not make the statement attributed to him under Section 161 of Cr.P.C. in Coimbatore Bomb Blast case and the PW 5 who has been the investigating Officer in that case, had clearly brought out that it was the accused who had made the statement before him. Therefore the statement is established beyond reasonable doubt.
9. The accused did not plead any exception under Section 499 of I.P.C. therefore the only issue is whether the publication had caused any defamatory effect or not. From the deposition of other witnesses PWs 2 to 4, it has been brought out clearly that the Statement had really defamatory effect and the good name and status of the complainant had been put to doubt in the minds of Islamic Public especially.
10. The Statement under Section 161 of Cr. P.C. as recorded could be used in this case as evidence for defamation. The bar under Sections 162 and 172 of Cr. P.C. will not apply to a direction to produce such statement or diary in civil proceedings or a proceeding under Articles 32 and 172 of the Constitution of India if the Statement is otherwide relevant under the provisions of the Evidence Act, vide: (1981) 2 SCC-493. Hence the bar is only applicable in a criminal case with reference to which the Statement was recorded under Section 162 of Cr. P.C.
11. The law laid down by the Honourable Supreme Court in this regard would establish that the bar as provided under Section 162 of Cr. P.C. would apply only to a criminal trial or proceeding which was at the stage of investigation as against the accused persons. It has also been laid by t he Honourable Supreme Court in (1981) 2 SCC-493. that such statements are relevant under Section 35 of the Evidence Act.
12. The petitioner issued a notice Exhibit P 3, The complainant had requested the accused only to withdraw the defamatory allegations supra against the complainant by a publication to that effect in the weekly belonging to the accused, namely, “Unarvu”, Curiously, the accused did not comply with this request. Therefore the complaint had to be filed.
13. The accused field a petition in Criminal O.P.No.: 8636/2003 to quash this complaint before the Honorable High court of Judicature at Madras. The Honorable High Court had in its order dated 25.02.2004 (reported in 2004 (II) CTC-677) held that the Statement in question is made under Section 161 of Cr. P.C. was not privileged statement, but it was only a statement with qualified privillage. In the above statement, as the accused had failed to establish his case was coming under any exceptions as stated afore, the accused has to be held that he has committed the offence. Even the qualified privilege has not been established in this case as the statement has been established to have been made by the accused to the PW 5, Investigating Officer and got published thereof. This statement in any sense whatsoever was not for the public good, besides the statement is a false one.
14. Therefore, it is submitted that the complainant can use the portion of the statement made by the accused to the investigating Oficer in the Coimbatore Bomb Blast case as evidence. Even otherwise, such statement had been made known to lot of persons in Islamic public which has become a talk among them as revealed in the evidence PWs 1 to 3. Therefore it is submitted that the prosecution has established the case against the accused beyond and reasonable doubt.
Therefore it is prayed that this Honourable Court may be pleased to convict the accused for the offence committed by him under section 599 of I.P.C. and thus render justice.
Advocate for complainant.
குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்.1. திருச்சிராப்பள்ளி
முன்னிலை: திரு. எம்.ஆபிரகாம் லிங்கன், பி.எஸ்.ஸி., எல்.எல்.எம்.
நீதித்துறை நடுவர் எண். 1. திருச்சிராப்பள்ளி
2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் நாள், செவ்வாய்க்கிழமை
திருவள்ளுவர் ஆண்டு 2040 விரோதி வருடம், கார்த்திகை மாதம் 8ஆம் நாள்
ஆண்டு பட்டிகை வழக்கு எண். 138/03.
குற்ற முறையிடுவோர்: கே.எம்.எச். ஷாகுல் ஹமீது(எ) அபூ அப்தில்லாஹ்.
த/பெ. கே.எம்.ஏ.ஹத்தாத்
எண். 51-பி, ஜாபர்ஷா தெரு,
திருச்சிராப்பள்ளி-8.
குற்றம் சாட்டப்பட்டவர் : பீ.ஜெயினலாபிதீன்.
த/பெ. பீர் முகமது.
குற்றம் முறையிடப்பட்டது: இதச பிரிவு 500
குற்றம் வினவப்பட்டது : இதச பிரிவு 500
எதிரியின் பதில் : குற்றவாளி இல்லை
நடுவரின் தீர்மானம் : எதிரியை இதச பிரிவு 500ன் கீழ் குற்றவாளி இல்லை.
என்று முடிவு செய்து, கு.வி.மு.ச. பிரிவு 255(1)ன் கீழ்
விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கு 10.2.03ஆம் தேதியன்று இந்நீதிமன்றத்தில் கோப்பிற்கு எடுக்கப்பட்டு, குற்றமுறையீட்டாளர் தரப்பில் வழக்கறிஞர் திரு.எஸ்.கே.மணி அவர்கள் முன்னிலையாகவும், எதிரி தரப்பில் வழக்கறிஞர் திரு.மகேந்திரன் அவர்கள் முன்னிலையாகவும், எதிரி தரப்பில் வழக்கறிஞர் திரு. மகேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் சாட்சிய சான்றாவணங்களைப் பரிசீலித்தும், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தும், இது நாள் வரை இந்நீதிமன்றத்தில் பரிசீலனையில் இருந்து வந்த இவ்வழக்கில் இன்று இந்நீதிமன்றம் வழங்கும்
தீர்ப்பரை
இவ்வழக்கு குற்றமுறையீட்டாளரால் கு.வி.ம.ச. பிரிவு 200ன் கீழ் தாக்கல் செய்யப்படுகின்றது.
2. குற்றமுறையிட்டின் சுருக்கம்:
குற்ற முறையீட்டாளர் திருச்சி கிலேதார் தெருவில் வசித்து வருகிறார். கடிகாரக் கடை மற்றும் ஆப்செட் பிரிண்டர் வைத்து தொழில் நடத்தி வருகிறார். முஸ்லிம் மக்களுக்கு தேவையற்ற (பெரும் பாவமான) தர்கா சமாதி சடங்குகள், மூட நம்பிக்கைகள் மற்றும் பாத்தியா நடைமுறை சம்பிரதாயங்கள் பற்றி துண்டு பிரசுரங்கள் மூலம் கடந்த 1983-ம் வருடத்திலிருந்து மக்களிடையே பிரசுரம் செய்து வந்துள்ளார். அவைகளை பார்த்த துபாயிலுள்ள இஸ்லாமிய இளைஞர் இயக்கம் என்ற அமைப்பு குற்றமுறையீட்டாளரிடம் தொடர்பு கொண்டு அதன் அடிப்படையில் குற்றமுறையீட்டாளர் நிர்வாகியாகவும் வெளியீட்டாளராகவும் இருந்தும், எதிரி ஆசிரியராக இருந்தும், அந்நஜாத் என்கின்ற பத்திரிக்கை திருச்சி, ஜாபர்ஷா தெரு, கதவு எண் 51-பி யில் தொடங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பத்திரிக்கை தொடங்கப்பட்டு வந்த நிலையில் குற்ற முறையீட்டாளர் அரபு மொழி கல்லாதவர் என்றும், எதிரி அரபி மொழி கற்ற மெளலவி என்றும், எதிரி குற்றமுறையீட்டாளர் மீது வெறுப்புக் கொண்டு, மேற்படி பத்திரிகை நிறுவனத்தில் குற்றமுறையீட்டாளர் கையாடல் செய்ததாக துபாயிலுள்ள குத்புதீன் என்பவருக்கு கடிதம் மூலமும், திருச்சியிலுள்ள நண்பர்களுக்கு வாய் மூலமாகவும் எதிரி கூறி வந்துள்ளார். கையாடல் செய்தது சம்பந்தமாக 1987ஆம்வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் ”அட்ஹாக் கமிட்டி” அமைக்கப்பட்டு, அதன் மூலம் கையாடல் பற்றி விசாரணை நடத்தப்பட்டு, குற்றமுறையிட்டாளர், குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 24.3.1999ஆம் தேதியன்று இஸ்லாமிய சர்வீஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த எஸ்.எம்.பாட்ஷா என்பவர் குற்ற முறையீட்டாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக எதிரி இருப்பதாகவும், அதில் எதிரி காவல் துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்ததாகவும் சொல்லி, எதிரி கொடுத்த வாக்குமூலத்தின் நகலை அனுப்பி வைத்துள்ளார்.
மேற்படி வாக்குமூலத்தில் 5வது பக்கத்தில் ‘அந்நஜாத்” பத்திரிகைக்காக வாங்கப்பட்ட சொத்துக்களை குற்றமுறையீட்டாளர் அவரது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும், அந்த துரோகத்தின் காரணமாக எதிரி மேற்படி பத்திரிக்கையிலிருந்து விலகி கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே குற்றமுறையீட்டாளர் அவரது வழக்கறிஞர் மூலமாக எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி மேற்கண்டவாறு கொடுத்த வாக்குமூலத்திற்கு வருத்தம் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். ‘உணர்வு” என்ற பெயரில் தமிழ் வாரப் பத்திரிக்கை நடத்தி வரும் எதிரி, நாளது தேதி வரையிலும் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொதுமக்கள் மத்தியிலும், குற்றமுறையீட்டாளர் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்துள்ளார். தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள் எங்கு இருக்கிறார்களோ அவர்களிடமும் குற்றமுறையீட்டாளரைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இது பற்றி 20.7.02 தேதியன்று எதிரியிடம் விளக்கம் கேட்டபோது பொய்யான தகவல்களைக் கொண்டு எதிரி பதில் அனுப்பியுள்ளார். குற்றமுறையீட்டாளரின் பெயருக்கு அவமதிப்பையும் குற்ற முறையீட்டாளரின் செயல்களுக்கு அவதூறையும் எதிரி ஏற்படுத்தியுள்ளார். எனவே குற்றமுறையீட்டாளரின் நற்பெயருக்கு களங்கத்தையும், அவமதிப்பையும் ஏற்படுத்தி, அவதூறு செய்துள்ள எதிரியை இதர பிரிவு 500ன்படி தண்டிக்க வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.
2. சாட்சிகளின் சத்தியபிரமாண வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு இவ்வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டு, எதிரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, எதிரி இந்நீதிமன்றத்தின் முன்னிலையாகிய பின்னர் குற்றமுறையீட்டின் நகல் எதிரிக்கு வழங்கப்பட்டது.
3. எதிரிக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு, எதிரியிடம் இதச 500 பிரிவின் கீழான குற்றம் பற்றி வினவியபோது, எதிரி குற்றவாளி இல்லை என்று கூறினார். எனவே குற்றமுறையீட்டாளர் தரப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
4. குற்றமுறையீட்டாளர் தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, சான்றாவணங்கள் ம.சா.ஆ.1 முதல் ம.சா.ஆ.10 வரையிலும் குறியிடப்பட்டது. குற்றமுறையீட்டாளர் தரப்பு சாட்சிய சுருக்கம் பின் வருமாறு.
ம.சா. 1 ஷாகுல் ஹமீது திருச்சி கிலேதார் தெருவில் குடியிருந்து, கதவு எண். 51-பி, ஜாபர்ஷா தெரு, திருச்சி-8. என்ற முகவரியில் வைத்து அந்நஜாத் என்கின்ற பத்திரிக்கையை 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிர்வாகியாகவும் வெளியீட்டாளராகவும் இருந்து நடத்தி வந்துள்ளார். அப்போது அப்பத்திரிக்கையின் ஆசிரியராக எதிரி மாதம் ரூபாய் 1,000/- சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார். துபாயிலுள்ள இஸ்லாமிய இளைஞர் இயக்கம் மற்றும் மறை வழி, நபி வழி செயலகம் என்ற அமைப்புகளின் உதவியுடன் மேற்படி அந்நஜாத் பத்திரிக்கை நடத்தப்பட்டு வந்துள்ளது. அந்நஜாத் பத்திரிக்கை பெரும்பாலான இஸ்லாமியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு நன்கு விற்பனையாகி உள்ளது. ம.சா.1 எழுதிய கட்டுரைகள் மக்களிடையே பரப்பரப்பாக பேசப்பட்டதால் எதிரிக்கு ம.சா.1 மீது பொறாமை ஏற்பட்டுள்ளது. புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் மனித நேயத்துடனும் சகோதர, சமத்துவத்துடனும் வாழ வேண்டுமென்பதே அந்நஜாத் பத்திரிக்கையின் நோக்கம் என்பதால், புரோகிதர்கள் இனம் அழிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தின் காரணமாக எதிரிக்கு ம.சா.1 ன் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புரோகிதர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக அந்நஜாத் பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிடுமாறு எதிரி கூறியதை ம.சா.1 நிராகரித்துவிட்டதால் பத்திரிக்கையிலிருந்து எதிரி வெளியேறியுள்ளார். இந்நிலையில் பத்திரிகைக்கு வரக்கூடிய வருமானத்தை ம.சா. 1 கையாடல் செய்ததாக பலரிடம் பொய்யான தகவலை எதிரி கூறியுள்ளார். இது பற்றி துபாயில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கும் அதில் செயலாளராக பணிபுரியும் ம.சா.3 குத்புத்தீனுக்கும் அவதூறு செய்திகளை கடிதம் மூலம் எதிரி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ‘அட்ஹாக் கமிட்டி” அமைக்கப்பட்டு விசாரணை முடிவில் ம.சா.1 குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டது. 1993-ம் ஆண்ட மே மாதம் வெளியிடப்பட்ட அந்நஜாத் பத்திரிக்கையில் மாத இதழ் ம.சா.ஆ. 1ஆகவும், அதிலுள்ள பக்கம் 1 முதல் 174 வரையிலான சங்கதிகள் ம.சா.ஆ2 வரிசையாகவும் குறியிடப்பட்டது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.எம்.பாட்ஷா என்பவர் ம.சா.1க்கு ஒரு கடிதம் எழுதி, அக்கடிதத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சியாக எதிரி மேற்படி குண்டு வெடிப்பு வழக்கில் புலனாய்வு அதிகாரி ம.சா.5 பன்னீர்செல்வம் என்பவரிடம் 62 பக்கங்கள் கொண்ட வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும், அதில் 5வது பக்கத்தில் ம.சா.1ன் மீது அப்பட்டமாக அவதூறு ஒன்றை கூறியுள்ளதாகவும் எழுதியுள்ளார். அவ்வாறு எதிரி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ம.சா.5, கண்காணிப்பாளர் பன்னீர் செல்வத்திடம் கொடுத்த வாக்குமூலத்தில் 5ஆம் பக்கத்தில் கண்டுள்ள சங்கதி ம.சா.ஆ3ஆக குறியீடு செய்யப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் அந்நஜாத் பத்திரிக்கைக்காக வாங்கப்பட்ட சொத்தை ம.சா.1 அவரது பெயரில் பதிவு செய்துகொண்டதால் அப்பத்திரிக்கையிலிருந்து ஒரு வருடத்திலேயே வெளியேறிவிட்டேன் என்பதாக எதிரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவ்வாறு வாக்கமூலம் கொடுத்தது சம்பந்தமாக வழக்கறிஞர் எஸ்.எம்.பாட்ஷா அனுப்பிய அறிக்கை ம.சா.ஆ.4 ஆக குறியிடப்பட்டது. அந்நஜாத் பத்திரிக்கைக்காக வழங்கப்பட்ட கட்டிடத்தை ம.சா.1ன் பெயரில் பதிவ செய்து கொண்டதாக எதிரி கூறியிருப்பது ம.சா.1ன் நற்பெயரைக் கெடுக்கும் விசயம் ஆகும். அவ்வாறு வாக்குமூலம் கொடுத்தது தவறு என்று வருத்தம் தெரிவித்து எதிரி நடத்தி வரும் ‘உணர்வு’ என்ற வார இதழில் வெளியிடுமாறு ம.சா.1 அவரது வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பு ஒன்றை கொடுத்தும், அது போன்ற வருத்தம் தெரிவித்து பத்திரிக்கையில் எத்தகைய சங்கதியும் வெளியிடப்படவில்லை. மீண்டும் எதிரிக்கு 20.2.02 தேதியன்று அது போன்ற ஒரு அறிவிப்பு ம.சா.ஆ 5ஐ அனுப்பி வருத்தம் தெரிவிக்காவிட்டால் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ம.சா.1 தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட எதிரி தவறாக சங்கதிகளைக் கொண்டு ம.சா.ஆ 6ல் கண்டபடியாக பதில் அறிவிப்பு அனுப்பியுள்ளார். புரோகிதத்தை ஆதரித்து முகமது ஹவுஸ் என்பவருக்கும், ம.சா.1க்கும் ம.சா.ஆ 7 வரிசையில் கண்டபடி கடிதங்கள் எழதியுள்ளார். புரோகிதத்தை ஆதரித்து நிர்வாக செயற்குழு உறுப்பினர் அனைவருக்கும் அந்நஜாத் பத்திரிகையில் எழுத சொல்லி 16.5.1987 தேதியன்று எதிரி ம.சா.ஆ.8ல் கண்டபடி கடிதம் அனுப்பியுள்ளார். ம.சா.1ன் மீது எதிரி சுமத்திய குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக இஸ்லாமிய மக்கள் அனைவரிடமிருந்தும் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு இஸ்லாமிய சொத்தை அபகரித்து கொண்டீர்களாமே என்று ம.சா.1ஐ கேட்டுள்ளார்கள். துபாயில் வேலைப் பார்த்த ம.சா.3 குத்புதீன் மற்றும் ம.சா.2 அகமது இப்ராஹீம் மசா.4 திப்புசுல்த்தான் ஆகியொர்களும் ம.சா.1ஐ சந்தித்து கேட்டுள்ளார்கள். அதனால் ம.சா.1க்கும் மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி ஒரு சாட்சியாக இருந்து, அளித்த சாட்சியத்தில் சான்றிட்ட நகல் ம.சா.ஆ.9 ஆகவும், 6.12.86 தேதியன்று நஜாத் பஜார் டிரஸ்ட் செயரில் வாங்கப்பட்ட சொத்தின் கிரைய ஆவணத்தின் சான்றிட்ட நகல் ம.சா.ஆ 10 ஆகவும் குறியிடப்பட்டது. ம.சா.1ன் நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியதால் எதிரியை சட்டபடி தண்டிக்க வேண்டும். இத்துடன் குற்ற மறையீட்டாளர் தரப்பு சாட்சியம் முடிக்கப்பட்டது.
5.குற்றமுறையீட்டாளர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சிய, சான்றானவணங்களில் எதிரிக்குப் பாதகமாக அமைந்த சங்கதிகளைத் தொகுத்து துவிமுச பிரிவு 313(1)(ஆ)ன் கீழ் எதிரியை விசாரணை செய்தபொழுது, எதிரி குற்றமுறையீட்டாளர் தரப்பு வழக்கும், சாட்சியமும் பொய் என்றும் தனது தரப்பில் விசாரிக்க சாட்சி உண்டு என்றும் கூறினார். எதிரி தரப்பில் எ.சா.1 ஆக விசாரிக்கப்பட்டார்.
6. எ.சா.1 அவரது சாட்சியத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலிசார் விசாரித்தபோது அந்நஜாத் பத்திரிக்கைக்காக வாங்கப்பட்ட சொத்தை அதன் பொருளாளரான ம.சா.1 அவரது பெயரில் பதிவு செய்து கொண்டதால் பத்திரிக்கையிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று எத்தகைய வாக்குமூலம் புலன் விசாரணை அதிகாரியிடம் கொடுக்கவில்லை என்பதாக குறிப்பிட்டுள்ளார். இத்துடன் எதிரி தரப்பு சாட்சியம் முடிக்கப்பட்டது.
7. இந்நிலையில் குற்றமுறையீட்டாளர் தரப்பில் எதிரி மீது சுமத்தப்பட்டுள்ள இதச 500 பிரிவின் கீழான குற்றச்சாட்டு தகுநிலை ஐயத்திற்கு இடமற்ற வகையிலும் குற்றமுறையீட்டாளர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்பதே இவ்வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சினை ஆகும்.
8. இவ்வழக்கில் எதிரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் அந்நஜாத் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி, அதன் மேனேஜராகவும், வெளியீட்டாளராகவும் இருந்து வந்த ம.சா.1ன் மீது அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் ம.சா.1க்குள்ள நற்பெயரை கெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட எதிரி மேற்படி வழக்கில் புலனாய்வு அதிகாரியிடம் ம.சா.1 அவர் நடத்தி வந்த அந்நஜாத் பத்திரிக்கைக்காக வழங்கப்பட்ட கட்டிடத்தை அவரது பெயரிலேயே பதிவு செய்து கொண்டதால் மேற்படி பத்திரிக்கையிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறியுள்ள வாக்குமூலம் ம.சா.1க்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது என்பதுதான். அதாவது அவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக மேற்படி வழக்கில் எதிரிகளுக்கு வழங்கப்பட்ட குற்ற இறுதி அறிக்கையின் வாயிலாக மேற்படி வாக்குமூலம் அவ்வழக்கில் எதிரிகளுக்கும் அவர்கள் மூலமாக இஸ்லாமிய மக்களுக்கும் தெரிய வந்ததால், இஸ்லாமிய மக்களின் மத்தியில் நற்பெயருடன் விளங்கி வந்த ம.சா.1ன் பெயருக்கு அவமதிப்பு ஏற்பட்டுவிட்டது என்பதாகும்.
9. ம.சா.1 அவரது சாட்சியத்தில் அந்நஜாத் பத்திரிகைக்கு கிடைத்த வருமானத்தை ம.சா.1 கையாடல் செய்துவிட்டதாக பல நபர்களிடம் புகார் கூறியதாகவும், அது குறித்து ‘அட்ஹாக் கமிட்டி” அமைக்கப்பட்டதாகவும் மேற்படி கமிட்டி நடத்திய விசாரணையில் ம.சா.1 குற்றமற்றவர் என்று தெரிய வந்ததாகவும் புரோகிதர்களுக்கு எதிராக செயல்பட்டதால் எதிரிக்கு ம.சா.1ல் மீது வெறுப்பு ஏற்பட்டதாகவும், கூறியிருந்த போதிலும், அது குறித்து தக்க ஆவணங்களை குற்றமுறையீட்டாளர் தரப்பு இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி, அவ்வழக்கில் புலனாய்வு அதிகாரி ம.சா.5ன் முன் கொடுத்ததாக சொல்லப்படும். வாக்குமூலத்தில் ம.சா.ஆ.3ல் குறிப்பிடப்பட்டுள்ள சங்கதி உள்நோக்கத்தோடு ம.சா.1ன் பெயரை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எதிரியால் கொடுக்கப்பட்டதா? என்பதைப் பார்க்கிறபோது மேற்படி வழக்கில் எதிரி அரசு தரப்பில் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது ம.சா.ஆ 9ல் கண்டபடி அரசு தரப்புக்கு எதிராக அவ்வழக்கில் எதிரி பிறழ் சாட்சியாக மாறியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. அதாவது குண்டு வெடிப்பு வழக்கில் புலனாய்வு அதிகாரியான ம.சா.5 முன்பு வாக்கமூலத்தில் சொல்லப்பட்டது போல் சாட்சியம் அளித்துள்ளார்.
10. குண்டு வெடிப்பு வழக்கில் புலனாய்வு அதிகாரியான ம.சா.5 ம.சா.ஆ.3ல் கண்ட வாக்குமூலம் தனது விசாரணையின்போது எதிரியால் கொடுக்கப்பட்டது தான் என்று இந்நீதிமன்றத்தில் சான்று பகர்ந்துள்ள போதிலும் ம.சா.5 அவரது குறுக்கு விசாரணை சாட்சியத்தில் அந்த வாக்குமூலத்தை நான் எழுதவில்லை என்றும், தனது மேற்பார்வையில் ஒரு ஆய்வாளர் அதை எழுதியதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார். அதாவது வாக்குமூலம் ம.சா.ஆ. 3.ம.சா.5ஆல் எழுதப்படவில்லை. இந்நிலையில் எ.சா.1 ஆக விசாரிக்கப்பட்ட எதிரி அவரது சாட்சியத்தில் அந்நஜாத் பத்திரிக்கைக்காக வாங்கப்பட்ட இடத்தை அதன் பொருளாளரான ம.சா.1 தனது பெயரில் பதிவு செய்து கொண்டதால் அப்பத்திரிக்கையிலிருந்து வெளியேறி விட்டதாக கோவை குண்டுவெடிப்பு வழக்கில் புலனாய்வு அதிகாரியிடம் தான் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை என்று தெளிவு பட கூறியுள்ளார். எ.சா.1ன் மேற்படி சாட்சியம் ம.சா.1ன் தரப்பில் எதிர்க்கப்படவில்லை. எனவே ம.சா.1ல் எதிர்க்கப்படாத சாட்சியம் ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியம் ஆகும். அந்த வகையில் அவ்வாறு எந்த ஒரு வாக்குமூலமும் கொடுக்கவில்லை என்று இந்நீதிமன்றத்தில் எதிரி தெளிவுபட சான்று பகன்றுள்ளதால் ம.சா.1ன் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு எதிரி அவதூறு பரப்பும் வகையில் கோவை குண்ட வெடிப்பு வழக்கில் புலன் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் கொடுத்தார் என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக அமைந்து காணப்படவில்லை. எனவெ ம.சா.1ன் நற்பெயரை அவமதிக்கும் விதத்திலும், ம.சா.1ன் நற்செயல்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் எதிரி செயல்பட்டார் என்று குற்றமுறையீட்டாளர் தரப்பில் கூறப்படும் சங்கதி குற்றமறையீட்டாளர் தரப்பில் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் நிரூபிக்கப்படவில்லை என்று இந்நீதிமன்றம் கருதி, அதன் அடிப்படையில் எதிரி சந்தேகத்தின் பலனை அடையத் தக்கவர் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
11. மேலே ஆராயப்பட்டுள்ள காரணங்களில் அடிப்படையில் எதிரி மீதான இதச 500 பிரிவின் கீழான குற்றச்சாட்டு குற்றமுறையீட்டாளர் தரப்பில் தகுநிலை ஐயப்பாட்டிற்கு இடமற்ற வகையில் நிரூபிக்கப்படவில்லை என்று முடிவு செய்து, எதிரியை கு.வி.மு.ச. பிரிவு 255(1)ன் கீழ் விடுதலை செய்த தீர்ப்பளிக்கப்படுகிறது.
12. இவ்வழக்கில் சொத்து தாக்கல் இல்லை
இவ்வழக்கில் தீர்ப்புரை என்னால் சுருக்கெழுத்தாளருக்கு சொல்லப்பட்டு, அவரால் விரிவாக்கம் செய்து, தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் பிழை நீக்கப்பட்டு இன்று 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் நாள் அவையறியப் பகரப்பட்டது.
நீதித்துறை நடுவர் எண். 1
திருச்சிராப்பள்ளி.
இணைப்பு
குற்றமுறையிட்டாளர் தரப்பு சாட்சிகள்:
1. ஷாகுல் ஹமீது
2. அகமது இப்ராகீம்
3. குத்புதீன்
4. திப்புசுல்தான்
5. பன்னீர் செல்வம்
குற்றமுறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
1. 1993 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அந்நஜாத் பத்திரிக்கையின் மாத இதழ்
2. மேற்படி மாத இதழில் பக்கம் 1 முதல் 174 வரையிலான சங்கதிகள்
3. கோவை குண்டவெடிப்பு வழக்கில் எதிரி ம.சா.5விடம் கொடுத்த வாக்குமூலத்தின் ஒரு பகுதி
4. எதிரி வாக்கு5லம் கொடுத்தது சம்பந்தமாக வழக்கறிஞர் எஸ்.எம்.பாட்ஷா அனப்பிய அறிக்கை
5. 20.2.02 தேதியன்று எதிரிக்கு அனுப்பிய அறிவிப்பு
6. எதிரிய அனுப்பிய தவறான சங்கதிகளை கொண்ட பதில் அறிவிப்பு
7. புரோகிதத்தை ஆதரித்து அனுப்பிய கடிதங்கள்
8. 16.5.1987 தேதியிட்ட கடிதம்
9. எதிரி அளித்த சாட்சியத்தின் சான்றிட்ட நகல்
10. 6.12.86 தேதியன்றைய கிரைய ஆவணத்தின் சான்றிட்ட நகல்.
குற்ற முறையீட்டாளர் தரப்பு சான்று பொருள் : இல்லை
………………………………….
எதிரி தரப்பு சாட்சி:
…………………………………
ஜெயினுலாபீதின்
எதிரி தரப்பு சான்றாவணம், சான்று பொருள் : இல்லை நடுவர் கையெழுத்து
நீதித்துறை நடுவர் எண்:
திருச்சிராப்பள்ளி.
குறிப்பு :
1. எதிரி விசாரணைக் காலத்தில் பிணையில் இருந்தார்
2. எதிரிக்கு விடுதலைத் தீர்ப்பு வழங்கப்பட்டது
3. தீர்ப்பு பற்றி குற்றமுறையீட்டாளருக்குத் தெரிவிக்கப்பட்டது
4. சொத்துப் பற்றிய உத்தரவு இல்லை.
அன்புள்ள சகோதர சகோதரிகளே! அபூ அப்தில்லாஹ்வின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மேலே இடம்பெற்று நீங்கள் பார்வையிட்டவை அனைத்தும் 24.03.1999ல் பீ.ஜை. கோவையில் போலீஸ் அதிகாரி முன்னால் கொடுத்த வாக்குமூலம் நகல் (1) 26.02.2004 ல் பீ.ஜை. கோவையில் நீதிபதி முன் கொடுத்த வாக்குமூலம் நகல் (2) நவம்பர் 27 டிசம்பர் 3 வரையுள்ள உணர்வு 4-ம் பக்கம் இடம் பெற்றிருந்த “தீர்ப்புகள் தரப்படுவதில்லை வாங்கப்படுகின்றன” என்ற முக்கிய வாசகம் இடம் பெற்றுள்ள ஆக்கம் (3) பொய்யன் பீ.ஜையின் அந்தர் பல்டி வாக்குமூலம்(4) அவரது வக்கீலின் எழுத்து மூலமான வாதுரை(5) அதற்கு எனது வக்கீல் அளித்த எழுத்து மூலமான வாதுரை(6)எனது 138/2003 வழக்கைத் தள்ளுபடி செய்யச் சொல்லி பீ.ஜை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு எனது 138/2003 வழக்கு விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற தீர்ப்பு அதன் முக்கியம் கருதி தமிழ்நாடு நிகழ்கால வழக்குகள் (CTS/05.05.2004) இடம் பெறும் நூலிலும் இடம் பெற்றுள்ளதின் நகல்(7) மற்றும் 24.11.2009-ல் அளிக்கப்பட்ட எனது 138/2003-ல் பதிவான வழக்கின் தீர்ப்பு நகல். (8)
இவை அனைத்தையும் கவனமாகப் பரிசீலிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும். பொய்யன் பீ.ஜை. 1986-87களில் அந்நஜாத்தின் பொருளாதாரத்தில் நான் மோசடி செய்துவிட்டேன் என்று அவதூறு பரப்பி நிர்வாகத்தை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு அட்ஹாக்கமிட்டி போட்டு என்னைக் குற்றவாளியாக்கும் நோக்கத்துடனேயே வரவு செலவு கணக்குகளை மிக மிகத் தீவிரமாகப் பரிசீலித்தும் கேவலம் ஒரெயொரு ரூபாய் விடுபட்டதாகக் கூட குற்றம் சாட்ட முடியாமல் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு, கணக்குகள் எல்லாம் சரியாக இருக்கின்றன என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு, மீண்டும் என்னையே தலைவராகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு பீ.ஜை. ஆளான விபரங்கள் எல்லாம், நீதிமன்றத்தில் ம.சா.ஆ.2ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்நஜாத் 1993மே இதழிலுள்ள இலவச இணைப்பு பக்கம் 46 முதல் 51 வரை மிகத் தெளிவாக உள்ளது.
138/2003 திருச்சி வழக்கில் என்னையும் சேர்த்து ஐந்து சாட்சிகளை விசாரித்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பீ.ஜை. அழைக்கப்பட்டு தன் தரப்பு சாட்சியத்தையும் சாட்சிகளையும் ஆஜராக்கச் சொல்லப்பட்டது. அவர் விசாரணைக் கூண்டில் ஏறி சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். அதேபோல் அவரது வக்கீலும் நேரடி வாதுரைக்கு மறுத்து எழுத்து மூலம் தனது வாதுரையைத் தாக்கல் செய்தார். அதனால் எனது வக்கீலும் எனது தரப்பு வாதுரையைத் தாக்கல் செய்தார்.
பீ.ஜை. கூண்டில் ஏறி சாட்சி சொல்ல முன்வராததற்குக் காரணம்? சாட்சி சொன்னால் குறுக்கு விசாரணைக்கு ஆளாக நேரிடும். அதில் வகையாக மாட்டிக் கொள்வோம். தான் பொய்யன் என்பதும் 1987லிலிருந்து என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதும் உரிய ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்பட்டுவிடும். தனது வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற அச்சமே சாட்சி சொல்வதை விட்டும் அவரைத் தடுத்தது.
1987லிலிருந்து கடந்த 23 வருடங்களாக அவர் பரப்பி வரும் அவதூறுகளை பொது மக்கள் மன்றத்தில் வந்து நிரூபியும் என தொடர்ந்து நான் அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடும் இரகசியமும் இதுதான்.
அதேபோல் அவரது வக்கீல் கு.வி.மு.ச. பிரிவு 314-ன் கீழ் தாக்கல் செய்த எழுத்து மூலமான வாதுரையும் உப்பு சப்பு இல்லாமல் இருந்தது. பொய்யன் பீ.ஜை. அந்த வாக்குமூலத்தைக் கூறவில்லை என்பதற்கு எவ்வித சாட்சிகளையும் ஆதாரபூர்வமான சட்ட முன் வரைவுகளையும் தரவில்லை. மேலும் பீஜை. அதிகாரியிடம் அவ்வாறு சொல்லவில்லை. அவரே அப்படி எழுதிக் கொண்டார் என்று கூறுவதற்கு எதிராக, நான் அப்படி ஒரு சொத்தை எனது பெயரில் வாங்கிக் கொண்டதுபோல் அவரது குறுக்கு விசாரணை இருந்தது.
அதற்கு மாறாக எனது வக்கீல் பல சட்ட முன்வரைவுகளையும் உச்ச மன்ற தீர்ப்பின் ஆதாரங்களையும் அவரது எழுத்து வடிவிலான வாதுரையில் பீ.ஜை குற்றவாளி என்பதற்குரிய தகுநிலை ஆதாரங்களைக் கொடுத்திருந்தார்.
ஆக தீர்ப்பு எனக்குச் சாதகமாகவே இருக்கும் என நான் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், காட்சிகள் மாற ஆரம்பித்தன. பீ.ஜை.யின் வக்கீல் முன்னர் நேரடி வாதுரைக்கு மறுத்து எழுத்துமூலமாக தனது வாதுரையை அளித்தவர், அதற்கு மாறாக நேரடியாக வாதிட ஆரம்பித்தார். கோவை நீதிமன்றத்தில் பீ.ஜை. தான் அவ்வாறு கூறவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் சொத்து அந்நஜாத் மாத இதழுக்காக வாங்கப்படாமல், வேறு வகைக்கு வாங்கப்பட்டிருந்தால் அதற்குரிய ஆதாரத்தை குற்றமுறையீட்டாளரே இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என வாதிட்டார்.
எனவே, கோவை நீதிமன்றத்தில் பீ.ஜை. நீதிபதிமுன் நேரடியாக சாட்சியம் அளித்து, குறுக்கு விசாரணை செய்யப்பட்ட 36 பக்க சான்றிட்ட நகல் ம.சா.ஆ. 9 ஆகவும், நஜாத் பஜார் டிரஸ்ட் பெயரில் வாங்கப்பட்ட சொத்தின் கிரைய ஆவண சான்றிட்ட நகல் ம.சா.ஆ.10 ஆகவும் நீதிமன்றத்தில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்டன.
ம.சா.ஆ. 9ன் பக்கங்கள் 7 மற்றும் 8-ல் “… நஜாத் பத்திரிக்கையை விட்டு நான் விலகியதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றி போலீசாரிடம் தெரிவித்தேனா இல்லையா என்பது தற்போது நினைவில் இல்லை; ……… நஜாத் பத்திரிகையை விட்டு நான் விலக பல்வேறு காரணங்கள் உள்ளன; அதில் ஒரு காரணம் அந்த பத்திரிக்கையின் பொருளாளர் ஒரு சொத்து வாங்கியது தொடர்பாக எனக்கும் அவருக்கும் எழுந்த கருத்து வேற்றுமையாகும். பத்திரிகையில் பணியாற்றும் போது அந்த பொருளாளர் தன் பெயரில் சொத்து வாங்கியதும் எங்களுக்குள் பிரச்சினையும், கருத்து வேற்றுமையும் எழக்காரணமாயிற்று…. பத்திரிக்கை தொகையில் தன் பெயருக்கு தனியாக சொத்து வாங்கியது துரோகம் எனக் கருதி நான் மனம் பொறுக்காமல், அந்த பத்திரிகையிலிருந்து விலகினேன் என தெரிவிக்கவில்லை” என்ற அப்பட்டமான பொய்களை கோவை நீதிபதி முன் அவிழ்த்துவிட்டது ம.சா.ஆ.9-ல் பதிவாகி இருக்கிறது. பீ.ஜையின் கையெழுத்தும் அதில் இருக்கிறது. இந்த சங்கதிக்கும் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவரே ஒப்புக்கொண்டும் உள்ளார்.
பீ.ஜை. அந்நஜாத் பத்திரிகையிலிருந்து விலகியது அபூ அப்தில்லாஹ்வுக்கு எவ்வித மான நஷ்டத்தையும் ஏற்படுத்தாது என்பதை புரிய முடியாத அறிவீனன் எவனும் இருக்க முடியாது. ” ஒரு சொத்து வாங்கியது தொடர்பாக எனக்கும் அவருக்கும் எழுந்த கருத்து வேற்றுமையாகும். பத்திரிகையில் பணியாற்றும் போது அந்த பொருளாளர் தன் பெயரில் சொத்து வாங்கியது எங்களுக்குள் பிரச்சினையையும் கருத்து வேற்றுமையும் எழக் காரணமாயிற்று” என்று பீ.ஜை நீதிபதி முன் கூறி அதில் கையெழுத்தும் இட்டுள்ளார். இதுதான் எனக்கு மான நட்டத்தை உண்டாக்கும் விடையமாகும்.
இந்த நிலையில் பொய்யன் பீ.ஜை. “போலீஸ் விசாரணையின்போது, “சொத்து வாங்கியது துரோகம் எனக் கருதி நான் மனம் பொறுக்க முடியாமல் அந்த பத்திரிகையிலிருந்து விலகினேன் என தெரிவிக்கவில்லை” என்ற பொய் சாட்சியத்தை வைத்து பீ.ஜை எப்படி விடுதலையானார் என்பதே சிந்திக்க வைக்கிறது. 21.11.2009-ல் திருச்சி நீதிபதி முன் 26.2.2004-ல் கோவையில் நீதிபதி முன், அவர் கொடுத்து கீழே கையெழுத்தும் இட்டுள்ள மேலே கண்டுள்ள வாசகங்களை எடுத்துக்காட்டி குறுக்கு விசாரணை செய்திருந்தால் போதும். பீ.ஜை.யின் விழி பிதுங்கி இருக்கும். மேலும் அவதூறுகள் பரப்பி அவர் கைப்பட எழுதிய கடிதங்களும் ம.சா. 7,8 ஆவணங்களாக தாக்கல் செய்யப்பட்டிருந்ததை எடுத்துக் காட்டி குறுக்கு விசாரணை செய்திருந்தாலும் பீ.ஜை. குற்றவாளிதான் என்பதை நிரூபித்திருக்க முடியும்.
ஆனால் எனது வக்கீல் நான் மீண்டும், மீண்டும் வற்புறுத்தியும் பீ.ஜை.யை குறுக்கு விசாரணை செய்ய மறுத்து விட்டார். அதுவே பீ.ஜை. தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது என்பதை,
“எ.சா.1 ன் மேற்படி சாட்சியம் ம.சா.1ன் தரப்பில் எதிர்க்கப்படவில்லை. எனவே ம.சா.1ஆல் எதிர்க்கப்படாத சாட்சியம் ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியம் ஆகும்” என்ற தீர்ப்பின் பகுதி உறுதிப்படுத்துகிறது. இது எப்படிச் சாத்தியமானது என்பதை மக்கள் தீர்ப்புக்கே விடுகிறேன்.
முன்னர் கூண்டில் ஏறி சாட்சி சொல்ல மறுத்த பொய்யன் பீ.ஜை. 21.11.2009-ல் குறுக்கு விசாரணை செய்யப்படாது என்ற உத்திரவாதத்தின் பேரிலேயே சாட்சி சொல்ல முன் வந்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அவரது வார இதழ் “உணர்வு” டிசம்பர் 18-24-2009, குரல் 16 பக்கம் 19-ல் அவரது ஒப்புதல் வாக்குமூலம் இதோ பாருங்கள்.
“…. கோர்ட் வளாகத்தில் வழக்கு நடத்த முடியவில்லை. சிறிய வராந்தாவில்தான் வழக்கு நடந்தது. அங்கே குற்றவாளிக் கூண்டு வைக்க முடியாது. மேலும் சத்தியப் பிரமாணம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்துத்தான் எடுக்க வேண்டும். கூண்டு இல்லாததால் சத்தியப் பிரமாணமும் எடுக்கப்படவில்லை……. உங்கள் வழக்கறிஞர் சொல்வதைப் பதிவு செய்யலாமா என்று மட்டும்தான் நீதிபதி கேட்டார். ஆம் என்றதும் அவரே வார்த்தைகளைச் சொல்லி பதிவு செய்தார்…..”
ஆம்! வாக்குமூலம் சத்தியப் பிரமாணம் எடுக்கப்படாமலும், பொய்யன் பீ.ஜை. வாக்குமூலம் கொடுக்காமலும் அவரது வக்கீல் அதைச் சொல்லாமலும், நீதிபதியே வார்த்தைகளைச் சொல்லி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்பது பீ.ஜை.யின் ஒப்புதல் வாக்குமூலம்.
பீ.ஜை.க்கு குற்றவாளிக் கூண்டுக்கும் சாட்சியாளர் கூண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை. அவர்தான் தன்னைப் பெரிய மேதை எனப் பீற்றிக் கொள்கிறார். மேலும் சத்தியப் பிரமாணம் எடுக்கப்படவில்லை என்று அவரே ஒப்புக் கொள்கிறார். சத்தியப்பிரமாணம் எடுக்கப்படாமல் பதியப்பட்ட வாக்குமூலம் செல்லுமா? என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். மேலும் வாக்குமூலத்தைத் தான் கொடுக்காமலும், தனது வக்கீல் சொல்லாமலும் நீதிபதியே எழுதிக் கொண்டார் என்று எழுதியுள்ளார். இதன் நிலை என்ன என்பதையும் சட்ட நிபுணர்களே தீர்மானிக்க வேண்டும்.
பொய்யன் பீ.ஜை. பற்றிய தீர்ப்பு வெளியானது 24.11.2009. அதே வாரம் நவம்பர் 27 டிசம்பர் 3-ல் வெளியிடப்பட்ட அவரது உணர்வு இதழில் நீதித்துறை லஞ்ச விவகாரம் பற்றி எழுதியுள்ளதை வைத்தே இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களே முடிவு செய்து கொள்ள விட்டு விடுகிறோம்.
எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பரிசீலித்து வருகிறோம். அங்கும் இதே வரம்பு மீறல் லஞ்ச லாவண்யம் நடந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் இருக்கிறது. கடையநல்லூர் ஜாக் பள்ளி விவகாரத்தில் கீழ்கோர்ட்டில் ஜாக்கிற்கு சாதகமான நியாயமான தீர்ப்புக் கிடைத்த நிலையில், மேல்கோர்ட்டில் பெருந்தொகை கொடுத்தே பொய்யன் பீ.ஜை. அநீதமான தீர்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பெற்றார் என்றும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பெருந்தொகை கொடுத்தும், தன்னால் தூண்டிவிடப்பட்டவர்களையே காட்டிக் கொடுத்தும் தன்னை விடுவித்துக் கொண்டதாகவும் பீ.ஜையோடு நெருங்கிப் பழகியவர்களே கூறுகிறார்கள். அதேபோல் மேலப்பாளையம், திருச்சி ஜாக் பள்ளிகளின் வழக்குகளிலும் பீ. ஜை. லஞ்சம் கொடுத்தே தீர்ப்பை வாங்கியதாக செய்திகள் வருகின்றன.
லஞ்சம் கொடுத்துக் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் பீ.ஜை. மன்னன், அதில் முன்னிலை வகிக்கிறார் என்ற பேச்சும் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. 2002லிருந்து 2009 வரை எனது 138/2003 வழக்கு நடைபெற்றும் நான் யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அதனால் எனது கட்டு மேலே இருந்தாலும் அதைத் தூக்கி அடியில் வைத்து விடுவார்கள். இறுதியில் தான் எனது கட்டு எடுக்கப்படும். கட்டு இறுதியில்தானே எடுக்கப்படுகிறது என்ற தைரியத்தில் தாமதமாகச் செல்வதும் முடியாது. லஞ்சம் கொடுக்காத காரணத்தால் நான் அங்கு இல்லை என்பதை அறிந்து முன்னரே எனது பெயரைக் கூவி அழைத்து நான் ஆஜராகவில்லை என்று அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் நீதிபதி அமரும் 10.30க்கே ஒவ்வொரு வாய்தாவிலும் ஆஜராகி விடுவேன். ஆனால் வாய்தாக்களுக்கே ஆஜராகாத பொய்யன் பீ.ஜை. பொய் வாக்குமூலம் கொடுக்க வந்த 21.11.2009-ல் என் கண்முன்னேயே பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை என் கண்களாலேயே நான் பார்த்தேன். லஞ்சம் கொடுப்பது “ஹராம்” என்று ஊருக்கு உபதேசம் செய்யும் பொய்யன் பீ.ஜை.யின் லட்சணம் இதுதான்.
“அவர்கள் வரம்பு மீறினால் நீங்களும் வரம்பு மீறுங்கள்” என்ற பகரா 2:194 இறைவாக்கைக் காட்டி பீ.ஜை. லஞ்சம் கொடுத்து சாதிக்க முற்படும்போது நீங்களும் லஞ்சம் கொடுத்துத்தான் சாதிக்க முடியும். அப்படித்தான் நீதித்துறை நிலவரம் இருக்கிறது. அவர் லஞ்சம் கொடுத்து அநீதமான தீர்ப்பைப் பெற முற்படும்போது நீங்கள் ஏன் லஞ்சம் கொடுத்து நீதிமான தீர்ப்பைப் பெறக் கூடாது என்று சில சகோதரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் அல்மாயிதா 5:27 முதல் 30 வரையிலுள்ள முக்கிய பாகமான “…. நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (பின்னவர்) கூறினார்…..” அன்றியும் என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டுவாயானால் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டமாட்டேன். ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் (என்று முன்னவர் கூறினார்) என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன். அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகி விடுவாய். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும். (இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று. ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்து விட்டார். அதனால் அவர் நட்டமடைந்தவர்களில் ஒருவராகி விட்டார்” என்ற இறை எச்சரிக்கைகளை எடுத்துக்காட்டி, பொய்யன் பீ.ஜை. லஞ்சம் கொடுத்து தனக்குச் சாதகமான அநீதமான தீர்ப்பைப் பெற்றாலும் நான் ஒருபோதும் அவ்வாறு துணியமாட்டேன். எனது பாவங்களையும் அவரது பாவங்களையும் சுமந்து கொண்டு நாளை மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்கட்டும். பீ.ஜைக்கு அல்லாஹ்வைப் பற்றியும் மறுமையில் நடக்க இருக்கும் தீர்ப்பு நாளைப் பற்றியும் உறுதியான நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது என்றே பதில் அளித்து வருகிறேன்.
எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக, அவற்றை நிராகரித்து குஃப்ரிலாகி சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ததஜ என்ற தனி இயக்கத்தைக் கற்பனை செய்து, இளைஞர்களுக்கு, இளைஞிகளுக்கு தலைவர், செயலர், பொருளர், தொண்டரணி, குண்டர் அணி, மகளிரணி பதவிகள் என பேர், புகழ் என பதவி ஆசை காட்டி, குர்ஆனின் போதனைகளைத் தூக்கி முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டு பந்த், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், போராட்டம் என அவர்களின் இன உணர்வைத் தூண்டி, பொய் வாக்குறுதிகள் கொடுத்து தவறான – ஹராமான வழிகளில் லட்ச லட்சமாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கும் பொய்யன் பீ.ஜை.யின் தவறான வழியில் நான் செல்ல முடியாது. எனவே தவறான-ஹராமான வழிகளில் வந்த பணம், தவறான ஹராமான வழிகளில் செல்லும் என்பதுதான் நியதி.
அப்படி தவறான -ஹராமான வழிகளில் எனக்கு பணம் வராது. காரணம் நான் எந்தத் தனி இயக்கத்தையும் அமைத்துக் கொண்டு வசூல் வேட்டையி்ல் இறங்குவதில்லை. பொய்யன் பீ.ஜை.யால் ஏற்பட்ட இந்த திருச்சி, சென்னை கீழ்கோர்ட், மேல் கோர்ட் என நடந்த 3 வழக்குகளில் செலவானது நான் உழைத்துப் பெற்ற பணமே. பொதுப்பணத்திலிருந்து அதாவது அந்நஜாத்திலிருந்து இந்த வழக்குகளுக்கு சல்லிக்காசும் எடுக்கவில்லை. எனவே லஞ்சம் கொடுத்து பீ.ஜை. சொல்லியிருப்பது போல் தீர்ப்பை நான் வாங்கத் தயாரில்லை.
அதே சமயம் அநீதத்தை எதிர்த்து நீதமான வழிகளில் போராடுவது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனின் நீங்காக் கடமையாகும். பொய்யன் பீ.ஜை.மீது எனக்குச் சொந்தக்குரோதம் ஏற்படக் கடுகளவும் காரணமில்லை. எனது ஐந்து நிறுவனங்களிலும் அணுவத்தனை நட்டத்தையும் அவரால் ஏற்படுத்த முடியாது. அந்நஜாத் மாத இதழை எனது பிழைப்புக்குரிய வழியாகக் கொள்ளவில்லை. சம்பளம், போனஸ், கமிசன் என 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை பீ.ஜை. 30 ஆயிரம் ரூபாய் அந்நஜாத்தில் எடுத்துக் கொண்டிருந்தது போல், 1986 ஏப்ரலிலிருந்து 2010 இன்று வரை கடந்த 25 வருடங்களாக சல்லிக்காசும் நான் எடுக்கவில்லை. அதற்கு மாறாக வருட இறுதியில் துண்டு விழும் தொகையை நான் அந்நஜாத்திற்குக் கொடுத்து வருகிறேன். எனவே எனது பிழைப்பில் பீ.ஜை. கை வைக்கிறார் என்று அவர் மீது ஆத்திரம் கொள்ள வழியில்லை.
அப்படியானால் பீ.ஜை. அந்நஜாத்திலிருந்து வெளியேறியதிலிருந்து கடந்த 23 வருடங்களாக என்மீது அவதூறு பரப்புவதின் நோக்கம் என்ன? ஆம்! அவரது வயிற்றுப் பிழைப்பான புரோகிதத் தொழிலை நான் வேரோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது எனது சொந்தக் கருத்து இல்லை. அல்குர்ஆனில் எண்ணற்ற வசனங்கள் கூறும் சத்தியம் – நேர்வழி.
1431 வருடஙகளுக்கு முன்னர் உலமாக்கள் சபையான தாருந்நத்வாவையும், அதன் தலைவனான அபூ ஜஹீலையும் அழித்தொழித்து, தரைமட்டமாக்கி நிலைநாட்டிய வேற்றுமையில்லா ஒன்றுபட்ட சமதாயம் – சத்தியம் – நேர்வழி மீண்டு உயிர்பெற்று விடக் கூடாது; தங்களின் புரோகிதத் தொழிலே நீடிக்க வேண்டும் என்ற கெட்ட சுயநல நோக்கத்துடனேயே என்னைப் பற்றி அவதூறுகள் பரப்புவதன் மூலம் மக்கள் என்னை வெறுப்பார்கள். எனது பேச்சையோ, எழுத்துக்களையோ ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். அந்நஜாத்தைத் தொட்டுக் கூட பார்க்கமாட்டார்கள் என்ற கெட்ட சுயநல நோக்கத்துடனேயே பொய்யன் பீ. ஜை. செயல்பட்டு வருகிறார். 1986-87களில் சுன்னத் வல் ஜமாஅத் புரோகித மவ்லவிகள் செய்ததாக அந்நஜாத்தில் அன்று எழுதிய அதே பீ.ஜை. 1987க்குப் பிறகு இன்று வரை அதையே செய்து வருகிறார். அதாவது சத்தியம் – நேர்வழி மக்களுக்கு அறிமுகமாகிவிடக் கூடாது. மக்கள் இப்புரோகிதர்களைப் புறக்கணித்து அல்குர்ஆன் 7:3, 33:36,66,67,68, 59:7 இறைக் கட்டளைகள்படி குர்ஆனையும், நபியின் நடைமுறைகளையும் மட்டுமே நேரடியாகப் பார்த்து விளங்கி அதன்படி செயல்படும் சூழ்நிலை ஏற்படக் கூடாது என்ற ஷைத்தானிய முயற்சியில் பொய்யன் பீ.ஜை. முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதனால் அவரை அடையாளம் காட்டும் கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கீழ் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறேன். அங்கும் லஞ்சம் கொடுத்து தப்பிப்பாரேயானால், நாளை மறுமையில் 5:29 கூறுவது போல் எனது பாவங்களையும், அவரது பாவங்களையும் அவரே சுமந்து வரட்டும். இங்கு லஞ்சம் கொடுத்து தப்புவதுபோல் அங்கு லஞ்சம் கொடுத்து தப்ப முடியாது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் அறிவார்கள். இறுதியில் சத்தியமே வெல்லும்.
Friday, February 12, 2010
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment