தமிழகத்தில்
பால் விலை, பேருந்துகட்டணம் ஆகியன அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து
பல்வேறு கட்சித்தலைவர்களும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
மத்திய
அரசு பாரபட்சமாகச் செயல்படும் நிலையில், அதனை நிர்ப்பந்தித்து நம்முடைய
உரிமைகளைப் பெறுவது மிகவும் அவசியம். மாற்று வழிகளை கண்டறிந்து இன்றைய
நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.அதை விட்டு
விட்டு, மக்களின் மீது கட்டண உயர்வை உயர்த்துவது எந்தவிதத்திலும்
நியாயமானது ஆகாது. எனவே, ஏற்றியிருக்கும் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற
வேண்டும் என்று பொதுவுடமை கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்
தெரிவித்துள்ளார்.
மமக கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
"ஏற்கனவே
பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப்
பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு
அறிவித்துள்ள இந்த விலை உயர்வு மேலும் சுமையாக அமைந்துள்ளது.
தமிழக
அரசு பேரூந்து கட்டணத்தை 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலும், ஆவின் பாலை
6.25 ரூபாய் வரையிலும் விலையை உயர்த்தியுள்ளது கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. இது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக
பாதிக்கக் கூடியதாகும்.
ஆகவே
தமிழக முதல்வர் அவர்கள், ஏழை எளிய, நடுத்தர மக்களின் பாதிப்புகளை
கவனத்தில் கொண்டு விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்
என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அ.தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில்
தெரிவித்திருந்த படி, ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத்
துரிதப்படுத்தியிருந்தால், பால் விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும்
என்று பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment