Tuesday, May 8, 2018

நறுமணம் வீசும் பூங்காவனம்" (al Raud al Atir Fi Nuzhat al Khatir )


 https://marhum-muslim.blogspot.in/
   (வயது வந்தோருக்கு மட்டும்)       
 
"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக" பலர் கருதுகின்றனர்.
அப்படியான தப்பெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல. முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய பாலியல் நூல்களின் இருப்பை மூடி மறைத்து தூய்மைவாதம் பேசுகின்றனர்.
Image result for பூக்கள் photosகிறிஸ்தவ வரலாற்றில் இடையில் சிறிது காலம் Renaissance என அழைக்கப்படும் அழகியல் கலையின் காலம் இருந்தது. அந்தக் காலத்தை சேர்ந்த ஓவியர்கள், கவிஞர்கள் சுதந்திரமாக எதையும் வெளிப்படுத்த முடிந்தது. இன்றைக்கும் இத்தாலியில் இவர்களின் படைப்புகள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.
இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், அந்தக் காலகட்டத்தில் மட்டுமே நிர்வாண ஓவியங்கள் வரையப்பட்டன. அதற்கு முன்னரும், பின்னரும் கிறிஸ்தவ மதம் அந்த அனுமதியை வழங்கவில்லை.
இஸ்லாமிய நாகரீகத்திலும் அது போன்ற Renaissance காலகட்டம் இருந்துள்ளது. குறிப்பாக பாக்தாத்தில் இருந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த கலீபாக்களின் காலத்தில் சுதந்திரமான கலை வெளிப்பாடு அனுமதிக்கப்பட்டது. காமம் கலந்த செய்யுள்கள் அந்தக் காலத்தில் புனையப் பட்டன.
அன்றைக்கு எழுதப்பட்ட "ஆயிரத்தொரு இரவுகள்" என்ற இலக்கியம், இன்றைக்கும் பலரால் விரும்பிப் படிக்கப்படுகின்றது. வாசகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் பாலியல் வர்ணனைகள் கொண்ட கதைகள் பல அதில் உள்ளன.
இந்தக் கதைகளின் பூர்வீகம் மத்திய ஆசியா. இருப்பினும், வாய் வழி இலக்கியமாக இருந்த கதைகளை அரபு மொழி செழுமைப்படுத்தியது. தலை சிறந்த இலக்கியமாக உலகிற்கு வழங்கியது.
கதைகள், செய்யுள்கள் மட்டுமல்ல, பாலியல் கல்வியை போதிக்கும் நூல்களும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டன. சில நேரம் ஆன்மீகத்தை போதிக்கும் இஸ்லாமிய மதகுருக்கள் கூட அவ்வாறான நூல்களை எழுதியுள்ளனர்.
உதாரணத்திற்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய நூல்களின் பட்டியலை இங்கே தருகின்றேன்.
"உங்கள் அன்புக்குரியவரை வசீகரிகரிக்கும் கையேடு" - எழுதியவர் Ahmad al Falitha
"சந்தையில் ஆபரணங்கள்" - (காதல் கதைகள்), எழுதியவர் Abdalrahman al Shauzari
"திரை விலக்கப்பட்ட உடலுறவின் ரகசியங்கள்" - எழுதியவர் Shihab al Din al Tifashi
"புத்தகங்களில் சொல்லப்படாத உலகத்தை சுற்றிப் பார்த்தல்" - எழுதியவர் Abdal Wahab Ibn Sahnun
"மகிழ்ச்சியான ஆத்மா" - எழுதியவர் Ibn Ahmad al Tijani
"காதலுக்கும் காமத்துக்குமான அறிமுகம்" - எழுதியவர் Abdal Salam al Laqani
Umar al Nafzawi எழுதிய "நறுமணம் வீசும் பூங்காவனம்" (al Raud al Atir Fi Nuzhat al Khatir ) நூல் காமசூத்ராவுடன் ஒப்பிட்டு பார்க்கத் தக்கது. ஆயிரம் வருட பழமையான நூலை இன்றைக்கும் அரேபியர்கள் இரகசியமாக படிக்கிறார்கள்.
1850 ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரர்களால் துனீசியாவில் கையெழுத்துப் பிரதியாக கண்டெடுக்கப் பட்டது. அப்போதே அந்த நூல் பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
அரபு இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட Richard Burton அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். உடலுறவு வகை மாதிரிகளைக் காட்டும் படங்களைப் பார்த்து ஆபாசம் என்றுணர்ந்த அவரது மனைவி நூலை எரித்து விட்டார்.
அன்று இங்கிலாந்தில் இருந்த கிறிஸ்தவ தூய்மைவாத கலாச்சாரம், பாலியலை பேசக்கூடாத மறைபொருளாக வைத்திருந்தது. இருப்பினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் இப்பொழுதும் ஒரு மூலப்பிரதியை பாதுகாத்து வைத்திருக்கிறது.
நறுமணம் வீசும் பூங்காவனம் உடலுறவு செய்முறைகளை விளக்குவது மட்டுமல்ல, ஆண்குறியையும், பெண்குறியையும் நாற்பது பெயர்களில் அழைக்கின்றது.
உதாரணத்திற்கு Nafzawi எழுதும் உடல் உறவு செய்முறை விளக்கம் ஒன்று: "விசேஷமாக குறி சிறிதாக உள்ள ஆண்களுக்கு. கலவியில் ஈடுபடும் பெண்ணின் முதுகை செங்குத்தாக சரித்து வைக்க வேண்டும். கால்களை தலைக்கு பக்கத்தில் தூக்கி வைத்திருக்க வேண்டும். கணுக்கால்கள் காதுமடல்களை முட்ட வேண்டும். அவளது யோனி மேல் எழும் நேரம் உன்னுடைய குறியை அறிமுகப் படுத்தலாம்."
மேற்குறிப்பிட்ட "இஸ்லாமிய காமசூத்ராவை" எழுதிய Al Nafzawi ஒரு மத நம்பிக்கையாளர் என்பதில் ஐயமில்லை. அவரே தனது எழுத்துக்கள் ஒன்றும் பாவகாரியமல்ல என்று தெளிவு படுத்துகிறார்.
நான் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன். இந்த நூலில் உள்ள அறிவுச்செல்வங்கள் அனைத்தும் மனிதர்க்கு அவசியமான தகவல்களைக் கொண்டவை. இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆணின் இன்பம் பெண்ணின் உடல் பாகங்களில் தங்கியுள்ளது. பெண்ணின் இன்பம் ஆணின் உடல்பாகங்களில் தங்கியுள்ளது."
நறுமணம் வீசும் பூங்காவனம் நூல் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது:
The Perfumed Garden
of the Shaykh Nefwazi,Translated by Sir Richard Burton

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment