Thursday, January 16, 2014

நரேந்திர மோடியின் பயம்..!

மோடியின் பிரதமர் கனவை தவிடு பொடியாக்கிக் கொண்டு இருக்கும் அரவிந்த் கேஜரிவால்!
[ ஆம் ஆதமியை கண்டு மோடி பயப்படுவது உண்மை ..டெல்லி தேர்தல் களம் அதை உணர்தியது ...மக்களுக்கு பிஜேபியும் வேண்டாம் .காங்கிரசும் வேண்டாம் .மக்களுக்கு நல்ல ஆட்சி தான் வேண்டும்... அதை தேடுகிறார்கள்.
நரேந்திரமோடியை இந்திய பெருமுதலாளிகள் "பிரதமர் பதவிக்கு தகுந்த பொருள்" என்று விழித்த பின்னர் அவர் தன்னை ஊடகங்களில் தொடர்ந்து முகத்தை காட்டும் படி ஏற்பாடுகளை செய்து கொண்டார்.
இவர் குஜராத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து கொண்டார். ஆனால் ''ஆம் ஆத்மி'' கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் இவருடைய முக்கியத்துவம் ஊடகங்களில் குறைந்துவிட்டது. அதனால் தான் இவர் இப்படி ஒரு சொல்லாடலை உபயோகபடுத்தியுள்ளார்.
''ஆம் ஆத்மி'' கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் அவர்கள் மக்கள் நல திட்டங்கள், லஞ்ச ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார்கள். ஆனால் நரேந்திரமோடி ஊழல் கறைபடிந்த பெருமுதலாளிகளோடு கொஞ்சி குலாவி வருகிறார்.]
காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த பா.ஜ.க, ஊழலைக் காரணம் காட்டி காங்கிரஸை எதிர்க்க முடியாது என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. ஏனெனில் ஊழலில் காங்கிரஸும் பாஜகவும் சமநிலையில் உள்ளன.
அன்னா ஹசாரே என்ற முகமூடியைப் பயன்படுத்த திட்டமிட்டு வாழும்கலை என்ற பெயரில் சங்பரிவாரத்துக்கு ஆள் பிடிக்கும் ரவிசங்கர் என்பவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணா விரதம் இருக்க வைத்தனர். இதற்கு முன் அன்னா ஹசாரேயை யாருக்கும் தெரியாது.
இதற்காக பெருமளவில் செய்யப்பட்ட விளமபரங்களுக்கும் உண்ணாவிரதத்துக்குவரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் நான் தான் உதவி செய்தேன் என்று ரவி சங்கரே வாக்கு மூலம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன பாஜகவினர் தங்களுக்கு ஆதரவான மீடியாக்கள் மூலம் அன்னா ஹசாரேவை தூய்மையின் மறுவடிவம் என்று சித்தரித்தனர்.
தனக்குப் புகழ் கிடைக்கிறது என்பதற்காக காங்கிரஸை மட்டும் ஊழலின் ஒரே அடையளம் என்ற தோற்றத்தை அன்னா ஹசாரே ஏற்படுத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது காங்கிரஸை ஒழிக்க பாஜவை ஆதரிக்குமாறு அன்னா ஹசாராவை அறிக்கை விடச் செய்தும் பிரச்சாரத்தில் இறக்கியும் ஆதாயம் அடையலாம் என்பது பாஜகவின் கணக்கு.
சங்பரிவாரத்தின் மறைமுக ஆதரவுடன் தான் இப்போராட்டம் நடக்கிறது என்பதை அறியாமல் ஊழலை ஒழிப்பதில் உண்மையான அக்கரையுள்ள இன்னும் சிலரும் அன்னாஹசாரேயுடன் சேர்ந்து கொண்டனர். சங்பரிவாரத்தை எதிர்ப்பதில் உறுதியான பிரசாந்த் பூசன் உள்ளிட்டவர்களும் ஹசாரேக்குப் பின்னால் திரடண்டனர்.
ஹசாரேயுடன் இணைந்து ஊழல் ஒழிப்பில் இறங்கிய கெஜ்ரிவால், பிரசாந்த் பூசன் போன்றவர்கள் ஹசாரே காங்கிரசின் ஊழலை மட்டும் எதிர்ப்பதையும், கர்நாடக சுரங்க ஊழல், லோக்பால் அமைக்க மறுக்கும் மோடியின் ஊழல் ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் ஹசாரே இருப்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டனர்.
தங்களுக்கு ஆதரவாகத் திரளும் மக்கள் காங்கிரஸின் ஊழலை மட்டுமின்றி பாஜகவின் ஊழலையும் எதிர்ப்பவர்கள் இரண்டும் அல்லாத இன்னொரு மாற்று சக்தியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் துல்லியமாகக் கணக்கிட்டனர்.
அன்னா ஹசாரே பாஜகவின் கைக்கூலி என்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டு நாமே தனிக் கட்சி ஆரம்பித்தால் என்ன என்று சிந்தித்து களமிறங்கினார்கள்.
காங்கிரஸ் எதிர்ப்பு அலையைப் பயன்படுத்தி வெற்றி பெற நினைத்தவர்களின் வாயில் கெஜ்ரிவால் மண்ணை அள்ளிப்போட்டார். ஹசாரேவுக்குப் பின்னால் திரட்டப்பட்ட மக்களில் 90 சதவீதம் பேரைத் தன்னுடன் இழுத்துச் சென்று ஆம் ஆத்மி (பொதுஜனம்) என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். டெல்லி தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றதன் மூலம் சரியான மாற்று அணி இருந்தால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள் பீஜேபிக்குப் போகாது என்பதை நிரூபித்துக் காட்டினார்.
தான் விரித்த வலையில் தானே விழுந்த கதைக்கு பாஜவின் இந்தக் கேடுகெட்ட செயலைத் தவிர வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
ஆம் ஆத்மி ஆரம்பித்து அதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் கண்டுகொண்ட பின்தான் ஹசாரேயின் ஆதரவு இனி ஒன்றுக்கும் உதவாது என்பதை உணர்ந்து மோடியை வைத்து பெறப் பார்ப்போம் என்று தனது பாதையை மாற்றிக்கொண்டது பாஜக.
அன்னா ஹசாரேக்கு சிலர் சிலை வைக்க முயன்ற போது அதற்கு எதிர்ப்பு எழுந்தது. உடனே தனது சிலையை வைக்க ஆதரவு கேட்டு ஹசாரே பாஜகவுக்கு கடிதம் எழுதினார். தனது சிலையை வைக்க தானே ஆசைப்படும் புகழ் விரும்பி என்பதும் பாஜகவின் கைக்கூலி என்பதும் இதன் மூலம் இன்னும் நிரூபணமானது. இந்தக் கடிதம் இவர்களின் கூட்டுச் சதியை இன்னும் தெளிவாக நாட்டு மக்களுக்கு உணர்த்தி விட்டது.
சங்பரிவாரத்தால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஹசாரே, கெஜ்ரிவாலை ஊதிப்பெரிதாக்கினார்.
ஆனால் ஹசாரேயை பாஜக ஊதியதை விட ஹஸாரே கெஜ்ரிவாலை அதிகம் ஊதிப் பெரிதாக்கிவிட்டார்.
நான் ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஹசாரே பேட்டி கொடுத்தும் அது மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. மக்கள் ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாஜக அல்லாத இன்னொரு சக்தியைத் தான் எதிர்பார்த்த்தார்களே தவிர காங்கிரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தி அதன் ஆதாயத்தை பீஜேபி அடைவதை மக்கள் விரும்பவில்லை.
நரேந்திர மோடிக்கு பில்டப் கொடுத்த ஊடகங்கள் மோடியின் பெண் தொடர்பு காரணமாக அவரை அருவறுப்பாகப் பார்த்தனர். எப்படி பல்டி அடிப்பது என்று தெரியாமல் விழித்தனர். ஆம் ஆத்மியில் டெல்லி வெற்றிக்குப் பிறகு மோடியைக் கீழே போட்டு விட்டு ஆம் ஆத்மி புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.
புதிதாக வாக்களிக்கும் உரிமையை பெற்ற 18 - 19 வயது நிரம்பியவர்கள், மற்றும் தகவல் தொழிற் நுட்ப துறையில் பணிபுரிவோர், போன்றோர்களுக்கு மோடியை நாட்டை காக்க வந்த இரட்சகர் போன்ற ஒரு மாயையை பிஜேபி காட்டி வந்தது, ஆனால் உண்மையில் காங்கிரஸ் ஊழலால் வெறுத்து ஒதுங்கியவர்கள் பிஜேபி யும் அந்த ஊழல்களில் சளைத்தவர்கள் இல்லை என்பதால், காங்கிரஸ் அதிருப்தி வாக்காளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தது தான் ஆம் ஆத்மி வெற்றிக்கு காரணம், ஆக காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்ய வேண்டிய பாஜக, ஆம் ஆத்மி மூலம் அதை பறி கொடுத்தது.
மற்ற மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிர்ப்பான ஓட்டுகளை ஆம் ஆத்மி போன்று மாற்று எதிரி இல்லாததினால் பிஜேபி பெற்று கொண்டதே தவிர, அந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி அலை என்று ஒன்று இருக்கவே இல்லை, மாறாக இவர்கள் சொல்லும் மோடி அலை என்பது காங்கிரஸ் எதிர்ப்பு அலை தான். டெல்லியில் ஆம் ஆத்மி போட்டி இட்டதால் அந்த வாக்குகள் ஆம் ஆத்மிக்கு போக மற்ற மாநிலங்களில், ஆம் ஆத்மி போன்ற ஊழல் எதிர்ப்பு கட்சிகள் இல்லாததால் பிஜேபி க்கு சென்றது,
இப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் போட்டி இடப்போவதால், நாடு முழுக்க உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள், காங்கிரஸ் & பிஜேபி அல்லாத கட்சியை விரும்புவர்களின் ஓட்டுகளை ஆம் ஆத்மி பெறுவதால், ஆம் ஆத்மி பிரிக்க போகும் ஓட்டு பிஜேபிக்கு வரவேண்டிய ஓட்டுக்கள் தான், 5 மாநில தேர்தலுக்கு முன்பு புலி மாதிரி ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட மோடி, இப்போதெல்லாம் அரிதாகி பூனையாகி போனார், ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் போட்டி இட்டால் நஷ்டம் காங்கிரஸ்க்கும் தான், ஆனால் ஒப்பீட்டு அளவில், பிஜேபிக்கு தான் நஷ்டம் அதிகம்,
டெல்லி தேர்தலுக்குப் பின் காங்கிரஸும் வேண்டாம்; பாஜகவும் வேண்டாம் என்று விரும்பக் கூடிய மக்கள் ஆம் ஆத்மியின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதை உணர்ந்து கொண்ட ஆம் ஆத்மியும் 300 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது வரைமோடி தனி நபர் தாக்குதலையே தொடுத்து வருகிறார். ஒரு பிரதமர் வேட்பாளருக்குரிய பக்குவமோ பெருந்தன்மையோ அவரிடத்தில் காணப்படவில்லை. மேலும் கொள்கை அளவில் அவர் காங்கிரஸ்சிடமிருந்து வேறு படுகிறார் என்பதை அவரும் மற்ற பி ஜே பி யினரும் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அவர் உழலை மட்டுமே மைய படுத்தி பேசிவருகின்றர்கள். மேலும் மோடி முதலாளிகளின் வளர்ச்சியை மட்டுமே நாட்டின் வளர்ச்சியாக பார்க்கின்றார். காங்கிரஸ் அந்நிய முதலாளிகளை பற்றி கவலை பட்டது, ஆட்சி செய்தது. மோடி உள்நாட்டு முதலாளிகளை பற்றி கவலைபடுபவர். ஊழலில் பி ஜே பி ஒன்றும் சளைத்தது அல்ல. நமக்கு தேவை சாமானியனை பற்றி நினைக்கும் ஒரு பிரதமர். அவர் யார் என்பதை மக்கள் பணத்துக்கோ பேச்சுக்கோ மயங்காமல் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நரேந்திரமோடியை இந்திய பெருமுதலாளிகள் "பிரதமர் பதவிக்கு தகுந்த பொருள்" என்று விழித்த பின்னர் அவர் தன்னை ஊடகங்களில் தொடர்ந்து முகத்தை காட்டும் படி ஏற்பாடுகளை செய்து கொண்டார். இவர் குஜராத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து கொண்டார். ஆனால் ''ஆம் ஆத்மி'' கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் இவருடைய முக்கியத்துவம் ஊடகங்களில் குறைந்துவிட்டது. அதனால் தான் இவர் இப்படி ஒரு சொல்லாடலை உபயோகபடுத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி டில்லியில் ஆட்சியை பிடித்த பின்னர் அவர்கள் மக்கள் நல திட்டங்கள், லஞ்ச ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார்கள். ஆனால் நரேந்திரமோடி ஊழல் கறைபடிந்த பெருமுதலாளிகளோடு கொஞ்சி குலாவி வருகிறார். மேலும் இவர் மந்திரி சபையில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஊழல் கறைபடிந்த மந்திரி ஒருவரும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிய பெற்ற மந்திரி ஒருவரும் பங்குபெற்று ஆட்சி பரிபாலனம் செய்து வருகிறார்கள்.

//மோடியின் நிர்வாகத்திறமை நாடறிந்ததுதான்// ஆம்! ஊடகங்களாலும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் தயவாலும் பொய்யான பிம்பத்தின் உதவியால் "திறமைசாலி"யானவர். பொய்யும் போலியும் என்றைக்கேனும் வெளிச்சத்துக்கு வந்தே தீரும். மோடி பிரதமரானால் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்குத்தான் கொண்டாட்டம். கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு கொண்டாட்டம் என்றால் பாமர மக்களுக்கு திண்டாட்டம் என்று அர்த்தம். இதுகூட பாமர இந்தியனுக்கு புரியாதா என்ன?
மோடியின் பிரதமர் கனவு கேஜ்ரிவால் மூலம் கலைந்து விட்டதாகவே நமக்குத் தெரிகிறது.

-------------
நரேந்திர மோடிக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் கிரண் பேடியின் முகத்திரையும் கிழிகிறது....
என்னென்னமோ பேசிவிட்டு கடைசியில் கழனிப்பானைக்குள் கைவிட்ட கதையாக போகிறதே?! அம்மணி! தாங்கள் இவ்வளவு நாளும் பேசியது இதற்குத் தானா?
பதவி ஆசை வந்துவிட்டது போல் ஒரு மாயை. எப்படியாவது ஒரு கவெர்னர் பதவி பெற்று இன்னும் கொஞ்ச நாளைக்கு காலத்தை அரசு செலவில் ஓட்டலாம் என்று கணக்கு இருக்கலாம். அதற்காக மோடியை தூக்கி வைத்து அறிக்கை விடுவது அழகல்ல..
கிரண் பேடி வாழ்நாளில் அறுபது வருடங்களை மத்தியில் ஆண்ட காங் பிஜேபி கட்சியின் எடுபிடிகளுக்கு பல்லக்கு தூக்கிவிட்டு பென்ஷன் வாங்கிக்கொண்டு பொழுதுபோக்கிற்காக அரசியிலில் ஈடுபடகின்றவர இவர் ஒருவர் சொல்வதனால் தொங்கு பாராளுமன்றம் அமையாமல் நிலையான ஆட்சி அமைந்துவிடாது கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கட்சிக்கு முழு ஆதரவு கொடாத போழ்து நிலையான எடியுரப்பா செய்த ஊழலை கிரண்பேடி ஆதரிக்கின்றார் போலும் காங் க்கு மாற்றாக மத்தியில் இப்படிப்பட்ட ஊழல் இந்தியமக்களுக்குள் வேற்றுமையை உருவாக்கி ஆட்சி நடுதிடத்தான் பிஜேபி க்கு வாக்களிக்கப்பார் போலும்
இவர்களை போன்றவர்களின் விசாரணையால் மோடி தப்பித்து கொள்கிறார்.இறைவனிடம் நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு.அனைத்து மக்களும் ஏற்று கொள்கிற தலைவனே இந்த நாட்டுக்கு தேவை. 'போலி மதச்சார்பின்மை ' என்ற கருத்தை கூறி நியாயபடுத்தும் மோடி ஆதரவாளர்கள் மதச்சார்பின்மைக்கு என்ன விளக்கம் தருகிறார்கள்.
ஹஜாரேயும், கிரண் பேடியும் கேஜ்ரி வாலின் மீதுள்ள பொறாமையில் தினம் தினம் வெந்து கொண்டிருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மை...!


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.