கற்பழிப்புக்
கோடாரி…! (RAPE AXE)
நாகரீகம் வளர்ந்த
இந்த காலக்கட்டத்தில் கூட பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்களின் ஆதிகால குணம்
இன்னமும் மாறவில்லை . இந்த எண்ணம் மிகுதியாக
இருப்பதால் தான் இன்றும் பெண்கள் கற்பழிக்கப்படும் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அதிலும் வட இந்தியாவில் கற்பழிப்பு என்றால் நாடே கொதித்தெழுகிறது.
தென் இந்தியாவில்
கற்பழிப்பு என்றால் அந்தந்த மாநிலங்கள் கூட
கண்டு கொள்வதில்லை. உலகில் தினந்தோறும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கற்ப்பழிக்கப்படுகிறார்கள்.
அதிலும் தென்னாப்பிரிக்காவின் நிலைமை படுமோசம் . உலகிலேயே அதிக கற்பழிப்பு நடக்கும்
நாடுகளிலேயே முதலிடம் தென்னாப்பிரிக்காவுக்குத்தான். இங்கு 20 பெண்ணுக்கு ஒரு பெண்
கற்ப்பழிக்கப்பட்டவராக இருக்கிறாள். ஆண்களில்28 சதவிகிதத்தினர் பெண்களை கற்பழிப்பவர்களாக
இருக்கிறார்கள்…அதனால் கற்பழிப்பு, இஙகுசாதாரண நிகழ்வாக மாறி விட்டது.
தென்னாப்பிரிக்கா அரசும் என்னென்னவோ சட்டம் போட்டு பார்த்தது..? எதுவும்
கற்பழிப்பைக் கட்டுபடுத்தியதாக தெரியவில்லை. அங்குள்ள மனித மனங்களும் இதற்குப் பழக்கப்பட்டு மறத்துப் போய்விட்டது. ஆனால்,
பெண் மருத்துவரான சானட் எக்லெர்சால் அப்படியிருக்க முடியவில்லை..அவரின் மருத்துவமனைக்கு கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின்
வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த்து.
பாவப்பட்ட அந்தப்
பெண்களைப் பார்க்கும்ப்போதெல்லாம் சானட்டுக்கு உள்ளம் கொதித்தது. கோபமும்,ஆத்திரமும்
பொத்துக்கொண்டு வந்தது
அப்போது ஒருநாள்
20 வயதுப் பெண் அவரைத் தேடி வந்தாள். அவள் உடலெங்கும் நகக்கீறல்களும், பற்களால் கடித்த
காயமும் இருந்தன. ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது .கொடூரமான நான்கு ஆண்கள் விடிய விடிய….மாறி
மாறி… அந்த பெண்ணைக் கற்பழித்திருந்தனர்..
வேதனையின் விளிம்பில்
இருந்த அந்தப்பெண் வெறி பிடித்தவள் போல கத்தினாள். எனக்கு மட்டும் அந்த இடத்தில் பல்
இருந்திருந்தால் அத்தனை பேரையும் கடித்து கிழித்திருப்பேன்” என்றாள்.
இந்த குரல்,கற்பழிப்பால்
பாதிக்கப்பட்ட பெண்களின் ஒட்டு மொத்த மனசாட்சியாக
சானட்டுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது அந்தப் பெண்ணின் ஆற்றாமையை எப்படியாவது செயலாக்க
வேண்டும் என்று முடிவெடுத்தார். இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார். 40 வருட
தொடர் ஆய்வுக்குப்பின் கற்பழித்தவனை கையும் களவுமாக பிடித்து விடும் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார்.
அதுதான் “ரேப்ஆக்ஸ்”-கற்பழிப்புக் கோடாரி
.
.
ரேப் ஆக்ஸ் என்றால்
என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஆண்களுக்கு ஆணுறை என்ற ஒன்று இருப்பது போல் பெண்களுக்கு பெண்ணுறை இருக்கிறது.
இது குழந்தை பிறப்பை தடுக்கவும் பால் வினை நோய்கள் தொற்றாமல் இருப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டது ஆணுறையைக்
காட்டிலும் சிறந்தது. இது மிகவும் மெலிதானது… மென்மையானது. எளிதாகப் பொருத்திக் கொள்ளக்
கூடியது.
பெண்ணுறை பெண்
பிறப்புறுப்பின் உள் வெப்பத்தால் ஈர்க்கப்பட்டு, அதன் உட்புறச் சுவரில் நன்றாக ஒட்டிக்
கொள்ளும். கிட்டத்தட்ட இது யோனியின் இரண்டாவது தோல் போன்றது. ஒரு பெண் பெண்ணுறை அணிந்திருப்பது
வெளிப் பார்வைக்கு தெரியாது. உறவுக் கொள்ளும் ஆணாலும் அதைக் கண்டு பிடிக்க முடியாது.
மிகவும் மென்மையானது என்பதால் இயற்கையான உணர்வே இருக்கும்.
டாக்டர் சானட்
இந்த பெண்ணுறையில் தான்
லேசான மாற்றங்களை செய்து ரேப் ஆக்ஸை உருவாக்கினார்.
பெண்ணுறையில் உள் பக்கத்தில் பற்கள் போன்ற அமைப்பை உருவாக்கினார். அது “ஒன் வே” டெக்னிக்
முறையில் அமைத்தார்.
ஒரு வழி என்பது
உள்ளே போகும் போது எந்த வித்தியாசமும் தெரியாது. வெளியே இழுக்கும்போது பற்கள் கவ்விப்
பிடித்து கொள்ளும்.எடுக்க முடியாது. வலுக் கட்டாயமாக இழுத்தால் பற்கள் குத்திக் காயம்
ஏற்படுத்தி விடும்…இந்த தொழில் நுட்பம்தான் இந்த பெண்ணுறையில் அமைக்கப்பட்டது.
ரேப் ஆக்ஸ் பொருத்திக்
கொண்டுள்ள ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்ச்சிக்கும் போது…. இறுதியாக உட் செலுத்தியவுடன்
“லாக்” ஆகி விடும். அதன் பின் அவனால் முன்
பின் அசைய முடியாது. பற்களோடு இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும்…
பெண்ணுறை வெளியே
எடுக்கும்போது மேலும் ஆழமாக பதிந்து நரக வேதனையைக் கொடுக்கும். அதையும் பொறுத்துக்
கொண்டு முரட்டுதனமாக இழுத்தால், ஆணுறுப்பை இறுக்கமாகப் பிடித்திருக்கும் பெண்ணுறையும்
கவ்விப் பிடித்தபடியே வெளியே வந்து விடும்.. தொடர்ந்து தன் பற்களால் கடித்தப்படியே
இருக்கும்..
கற்பழிப்பு கயவனால்
அதோடு நடக்க முடியாது..
ஆடை அணிய முடியாது.
அதன் மீது எதுப்பட்டாலும்
வலியால் உயிர் போய் விடும்..
அதை அவனால் விடுவிக்கவும்
முடியாது.
டாக்டரால் மட்டுமே
ஆபரேஷன் செய்து எடுக்க முடியும்.
ஆணுறுப்பின் தோல்
முழுமையாக சேதம் அடைந்து இருப்பதால் அதை நீக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.ஆணிண் பாலுணர்வு
உணர்ச்சி நரம்புகள் எல்லாமே தோலில்தான் குவிந்திருக்கின்றன…தோலை நீக்கிய ஆணுறுப்பு
பாலியல் கிளர்ச்சியற்றதாகவே இருக்கும். இதை விட ஒரு பெரிய தண்டனை அந்த ஆணுக்கு வேறு
யாராலும் கொடுக்க முடியாது.
தென்னாப்பிரிக்காவில்
இது மிகவும் புகழ் பெற்று உள்ளது.
அங்கு கற்பழிப்பின்
எண்ணிக்கை குறைந்து உள்ளது.
பெண்களுக்கு இது
பாதுக்காப்பானது என்ற சான்றிதழும் கிடைத்துள்ளது.
30 ஆயிரம் பெண்களுக்கு
இலவசமாக பொருத்தியுள்ளார் டாக்டர் சானட்..
இப்போது தென்னாப்பிரிக்காவின்
எல்லாக் கடைக்களிலும் கிடைக்கிறது.
ரேப் ஆக்ஸ் ஒன்றின்
விலை இரண்டு அமெரிக்க டாலர்கள்தான்.. நமது
இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ150 ஆகும்…
இதை எல்லாப்
பெண்களும் அணியும் படி செய்தாலேபோதும் எந்த கற்பழிப்பும் நடைபெறாது..
இதை பொருத்தியிருப்பாள்
என்ற எண்ணமே எந்த ஆணையும் பெண்ணிடம் நெருங்க விடாது.
நன்றி:
ஜென்ட்ஸ்&ஸ்டைல்………… செப்டம்பர் 2013-இதழ்- பக்கம் 17,18
நம்ம
கருத்து
மேன்மை தாங்கிய
முதல்வர் அம்மா அவர்களின் கனிவான கவனத்திற்க்கு
எதைஎதையோ இலவசமாக
கொடுக்கும் அரசு இளம் பெண்களுக்கு ரேப் ஆக்ஸை
இலவசமாகக் கொடுக்கலாமே……
தமிழத்தின் முதலமைச்சரான பெண்ணினத்தை சார்ந்த செல்வி. ஜெ .ஜெயலலிதா அவர்கள் இதற்கான முயற்ச்சியில்
ஈடுபடுவார்
என எதிர்பார்க்கிறோம்…இன்ஷா அல்லாஹ்…..