Thursday, November 7, 2013

இளைஞர்களின் சீரழிவு...!

இன்றைய கால கட்டத்தில் ஏற்பட்டுள்ள அளவு கடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் வீட்டிலிருந்தபடியே உலகம் முழுவதையும் சுற்றி வர இணையத்தளத்தின் மூலமாக எளிதில் அடைய முடிகின்றது. இதன் மூலமாக நன்மைகளும் அதே அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளும் உள்ளன. இதனை அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும், மனப்பான்மையும் அனைவரிடமும் ஏற்பட்டுவிடாது.

முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞசர்கள் இவற்றின் மூலம் எந்தளவு உயர்ந்திருகின்றனரோ அதே அளவில் சமுதாயத்தில் சீர்கேட்டும் உள்ளனர். இலட்சிய பாதையில் செல்லவேண்டிய இளைஞசர்கள் வழித்தவறி சமுதாய சீர்கேடு என்னும் புதைமணலை தேடி அறியாமல் வாழ்க்கையினை இழக்கின்றனர்.

இணையத்தளங்கள் எந்தளவு இளைய சமுதாயத்தை பாதித்துள்ளது அதனை பார்ப்போம். இணையத்தளத்தில் பரவிவரும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவின் மூலமாகவும் சீரழிந்து போகும் இளைஞசர்களின் எண்ணிக்கை உயர்ந்ந்து வருகிறது. எத்தனை சட்டம் போட்டாலும் அதனையும் மீறி இவை வீரநடைபோடுகிறது.

பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் இணையதளத்தை பார்க்ககூடாது என்ற காவல்துறையின் உத்தரவை மீறி பணம் சம்பாதிப்பதற்காக சில பிரவுசிங் சென்டர்களில் இளைஞசர்களை இணையத்தளம் பார்க்க அனுமதிக்கின்றனர்.

இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல பல வாய்ப்புக்கள் இருந்தாலும் அவர்களை எளிதில் அடையக்கூடிய இணையத்தின் மூலமாகவே அதிக அளவில் தவறான பாதையை நாடுகின்றனர். இணைய ஆபாசங்கள் அனைத்தும் இளைய சமுதாயத்தை மையமாகக்கொண்டு செயல்படுத்துகின்றனர்.

அன்றைய காலங்களில் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவில் இல்லாத காரணத்தினால் இவர்களை கண்காணிப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் இவற்றின் அபார வளர்ச்சியினால் அவர்களை கண்காணிப்பது அரிதாகிவிட்டது .கணினி என்பது உலக நாடுகளில் வளர்ந்த அமெரிக்க, பிரிட்டன போன்ற நாடுகளில் 1900 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணினியை பயன்பாட்டில் வைத்திருந்தனர். பின்னர் அவை சிறிதுசிறிதாக வளர்ந்து ஏனைய நாடுகளுக்கும் பரவின.

இந்தியாவில் கணினி என்பது 1970-ல் தான் வரத்தொடங்கின. அப்பொழுது பெயரவில் மட்டும் இருந்த இவை 1980-களில் பெரிய நிறுவனங்களில் அங்கொன்றும் ,இங்கொன்றுமாக இருந்தான. பின்பு 1990-களில் செல்வந்தர்கள் வீட்டினை அலங்கரித்தன. அவர்களால் மட்டுமே வாங்கும் அளவு அதன் மதிப்பு இருந்தன.

அதன் பிறகு 2000-2011-களில் அனைவரும் வீட்டில் வைத்து பயன்படுத்தும் அளவு வளர்ச்சியடைந்தது. அதுமட்டுமின்றி இணைய இணைப்பு என்பதும் இக்காலங்களில் வளர்ச்சியடைந்து, வீட்டின் ஒருவராகவே மாறியது.

இதன் குறுகிய கால வளர்ச்சியானது நமது இளைய சமுகத்தினரிடையே பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக கணினி அல்லாத கல்விமுறை இல்லை என்ற கட்டாய நிலைக்கு மாறியது. இம்மாற்றத்தினால் வீட்டிற்கு ஒரு கணினி என்ற கட்டாய நிலைமை உருவாக்கியது. தற்போது நமது அரசே இப்பணியினை செவ்வன செய்கின்றது.

கணினி மற்றும் இணையத்தின் பயன்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது, இவையின்றி எதுவும் நடக்காது என்ற அளவில் இன்றைய சமுதாயம் உள்ளது. ஆன்-லைன் என்ற வசதியின் மூலம் தேர்வுகள், பயண சீட்டு பதிதல், வங்கி பரிமாற்றம், மின்சாரகட்டணம் செலுத்துதல் போன்ற தேவைகளுக்காக நமது வீட்டின் சமையலறை வரை இதனை கொண்டு வந்துவிட்டோம். நமது பழங்கால அஞ்சல் முறை சிறிதுசிறிதாக காலாவதியாகின்றது.

இபொழுது இமெயில் மூலமே அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறுகின்றது.இணைய திரையில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகள் முதல் வானில் உள்ள கிரகங்கள் வரை நமது வீட்டு அறையிலிருந்து பார்க்கின்றோம். உண்மைத்தான் இவையனைத்தும் ஆச்சர்யமூட்டும் அபார வளர்ச்சிதான். ஆனால் இதன் எதிர்மறையான வளர்ச்சி?

கனியிருக்க காய் கவர்தல் சரியா...? இப்படி எண்ணில் அடங்காத நன்மைகள் இணையத்தளத்தில் இருந்தாலும், இதனையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தீமைகளும் உள்ளன. இளைஞசர்கள் கணினி முன் அமர்ந்து அவர்களுக்கு வேண்டிய எந்த திரைப்படத்தையும் காணலாம் .

இதில் உள்ள மற்றொரு விபரீதம் என்னவெனில் ஆபாச திரைப்படங்களும், பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் புகை படங்களும், காணொளிகளும் ஏராளம் .இவை அனைத்தும் இளைஞசர்களை குறிவைத்தே வெளியிடப்படுகிறது. ஒருசிலர் அறிவினை வளர்த்துக்கொள்ள வந்தாலும் பெரும்பாலான இளைஞ்சர்கள் முகம்சுளிக்க வைக்கும் ஆபாசபடங்களை பார்க்கவே வருகின்றனர். இதனை பிரவுசிங் சென்டர்கள் ,அவர்களின் வருமானத்திற்காக கண்டுகொள்வதில்லை .

சமூக சீர்க்கேட்டினை வளர்க்கும் டேட்டிங் மற்றும் லைவ் சாட்டிங். இவை இளைஞசர்களின் படுக்கை அறைக்கே இன்று நுழைந்துவிட்டன. எத்தனை பேர் இதன் விபரீதத்தை உணர்ந்துள்ளனர். இதன் மூலம் எத்தனை கிரிமினல் செயல்கள் அரங்கேறுகின்றன.இதன்மூலம் எடுக்கப்படும் காட்சிகளை கொண்டு எத்தனை இளம் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் கூட்டங்கள் இன்று வளர்ந்து உள்ளன. மேலும் இவற்றை இணைய தளங்களில் வெளியிட்டு அவர்களை தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தூண்டிவிடப்படுகிறது. அப்பெண்களின் வாழ்க்கையினை இதுபோன்ற கயவர்கள் இணையத்தின் துணைகொண்டு அழிகின்றனர்.

இந்த ஆபாச படங்களையும், வீடியோக்களையும் இளைஞசர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது செல்போன்கள். இணையத்தில் தரவிறக்கம் செய்யப்பட்ட அத்தனை காட்சிகளையும் இவர்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர். இவை கணினி மற்றும் இணைய இணைப்பு இல்லாதவர்களையும் சீரழிக்கின்றன. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறையினர் அமைதிகாத்துவருகின்றனர். இதனை சாதகமாக்கி கொண்ட சில சமூக விரோத கும்பல்கள் மாணவர்களுக்கிடையே குறுந்தட்டுக்கள் (CD) மூலம் ஆபாசத்தை வளர்த்து பணம்பார்கின்றனர். வளரும் துளிர்கள் மூளைக்கும் போதே கருகிபோக்கின்றன.

இணையத்தில் பரவிக்கிடக்கும் ஆபாசத்தை நிச்சயம் ஒரு கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியமானது. காவல்துறையினரும் வெறும் உத்திரவுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஆபாசத்தை பரப்புபவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரவுசிங் சென்டர்களில் அடையாள அட்டை கட்டாயமக்க வேண்டும். இதன் மூலம் வேறு பல சமூகச விரோத செயல்களையும் கண்காணிக்க முடியும். 18 வயதிற்கு கீழுள்ளவர்களை ஆபாச தளங்கள் தடைசெய்யப்பட்ட (இதற்கு பல மென்பொருள்கள் உள்ளன) கணினிகளை வழங்கவேண்டும் மற்றும் கண்காணிக்கவேண்டும்.

நமது அரசாங்கம் வார்த்தையுடன் இல்லாமல் இணைய ஆபாச தளங்களுக்கும் மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் சமூக விரோத தளங்களுக்கும் கட்டாயம் தணிக்கை செய்த பின்னரே அனுமதிக்கவேண்டும் அல்லது தடைசெய்யவேண்டும், இது சாத்தியமா என்று தெரியவில்லை ஆனால் அவசியம்.

இணையத்தின் மூலமாக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரிக்க துவங்கியுள்ளது .இதனை ஆரம்பகட்டதிலேயே வேரறுக்க வேண்டும். இல்லையெனில் மரமாகி நமக்கு பெரும் சவாலாக நிற்கும். கவனிப்பார்களா? சம்மந்தப்பட்டவர்கள்.

வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! எக்காரணத்தை கொண்டும் சமுதாயத்தை சீரழிக்கும் விரசமான வார்த்தைகள், ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை முடிந்தவரை நமது தளங்களில் இணைப்பதினை தவிர்ப்போம். ஏனெனில் சமூக முன்னேற்றத்தில் நிச்சயம் நமக்கொரு பங்குண்டு. இதில் தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.

நன்றியுடன்
நா சுரேஷ் குமார்

source: http://kiyamath.blogspot.in/2013/08/blog-post_15.html


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::