நித்தியானந்தாவின் பக்தர்களில் பலர் 2010-ல் ‘அந்த’ சிடி லீக் ஆன பிறகு எஸ்கேப் ஆகி விட்டார்கள். அந்த வரிசையில் சாரு நிவேதிதாவில் ஆரம்பித்து, கர்நாடகா ஊழல் தலைவர் எடியூரப்பா என்ற வரிசையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இருந்தார் என்ற தகவல் பலருக்கு ஆச்சரியம் அளிக்காதுதான்.
நித்தியானந்தா 2009-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி வடோதரா நகரின் நவ்லக்கி மைதானத்தில் நடத்திய சத்சங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நித்தியானந்தா ஆதி சங்கரரின் பாரம்பரியத்தையும் அத்வைத கோட்பாடுகளையும் தவறாமல் பின்பற்றுபவர் என்று மோடி அவரை பாராட்டினார்.
கூடவே, மாநிலத்தின் கன்யா கேளவாணி திட்டத்துக்கு நித்தியானந்தாவிடமிருந்து நன்கொடையும் வாங்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜீவன் முக்தி என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார்.
மோடி கலந்து கொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் வெளிநாட்டு தூதுவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் மோடியை புடை சூழ்ந்து வாழ்த்துவது போல அப்போதைய சர்தார் சரோவர் நர்மதா நிகம் சேர்மன் என் வி பட்டேல், மாநில சட்டமன்ற செயலர் யோகேஷ் பட்டேல் மற்றும் வடோதரா நாடாளுமன்ற உறுப்பினரும் மேயருமான பாலகிருஷ்ண சுக்லா ஆகியோரும் மோடியும் நித்தியானந்தாவும் சந்தித்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆறு கோடி குஜராத் மக்களின் கௌரவத்தின் பிரதிநிதியாக தன்னை பறை சாற்றிக் கொள்ளும் மோடி நித்தியானந்தாவின் முன்பு தலைகுனிந்து வணங்கி தன்னைப் போன்ற கொலைகார தலைவரை முதலமைச்சராக வைத்திருக்கும் மாநில மக்களின் கௌரவம் நித்தியானந்தா போன்ற பொறுக்கி சாமியார் முன்பு தலை வணங்கும் என்பதையும் மோடி உணர்த்தியிருக்கிறார்.
ரத்தன் டாடா 2007-ல் நானோ திட்டத்தை குஜராத்துக்கு கொண்டு வந்ததன் மூலம் கார்ப்பரேட் உலகத்தின் ஆதரவை குவித்தது போல 2009-ல் நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்து இந்துத்துவ உலகில் தனது ஆதரவையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.