Saturday, January 21, 2012

தமிழகத்தை அழிக்க சதி...!

JAN 21: கல்பாக்கம் அணு மின்நிலையம் மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி, சமயநல்லூர் போன்ற நகரங்களில்  அனல் மின்நிலையங்கள் 

குந்தா, காடம்பாறை, மேட்டூர், பெரியாறு, சுருளியாறு, வைகை, கூடலூர், மோயாறு, போன்ற நீர் மின்னுற்பத்தி நிலையங்கள். குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையங்கள்.

கயத்தாறு ,ஆரல்வாய்மொழி, தேனி, கணவாய்ப் பகுதி, ஆகிய பகுதிகளில்  உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்.சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.

இதுவெல்லாம் போதாது என்று கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்டி தமிழகத்தின் மின்சார பற்றாக்குறையை தீர்க்கப்போவதாக மார்தட்டுகிறது மத்திய அரசு.

தமிழகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணு, நீர், அனல், சூரிய, கற்றலை, கதவணை, போன்ற எண்ணிலடங்கா  மின் உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் இருக்க பின் ஏன்? தமிழ் நாட்டுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்படுகிறது.

தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  மின்சாரம் நமக்கு போதுமானது. ஆனால் என்ன செய்கிறார்கள் என்றால்?  நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இப்படி வாரி கொடுத்து விட்டு தமிழகத்தை இருளில் ஆழ்த்திவிட்டு கூடங்குளம் அணு மின்நிலையங்கள் போன்று மேலும் பல அணு உலைகளை அமைத்து தமிழர்களை கொல்லப்பார்கின்றனர்.

இது போதாதென்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அனுமதி கொடுக்கப்படாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, முதல் தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகம் வரை  அழிவு சக்திகளை அனைத்தையும் தமிழகத்தை நோக்கி தள்ளிவிடுகிறார்கள். கூடங்குளத்தில் அமைக்கும் அணு மின்நிலையத்தை கேரளாவிலோ அல்லது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலோ அமைக்க வேண்டியதுதானே. 
இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பீற்றிகொள்ளும் பயங்கரவாதி மோடி ஆளும் குஜராத்தில் ஒரு  அணுவுலை கூட அமைக்கப்படவில்லை. ஆனால்  தமிழக ஹிந்துத்துவா பயங்கரவாத கூட்டமெல்லாம் கூடங்குளத்தை உடனே திற என்று ஒப்பாரி வைக்கின்றன. தமிழகத்தில் அனைத்து அணுவுலைகளையும், நச்சு தொழில்சாலைகளையும் அமைப்பதில் இவர்களுக்கு என்ன அப்படி ஒரு ஆனந்தம்.

வட இந்திய ஹிந்தி அரசியல்வாதிகளிடம் ஹிந்தி மொழி என்கிற மொழிவாரியான ஒரு ஒற்றுமை இருக்கிறது. தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத வடஇந்திய ஹிந்தி அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தமிழகத்தை திட்டமிட்டே அழிக்கும் சதி வலைகளை பிண்ணி வருகின்றனர். வட இந்தியர்கள் தமிழர்களை என்றுமே ஒரு பொருட்டாக நினைத்ததில்லை.  அதனாலேயே இந்தியாவின் பிரதமராக இதுவரை ஒரு தமிழனும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங்க் இருக்கும்போது ஏன்  ப. சிதம்பரத்தை இவர்கள் பிரதமராக்கவில்லை. அவருக்கு என்ன திறமை இல்லையா? அல்லது அவர் மன்மோகன் சிங்க்கை விட அறிவில் குறைந்தவாரா? மொத்தத்தில் ஒரு தமிழன் இந்தியாவின் பிரதமராக முடியாது. இதே நிலைதான் ஈழத்திலும் இலங்கையின் பிரதமராக ஒருதமிழன் ஆக முடியாது இதை அவர்கள் வெளிப்படையாக சட்டமாக்கி வைத்துள்ளார்கள்  ஆனால் இந்த வட இந்திய வடவர்கள் இதை எழுதாத சட்டமாக பயன்படுத்தி வருகின்றனர். 
பாரதிய ஜனதா முதல் காங்கிரஸ் வரை இனி எந்த வட இந்திய வடவர்களும் தமிழத்தில் கால் பாதிக்க முடியாது. எல்லாம் முள்ளி வாய்க்காலோடு முடிந்து விட்டது. தமிழகத்தில் மிகபெரிய அளவில் தமிழர் எழுச்சி போராட்டங்கள் வலு பெறுகின்றன. இதை குலைக்கும் நோக்கோடு இதுபோன்ற நச்சு ஆலைகளையும், ஆய்வகங்களையும் தமிழகத்தில் நிறுவுவதன் மூலம் தமிழகத்தை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றி கடல்படை தளங்கள் முதல் ராணுவதளங்கள் வரை அமைக்க நடக்கும் திட்டமே இது. 
ஈழத்தில் ஒரு இன அழிவை நடத்தி முடித்த இந்தியாவை  பெரும் அச்சம் ஆட்டிப்படைக்கிறது.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னால் தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி உருவாகி வருகிறது. தமிழ் சிந்தனைவாதிகள் ஒன்றுபட்டு பெரும் தமிழர் எழுச்சியை கட்டி அமைத்து வருகின்றனர். வட இந்திய கொடுங்கோன்மை மற்றும் புறக்கணிப்பு அரசால் எந்த நன்மையையும் இல்லை என்பதை தமிழர்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். தனிதமிழ் நாடே தமிழர்களுக்கு உண்டான ஒரே தீர்வு என்பதை நோக்கி காலச்சக்கரம் நகர்கிறது. இதன் விளைவாக நகர்த்தப்படும் விடயங்களே இவைகள். 
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::