தற்போது
பேஸ்புக்கில் I love Islam என்ற பெயரில் இயங்குகின்ற பேஸ்புக் பேஜ் ஒன்று
தற்போது முஸ்லிம்களை அவமானப்படுத்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு
முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.
போலியான
பெயரில் I love Islam என்ற பெயரை வைத்துக்கொண்டு ஒரு நாசகாரக் கிருமி
முஸ்லிம்களிடையே பிரச்சினை உருவாக்கி கலகத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக
முஸ்லிம்களின் புனித தலமான கஃபத்துல்லாஃஹ் மீது ஒரு அந்நியப் பெண்ணை அதில்
இருப்பது புகைப்படத்தை எடிட்டிங் செய்திருக்கிறான்.
அதிலுள்ள
அந்த அந்நியப் பெண் அறைகுறை ஆடையுடன் கையில் மைக்கை வைத்துக்கொண்டு
பாடுவது போன்று இருக்கின்றது. ஒரு photoshop மென்பொருளை வைத்துக்கொண்டு
முஸ்லிம்களிடையே கலவரத்தை உருவாக்குவதற்கு எத்தனிக்கும் இந்த நாசகரனுக்கு
பலரும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
I
love Islam என்று இஸ்லாத்துக்கு சாதகமான பெயரை வைத்துக்கொண்டு இவ்வாறு
செயற்படுகிறான். எனவே, இதிலுள்ள பேஸ்புக் பயனர்கள் அனைவரும் இந்த பேஸ்புக்
பேஜிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு
தற்போது ஏராளமான கருத்துரைகள் (Comments) வந்துகொண்டிருக்கின்றன.
இதுகுறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்.
source-yarlmuslim
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment