Friday, November 11, 2011

சர்வதேச பிறை!

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பெருமை,கண்ணியம் இவற்றை அபகரிப்பவர்கள் மதகுருமார்கள்!

அன்புச் சகோதரர் M.A.அப்துல் வதூது அவர்களுக்கு, அபூ அப்தில்லாஹ் எழுதியது,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் தனது இறுதி நெறிநூல் குர்ஆனில் எதை நேர்வழியாக
அறிவித்துள்ளானோ அந்த நேர்வழியை முறையாகவும் சரியாகவும் அறிந்து அதன்படி நடந்து
ஈருலகிலும் வெற்றிபெற, எனக்கும், உங்களுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் அருள்
புரிவானாக. இது 7:3, 33:21,36, 59:7 இறைக் கட்டளைகள்படி பிடரி நரம்பை விட சமீபமாக
இருக்கும் (50:16) அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் 2:186க்கு அடி பணிந்து
யாரையும் இடைத் தரகர் ஆக்காமல், 67:2 இறைக் கட்டளைப்படி இவ்வுலக வாழ்க்கையை பரீட்சை
வாழ்க்கையாக ஒப்புக் கொண்டு யாரையும் காப்பி அடிக்காமல் குர்ஆன், ஹதீஸை விளங்கி
அதன்படி நடப்பவர்களுக்கே சாத்தியமாகும். பரீட்சையில் காப்பி அடிப்பது போல் 4:49,
53:32 இறை வாக்குகளுக்கு முரணாக தங்களைத் தாங்களே மவ்லவிகள்-ஆலிம்கள், மார்க்க
அறிஞர்கள் எனப் பீற்றும் மதகுருமார்களின் கற்பனைக் கட்டுக்கதைகளை வேதவாக்காகக் கண்
மூடி பின்பற்றுகிறவர்களுக்கு வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றி பெற்று அல்லாஹ்வின்
பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழையும் பாக்கியம் ஒருபோதும் கிடைக்காது என்பதை
18:102-106, 33:66-68 இறைவாக்குகளைச் சுய சிந்தனையுடன், நடுநிலையுடன் படித்து
விளங்குகிறவர்கள் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.
தெற்கே கன்னியாகுமரி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டு பிரயாணம் முழுக்க ஒரு
வினாடியும் வீணாக்காமல் தொழுது, தொழுது, அழுது அழுது “”யா அல்லாஹ் என்னைப்
பத்திரமாக வடக்கே சென்னை கொண்டு சேர்ப்பாயாக” என்று விடாது துஆ கேட்டாலும் அந்த
தொழுகையின் மகிமையால் துஆவின் மகிமையால் ஒருபோதும் அந்த ரயில் சென்னையை சென்றடையாது
என்பதை மறுப்பவர் உண்டா? அதேபோல் 7:3, 33:36,66-68, 59:7, 2:213, 16:44, 64, 2:134,
141 மற்றும் முன்னோர்கள், மூதாதையர்களைப் பின்பற்றுவது நரகிற்கு இட்டுச் செல்லும்
என்று கூறும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக இமாம்கள், அவுலியாக்கள்,
சாதாத்துகள், அகா பிரீன்கள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் போன்ற முன்னோர்கள், மூதாதையர்கள்
பெயரால் நரகிற்கு இட்டுச் செல்லும் ரயிலில் அமர்ந்து கொண்டு வாழ்நாள் முழுதும்
விடாமல் தொழுது, நோன்பு நோற்று, ஜகாத் கொடுத்து, தான தர்மம் செய்து, ஹஜ் செய்து
இன்னும் பல நற்கருமங்கள் செய்து அழுதழுது அல்லாஹ்விடம் துஆ செய்தாலும், அவர்களது
அமல்கள் நாளை மறுமையில் நிறுக்கப்படாது, அவர்களின் அந்த ரயில் சுவர்க்கம் செல்வதற்கு
மாறாக நரகையே சென்றடையும் என்ற உண்மையை 7:3, 33:36, 66,67,68, 18:102-106
இறைவாக்குகளை நேரடியாக, சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள் மறுக்க மாட்டார்கள்.
மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க அறிஞர்கள் என்ற பெயரால் ஒரு தனிப்பிரிவு
இஸ்லாத்தில் இல்லவே இல்லை; முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனக்குத் தெரிந்ததை
மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும், தனக்குத் தெரியாததை 16:43, 21:7 இறைக்
கட்டளைப்படி குர்ஆன், ஹதீஸை அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளவும் வேண்டும்
என்பதை 103:1-3, 9:71, 3:104,110 ஆகிய இறைவாக்குகளை நேரடியாகப் படித்து
விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள் வார்கள். அதிலும் குறிப்பாக 36:21 இறைவாக்குக்
கண்டித்துக் கூறுவது போல் மார்க்கத்தைப் பிழைப்பாக-தொழிலாகக் கொண்டு
கூலிக்கு-சம்பளத்திற்குக் கடமையான மார்க்கப் பணி புரிகிறவர்கள் ஒருபோதும்
நேர்வழியில் இருக்க முடியாது என்று உறுதிப்படுத்துகிறது.
கடமையான மார்க்கப் பணியை ஒருபோதும் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கக் கூடாது. அது
உலகின் அனைத்து வழிகேடுகளுக்கும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும், தீவிரவாதம்,
வன் முறை போன்ற அடாத செயல்களுக்கும், பித்அத், குஃப்ர், ஷிர்க் போன்ற தன்னந்தனியனான
இறைவனுக்கு, இடைத்தரகர்களைப் புகுத்தி அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் கொடிய செயல்களுக்கு
வழி வகுக்கிறது என்பதை சுமார் 50 குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இவை அனைத்தையும் உள்ளத்தில் உள் வாங்கிக் கொண்டு உங்களது கடிதத்தில் உள்ள
விமர்சனங்களை ஆராய்வோம். உண்மையில் உங்களுக்கு என்னை நேர்வழிப்படுத்த வேண்டும்,
அல்லது நீங்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் நான்கு வருடங்களுக்கு
முன்னர் 11.04.2008-ல் நீங்கள் இக்கடிதத்தை நேரடியாக எனக்கே எழுதியிருப்பீர்கள்.
உண்மையான உங்களது நோக்கம் அபூ அப்தில்லாஹ் மவ்லவி அல்ல; அரபியைச் சரியாக உச்சரிக்கவே
அவருக்குத் தெரியவில்லை. அவர் எப்படி மார்க்கம் சொல்லத் தகுதி பெறுவார்? என்று
மக்களிடையே செய்தி பரப்பி, நாம் கூறும் குர்ஆன், ஹதீஸ் கருத்துக்கள் மக்களிடையே
செல்லாமல் தடுக்க வேண்டும் என்பதே உங்களின் அசல் குறிக்கோள்.
அதனால்தான் கடிதத்தை எனக்கு எழுதாமல்,IIMக்கு எழுதி அதை உலகமெங்கும் பரப்பி
வருகிறீர்கள். உங்களின் இந்த முயற்சி, மவ்லவிகள் மட்டுமே வழிகாட்டிகள், அவர்களின்
கற்பனைக் கட்டுக்கதைகளே வேதவாக்குகள் எனக் கண்மூடி(தக்லீது) செயல்படும்
முஸ்லிம்களிடம் எடுபடுமே அல்லாது, அபூ அப்தில்லாஹ்வாகிய என்னையோ, மவ்லவிகள்,
ஆலிம்கள், அல்லாமாக்கள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளை நிராகரித்து 2:39 இறைக்
கட்டளைப்படி குஃப்ரிலாகி தங்களைத் தாங்களே பீற்றிக் கொள்ளும், ஆணவம், அகந்தை பேசும்
மதகுருமார்களையோ நம்பாமல், நேரடியாக குர்ஆனை தங்களுக்குத் தெரிந்த
மொழிபெயர்ப்புகளைப் படித்து விளங்கி நடப்பவர்களிடம் கால் காசும் பெறாது என்பதாலேயே
IIMக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை நாம் பொருட்படுத்தவில்லை.
இப்போது L.K.S.குடும்ப சகோதரர் அப்துல் காதரிடம் கொடுத்து என்னிடம் ஒப்படைத்து
இதற்கு பதில் பெற்றுத் தருமாறு கேட்டிருப்பதால் உங்கள் கடிதத்திற்கு பதில்
அந்நஜாத்திலேயே தரப்படுகிறது. மவ்லவிகளின் வசீகரப்பிடியிலுள்ள அல்லாஹ் நாடும் ஒரு
சிலருக்காவது உண்மையை உணர இது வழி வகுக்கும் என அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழியை அறிந்து அதன்படி நடந்து வெற்றி பெறும் சிறு கூட்டத்தில் அந்தத் தேட்டத்தோடு உழைப்பவர்களுக்கு அருள் புரிந்து இணைத்தருள்வானாக.
உங்களது பிரதான குற்றச்சாட்டு நான் மவ்லவி அல்ல, அரபியைச் சரியாக உச்சரிக்கத்
தெரியவில்லை என்பதுதான். அதனால் மார்க்கம் சொல்லும் தகுதி எனக்கில்லை என்பது தான்.
இதற்கு நான் உங்களைக் குறை சொல்லமாட்டேன். பல வருடங்களாகத் தெண்டச் சோறு கொடுத்து,
இலவசமாகத் தங்க வைத்து உங்கள் மண்டையில் நேரடியாக குர்ஆன், ஹதீஸ் போதனையை ஏற்றாமல்,
யூதக் கைக்கூலிகளான முன் சென்ற மதகுருமார்கள், மரியாதைக்குரிய இமாம்களின் பெயரால்
அவர்களுக்குச் சுமார் 200 ஆண்டுகள் கழித்து கற்பனை செய்தக் கட்டுக்கதைகளை “பிக்ஹு’
சட்டங்கள் என்ற பெயரால் உருப்போட வைத்த பித்அத்தான மதரஸாக்களையே குறை சொல்ல
வேண்டும்.
இப்போது குர்ஆன் என்ன சொல்கிறது என்று பாருங்கள்!
அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களைப் படித்துக் காட்டி,
அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு நெறி நூலையும், ஞானத்தையும் கற்பிக்கும் தூதரை
அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்க வழி கேட்டிலேயே
இருந்தனர். (அல்ஜுமுஆ 62:2)
( மேலும் பாருங்கள்: 7:157,158 )
அன்று அரபி மொழியில் கரைகண்ட, இலக்கண, இலக்கியத்தில் புலிகளான, அரபி பண்டிதர்கள்,
கவிஞர்கள் என அரபு மக்களால் வானளாவ உயர்த்தப்பட்ட அன்றைய ஜ.உ.சவான தாருந் நத்வா அரபி
விற்பன்னர்களும், அச்சபையின் தலைவனும், அபுல் ஹிக்கம்-ஞானத் தந்தை என அம் மக்களால்
போற்றப்பட்டவனும் இருக்க, போயும் போயும் அல்லாஹ் எழுதப்படிக்கத் தெரியாத, ஆடு
மேய்த்த முஹம்மது(ஸல்) அவர்களை ஏன் தனது தூதராகத் தேர்ந்தெடுத்தான் என்று
என்றைக்காவது சிந்தித்தீர்களா? அது மட்டுமா? ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து
இறுதி நபி வரை அல்லாஹ் தேர்ந்தெடுத்த பல்லாயிரக்கணக்கான நபிமார்களும் உங்களால்
அவாம்கள் என அழைக்கப்படும் சாதாரண மக்களிலிருந்தே என்பதையும், கல்விமான்கள்,
கற்றறிந்தோர் என பெருமை பேசிய மதகுருமார்களிலிருந்து நபிமார்கள் ஏன்
தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பதையும் என்றாவது சிந்தித்தீர்களா? இல்லையே!
அப்படி நீங்கள் சிந்தித்திருந்தால் மார்க்கப் பணிக்கு கற்றறிந்த மேதைகள் என பெருமை
பேசும் மதகுருமார்கள் சிறிதும் அருகதையற்றவர்கள் என்பதை நீங்களும்
புரிந்திருப்பீர்கள். அந்த அறிவு உங்களுக்குச் சிறிதும் இல்லாத காரணத்தால்தான் அன்று
அபூஜஹீல் வைத்த அதே ஆணவ வாதத்தை இன்று நீங்கள் வைக்கிறீர்கள்.
அன்று கஃபத்துல்லாஹ்வின் உச்சியில் நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்த பிலால் (ரழி)
அவர்களும் அவர்களைச் சார்ந்த அடிமைகளான அபிசீனிய ஹபஷிகளும், அரபியை சரியாக
உச்சரிக்கத் தெரியாதவர்கள் என்ற உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா? அன்று
பிலால்(ரழி) கஃபா உச்சியில் நின்று பாங்கு சொன்னதைப் பார்த்த குறைஷ் காஃபிர்கள்
வயிறெரிந்து, “”இந்த கண்றாவிக் காட்சியைப் பார்க்காமல் இறந்துபோன நமது முன்னோர்கள்
பாக்கியம் செய்தவர்கள்” என்று உளறினார்களே அதே உளறலையே இன்று நீங்கள் எழுத்து
வடிவில் தந்துள்ளீர்கள். உங்களின் அறியாமைக்கு வருந்துகிறேன்.
எழுதப் படிக்கத் தெரியாத மக்களிலிருந்தே இறுதித் தூதரைத் தேர்ந்தெடுத்து,
அவர்களுக்கு வஹீ மூலம் கிடைத்த குர்ஆனை படித்துக் காட்டி, அதன் மூலம்
இறைக்கட்டளைகளையும், ஞானத்தையும் போதித்து அப்பாமர மக்களை நேர்வழியிலாக்கினார்கள்;
அதற்கு முன்னர் அம்மக்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருந்தனர் என்று அல்லாஹ் மண்டையில்
சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போல் அறைந்திருந்தும் அதை உங்களால் உணர முடியவில்லை
என்றால் உங்களின் மவ்லவி என்ற தற்பெருமை உங்களின் கண்களை மறைத்திருக்கிறது என்பதை
தற்பெருமை நிலையில் உங்களால் உணர முடியாது.
மவ்லவி, ஆலிம், மார்க்க அறிஞர் என தற்பெருமை கொள்ளும் உங்கள் போன்றோரின் நிலை பற்றி
இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். படித்துப் பாருங்கள்.
“”பெருமைகள் அனைத்தும் என் போர்வையாகும். கண்ணியம் என் கீழாடையாகும். எனவே எவன்
இவ்விரண்டிலிருந்து எதனையும் என்னிட மிருந்து அபகரிக்கிறானோ அவனை நான் வேதனை
செய்வேன்” என்று அல்லாஹ் கூறிய தாக நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தனர்.
அபூ ஸஈத்(ரழி), அபூ ஹுரைரா(ரழி), முஸ்லிம், திர்மிதி,
(அல்ஹதீஸ் 2320)
அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெருமைகள், கண்ணியம் இவற்றை மவ்லவிகளாகிய நீங்கள்
எடுக்கவில்லை; அபகரிக்கிறீர்கள். அதனால்தான் மவ்லவிகளை திருடனிலும் கேடுகெட்டத்
திருடர்கள் என மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம்!
“”எவனுடைய உள்ளத்தில் அணுவத்தனை பெருமை குடிகொண்டுள்ளதோ அவன் சுவனபதி செல்ல மாட்டான்”
என்று நபி(ஸல்) கூறினர். அப்பொழுது ஒருவர், மனிதன் தன் ஆடை, காலணிகள் அழகாயிருப்பதை
விரும்புகிறானே என்று வினவினார். அதற்கு அவர்கள் “”நிச்சய மாக அல்லாஹ் அழகானவனே!
அழகானதை நேசிக்கிறான். பெருமை என்பது உண்மையை மறுப்பதும், (மற்ற) மனிதர்களை இழிவாக
எண்ணிச் செருக்கடைவதுமாகும்” என்று கூறினர். (இப்னு மஸ்வூத்(ரழி), முஸ்லிம்,
அபூதாவூது, திர்மிதி) (அல்ஹதீஸ் 2321)
அடுத்த ஹதீஸிலும், இவ்வாறு கூறி
“”…….இல்லை; எனினும் பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மற்ற மனிதர்களை இழிவாகக்
கருதிச் செருக்குறுவதும் ஆகும்” என்று நபி(ஸல்) கூறினர்.
(அபூ ஹுரைரா(ரழி), அபூதாவூத்) (அல்ஹதீஸ் : 2322)
பெருமை அடிப்போர் மறுமை நாளில் சிற்றெறும்புகள் போல் ஒன்று சேர்க்கப்படுவர்; அவர்களை
எல்லா இடங்களிலிருந்தும் இழிவு சூழ்ந்து கொள்வதுடன் அவர்கள் “யூலஸ்’ என்று
கூறப்படும் நரகத்தின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவர். நெருப்பின் சுவாலை
அவர்களுக்கு மேலாக எழுந்து நிற்கும். நரக வாசிகளின் (இரத்தம், உறைந்த இரத்தம், சீல்
இவை கலந்து) “தீனதுல்ஜனால்’ என்னும் சாறு அவர்களுக்குப் புகட்டப்படும் என்று நபி(ஸல்)
கூறினர். (அம்ருப்னு ஷிஐப் தம் தந்தை மூல மாகவும் அவர்தம் பாட்டனார் மூலமாகவும்)
(திர்மிதீ அல்ஹதீஸ் 2323)
மனிதன் தன்னையே தான் புகழ்ந்து உயர்வுபடுத்திக் கொண்டு பெருமை அடித்துக் கொள்வதில்
எப்பொழுதும் ஈடுபட்டுள்ளான். எனவே அவனுடைய பெயரை அநியாயக்காரர்களான
பெருமைக்காரர்கள் என்று (பிர்அவ்ன், ஹாமான், காரூன், நம்ரூது ஆகியவர்களின்
பட்டியலில்) எழுதப்படும். அவர்கள் அடைந்த கேட்டினை இவர்களும் அடைவார்கள் என்று
நபி(ஸல்) கூறினர்.
(ஸல்மதுப்னுல் அக்வஃ (ரழி) திர்மிதீ அல்ஹதீஸ் 2324)
அரபி கற்ற தங்களைக் கற்றறிந்த ஆலிம்கள் மேதைகள் என்று பெருமைப்படுத்தியும் அரபி
கல்லாத மற்றவர்களை அவாம்கள் என இழிவு படுத்தியும் செய்தி பரப்பியும் திரியும்
உங்களின் நிலை நாளை மறுமையில் என்னவாகும் எனச் சிந்தித்து விளங்க முற்படுங்கள்.
ஆதம்(அலை) காலத்திலிருந்து அனைத்து நபிமார்களின் சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப்
புகுந்து கொண்ட மதகுருமார்கள் அனைவரின் நாளைய முடிவும் இதுதான்!
கற்றவர்கள் அறிந்தவர்கள் எனத் தற்பெருமை கொள்ளும் மதகுருமார்களிலிருந்து நபிமார்களை
அல்லாஹ் ஏன் தெரிவு செய்யவில்லை என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா? எனவே அரபி மொழி
ஆணவத்தை-தற்பெருமையை உங்களைப் போன்றோர் விட்டொழிக்காதவரை நீங்கள் நேர்வழி பெற
முடியாது என்பதை அறிந்து கொண்டால் அது உங்களுக்கு நன்மை பயக்கும்.
62:2 இறைக் கட்டளைப்படி எழுத்தறிவில்லாத அரபி இலக்கணம், இலக்கியம் தெரியாத பாமர
மக்களுக்காக இறங்கிய குர்ஆனை அன்று அரபி இலக்கண இலக்கிய வாசனையே தெரியாத அந்தப்
பாமர மக்கள் தெளிவாக, எளிதாக விளங்கியது போல், இன்றும் தற்பெருமை இல்லாத பாமரர்கள்
குர்ஆனின் மொழி பெயர்ப்பைப் பார்த்து தெளிவாக, எளிதாக விளங்க முடியும். அதற்கு
மாறாக அரபி இலக்கண, இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்த தாருந்நத்வா ஆலிம்களுக்கு
அவர்களின் ஆணவம் காரணமாக குர்ஆனை விளங்க முடியாமல் இருந்தது போல், இன்றும் மவ்லவி
ஆலிம், அரபி மொழி கற்ற மேதைகள் என பெருமை பேசும் மவ்லவிகளால் குர்ஆனில் உள்ளதை
உள்ளபடி விளங்க முடியாது. அவர்களும் வழிகெட்டு பெருங்கொண்ட மக்களையும்
வழிகெடுக்கிறார்கள் என்பதை ஆணவம் கொண்ட மவ்லவிகள் ஒருபோதும் விளங்க மாட்டார்கள்
என்பதே வரலாறு கூறும் உண்மை.
உங்களால் முடிந்தால் அரபி மொழி கற்ற மவ்லவிகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகாரம்
உண்டு என்பதற்கு ஒரேயொரு குர்ஆன் வசனத்தையோ அல்லது
ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஸையோ
தாருங்கள் பார்க்கலாம். அதற்கு மாறாக மவ்லவிகள், ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள்
என 4:49, 53:32 இறைக் கட்டளைக்கு முரணாகத் தற்பெருமை பேசும் மதகுருமார்கள்
கொல்லைப்புற இடுக்கு வழியாக, சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக முஸ்லிம்களிடையே
நுழைந்து கொண்ட திருடனிலும் கேடுகெட்ட மெகா, மெகா திருடர் கள் என்பதற்கு
குர்ஆனிலிருந்தே பல இறைவசனங்களை 1983லிருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்களது
ஆணவம்-தற்பெருமை அரபி மொழி கற்றிருந்தும் அந்த குர்ஆன் வசனங்களை விளங்க விடாமல்
உங்களைத் தடுக்கிறது.
இமாம்களும் மார்க்க அறிஞர்களும் குர்ஆன், ஹதீஸிலிருந்து தாங்கள் எடுத்த ஆய்வின்
முடிவை மக்கள் முன் சமர்ப்பிக்கும் போது இறைவனின் நினைவை முன்னிலைப் படுத்தி அவனை
அஞ்சியவர்களாக அல்லாஹ்வே மிக அறிந்தவன். எங்களின் அறிவிற்கு இது சரியாகத்
தெரிகின்றது என்று பணிவுடன் கூறுவார்கள். இவரிடம் அந்த பணிவு இல்லையே! என்று எழுதி
இருக்கிறீர்கள்.
முஹ்க்கமாத் குர்ஆன் வசனங்களும், நடை முறைக்குரிய ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் பாமர
மக்களும் விளங்கும் நிலையில் மிகத் தெளிவாக, எளிதாக இருக்கும் நிலையில் நாங்கள்
அவற்றை ஆய்வு செய்கிறோம் பேர்வழிகள் எனக் கூறிக் கொண்டு தங்களின் சுய
விளக்கங்களையும், மேல் விளக்கங்களையும் கூறி குர்ஆன் வசனம் 2:159 கூறுவது போல்
அவற்றைத் திரித்து வளைத்து அவற்றின் உண்மைக் கருத்துக்களை மக்களிடம் இருந்து
மறைப்பவர்கள், அல்லாஹ்வே மிக அறிந்தவன் எங்களின் அறிவிற்கு இது சரியாகத் தெரிகிறது
என மழுப்பலாம்.
அவர்கள் சொல்வதுபோல் நாமும் எமது அறிவுக்குச் சரியாகப் படுவதை எடுத்து எழுதி
அவற்றைப் பின்பற்றச் சொன்னால், அவர்கள் கூறுவது போல் நாமும் கூறினால் அதில் அர்த்தம்
இருக்கும். நாமோ எமது சுய கருத்தைப் புகுத்தாமல் அனைத்திற்கும் குர்ஆன் வசனங்களையும்,
ஹதீஸ்களையும் மட்டுமே எடுத்துத் தருகிறோம். அவற்றை குர்ஆனை எடுத்து நேரடியாகப்
பார்த்தும், ஹதீஸ்களைப் பார்த்தும் அவற்றிலிருப்பதை அப்படியே எடுத்து
நடக்கும்படியும், எம்மையோ, அந்நஜாத்தையோ ஒருபோதும் தக்லீது செய்யக் கூடாது என்றல்லவா
தொடர்ந்து கூறுகிறோம். இங்கு எமது சுய ஆய்வுக்கு வேலையே இல்லையே!
அல்லாஹ் மட்டுமே மிக அறிந்தவன் என்பதை குர்ஆன் வசனங்களை எடுத்துக் கொடுத்து,
அவற்றைப் படித்து விளங்கி நடங்கள் என்று சொல்வதே உறுதிப்படுத்தும் போது, சுய
விளக்கங்களை மார்க்கத்தில் புகுத்துகிறவர்கள் போல் நாமும் சொல்ல வேண்டிய அவசியம்
என்ன? அல்லாஹ் மனிதர்களுக்காகவே (ஆலிம்களுக்கு மட்டும் அல்ல) நேரடியாக குர்ஆனில்
கூறியுள்ள கருத்துக்களை 2:159 சொல்வதுபோல் தங்கள் சுய ஆய்வின் மூலம் மறைத்துவிட்டு
“”அல்லாஹ்வே மிக அறிந்தவன்; எங்களின் அறிவிற்கு இது சரியாகத் தெரிகின்றது” என்று
பணிவுடன் கூறிவிட்டால் நாளை மறுமையில் இவர்களை தண்டிக்காமல் அல்லாஹ் விட்டு விடுவான்
என்ற நப்பாசையா? நிச்சயமாகத் தப்ப முடியாது என்பதை 2:159,160,161,162 இறைவாக்குகளை
நீங்களே படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.
குர்ஆன் வசனங்கள் நேரடியாகச் சொல்லும் கருத்துக்களைத் திரித்து மறைத்துச் சொல்வதை
ஆய்வு செய்து சொல்வதாகச் சொல்லி அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்று சொல்பவர்கள் உண்மையில் அல்லாஹ்வின் அச்சத்தால் அப்படிச் சொல்ல வில்லை. தங்களை நம்பியுள்ள அப்பாவி
மக்களை ஏமாற்றவே அவ்வாறு சொல்கிறார்கள். உண்மையில் அல்லாஹ்வின் அச்சம் இருந்தால்
7:3, 33:36 இறைக்கட்டளைப்படி 7:55, 205, 3:103,105, 6:153,159, 30:32 42:13,14
குர்ஆன் வசனங்கள் கூறும் நேரடிக் கருத்துக்களை மக்களிடம் சொல்வார்களே அல்லாமல்,
சுய விளக்கங்கள் கொடுத்து அவற்றின் நேரடிக் கருத்துக்களை 2:159 இறைவாக்கு கூறுவது
போல் மறைக்க மாட்டார்கள். சமுதாயத்தைப் பிளவு படுத்த மாட்டார்கள்.
தோராய கணிப்பிற்கும், துல்லிய கணக்கீட்டிற்குமிடையேயுள்ள பெரிய வேறுபாட்டை அறியாத
இந்த மவ்லவிகள் 2:51, 7:142, 19:10, 44:3, 97:1-3 ஆகிய 7 இடங்களில் நாள்
என்றிருப்பதை இரவு என மொழி பெயர்க்கும் இந்த மவ்லவிகள் அல்லாஹ்வின் கலாம்-சொல்
குர்ஆனாக இருப்பது போல் அல்லாஹ் வின் ஃபிஅலில் – செயலில் கட்டுப்பட்டவை அண்ட சராசர
கோள்களின் இயக்கம் என்பதை அறியாத இந்த மவ்லவிகள், எவையெல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவை, எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்படாதவை என்பதை அறியும் திறனில்லாத இந்த
மவ்லவிகள் தங்களை மெத்தப் படித்த மேதைகள், அரபி பண்டிதர்கள் எனத் தற்பெருமை கொள்வது
எதை உணர்த்து கிறது? அவர்கள் அபூஜஹீலின் வாரிசுகள் என்பதை உணர்த்த வில்லையா?
21:92, 23:52 குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் வேற்றுமை இல்லா ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்
என்று கூறி இருக்க, இம்மத குருமார்கள் ஆலிம்-அவாம் என கூறுபோட்டு சமுதாயத்தைப்
பிளவுபடுத்தியதின் விளைவு காலக் கிரமத்தில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் இந்து
மக்களிடையே ஜாதிப் பிரிவினைகளும், வேற்றுமைகளும் ஏற்பட்டு மனித குலம் எண்ணற்றப்
பிரிவுகளாகப் பிரிந்து சீரழிந்துக் கிடப்பது போல், முஸ்லிம்ளும் சிதறிச் சின்னா
பின்னப்பட்டு நாயிலும் கேடான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண் டிருப்பதை உங்களைப் போன்ற
மவ்லவிகளால் மறுக்க முடியுமா? சொல்லுங்கள்.
சர்வதேச பிறைக்கு ஆதாரம் கேட்கும் உங்க ளிடம் ஆலிம்-அவாம் வேறுபாட்டிற்கும், மத்ஹபுகளுக்கும், தரீக்காக்களுக்கும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் உள்ளதா? எவை மார்க்கத்திற்கு
உட்பட்டவை? குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் வேண்டும். எவை மார்க்கத்திற்கு உட்படாதவை?
குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தேவை இல்லை என்ற சாதாரண அடிப்படை அறிவும் இல்லாத நீங்களா
ஆலிம்கள்?
முதன் முதலாக ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் செல்வதை விட்டு நவீன வாகனங்களில்
செல்வதற்கு ஆதாரம் கேட்ட வர்கள் தான் நீங்கள்!  சூரிய ஓட்டத்தைப் பார்த்துத் தொழுது
கொண்டிருந்ததை விட்டு, கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டபின் தொழுகை நேரங்களை அறிந்து
தொழுவதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்டவர்கள்தான் நீங்கள்! தூரத்து மரணச் செய்தியை
ஆள் நேரில் வந்து சொன்ன பின்னர் செயல்பட்டதை விட்டு தொலைத் தொடர்பு வசதியைப்
பயன்படுத்த முற்பட்ட போதும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்டவர்கள்தான் நீங்கள்.
இப்படிப் பல நவீன கண்டு பிடிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு
வந்தபோதெல்லாம் அவற்றிற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்ட வர்கள் தான் நீங்கள்.
அந்த வரிசையில் அன்று நபி(ஸல்) அவர்கள், “”நாம் எழுதுவதையும்,கணக்கிடுவதையும் அறியவில்லை” என்று சொன்னது போல், குர்ஆன் 10:5, 55:5, 17:12, 6:96, 14:33, 13:2,
21:33, 31:29, 39:5 ஆகிய 9 இறைவாக்குகளில் குறிப்பிட்டுள்ள சூரியன், சந்திரன்
பற்றிய துல்லிய கணக்கீட்டு முறை அன்று கண்டுப்பிடிக்கப்படவில்லை. சூரிய கணக் கீட்டு
முறையான கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சூரியனைப் பார்ப்பதை விட்டு கடிகாரம்
பார்த்து (ருஃயத்) தொழ ஆரம்பிக்கப்பட்டது, அதேபோல் இன்று சூரியன், பூமி, சந்திரன்
மூன்று கொள்களின் ஓட்டம் துல்லிய கணினி கணக்கீட்டின் மூலம்
(Accurate Computer Calculation) சந்திர மாதம் பிறப்பதைப் பார்த்து (ருஃயத்)
அதன்படி செயல்படு வது குர்ஆனுக்கோ, ஹதீசுக்கோ முரண்பட்ட செயல் அல்ல. இதை
மறுப்பவர்கள் கடிகாரம் பார்த்து தொழுவதையும் மறுக்க வேண்டும். அல்லாஹ் சூரியனும்
சந்திரனும் துல்லிய கணக்கின்படி சுழல்கின்றன என்று தெளிவாக மேலே கண்ட வசனங்களில்
கூறி இருக்க சூரிய கணக்கை ஏற்று, சந்திரக் கணக்கை மறுப்பது குஃப்ரில்-இறை
நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்பதை அறிய முடியாதவர்கள் ஆலிம்களா? “”நீங்கள்
நெறிநூலில் சிலவற்றை நம்பி சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? என்று 2:85-ல் அல்லாஹ்
கண்டிப்பது உங்களுக்கு உறைக்கவில்லையா? நிலையான மறுமைக்குப் பகரமாக அற்ப மான
இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்தாம்
என்று 2:86 கூறுவது மவ்லவிகளாகிய உங்கள் போன்றோரின் மண்டையில் உறைக்கவில்லையா?
அறிவியல்(விஞ்ஞானம்) வளர்ச்சி காரணமாக அன்றில்லாமல் இன்று புதிதுபுதிதாகக்
கண்டுபிடிக் கப்படும் மார்க்கத்திற்கு உட்படாத நவீன கருவிகளைப் பயன்படுத்துவதற்கு
குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்கும் நீங்கள், மார்க்கத்திற்கு உட்பட்ட விஷயங்களில்,
குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாத இஜ்மா, கியாஸ் பெயரால் கற்பனை செய்துள்ள மத்ஹபுகள்,
தரீக்காக்கள் அவற்றின் மூலம் கற்பனை செய்யப்பட்டுள்ள தர்கா சடங்குகள், தரீக்கா
சடங்குகள், மீலாது, மவ்லூது, கத்தம், பாத்தியா, இறந்தோரின் பெயரால் 3-ம், 7-ம்,
40-ம் வருட பாத்தியாக்கள்,
ஷபே பராஅத், ஷபே மிஃராஜ், 27ல் லைத்துல் கத்ர், திருமண
சடங்குகள், சுன்னத் கல்யாண சடங்குகள், இத்தியாதி, இத்தியாதி சடங்கு சம்பிரதாயங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரமிருக்கிறதா? என்று நீங்கள் கேட்டதுண்டா?
ஆராய்ந்ததுண்டா? சொல்லுங்கள். உங்கள் அறிவீனத்தின் ஆழம் இன்னுமா உங்களுக்குப்
புரியவில்லை?

சர்வதேச பிறை என்ற தலைப்பை எந்த அடிப் படையில் எடுத்தீர்கள்? என்று
கேட்டிருக்கிறீர்கள்.
அன்று சந்திர சுழற்சியின் கணக்குத் தெரியாததாலும், தொலைத் தொடர்பு வசதி
இல்லாததாலும் அந்தந்த ஊர் மக்கள் அவரவர்கள் ஊர்களில் பிறையைப் பார்த்து மாதம்
பிறப்பதை அறியும் கட்டாயத்தில், நிர்பந்தத்தில் இருந்தனர். எந்த ஆத்மாவையும் அதன்
சக்திக்கு மீறிச் சோதிப்பதில்லை என அல்லாஹ் பல இடங்களில் குர்ஆனில் கூறியுள்ளான்.
அன்றைய நிலைக்கு அது ஒன்றுதான் வழி. ஆனால் இன்றோ தகவல் தொடர்பு வசதிகளோடு சந்திர
ஓட்டத்தின் துல்லியக் கணக்கையும் அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். எனவே அன்று ஊர்
ஊருக்குத் தனித்தனிப் பிறையாக இருந்த நிலை மாறி இன்று உலக மக்கள் அனைவருக்கும் ஒரே
தலைப்பிறை-சர்வதேச பிறை என்று கொள்வதில் என்ன தவறைக் கண்டீர்கள்?
மேலும் குர்ஆன் 2:189, 6:69, 9:36, 10:5, 36:39 வசனங்களும், மாதம் 29 அல்லது 30
நாட்களைக் கொண்டது என்ற ஹதீஸும் என்ன உணர்த்துகின்றன? அல்லாஹ் 36:39ல் கூறும்
மன்ஜில்கள் 29 அல்லது 30 நாட்களை மட்டுமே குறிக்கின்றன. தலைப்பிறை இரண்டு நாளோ,
மூன்று நாளோ வந்து மன்ஜில்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டவே தாண்டாது என்ற சாதாரண
அறிவும் மவ்லவிகளாகிய உங்களுக்கு இல்லையா?
உலகில் காணப்படும் அனைத்துக் கொள்கையுடையவர்களின் நாள்காட்டி
(Calendar) களில்
ஒரு நாள், ஒரு தேதி, ஒரு கிழமை 24 மணிநேரம் மட்டுமே இருக்கும் என்று உலக மக்கள்
அனைவருமே ஏகோபித்து ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், சு.ஜ. மவ்லவிகளாகிய
உங்களுக்கும், ததஜ தலைமை இமாம்(?)க்கும் மட்டும் தலைப்பிறை 2 நாள் 48 மணிநேரம், 3
நாள் 72 மணி நேரம் வரும் என்ற நிலைப்பாடு பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் கூற்றா?
36:39 இறைவாக்கு கூறும் மன்ஜில்கள் சரிகாணும் கூற்றா? என்பதை விளங்க முடியாத நீங்கள்
ஆலிம்களா? அறிந்தவர்களா? சொல்லுங்கள்.
உலகம் முழுவதும் கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள முஸ்லிம்கள் அனைவரும்
(24.11.1432) (21.10.2011) வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்திற்குள் ஜுமுஆ தொழுது
முடித்து விடுகிறார்கள். வெள்ளி, சனி என்று 48 மணி நேரமும், வெள்ளி, சனி, ஞாயிறு
என்று 72 மணி நேரமும் ஒருபோதும் தொழுவதில்லை. அதேபோல்
ஷவ்வால் முதல் பிறை முதல்
நாள் 24 மணி நேரத்திற்குள் உலகம் முழுக்க முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை தொழுது
முடித்து விட வேண்டும். ஒரு நாளைக்குரிய
ஷவ்வால் முதல் தேதிக்குரிய பெருநாள் தொழுகை
இரண்டு நாள் 48 மணி நேரம், மூன்று நாள் 72 மணி நேரம் ஒரு போதும் வர முடியாது என்று
கூறுவது குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டக் கருத்தா? முரண்பட்டக் கருத்தா? சொல்லுங்கள்.
எனது உரையில் சொன்னதாக 10 விடயங்களைப் பட்டியலிட்டுள்ளீர்கள். மவ்லவிகளாகிய நீங்களும், உங்களைக் கண்மூடிப் பின்பற்றும் முகல்லி துகளும் இந்த 10 விடயங்களையும் ஏற்க
மாட்டீர்கள். மதகுருமார்களின் பிடியிலிருந்து விடுபட்டுச் சுயமாகச் சிந்திப்பவர்கள்
ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். மேலும் அரபி மொழி கற்றவர்கள்தான் மார்க்கத்தை விளங்க
முடியும் என்ற உங்களின் அறிவற்ற பிதற்றலைப் போன்றதொரு பிதற்றல் தான் இந்த 10
விடயங்களையும் விஞ்ஞானம் படித்தவர்கள்தான் புரியமுடியும் என்பதும். ஆனால் எப்படி
மார்க்கத்தை எழுதப் படிக்கத் தெரியாத பாமரரும் சுயமாக சிந்தித்து விளங்க முற்பட்டால்
29:69 இறைவாக்குப்படி அவருக்கு மார்க்கம் விளங்குமோ அதுபோல் அதே பாமரரும் மேலே கண்ட
10 விடயங்களையும் சுயமாகச் சிந்தித்து விளங்க முற்பட்டால் அவருக்கு எளிதாக விளங்கவே
செய்யும்.
இனி விஷயத்திற்கு வருவோம் என சிலவற் றைப் பட்டியலிட்டுள்ளீர்கள்.
1. மத்ஹபுவாதிகள் மாற்று மதத்தவர்களின் கணிப்பான காலண்டரைத்தான் பின்பற்றுகின்றனர்
என்று நாம் கூறுவது தவறான குற்றச் சாட்டாம். அதற்கு ஆதாரமாக 1428 நோன்பு பெருநாளைக்
கொண்டாடியதே தக்க ஆதாரமாம்.
மாலையில் மறையும் பிறையை எப்போது பார்க்கிறீர்கள்?
சிவகாசி காலண்டரில் பிறை 29 என்று போட்டிருக்கும் நாளின் மாலையில்தானே பிறை பார்க்க
முற்படுகிறீர்கள். அது மட்டுமா? திருமணப் பதிவுப் புத்தகங்கள், மற்றும் முக்கியப்
பதிவுகளில் சிவகாசி காலண்டரில் உள்ள பிறைத் தேதியைத்தானே குறிப்பிடுகிறீர்கள். இது
என்னவாம்? சிவகாசி காலண்டரைப் பின்பற்றுகிறீர்கள் என்று நாம் கூறுவது தவறான
குற்றச்சாட்டா? அல்லது மாதம் முழுவதும் தினசரி பிறை பார்த்து முடிவு எடுக்கிறோம்,
அந்த அடிப்படையில் 1428 நோன்பு பெருநாளைக் கொண்டாடினோம் என்று நீங்கள் கூறுவது
பொய்யான பதிலா? அது சரி! உங்களின் மதரஸாக்களிலிருந்து வருடா வருடம் வருட காலண்டர்
அச்சடித்து காசாக்குகிறீர்களே! அது மாதாமாதம் பிறை பார்த்து அச்சடிக்கப்பட்டதா?
அல்லது ஹிந்து மதப் பஞ்சாங்கப்படி ஹிந்துப் புரோகிதர்களால் கணிக்கப்பட்டு (கணக்கிடப்பட்டு
அல்ல) சிவகாசியில் அச்சடிக்கப்பட்ட காலண்டரா? யாரை ஏமாற்ற இப்படிப் பிதற்றுகிறீர்கள்?
2. அன்று கணினிக் கணக்கு இல்லாததால் பிறை பார்க்கும் கட்டாயம் நிர்பந்தம் இருந்தது;
இன்று அந்த நிர்பந்தம் இல்லை என்று நாம் சொல்வதற்கு உங்களின் எதிர்க் கேள்வி.
விவாகரத்து செய்த பெண் தான் கருவுற இல்லை என்பதை நிரூபிப்பதற்கு 3 மாதவிடாய் வரை
இத்தா இருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. இன்று ஒரு நொடியில் பரிசோதித்து
முடிவை அறிந்து விடலாமே! அதனால் இத்தா இருக்கத் தேவை யில்லை என்று கூறலாமா? இது
உங்களின் கேள்வி.
ஆம்! எவை மார்க்கத்திற்கு உட்பட்டவை? எவை மார்க்கத்திற்கு உட்படாதவை என்பதை
அறியாதவர்கள் நீங்கள் என்று நான் முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன்.
இத்தா இருப்பது மார்க்கத்திற்கு உட்பட்டது. இத்தா கருத்தரித்திருப்பதை அறிவதற்கு
மட்டுமல்ல; அதை அறிய 3 மாதம் காத்திருக்கத் தேவையில்லை. வழமையாக வரும் மாதவிடாய்
வராமல் நின்று விட்டலே கருத்தரிப்பு பெரும்பாலும் ஊர்ஜிதமாகி விடும். மேலும் கணவன்
இறப்புக்குத் துக்கம் கடை பிடிப்பதும் மார்க்கமாகும். பொதுவாக மவ்லவிகளாகிய
உங்களுக்கு மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக்குவதும், மார்க்கம் அல்லாததை மார்க்கம்
ஆக்குவதும் கை வந்த கலை. அந்த அடிப்படையி லேயே இந்தப் பிதற்றல். மாதம் பிறப்பதை
அறிவது தான் மார்க்கத்திற்கு உட்பட்டதே அல்லாமல், அன்று மாதம் பிறப்பதை அறிந்து
கொள்ள இருந்த ஒரேயொரு வழியான பிறை பார்ப்பது மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதை
அறிந்து கொள்ளுங்கள்.
3. திருகுர்ஆன் அல்லாஹ்வின் சொல்; விஞ்ஞானம் அல்லாஹ்வின் செயல் என்று கூறினார்
என்று கூறி நீங்கள் கூறும் பதில்… எல்லாமே அவன் செயல் என்றிருக்க விஞ்ஞானம்
மட்டும் அல்லாஹ்வின் செயல் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்? இது அவரின் சொந்தக்
கருத் துதானே? தன் ஆய்வை சரியயன்று நிலை நாட்ட குர்ஆன், ஹதீஸில் கூறப்படாததை எவ்
வாறு கூறலாம்? அப்படியே சரியயன ஒரு வாதத்திற்கு இவரின் கூற்றை ஏற்றாலும், நபி (ஸல்)
அவர்களின் காலத்தில் அல்லாஹ் தன் செயலை-விஞ்ஞானத்தை ஏன் வெளிப்படுத்த வில்லை?
பின்னொரு காலத்தில் விஞ்ஞானம் வரும் அந்த நேரத்தில் பிறை பார்க்கத் தேவை யில்லை;
கணித்து முடிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கலாமே! இந்த கேள்விக்கு என்ன பதில்?
என்று பிதற்றி இருக்கிறீர்கள்.
உண்மையில் இது பிதற்றல்தான்; அறிவு ரீதியான கேள்வி இல்லை. எல்லாமே அல்லாஹ்வின்
செயல்கள்தான். எந்த ஒரு முஸ்லிமுக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் பிறை பற்றிய சர்ச்சையில் நாம் கவனிக்க வேண்டியது கோள்களில் சுழற்சி
பற்றித்தான். அந்த அறிவியலைத்தான் அதாவது விஞ்ஞானத்தைத்தான் இங்கு நாம்
குறிப்பிடுகிறோம். நபி(ஸல்) அவர்கள் அறிவித்தது போல் அன்று இந்த கோள்கள் பற்றிய
கணக்கு தெரியாதுதான். நபி(ஸல்) அவர்களே இதைத் தெளிவாகக் கூறி இருக்க நீங்கள்
49:16-ல் அல்லாஹ் கூறிக் கண்டிப்பது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க
முற்படுகிறீர்கள்.
புகாரீ 1959 ஹதீஸ் கூறுவதைப் பற்றி சிந்திக்கிறீர்களா? நபி(ஸல்) சூரியன்
மறைந்துவிட்டது என்று நினைத்து நோன்பு துறந்தபின் சூரியன் மறையவில்லை என்பது தெரிய
வந்துள்ளது. அல்லாஹ் வஹீ மூலம் சூரியன் மறையவில்லை என்று அறிவித்து நபி(ஸல்) நோன்பு
துறப்பதை தடுத்திருக்கலாமே என அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க
முற்படுவீர்களா?
அப்படிப்பட்ட அபத்தமான ஒரு கேள்வியைத் தான் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
அல்குர்ஆன் 10:5, 55:5, 17:12, 6:96, 14:33, 13:2, 21:33, 31:29, 39:5 ஆகிய
வசனங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் துல்லிய கணக்கின்படி சுழல்கின்றன என
அறிவித்து அவை பற்றிய அல்லாஹ்வின் ஃபிஅல்-செயல் பற்றிய விஞ்ஞானத்தை
வெளிப்படுத்தியுள்ளான். அவற்றை மனிதனுக்கு வசப்படுத்தித் தந்துள்ளதாகவும் அல்லாஹ்
கூறுகிறான். அவை பற்றிய கணக்கு அன்றுள்ள சமுதாயத்திற்குத் தெரியாது என்று நபி(ஸல்)
கூறியுள்ளார்கள். அந்தக் கணக்கை இன்று மனிதன் துல்லிய மாகக் கணக்கிடுகிறான் என்பதை
50 வருடம் நூறு வருடத்திற்குப் பின் இடம் பெறும் சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய
முன் அறிவிப்பும், அறிவித்தபடி அவை இடம் பெறுவதும் உறுதிப் படுத்துகின்றன.
இதில் எங்கே எமது சொந்தக் கருத்தோ, ஆய்வோ இடம் பெற்றுள்ளது? ஏன் இந்த வீண் பிதற்றல்?
4. முதன் முதலாக காலண்டர் போட்டது நாம் தான் என்பதில் சந்தேகமில்லை என்று நாம்
கூறியதாகக் கூறி அதற்கு நீங்கள் அளித் துள்ள பதில்:
உமர்(ரழி) அவர்கள்தானே போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஏன் போடவில்லை? இது மட்டும்
பித்அத் இல்லையா? திராவிஹ் மற்றும் முத்தலாக் விஷயத்தில் நபிதோழர்களின் ஒருமித்த
கருத்துடன் இதே உமர்(ரழி) அவர்களின் காலத்தில் அவர்களால் ஏற்பட்ட முடிவை ஏற்க
மறுப்பவர் இதை மட்டும் ஏன் ஆதரிக்கிறார்? இவை வணக்கம் என்றால் பிறை பார்த்து நோன்பு
வைப்பதும் பெருநாள் கொண்டாடுவதும் வணக்கமில்லையா? ஏன் மாறுபாடு? என்று
கேட்டுள்ளீர்கள்.
எதைக் கொண்டாவது மாதம் பிறப்பதை அறிந்து நோன்பை ஆரம்பிப்பதும், பெருநாள்
கொண்டாடுவதும் வணக்கமே அல்லாமல் பிறையைப் பார்ப்பது வணக்க வழிபாட்டில் சேராது. எவை
எல்லாம் வணக்க வழிபாடுகளில் உள்ளவை? எவை எல்லாம் வணக்க வழிபாட்டிற்கு உட்பட்டவை
அல்ல என்று தெளிவாக நீங்கள் கல்வி கற்ற பித்அத்தான புரோகித மதரஸாக்களில் கற்றுக்
கொடுக்காத காரணத்தால், அங்கு கற்ற மனிதக் கற்பனைகளான பிக்ஹு சட்டங்களை உங்கள்
மண்டையில் ஏற்றிக் கொண்டு இப்படி அறிவீனமான பதிலை அளித்துள்ளீர்கள்.
5:3 இறைவாக்கைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அல்லாஹ் மார்க்கத்தை நிறைவு
செய்துள்ளதாகத்தான் கூறியுள்ளான். துன்யாவை நிறைவு செய்து விட்டதாகக் கூறவில்லை.
நபி(ஸல்) மதீனாவிற்குப் போன புதிதில் அங்கு வழமையாக நடந்து வந்த பேரீச்ச மர
அயல்மகரந்தச் சேர்க்கையைத் தடுத்துவிட்டார்கள். அதனால் மகசூல் குறைந்ததை நபி(ஸல்)
அவர்களிடம் அன்சாரிகள் முறையிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அளித்த பதிலை நீங்கள்
அறிவீர்களா? இதோ அவர்கள் அளித்த பதில்.
“”மார்க்கம் பற்றி நான் ஒன்றைச் சொன் னால் அதன்படி நடப்பது உங்கள் மீது கடமை.
உலகியல் நடைமுறைப்பற்றி நான் ஒன்றைக் கூறுவேனேயானால் அதில் நீங்கள் என்னை விட
அனுபவமிக்கவர்களாக இருக்கலாம்
. இது போல் நபி(ஸல்) அவர்களது கருத்தைவிடச் சில நபி
தோழர்களின் கருத்துகள் உலகியல் அடிப்படையில் ஏற்கப்பட்ட மேலும் சில ஆதாரங்களும்
உண்டு. இவ்வளவு அழகாக நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தும் உலகியல் நடை
முறைகளை மார்க்க மாக்கியும், மத்ஹபு, தரீக்கா, இயக்கம் என பித்அத்களை
மார்க்கமாக்கியும் செயல்படுவது 33:36,66-68, 18:102-106 இறைக்கட்டளைகள்படி பெருத்த
வழிகேடுகள் என்பதை உங்களால் உணர முடிய வில்லையா?
உமர்(ரழி) அவர்கள் ஹிஜ்ரி ஆண்டைத் துவக்கியது உலகியல் நடைமுறை வசதிக்காக மட்டுமே
என்பதையும், மார்க்க அடிப்படையில் ஒரே நேரத்தில் எத்தனை தலாக் சொன்னாலும் அது ஒரு
தலாக்தான் என்ற நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் ஆதாரபூர்வமாகக் கிடைப்பதாலும்,
அதேபோல் ரமழானிலும், ரமழான் அல்லாத காலத்திலும் நபி (ஸல்) இரவுத் தொழுகையாக 8+3=11
ரகாஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரழி)
அவர்களே உறுதியாகச் சொல்லி இருப்பதாலும், உமர்(ரழி) அவர்களின் உலகியல் நடைமுறையான
ஹிஜ்ரி ஆண்டை ஏற்றும், இஷாவுக்குப் பிறகு தொழும் தராவீஹ் தொழுகை 20+3 ரகாஅத்தையும்,
ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வதையும் விட மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின்
வழிகாட்டல் தெளிவாக இருப்பதால், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை நிராகரித்துப்
புறக்கணித்துவிட்டு உமர்(ரழி) அவர்களின் நடைமுறையை ஏற்பது நேர்வழி அல்ல என்றே
முடிவு செய்து அதன்படி நடக்கிறோம்.
உடனே உமர்(ரழி) அவர்கள் நேர்வழியில் செல்லவில்லை என்று நாம் கூறுவதாக அவதூறு பரப்பி
உங்கள் முகல்லிதுகளை ஏமாற்றத் துணிவீர்கள். ஆனால் நாமோ 2:134, 141 இறைக் கட்டளைப்படி உமர்(ரழி) அவர்கள் சரியாகச் செய்தார்களா? தவறாகச் செய்தார்களா? என ஆராயாமல்
7:3, 33:21,36 இறைக் கட்டளைப்படி அல்லாஹ், ரசூல் காட்டிய வழியில் நடக்கிறோம்.
உமர்(ரழி) சுயமாகச் சிந்தித்துச் செயல்பட்டதால், அதற்கு ஒரு கூலி உண்டு; அல்லாஹ்
25:70 இறைவாக்கில் சொல்வது போல் அவர்களின் பாவங்களை நன்மையாக மாற்றியும் இருக்கலாம்.
2:134,141 இறைக்கட்டளைப்படி முன் சென்றவர்கள் பற்றிய கவலையோ சிந்தனையோ நமக்குத்
தேவையே இல்லை. நாம் செய்வது யாரையும் தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸ் போதனைப்படி
நடக்கிறோமா என்ற சிந்தனை, முயற்சி மட்டுமே! பிறை பார்ப்பது வணக்கமில்லை; மாதம்
பிறப்பதை அறிந்து செயல்படுவதே வணக்கமாகும்.
அன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில் பிறையைப் பார்த்ததை வணக்கமாகக்
கொண்டால், அதுபோல் 22:27 இறை அறிவிப்புப் படி ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குப் போவது வணக்கம்,
சூரிய ஓட்டத்தைப் பார்த்து தொழுவது வணக்கம், ஆள் நேரில் வந்து இறப்புச் செய்தியைச்
சொல்வது வணக்கம் என்றெல்லாம் ஏற்க வேண்டி வரும்; அதுவே முறை. அதற்கு மாறாக
மற்றவற்றில் இன்றைய நவீன கருவிகளை ஏற்று நடந்து கொண்டு, பிறை விஷயத்தில் மட்டும்
அன்றுபோல் பார்க்க வேண்டும் என்று கூறுவது 2:85-ல் அல்லாஹ் கடிந்து கூறுவது போல்
குர்ஆனில் சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுக்கும் காஃபிர்களின் நிலைக்குத் தள் ளிவிடும்
என்பதை நீங்கள் உணர்ந்தால் நல்லது.

5. ஒருநாள் முன் பின்னாக நோன்பு அல்லது பெருநாள் கொண்டாடியதை நபி(ஸல்) அவர்கள்
தடுக்கவில்லை. அக்கால சூழ்நிலையில் அவ்வாறுதான் முடிவு செய்ய முடியும். தற் பொழுது
விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் நபி (ஸல்) அவர்களின் காலத்து முடிவின் அடிப்படையில்
நாம் முடிவு எடுப்பது தவறு என்று நாம் கூறியதாகக் கூறி நீங்கள் அளித்துள்ள பதில்:
நபி(ஸல்) அவர்களே தடுக்கவில்லை என்று தெரிந்த பிறகும் சர்வதேசப் பிறை உலக
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில்தான் கொண்டாட வேண்டும் என்று கூறி ஏன் மக்களை
குழப்புகிறார்? நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை என்று தெளிவாக தெரிந்த பிறகு
எவருடைய சொல்லையோ விஞ்ஞானத்தையோ நாம் ஏன் எடுக்க வேண்டும்? வஹியின் மூலமே நபி (ஸல்)
அவர்களின் சொல், செயல் அமைந்திருக்கும். அதனால் அவை எல்லா காலத்திலும் மக்கள்
புரிந்து செயல்படத் தக்க வகையில் தான் இருக்கும்.
மனிதர்களால் இயற்றப்பட்டவை காலத்திற்கு தகுந்த மாதிரி மாறி விடுவதைப் போல் நபி(ஸல்)
அவர்களின் முடிவு எக்கால சூழ்நிலையிலும் மாறாது என்பதுதான் எங்களின் உறுதியான
நம்பிக்கை.
எமது பதில்:
சகோதரர் அப்துல் வதூத் அவர்களே நீங்கள் மிகமிகப் பொய்யான ஒரு வாக்குமூலத்தைத் தந்திருப்பதோடு முகல்லிதுகளை வசமாக ஏமாற்றியும் உள்ளீர்கள். மார்க்க விஷயங்களில்
நபி(ஸல்) அவர்களின் முடிவு எக்கால சூழ்நிலையிலும் மாறாது என்பதுதான் உங்களின்
உறுதியான நம்பிக்கை என்றால் அதை உங்களின் செயல்களில் காட்ட வேண்டுமே?
காட்டுகிறீர்களா?
அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் அறிமுகப் படுத்தாத புரோகித மதரஸாக்களை எந்த முகத்தோடு
நடைமுறைப் படுத்துகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத ஆலிம்-அவாம்
வேறுபாட்டை எந்த முகத்தோடு கற்பனை செய்துள்ளீர்கள்? நபி(ஸல்) அவர்கள் காலத்தில்
இல்லாத மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள், சூஃபிசம், தர்கா சடங்குகள், ராத்திபு
சடங்குகள், தரீக்கா சடங்குகள், மீலாது, மவ்லூது, கத்தம் பாத்திஹாக்கள், 3-ம், 7-ம்,
40-ம் வருட பாத்திஹாக்கள்,
ஷபே மிஃராஜ், ஷபே பராஅத், 27-ல் லைலத்துல் கத்ர், திருமண
சடங்குகள், ஐங்கால தொழுகைக்குப் பின் கூட்டு துஆ, திருமணத்தில் நபி(ஸல்) அவர்கள்
காட்டித் தராத “”அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த ஆதம் வஹவ்வா….” துஆ
என்ற பெயரால் பத்துஆ இத்தியாதி இத்தியாதி பித்அத்களை எந்த முகத்தோடு மார்க்கமாக்கி
இருக்கிறீர்கள்.
மனிதர்களால் இயற்றப்பட்ட காலத்திற்குத் தகுந்த மாதிரி மாறிவிடும் பித்அத்களை மக்களிடையே நடைமுறைப்படுத்திக்கொண்டு, நபி(ஸல்) அவர்களின் முடிவு எக்காலத்திலும் மாறாது
என்பது தான் எங்களின் உறுதியான நம்பிக்கை என்று அப்பட்டமான பொய்யை எழுதி
இருக்கிறீர்களே? உண்மையிலேயே உங்களுக்கு அல்லாஹ்வின் அச்சம் இருந்தால் இப்படிப்
பொய் கூறத் துணிந்திருப்பீர்களா?
நாம் சொன்னதாகவும் பொய் கூறி இருக்கிறீர்கள். ஒரே ஊரில் ஒரு சாரார் முதல் நாளும்,
அடுத்த சாரார் அடுத்த நாளும் நோன்பு, பெருநாள் கொண்டாடியதை நபி(ஸல்) அவர்கள்
தடுக்கவில்லை என்றா நாம் கூறினோம்? இல்லையே? அப்படியொரு பிளவு சமுதாயத்தில்
ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலல்லவா நபி(ஸல்) அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள்.
அன்று சூரியன், சந்திரன் பற்றிய குர்ஆன் கூறும் கணக்கோ, தொலைத் தொடர்பு வசதியோ இல்லை.
அன்று மக்காவில் நடப்பது மதீனாவுக்குத் தெரியாது. மதீனாவில் நடப்பது மக்காவுக்குத்
தெரியாது. அதனால் பிறையைப் புறக் கண்ணால் பார்த்து மட்டுமே மாத ஆரம்பத்தை
தீர்மானிக்கும் கட்டாயத்தில், நிர்ப்பந்தத்தில் ஒவ்வொரு ஊரும் இருந்தது.
இன்று நீங்கள் சிவகாசி காலண்டரில் பிறை 29 என்று தவறாகப் போட்டிருப்பதைப்
பார்த்துவிட்டு அன்று மஃறிபுக்குப் பிறகு காலையில் உதித்து மாலையில் மறையும்
பிறையைப் பார்க்கும் கூர் கெட்ட பழக்கம்-யகூதிகளின் பழக்கம் நபி(ஸல்) அவர்களின்
நடைமுறையில் இருக்கவில்லை. அன்று தினசரி 29 அல்லது 30 நாட்களும் பிறையை அவதானித்து
வந்தார்கள். அப்படி அன்றாடம் பார்க்கும்போது சிலரது கணிப்பில் அம்மாதம் 30-ல்
முடியும் என்றும், வேறு சிலரின் கணிப்பில் 29-ல் முடியும் என்றும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டது.
“”நாங்கள் கருத்து வேறுபாடுபட்ட நிலையில் 30-ம் நோன்பை நோற்றவர்களாக காலைப் பொழுதை
அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து பிறை பார்த்ததற்கு சாட்சி கூறினார்கள்”
என்ற அஃதர் நபிதோழர் களின் கருத்து வேறுபாட்டை உறுதிப்படுத் துகிறது.
இப்படி ஒரே ஊரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு சாரார் முதல் நாளிலும், மறுசாரார்
அடுத்த நாளிலும் நோன்பு நோற்பதும், பெருநாள் கொண்டாடுவதும் ஏற்பட்டுவிடக் கூடாது,
சமுதாயம் பிளவுபட்டு விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் 21:92, 23:52 இறைக்
கட்டளைப்படி மிகமிக உறுதியாக இருந்ததார்கள். அன்றைய அந்தக் கருத்து வேறு பாட்டைத்
தீர்க்கப் பிறையைப் பார்த்து முடிவு செய்வதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
அந்த அடிப்படையில் சமுதாய ஒற்றுமை காக்கும் ஒரே குறிக்கோளில் பிறை பார்த்து நோன்பு
ஆரம்பியுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள். பிறை பார்க்காமல் நோன்பு
ஆரம்பிக்காதீர்கள், பிறை பார்க்காமல் நோன்பை முடிக்காதீர்கள் என்று நபி (ஸல்) கூறிய
பல ஹதீஸ்களை பல நூல்களில் பார்க்க முடிகிறது. இங்கு சமுதாய ஒற்றுமையே குறிக்கோள்!
ஆம்! அன்று மாதம் 29-ல் முடிகிறது என்றும் 30ல் முடிகிறது என்றும் சமுதாயம்
பிளவுபடுவதைத் தடுக்கும் முகமாக இச்சச்சரவைத் தீர்க்க வேறு வழியே இல்லாத நிலையில்
பிறை பார்த்து முடிவு செய்யும்படி நபி(ஸல்) கூறினார்களே அல்லாமல் 10:5, 55:5,
17:12, 6:96, 14:33, 13:2, 21:33, 31:29, 39:5 ஆகிய பல இறைவாக்குகளில் சூரியனும்
சந்திரனும் அல்லாஹ்வின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அதனதன் வட்டவரைகளில்
துல்லிய கணக்கின்படி சுழல்கின்றன. அந்தக் கணக்கை அறியும் வகையில் அவற்றை மனிதனுக்கு
வசப்படுத்தித் தந்துள்ளான் அல்லாஹ் என்று திட்டமாக, தெளிவாக, நேரடியாகக் கூறும்
நிலையில் இந்த இறைவாக்குகளுக்கு மாறாக நபி(ஸல்) அவர்கள் சந்திரனின் சுழற்சி மனிதனின்
கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. மனிதப் பார்வை அதில் பட்டால் தான் அது
சுழலும்; கண் பார்வை படாதவரை அது சுழலாமல் ஓரிடத்திலேயே நிற்கும் என்ற அபத்தக்
கருத்தை வெளியிட்டுள்ளனர் என்று நம்புவதை விட ஈமானுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு
செயல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.
இன்று உங்களைப் போன்ற மவ்லவிகள் பிறையைப் பார்ப்பது இபாதத்-வணக்கம் என்பதற்கு
ஆதாரமாக எடுத்து வைக்கும் அத்தனை ஹதீஸ்கள், அஃதர்கள் அனைத்தும் குர்ஆன் குறிப்பிடும்
துல்லிய கணக்கு முறை அன்று கண்டுபிடிக்கப்படாததால், மாதம் 29-ல் முடிகிறது 30-ல்
முடிகிறது என்ற சர்ச்சை, 2-ம் பிறை, 3-ம் பிறை என்ற சர்ச்சை, சிரியாவில் பிறை
பார்த்துச் செயல்பட்டு ரமழான் இறுதியில் மதீனா வந்து சொன்ன தகவலை எடுப்பதால்
மதீனாவாசிகளிடம் ஏற்படும் குழப்பம் இவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு
அன்றிருந்த ஒரே வழி வேறு வழியே இல்லாத நிலையில் சொல்லப்பட்டவையே அல்லாமல், பிறை
பார்ப்பது இபாதத், வணக்கம் என்ற அடிப்படையில் அல்ல என்பது விளங்க முடியாத ஒரு
விஷயம் அல்ல. ஆனால் தற்பெருமையுள்ள மவ்லவிகள் ஒருபோதும் விளங்க மாட்டீர்கள்!
6. துல்லியமாக கணக்கிடப்பட்டதை ஏன் பின்பற் றக் கூடாது? தொழுகையில் மட்டும் ஏன் பின்
பற்றுகிறீர்கள்? என்று நாம் கேட்டதாகக் கூறி நீங்கள் அளித்துள்ள பதில்:
முதலில் இவர் எந்த கருத்தில் உள்ளார்? என்று நமக்குப் புரியவில்லை. விஞ்ஞானம்
வளர்ந்து விட்டது அதனால் துல்லியமாக கணக்கிட்டு முடிவு செய்யலாம். பார்க்கத்
தேவையில்லை என்ற இவரின் இந்தக் கூற்றே நபி(ஸல்) அவர்களின் தெள்ளத் தெளிவான ஹதீதிற்கு
மாற்றமில்லையா? என்று கேட்டுவிட்டு, தலைப்பிறை எது என்பதிலேயே தற்கால விஞ்ஞானிகளுக்கு மத்தியிலேயே கருத்து வேறுபாடு நிலவுகிறதே? என்று கூறி சில கருத்து
வேறுபாடுகளைக் கூறி, நட்சத்திரங்களைப் பார்த்து இரவில் வழி தேடிக் கொள்வார்கள்
என்ற குர்ஆன் வசனம் நபி காலத்தில்தானே இறங்கியது. விஞ்ஞானம் வளர்ந்தாலும் வளராவிட்டாலும் பிறையைப் பார்க்கத்தான் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்களே தவிர கணித்து
பின்பற்றச் சொல்லவில்லை. நம் மார்க்கத்தில் சட்டம் கூறும் அதிகாரம் வல்ல நாயன்
அல்லாஹ்விற்கும் அவனின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் மட்டுமே உள்ளது. பிறை
பார்த்ததாகச் சாட்சி கூறுபவர் முஸ்லிமாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையே பிறை கண்
ணுக்குத் தெரிந்த பிறகே நீங்கள் முடிவு செய்யுங்கள் என்றுதானே புரிய முடியும் என்று
கூறியுள்ளீர்கள்.
இதற்கு எமது விளக்கம் வருமாறு:
சூரியனும் சந்திரனும் துல்லிய கணக்கின்படி சுழல்கின்றன என பல குர்ஆன் வசனங்கள்
இருப்பதால் சூரியக்கணக்கை ஏற்பவர்கள் சந்திரக் கண க்கை மறுத்து 2:85 குர்ஆன் வசனம்
கண்டிக்கும் குற்றச் செயலுக்கு ஏன் ஆளாகிறீர்கள் என்றே கேட்கிறோம். சூரியக் கணக்கை
ஏற்றுச் செயல்படுவது போல் சந்திரக் கணக்கையும் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று நாம்
மீண்டும் மீண்டும் கூறி வருவது உங்களுக்குப் புரியவில்லையா? ஆம்! 2:146, 6:20
குர்ஆன் வசனங்கள் கூறுவதுபோல், சத்தியத்தை நீங்கள் பெற்ற குழந்தையை அறிவது போல்
அறிவீர்கள்; அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறீர்கள். சத்தியத்தை-நேர்வழியை ஏற்றுக்
கொண்டால் பெத்தப் பேரான மதகுருமார் பதவிக்கும், மார்க்கத்தைப் பிழைப்பாகக்
கொண்டிருப்பதற்கும் சாவு மணி அடிக்கப்படுமே!
உங்கள் புரோகிதச் சித்தாந்தமே மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக்குவதும்; மார்க்கம்
அல்லாததை மார்க்கம் ஆக்குவதும் அது கொண்டு பிழைப்பு நடத்துவதும் தானே? அதனால்தான்
மார்க்கமோ, இபாதத்தோ, வணக்கமோ அல்லாத அன்றைய பிறை பார்த்தலை மார்க்கமாக்கி இபாதத்
வணக்கம் என்கிறீர்கள்; அதற்கு மாறாக மார்க்கத்திற்கு உட்பட்டவற்றில் அன்று நபி(ஸல்)
காட்டித் தராத, நடை முறைப்படுத்தாத புதியவையான-பித்அத்தான மத்ஹபுகள், தரீக்காக்கள்,
இயக்கங்கள் போன்ற பிரிவுகளையும், புரோகிதர்களை உற்பத்தி செய்யும் அரபி
மதரஸாக்களையும் கற்பனை செய்து உருவாக்கி அவை மூலம் மார்க்க முரணான மூடச் சடங்கு
சம்பிரதாயங்களான பித்அத், குஃப்ர், ஷிர்க் போன்ற மாபாதகங்களை மக்களைச் செய்ய வைத்து
அவை மூலம் பிழைப்பு நடத்துகிறீர்கள்.
மதகுருமார்களாகிய நீங்கள் எவற்றை மார்க்கம் என்கிறீர்களோ அவை மார்க்கமாகாது; எவற்றை
மார்க்கம் இல்லை என்கிறீர்களோ அவையே மார்க்கம் என்பதற்கு முஸ்லிம்களில் 95
சதவிகிதத்தினர் பிரதான கடமையான, அது இல்லை என்றால், முஸ்லிமே இல்லை என்று குர்ஆன்,
ஹதீஸ் மிகமிக வலியுறுத்திச் சொல்லும் ஐங்கால தொழுகையே இல்லாமல் இருக்கிறார்கள்
என்பதும், எஞ்சியுள்ள 5 சதவிகித முஸ்லிம்களிலும் மிகப் பெரும்பாலோர் நபிவழி
தொழுகையை கைவிட்டு, ஹனபி தொழுகை, ஷாபி தொழுகை, மாலிக்கி தொழுகை, ஹன்பலி தொழுகை, ஜாக்
தொழுகை, ததஜ தொழுகை, அஹ்ல ஹதீஸ் தொழுகை, காதியானி தொழுகை, அஹ்ல குர்ஆன் தொழுகை எனப்
பலவாறாகப் பிரிந்து, எங்களது தான் நபிவழித் தொழுகை என முழக்கமிட்டுத் தொழுவதே தக்கச்
சான்றாகும்.
அந்த அடிப்படையில்தான் மார்க்கத்திற்கு உட்படாத வணக்கமோ-இபாதத்தோ அல்லாத அன்றைய
நிலையில் பிரயாணத்திற்கு ஒட்டகம் இருந்தது போல் நேரம் அறிய சூரியன் இருந்தது போல்,
மாதம் அறிய சந்திரன்-பிறை ஒரு கருவியாக-சாதனமாக இருந்ததை இபாதத்-வணக்கம் என
மீண்டும் மீண்டும் கொயபல்ஸ் தத்துவப்படிச் சொல்லி உங்களை நம்பியுள்ள மக்களைப்
பெரும் வழிகேட்டில் இட்டுச் செல்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் மீண்டும்
மீண்டும் இன்றைய நிலையில் பிறை பார்க்கத் தேவையில்லை என்ற எமது கூற்று நபி(ஸல்)
அவர்களின் தெள்ளத் தெளிவான ஹதீஸுக்கு மாற்றம் என கொயபல்ஸ் தத்துவப்படி கூறி
வருகிறீர்கள். மக்களை ஏமாற்றுகிறீர்கள்.
பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற மதகுருமார்களின் தவறான பிடிவாதம் காரணமாக, பிறையைப் புறக்கண்ணால் எப்போது பார்க்க முடியும் என்பதில்தான்
விஞ்ஞானிகளுக்கிடையே மாறுபட்டக் கருத்து இருக்கிறது. மற்றபடி கழியும் மாதம் முடிந்து
அதாவது தேய்பிறை முடிந்து வரும் மாதம் ஆரம்பிக்கும் அதாவது வளர்பிறை தோன்றும்
சூரியன் சந்திரன் பூமி மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வரும் அதாவது சங்கமம்
(Conjunction) எப்போது நிகழும் என்பதை தேதி, கிழமை, மணி, நிமிடம், வினாடி முதல் துல்லியமாகக்
கணக்கிட்டுச் சொல்வதில் விஞ்ஞானிகளிடையே மாறுபட்டக் கருத்து இல்லை என்பதை அறிந்து
கொள்ளுங்கள்.
அன்று பிறை பார்த்ததாகச் சொன்ன நபரின் தராதரத்தை வைத்தே ஏற்கும், நிராகரிக்கும் நிலை
இருந்தது. காரணம் கேட்போருக்கு வானில் பிறை இருப்பதை அவரால் காட்ட முடியாது. வேறு
ஆதார மும் அன்று இல்லை. எனவேதான் அது சாட்சியாகக் கொள்ளப்பட்டு அவர் முஸ்லிமா?
உண்மையாளரா? ஒருவர் போதாது இருவர் சாட்சி சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இன்று அல் லாஹ் இந்த நூற்றாண்டில் கொடுத்துள்ள அருட் கொடையான துல்லிய கணக்கீட்டின்
மூலம் பல வருடங்களின் 12 மாதமும் பிறக்கும் நாள், மணி, நிமிடம், வினாடி எனச்
சந்தேகத்திற்கு இடமில்லாமல் எப்போது வேண்டுமா னாலும் பார்த்து அறியும் பாக்கியம்
கிடைத்திருப்ப தால் சாட்சி என்பதோ, முஸ்லிம் என்பதோ இங்கு அவசியமில்லாமல்
போய்விட்டது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
“”நம் மார்க்கத்தில் சட்டம் கூறும் அதிகாரம் வல்ல நாயன் அல்லாஹ்விற்கும் அவனின்
தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் மட்டுமே உரியது” என்று எடுத்து
எழுதியிருப்பதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், மார்க்கம் நிறைவுற்று(5:3),
நபி(ஸல்) அவர்கள் மரணித்துச் சுமார் நான்கு நூற்றாண்டுக்குப் பின் அதாவது ஹிஜ்ரி
400க்குப் பிறகு யூதக் கைக்கூலிகளான மதகுருமார்களால் கற்பனை செய்யப்பட்ட மத்ஹபுகள்,
தரீக்காக்கள், அந்த அடிப்படையிலான இஜ்மா கியாஸ் பிக்ஹு சட்டங்கள், சமீப காலத்தில்
தோன்றியுள்ள புதுப்புது இயக்கங்கள் அவர்களின் லாஜிக், பாலிஸி அடிப் படையான நவீன
பிக்ஹு சட்டங்கள் இவை அனைத்தையும் புறக்கணித்து நிராகரித்துவிட்டு குர்ஆன், ஹதீஸை
மட்டும் பற்றிப் பிடித்து, அவற்றின் நேரடிக் கருத்துக்களை மட்டும் எடுத்து நடக்க
முன் வாருங்கள்.
பிறையைப் பார்ப்பது வணக்கம் அல்ல என்று நாம் கூறுவதை எழுதி நீங்கள் அளித்துள்ள பதில்:
ரமழானிற்காக ஷஃபானுடைய பிறையை சரியாக கணக்கீடு செய்து கொள்ளுங்கள் என்று எழுதி
பிறையைப் பார்க்கும்போது ஓதவேண்டிய துஆவையும் எடுத்து எழுதியுள்ளீர்கள். உமர்(ரழி)
அறிவித்த பிறை பார்த்த செய்தியை வைத்து நபி (ஸல்) அவர்கள் நாளை நோன்பு என பிரகடனம்
செய்ததைக் காட்டியும், வணக்கம் இல்லை என்று யாருமே பார்க்காது விட்டுவிட்டால்
பாவியாகி நோன்பை ஆரம்பித்து முடிக்க முடியாத நிலை ஏற்படும். தொழுகைக்கு அழைக்கும்
அதான்-பாங்கு யாரோ ஒரு சிலர் மட்டும் கூறினால் போதும். எல்லோருக்கும் அது சுன்னத்தும் வணக்கமும் அல்ல; பிறையைப் பார்ப்பதும் அது போன்ற வணக்கம்தான் என்று பிதற்றி
இருக்கிறீர்களே! இவ்வாறு சொல்லும் நீங்களே அதைப் புரிந்துதான் சொல்லி
இருக்கிறீர்களா?
அன்று கணக்கீடு இல்லாத காலத்தில், பிறையைப் பார்த்து மாதம் பிறப்பதை அறியும்
கட்டாயம், நிர்பந்தம் இருந்த காலத்தில் நீங்கள் சொல்வது சரிதான். இன்று கணக்கு
கண்டுபிடிக்கப்பட்டக் காலத்தில் 100 வருடங்களின் 1200 மாதங்கள் பிறப்பதை இன்றே
கணக்கிட்டுச் சொல்லும் இக்காலத்தில் உங்களின் இந்தக் கூற்று அறிவார்த்தமானதா?
தொழுகைக்காக பாங்கு சொல்வது வணக்கம் இபாதத். உலகம் அழியும் வரை பாங்கு சொல்லப்பட
வேண்டும். எந்த நவீன கண்டுபிடிப்பும் பாங்கு சொல்வதை இல்லாமலாக்காது. மொட்டைத்
தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல், பாங்கையும், பிறை
பார்த்தலையும் முடிச்சுப் போட்டிருக்கிறீர்களே! இது அறிவார்த்தமான செயலா? சொல்லுங்கள்.
பிறையைப் பார்த்தால் ஓதும் துஆ என்பது போல் சேவல் கூவ, கழுதைக் கத்த, நாய்கள்
குரைக்க கேட்டால் ஓதும் துஆக்கள் என்றும் இருக்கிறது. அப்படியானால் சேவல் கூவுவதை,
கழுதைக் கத்துவதை, நாய் குரைப்பதைக் கேட்பது இபாதத்-வணக்கம் என்பீர்களா? என்னே
அறியாமை? மத்ஹபுகளின் பெயரால் உங்களின் புரோகித ஆபாக்கள் கற்பனை செய்துள்ள பல பிக்ஹு
சட்டங்கள் இந்த லட்சணத்தில் அமைந்தவைதான். பிறையைப் பார்த்தால் ஓதும் குறிப்பிட்ட
துஆதான் இபாதத்-வணக்கம். பிறை பார்ப்பது இபாதத்-வணக்கம் அல்ல என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள்.
மேலும் உங்களின் “”ரமழானிற்காக
ஷஃபானுடைய பிறையை சரியாக கணக்கீடு செய்து கொள்ளுங்கள்” என்ற எழுத்தே சிவகாசி காலண்டர்படி ­ஃபான் பிறை 29 மாலையில் மறையும்
பிறையைப் பார்ப்பது அல்ல;
ஷஃபான் மாதம் முழுக்க அன்றாடம் பிறையை அவதானித்து கணிக்க
வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறதே! நீங்கள் நபி(ஸல்) அவர்களை அப்படியே
பின்பற்றும் லட்சணம் இதுதானா?
மவ்லவிகளாகிய நீங்கள் மெத்தப்படித்த மேதைகள் எனப் பீற்றுகிறீர்கள். கணிப்பிற்கும்
கணக்குக்குமுள்ள வேறுபாடு தெரியாமல் தடுமாறுகிறீர்கள். கணக்கிடும் இடங்களில்
கணிப்பு என்றும், கணிக்கும் இடங்களில் கணக்கீடு என்றும் எழுதி உங்களின் அறியாமையை
வெளிப்படுத்துகிறீர்கள்.
7. அடுத்து ருஃயத் என்ற அரபி வார்த்தைக்கு (தவறாக எண்ணவேண்டாம்) அரபு மொழியின்
அடிப்படை இலக்கண அறிவு அவருக்குத் தெரி யாததால் தவறான அர்த்தம் வைத்து அதற்கு
ஆதாரமாக இபுராஹிம் நபி, இஸ்லாயில் நபி ஆகிய இருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலில் வரும் இன்னி அராபில் மனாமி இன்னும் பன்லுர் மாதா தரா என்ற வசனத்தை ஆதார மாக
எடுத்து கூறி தனது அறியாமையை உங்க ளுக்கு மத்தியில் எடுத்து கூறினார் என்று எம் மைப்
பற்றிக் கூறி நீங்கள் அளித்துள்ள பதில் வருமாறு.
ரஅ என்றால் பார்த்தான், கனவு கண்டான், கருதினான் என்ற பல அர்த்தங்களை இந்த வினைச்
சொல் கொடுப்பதுடன் ஒரே வடிவத்தில் வந்தாலும் இவைகளின் மூலச் சொல், கனவு என்பதற்கு
ரஅயராருஃயா என்பது மூலச் சொல், வெவ்வே றானது. அதாவது அரபியில் மஸ்தர் என்று கூறுவார்களே அது வெவ்வேறு. பார்வை என்பதற்கு ரஅ யரா ருஃயதன் என்பது மூலச் சொல். கருத்து
என்பதற்கு ரஅ யரா ரஃயன் என்பது மூலச் சொல். சூமூலிருஃய் யதிஹி என்ற (கண்ணால்) பார்வை
என்ற மூலச் சொல்லையே நபி(ஸல்) அவர்கள் உபயோகித்திருப்பதால் கண்ணால் பார்ப்பது என்ற
அர்த்தத்தை தவிர வேறு அர்த்தம் இதற்கு கொடுக்கவே முடியாது. அப்ஸரா என்ற வார்த்தையும்
பிரயோகிக்கப்பட்டி ருக்கின்றது என்று எழுதி இருக்கிறீர்கள்.
எமது பதில்:
அல்குர்ஆன் அரபி இலக்கண இலக்கியம் மட்டுமல்ல, எழுதப் படிக்கவே தெரியாத உம்மிகளுக்
காகவே இறக்கப்பட்டதே அன்றி, அரபி இலக்கண இலக்கியத்தில் கரைகண்ட, புலமை மிக்க தாருந்
நத்வா அல்லாமாக்களுக்காக இறக்கப்படவில்லை என்பதை அறியாமல் பிதற்றியுள்ளீர்கள். அரபி
மொழியின் அடிப்படை இலக்கண அறிவு எனக்குத் தெரியாது என்று நீங்கள் குறிப்பிட்டது போல்,
அன்று அரபு மொழியின் அடிப்படை இலக்கண அறிவு சிறிதும் இல்லாத பிலால், யாசிர்,
அம்மார், சுமையா (ரழி-ம்) போன்ற எழுத்தறிவோ படிப்பறிவோ இல்லாத, அர பியை சரியாக
உச்சரிக்கத் தெரியாத மக்கள் குர்ஆனை எளிதாக தெளிவாக விளங்கினார்கள். அதே சமயம்
உங்களை விட அரபி மொழியின் இலக்கண, இலக்கியம் மட்டுமல்ல பெரும் கவிப் புலமை பெற்ற
தாருந்நத்வா என்ற அன்றைய ஐ.உ.ச.வின் பெரும் பெரும் பண்டிதர்கள் குர்ஆனை விளங்க
முடியாமல் மண்ணைக் கவ்வினார்கள், நிரந்தர நரகிற்கு ஆளானார்கள் என்ற உண்மை தெரியாது
பிதற்றியுள்ளீர்கள்.
அன்று அந்த அல்லாமாக்களுக்கு அவர்க ளின் கற்றவர்கள் என்ற தற்பெருமை-ஆணவம் குர்ஆனை
விளங்குவதற்குத் தடையாக இருந்தது போல் அதே ஆணவம்-தற்பெருமை தான் மவ்லவி-ஆலிம் எனப்
பீற்றிக் கொள்ளும் உங்களுக்கும் குர்ஆனை விளங்கத் தடையாக இருக்கிறது. உங்க ளின் அரபி
திமிரை வெளிப்படுத்தி உங்களின் முகல்லிதுகளை ஏமாற்றி வஞ்சிக்கிறீர்கள்.
ருஃய்யத், ரஅய்த்து, அர, தர, யர போன்ற பதங்கள் பார்த்து, கண்டு, உணர்ந்து, ஆய்ந்து
என்று பொதுவான பொருளைத் தருமே அல்லாமல் கண்ணால் மட்டுமே பார்க்கும் பொருளை இவற்றில்
எந்தப் பதமும் தராது. கண்ணால் பார்ப்பதையும் குறிக்குமே அல்லா மல் கண்ணால் மட்டுமே
பார்ப்பதை ஒருபோதும் குறிக் காது. குறிப்பாக கண்ணால் பார்ப்பதைக் குறிக்க ஐன்-கண்
என்ற பதம் இடம் பெறும். 3:13 இதை உறுதிப் படுத்துகிறது.
இந்தப் பதங்கள் கண்ணால் பார்ப்பதைக் குறிப்பது போல், கணக்கால், கணினி கணக்கீட்டால்
பார்ப்பதையும் குறிக்குமே அல்லாமல் நீங்கள் கூறுவது போல் கண்ணால் பார்ப்பதை மட்டுமே
குறிக்கும் என்பது அறிவீனமான கூற்றாகும். எனவே உங்களின் அரபி இலக்கணப் புலமையை(?)
காட்டி மக்களை ஏமாற்றி வழிகெடுக்க முற்படாதீர்கள். அன்றைய தாருந்நத்வா ஆலிம்கள்
குறைஷ் காஃபிர்களைத் தங்கள் அரபி புலமையைக் காட்டி வழி கெடுத்தது போல்.
8. 316 இடங்களில் குர்ஆனில் ருய்யத் என்ற வார்த்தைகள் வருவதாக உண்மைக்குப் புறம்
பாகக் கூறினோம் என்று கூறி நீங்கள் அளித் துள்ள பதில் வருமாறு:
ருஃய்யத் என்ற வார்த்தை அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனில் ஒரு இடத்தில் கூட வரவில்லை.
குர்ஆன் முழுவதும் புரட்டிப் பார்க்கவும், அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனில் இல்லாததை
இருப்பதாக கூறினால் என்ன நிலை என்பது எல்லோருக்கும் தெரியும் என்று எழுதி உள்ளீர்கள்.
நமது விளக்கம் வருமாறு:
எதையாவது எழுதி உங்களின் முகல்லிதுகளைத் தக்க வைக்க முற்பட்டிருக்கிறீர்களே அல்லாமல் யதார்த்தமாக எழுதி சத்தியத்தை வெளிப்படுத்தும் நல்லெண்ணம் உங்களிடம் இல்லை
என்பதையே உங்களின் எழுத்து உண்மைப்படுத்துகிறது. ருஃயத் என்ற பதம் பல திரிபுகளில்
சுமார் 316 இடங்களில் வருகிறது என்று நாம் கூறுவதை திரித்து இவ்வாறு எழுதியுள்ளீர்கள். ஒரு பேச்சுக்கு அல்லாஹ் என்ற பதம் இத்தனை இடங்களில் வருகிறது என்று
கூறினால் அல்லாஹ், லில்லாஹ், ஹுவல்லாஹ் போன்ற அனைத்து திரிபுகளையும் உள்ளடக்குமா?
அல்லாஹ் என்ற பதத்தை மட்டுமே குறிக்குமா? இந்த அற்ப அறிவும் இல்லாத நிலையில் நீங்கள்
இருக்கிறீர்களா? அல்லது உங்கள் பக்தர்களை திசை திருப்பி ஏமாற்ற இப்படி எழுதி
இருக்கிறீர்களா?
எனது அரபி உச்சரிப்பைக் கேலி செய்துள்ள உங்களின் தமிழ் உச்சரிப்புகளைக் கவனியுங்கள்.
உங்கள் கடிதம் 6-ம் பக்கம்
அல்லாஹும்ம என்பதை அல்லாஹீம்மா என்றும்
அஹில்லாஹு என்பதை அஹில்லாஹீ என்றும்
இன்னீ என்பதை இன்னி என்றும்
உங்கள் கடிதம் 7-ம் பக்கம்
அல்லாஹ்வின் கலாமாகிய என்பதை காலமாகிய என்று இரண்டு இடங்களிலும்,
பல இடங்களில்
முஸ்லிம்கள் என்பதை முஸ்லீம்கள் என்றும்
ரஃயல் என்பதை ரஅயல் என்றும்
உங்கள் கடிதம் 9-ம் பக்கம்
மஃறிபு என்பதை மங்ரிபு என்றும்
உங்கள் கடிதம் 10-ம் பக்கம்
யஸ்அலூனக் என்பதை யஸ்அலுனக என்றும்
அல்லாஹு என்பதை அல்லாஹீ என்றும் பல இடங்களில்
ஷரீஅத் என்பதை ­ரிஅத் என்றும்
எழுதியுள்ளீர்கள்.
ஆம்! மவ்லவிகள்-ஆலிம்கள் மெத்தப் படித்த மேதைகள் என தற்பெருமை கொள்ளும் உங்களைப்
போன்றவர்கள் தாய்மொழி தமிழையே முறையாகக் கற்றுத் தேறவில்லையே! நீங்கள் எப்படி அரபி
மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க முடியும்? தமிழிலும் அரைகுறை, அரபியிலும் அரைகுறை,
அதனால் தான் தற்பெருமை கொள்கிறீர்கள். நிறைகுடம் தளும்பாது, குறைகுடமே தளும்பும்
என்று நாம் கூறி வருவதை உண்மைப்படுத்தி வருகிறீர்கள்.
9. நாம் கண்ணால் பார்க்க கூடாது என்று கூறவில்லை. அது தற்காலத்திற்குக் கூறிய தில்லை.
அதனால் அதற்கு கணிப்பு என்ற பொருள் கொடுக்க வேண்டும் என்று நான் கூறி யதாகக் கூறி
நீங்கள் அளித்துள்ள பதில் நபி (ஸல்) அவர்களின் ஹதீதிற்கு அவர் தன் சொந் தக் கருத்தை
கூறுவதை நாம் ஏற்க வேண்டும் என்று அவர் கூறினால், ஹதீதுகளுக்கு இமாம் கள் கூறிய
கருத்தை நாங்கள் மட்டும் கூறக் கூடாதா? குர்ஆன் ஹதீதிற்கு யாரும் சொந்தக் கருத்தை
கூறக் கூடாது என்பவர் தான் மட்டும் கூறலாமா? என்று வினா தொடுத்துள்ளீர்கள். எமது
பதில் வருமாறு:
நாம் எமது சொந்தக் கருத்தைக் கூறினால், அதை அம்பட்டன் குப்பைத் தொட்டியில் எறிந்து
விடுங்கள் என்று பலமுறை எழுதி இருக்கிறோம். மார்க்கத்தில் 7:3, 33:36, 59:7 இறைக்
கட்டளைகள்படி அல்லாஹ், அவனது தூதர் தவிர எவரது சுய கருத்துக்கும் அணுவின் முனை
அளவும் அனுமதி இல்லை என்றே நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம், எழுதி வருகிறோம்.
ஊருக்கு உபதேசம் செய்வது மவ்லவிகளுக்குக் கைவந்த கலையேயன்றி எமக்கல்ல.
இங்கு நாம் எமது சொந்தக் கருத்தைச் சொல்லியுள்ளோமா? அல்லது ஹதீஸ் கூறும் கருத்தை
வெளிப்படுத்தியுள்ளோமா? என்பதை அவதானியுங்கள்.
ஹதீதில் நாம் மேலே விளக்கியுள்ளது போல் பொதுவாக “பார்த்து’ என்றே இருக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் அறிவித்தது போல் சூரிய, சந்திரக் கணக்கு அன்று தெரியாத நிலையில்
பிறையைக் கண்ணால் பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் அல்லாஹ் குர்ஆனின் பல வசனங்களில்
கூறி இருப்பது போல் அன்றில்லாதிருந்த சூரிய, சந்திரக் கணக்கை இன்று
வெளிப்படுத்திவிட்டான். எனவே அந்தக் கணக்கைக் கணினியில் பார்த்து மாதம்
ஆரம்பிப்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்றே கூறுகிறோம். அன்று நபி(ஸல்) அவர்கள் மாதம்
ஆரம்பிப்பதைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கூறி
இருந்தால் அணுவள வல்ல; அணுவின் முனை அளவும் நாம் அதில் மாறுபட்டக் கருத்தை
வெளிப்படுத்த மாட்டோம்.
பிறையைப் புறக்கண்ணால் பார்த்து என்றில்லாமல் பொதுவாக “”பார்த்து” என்று ஹதீஸில்
இருப்பதை “”கண்ணால் பார்த்து” என வலிய பொருள் கொண்டு பிறை பார்ப்பது இபாதத்-வணக்கம்
என அழுத்தமாகக் கூறும் நீங்கள் குர்ஆன் 22:27-ல் ஹஜ்ஜுக்காக தொலைவிலிருந்து மெலிந்த
ஒட்டகங்களில் வருவார்கள் என்று நேரடியாக தெளிவாகக் கூறி இருந்தும் நீங்கள்
ஒட்டகத்தில் போவது இபாதத்-வணக்கம், ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் போனால்தான் ஹஜ் நிறைவேறும்
என்று ஏன் கூறுவதில்லை? நேரடியாகக் கூறப்படாத நிலையில் பிறை விசயத்தில் இந்த அளவு
பிடிவாதம் பிடிக்கும் நீங்கள், 22:27-ல் நேரடியாக ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள்
என்று குர்ஆனில் சொல்லி இருக்க உங்களைப் போன்ற மவ்லவிகள் விமானத்தில் செல்லலாமா?
அல்லாஹ்வுக்கு மாறு செய்யலாமா? சொல்லுங்கள்.
நாமோ ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் சென்றதும், சூரிய ஓட்டத்தைப் பார்த்து தொழுததும்,
பிறையைப் பார்த்து நோன்பு ஆரம்பித்து முடித்ததும் அன்றைய உபகரணங்களே அன்றி
மார்க்கத்திற்கு உட்பட்ட வையோ இபாதத்தோ அல்ல என்கிறோம்.
10. தொழுகையின் நேரங்களை சூரியனைப் பார்த்து முடிவு செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள் என்று நாம் கூறியதாகக் கூறி அதற்கு உங்களின் பதில் வருமாறு:
இந்த நபி மொழி எங்கு எதில் வருகிறது? ஆதாரம் தர முடியுமா? அவ்வாறு ஒரு ஹதீது கூட
நாம் பார்த்தவரை இல்லை. என் அன்பு சகோதரர்களே! நபி(ஸல்) அவர்களின் மீதே துணிந்து
பொய் கூறுகிறார். நபி(ஸல்) அவர்களின் மீது பொய் கூறி னால் என்ன விளைவு? என்பது
அவருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும் என்று எழுதி இருக்கிறீர்கள்.
அதற்கு எமது பதில்!
ஐவேளைத் தொழுகைகளின் நேரத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும்போது,
கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்ரு தொழுகை நேரத்தையும், சூரியன் உச்சி
சாய்வது லுஹர் நேரத்தையும், ஒரு மனிதனின் நிழல் அவன் உயரத்தின் அளவுக்கு வருவது அஸர்
நேரத்தையும், சூரியன் மறைவது மஃறிப் நேரத்தையும், வானில் செம்மேகம் மறைவது இஷா
நேரத்தையும் அறிவிக்கிறது எனக் கூறினர். (முஸ்லிம்-ஹதீஸ் சுருக்கம் )
மேலும் அல்ஹதீஸ் நூலின் 2ம் பாகம் பக்கம் 1100லிருந்து 1112 வரை ஹதீஸ் எண்கள் 2671
லிருந்து 2698 வரையுள்ள ஹதீஸ்களைப் பார்வையிடவும்.
நபி(ஸல்) அவர்களது காலத்தில் சூரியனைப் பார்த்து அதாவது சூரிய ஓட்டத்தைப் பார்த்தே
ஐவேளை தொழுகைகளைத் தொழுதார்கள் என்று இத்தனை ஹதீஸ்கள் இருக்க அவ்வாறு ஒரு ஹதீஸ் கூட
இல்லை என்று கூறும் நீங்கள் எந்த அளவு குர்ஆன், ஹதீஸ் ஞானமுடையவர் என்பதை மக்கள்
அறிவார்கள்.
நபி(ஸல்) அவர்கள்மீது துணிந்து பொய் கூறுவது யார் என்பதும் அதன் விளைவு என்ன வாகும்
என்பதையும் மக்கள் அறிவார்கள்.
புரோகிதர்களை உற்பத்தி செய்யும் மதரஸாக்களில் குர்ஆன், ஹதீஸ் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. இவர்களின் புரோகித முன்னோர்கள் கற்பனை செய்த பிக்ஹு நூல்களே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிக்ஹு நூல்களே இவர்களிடம் வேதநூல்கள். அவற்றை ஒளூ இல்லாமல் தொட
மாட்டார்கள். யாரும் மார்க்கச் சட்டம் கேட்டால் பிக்ஹு நூல்களை எடுத்துப் பார்த்துச்
சொல்வார்களே அல்லாமல் குர்ஆன், ஹதீஸைத் தொடமாட்டார்கள். ஹதீஸ் நூல் என்றால்
இட்டுக்கட்டப்பட்ட, பலவீன மான ஹதீஸ்கள் நிறைந்த மிஷ்காத் நூல்தான் இந்த
மவ்லவிகளுக்கு வேதப் புத்தகமாகத் தெரியும். பிக்ஹு நூல்கள், ஹதீஸ் நூல் என்றால்
மிஷ்காத் இவைதான் இம்மவ்லவிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. புகாரீ போன்ற
ஹதீஸ்கள் இவர்களின் கண்ணில் காட்டப் படுகின்றனவே அல்லாமல் கற்றுக்
கொடுக்கப்படுவதில்லை. குர்ஆன், ஹதீஸ் ஞானம் இந்த மவ்லவிகளுக்கு இல்லவே இல்லை என்று
நாம் சொல்லி வருவதை “”தொழுகை நேரங்கள் அன்று சூரியனைப் பார்த்து முடிவு
செய்யப்பட்டது” என்று நாம் கூறும் ஒரு ஹதீது கூட நாம் பார்த்தவரை இல்லை” என்று
நீங்கள் கூறி இருப்பது உண்மைப் படுத்துகிறது.
11. அடுத்து பிறை சச்சரவை தீர்க்க விஞ்ஞான கணக்கீட்டைத்தான் ஏற்க வேண்டும் என்று
நாம் கூறியதைச் சொல்லி நீங்கள் அளித்துள்ள பதில்:
நபி(ஸல்) அவர்கள் கூறிய தீர்வை விடவா இக்கால விண்ணியல் அறிஞர்களின் தீர்வு மேலானது?
நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பே மேலானது; மாற்ற முடியாதது என்பதே எங்களின் மிக்க உறுதியான நம்பிக்கை.
இதற்கு எமது பதில்!
மார்க்க விஷயங்களில் நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பே மேலானது மாற்ற முடியாதது என்பதில்
உங்களை விட எமக்கு உறுதியான நம்பிக்கை இருக்கப் போய்தான் நீங்கள் சரிகாணும் ஹிஜ்ரி
400க்குப் பின் கற்பனை செய்யப்பட்ட மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் இவை கொண்டு
சமுதாயத்தில் திணிக்கப்பட்ட நூதன மூடச் சடங்கு சம்பிர தாயங்கள் அனைத்தும் பித்அத்,
குஃப்ர், ஷிர்க்் நிறைந்தவை, நரகிற்கு இட்டுச் செல்பவை என உலகறிய உரத்துச் சொல்கிறோம்.
நீங்களோ நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பே மேலானது; மாற்ற முடியாதது என்று பொய்யாகக்
கூறிக்கொண்டு அனைத்து விதமான பித்அத், குஃப்ர், ஷிர்க்் இவற்றை மக்களிடையே பரப்பி
அவர்களை நரகிற்கு இட்டுச் செல்கிறீர்கள்.
இவற்றைக் கடந்த 29 வருடங்களாக எண்ணற்ற குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் கொண்டு நிலைநாட்டி
வருகிறோம். ஆனால் அன்று பிறை பார்த்தது மார்க்கத்திற்கு உட்பட்ட விஷயம் அல்ல.
நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற புதிதில் அயல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததால்
விளைச்சல் குறைந்து முறையிட்டபோது “”மார்க்கம் என்றால் நான் சொல்வதை அப்படியே
எடுத்து நடக்க வேண்டும். அதல்லாவற்றில் என்னைவிட நீங்கள் அனுபவ சாலிகள்” என்று
கூறியதற்கு ஏற்ப அறிவியல் முன்னேற்றம் மூலம் கிடைத்த அனுபவம் கொண்டு மாதம்
பிறப்பதைத் திட்டமாகத் துல்லியமாக இன்று அறியும் வசதி ஏற்பட்டுவிட்டதால் அதன்படி
நடப்பதே சாலச் சிறந்தது. நபி(ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பதாகும். சமுதாய
ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என உரத்துச் சொல்கிறோம்.
அன்று ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகமாக இருந்தது. அந்தந்த ஊரில் நடக்கும் அனைத்தும்
அந்தந்த ஊருக்கு மட்டுமே. 10 கி.மீ. தூரத்திலுள்ள ஊரில் நடப்பதும் தெரியாத காலம்.
எனவே அந்தந்த ஊரில் பிறை பார்த்து நோன்பு நோற்றது, பெருநாள் கொண்டாடியது பக்கத்து
ஊர்களில் எவ்வித சச்சரவையோ கலகத்தையோ சண்டையையோ ஏற் படுத்தவில்லை. அந்தந்த ஊர்களில்
மக்கள் அனை வரும் குடும்பத்தார் அனைவரும் ஒரே நாளில் நோன்பு ஆரம்பித்து ஒரே நாளில்
பெருநாள் கொண்டாடினர். ஆனால் கலகம் மூட்டி சமுதாயத் தைப் பிளவுபடுத்துவதில் குறியாக
இருக்கும் ஷைத் தான் விடுவானா? கருத்து வேறுபாடுகளை உண் டாக்கி கலகத்தை மூட்டிச்
சமுதாயத்தைப் பிளவு படுத்துவதுதானே ஷைத்தானின் அசலான வேலை.
ஷைத்தானின் அந்த வேலையைத்தானே மதகுரு மார்களான நீங்கள் இப்போது செய்து வருகிறீர்கள்.
அன்று தினசரி பிறையை அவதானித்து வந்ததால் சிலருடைய கணிப்பில் மாதம் 29-ல் முடிகிறது
என்றும் வேறு சிலருடைய கணிப்பில் 30-ல் முடிகிறது என்றும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டது. அந்த அடிப்படையில் 2-ம் பிறை, 3-ம் பிறை என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இக்கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க இன்றுபோல் கோள்களின் துல்லிய கணக்கீடு அன்று
இருக்கவில்லை. ஆயினும் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து சமுதாயத்தை
ஒற்றுமைப்படுத்துவது 21:92, 23:52 இறைக் கட்டளைப்படி நபியின் கடமை. அதற்கு
அன்றிருந்த ஒரே வழி என்ன? 29 என்றும் 30 என்றும் சண்டையிட்டுப் பிளவுபடாதீர்கள்.
பிறையைப் பார்த்து முடிவு செய்யுங்கள். பார்க்காமல் முடிவு எடுக்காதீர்கள் என்பது
மட்டுமே. அதனால் பார்த்து வையுங்கள் பார்க்காமல் வைக்கா தீர்கள் என்று நபி(ஸல்)
அன்று அறிவித்தார்கள்.
அன்று ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகமாக இருந்த நிலை அப்படியே இன்று இருக்கிறதா?
இல்லையே! இன்று முழு உலகமே ஒரு சிற்றூர்போல் ஆகிவிட்டதே! ஏன்? உலகம் முழுவதும்
உள்ளங் கைக்குள் அடங்கிவிட்டதே. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை
உடனுக்குடன் உலகம் முழுவதும் கண்ணால் பார்க்கும் அளவுக்கு அறிவியல் முன்னேறி
விட்டதே. இன்று மக்காவில் நடப்பதை மதீனாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தங்கள்
கண்களால் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே. அன்று நபியின் காலத்தில் மக்காவில்
நடப்பது உலகெங்கும் தெரிவது இருக்கட்டும், மதீனாவில் தெரிவது இருக்கட்டும்,
பக்கத்திலுள்ள ஊருக்காவது தெரியும் வாய்ப்பு இருந்தா? இல்லையே! பின்னொரு காலத்தில்
இவ்வாறு அறிவியல் முன்னேற்றம் இந்த அளவு ஏற்படும் என்று அல்லாஹ்வோ, அவனது ரசூலோ
சொல்லவில்லையே என்று சொல்லப் போகிறீர்களா?
நேரத்தை அறிய அன்று சூரியன் இருந்தது போல் மாதத்தை அறிய அன்று சந்திரன் இருந்தது
என்ற உண்மை நிலையை மறுத்து, பிறை பார்ப்பது இபாதத்-வணக்கம் என்று நீங்கள் சொல்லி
வருவ தால் இன்று சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறு பாடுகள், சச்சரவுகள்,
பிளவுகள் இவற்றைக் கவனித் தீர்களா? அன்று வெவ்வேறு ஊர்களில்தான் வெவ் வேறு நாட்களில்
நோன்பு ஆரம்பிக்கப்பட்டது; பெரு நாள் கொண்டாடப்பட்டது. ஆனால் இன்றோ ஒரே ஊரில் முதல்
நாள், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் என மூன்று நாட்கள் நோன்பு ஆரம்பிப்பதும்,
பெருநாள் கொண்டாடுவதுமாக சமுதாயம் பிளவு பட்டுக் கிடக்கிறதே.
ஒரே ஊரில் மட்டுமல்ல ஒரே குடும்பத்தில் இந்த பிளவுபட்ட நிலை காணப்படுகிறதே. தகப்பன்
ஒரு நாள், மகன் ஒரு நாள், பேரன் ஒரு நாள் என்றும், தாய் ஒரு நாள், மகள் ஒரு நாள்,
பேர்த்தி ஒரு நாள் என்றும் சமுதாயம் பிரிந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறதே. பிறை
பார்க்கும் வணக்கமல்லாததை வணக்கமாக்கி சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் ஷைத்தானின்
வேலையை கனகச்சிதமாக நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களே! இப்போது சொல்லுங்கள்!
வணக்க மல்லாததை வணக்கமாக்கி பிறை பார்த்து மாத ஆரம்பத்தைக் கணக்கிட வேண்டும்
என்பதால் சமுதாய ஒற்றுமைக் காக்கப்படுமா? அல்லது எண்ணற்ற இறைவாக்குகள் கூறுவது போல்,
அல்லாஹ் சூரியனையும், சந்திரனையும் நமக்கு வசப்படுத்தித் தந்து அவற்றின் கணக்கீட்டை
அறியத் தந்துள்ள தால், வரும் மாதம் என்ன, பல மாதங்கள் என்ன, பல வருடங்களின் மாதங்கள்
பிறப்பதை மிகமிகத் துல்லியமாக கணக்கிட முடிகிறது. அப்படிக் கணக்கிடுவது 100
சதவிகிதம் சரியாக இருக்கிறது என்பதற்குப் பல வருடங்கள் கழித்து இடம் பெறும் சூரிய,
சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுக் கூறுவது நாள், மணி, நிமிடம் தவறாமல்
நிகழ்ந்து கணக்கீட்டை உறுதிப்படுத்துகிறது.
இப்போது சொல்லுங்கள்! 21:92, 23:52 அல்லாஹ்வின் கட்டளைப்படி இன்றைய நிலையில் பிறை
சச்சரவைத் தீர்த்து, கருத்து வேறுபாடுகள் மறைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட நபி(ஸல்)
காலத்தில் இல்லாதிருந்து அதன்பின்னர் கண்டுபிடிக்கப் பட்ட நவீன வாகனங்களில்
ஹஜ்ஜுக்குப் போவது போல், கடிகாரம் பார்த்து நேரம் அறிந்து ஐங்கால தொழுகைகளைத்
தொழுவது போல், புதிய கண்டு பிடிப்பான கணினி மூலம் சந்திர ஓட்டத்தைக் கணக்கிட்டு
மாதம் பிறப்பதைத் திட்டமாக அறிந்து செயல்படுவது சிறந்ததா?
அதற்கு மாறாக அன்று போல் இன்று வானம் மாசுபடாமல் தெளிவாக இல்லை; அன்றுபோல் இன்று
மனித இனம் ஆரோக்கியமாக இல்லை; அன்று போல் இன்று மனித இனத்தின் கண்பார்வை தெளிவாக
இல்லை. இந்த நிலையில் பல குறைபாடுகள் உடைய நிலையில் கண்ணால் பிறை பார்த்துச்
செயல்படுவது கொண்டு சமுதாய ஒற்றுமை ஏற்படுமா? சொல்லுங்கள். அல்லாஹ் தன் அருளைக்
கொண்டு மனிதனின் தற்போதைய பலகீன நிலை அறிந்து மாதம் துவங்கும் விவகாரத்தில் மிகமிக
எளிய வழியை காட்டியிருக்கும்போது அதைப் புறக்கணித்து கடின நிலையை தேர்ந்தெடுப்பது
சரியா? ஒருவன் 22:27ல் சொல்லியுள்ளதுபோல் ஒட்டகத்தில்தான் இந்தியாவிலிருந்து
ஹஜ்ஜுக்குப் போவேன். தினசரி சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்தே ஐங்கால தொழுகைகளைத்
தொழுவேன், அயலூர்களில், நாடுகளில் இடம்பெறும் மரணம் பற்றிய செய்தியை ஆள் நேரில்
வந்து சொன்ன பின்னரே ஏற்பேன். ஏன் என்றால் நபி(ஸல்) அவர்கள் அப்படித் தான்
நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள் என்று அடம் பிடித்தால் அவனை அறிவாளி, நபி
(ஸல்) அவர்களை அடிபிசகாமல் பின்பற்றும் வணக்கசாலி என்பீர்களா? மார்க்கம் விளங்கா
மதியீனன் என்பீர்களா? சொல்லுங்கள்!
சவுதியில் நடப்பது இஸ்லாமிய ஆட்சி அல்ல; மன்னராட்சி. மக்களிடையே அதிகாரம் செலுத்தும்
மதகுருமார்களைப் பகைத்துக் கொண்டால் தனது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என அஞ்சி
மதகுருமார்கள் காட்டும் வழியிலேயே மன்னர் நடைபோடுகிறார். அங்குள்ள மதகுருமார்களும்
யூதர்கள் முஸ்லிம்களிடையே புகுத்திய நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூடக்
கொள்கையில்தான் இருக்கிறார்கள். நாமும் ஆரம்பத்தில் வழமையில் நடைமுறை யில்
இருக்கும் அந்த மூடக் கொள்கையில் இருந் ததை ஒப்புக் கொள்ள வெட்கப்படவில்லை.
அந்த அடிப்படையில் சங்கமம்
(Conjunction) சவுதிக்குக் கிழக்கே இடம் பெற்றால்
அடுத்த நாளைத் தலைப்பிறையாகக் கொள்வார்கள். சங்கமம் சவுதிக்கு மேற்கே அதாவது
சவுதியைத் தாண்டி இடம் பெற்றால் அடுத்த நாளைத் தலைப்பிறையாகக் கொள்ளாமல் அதற்கடுத்த
நாளைத் தலைப்பிறையாகக் கொள்கிறார்கள். எனவே பிறை விவகாரத்தில் சவுதியைச்
சார்ந்திருப்பது குர்ஆன், ஹதீஸ் வழியல்ல.
12. டேட் லைன் அல்லாஹ் போட்டான் என்று கூறினார் என்று நீங்கள் கூறி நீங்கள் அளித்துள்ள பதிலில் குர்ஆன், ஹதீதின் ஆதாரமில்லாது அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்.
அனைத்துக்கும் குர்ஆன், ஹதீது மட்டுமே ஆதாரம் என்று கூறுபவர் இதற்கு மட்டும் ஏன்
குர்ஆன் ஹதீது கூறவில்லை? தன் சொந்தக் கருத்தைத் தானே மக்களுக்குத் திணிக்க
முயல்கிறார்.
பூமி உருண்டை எனும்போது டேட் லைனை எந்த இடத்திலும் போடலாமா? ஏன் 0 டிகிரி
கிரின்வீச்சிலிருந்து கூட ஆரம்பிக்கலாமே? கடலில் ஏன் போட வேண்டும்? இதற்குப் பதில்
தருவாரா? சரி இந்த கொள்கைக்கு எப்பொழுது வந்தார்? 2000ஆம் ஆண்டு இவரின் கருத்து
என்ன? இந்த 8 வருடத்தில் எப்படி மாறி இப்பொழுது தடுமாறுகின்றார் என்று பார்ப்போம்.
இவருடைய அந்நஜாத் ஜனவரி 2000 தலைப்பிறை சிறப்பிதழின் 33:34-வது பக்கத்தில்
“”சர்வதேச தேதிக்கோடு மனிதன் அமைத்துக் கொண்டது; அதுவும் கடலில் பிரயாணம் செய்பவர்களுக்கென்று அமைக்கப்பட்டது என்று எழுதியுள்ளாரே? அல்லாஹ்விடமிருந்து இவருக்கு வஹி
ஏதும் வந்ததா? ஏன் முரண்? ஏன் தடுமாற்றம்? இவ்வாறு மாறி மாறி பேசுபவரை எவ்வாறு
நம்புவது? எது சரியென்று கூறுவாரா? என்று நீங்கள் எழுதியுள்ளதற்கு விளக்கம் வருமாறு:
அந்நஜாத்தை இவ்வளவு உன்னிப்பாகப் படித்து வரும் உங்களுக்கு அந்நஜாத்தையோ, அபூ
அப்தில்லாஹ்வையோ தக்லீது செய்யாதீர்கள். மார்க்கத்திற்கு உட்பட்டவற்றில் குர்ஆன்,
ஹதீஸ் ஆதாரங்களைப் பார்த்தே எடுத்து நடங்கள் என்று எழுதி வருவது கண்ணில் படவில்லையா?
மதகுருமார்களான உங்களைப் போல் என்றாவது என்னை நம்பி என் பின்னால் வாருங்கள்
என்றாவது சொல்லியிருக்கிறேனா? எழுதி இருக்கிறேனா?
மண்ணிலிருந்தும் பின்னர் அற்பப் பொருளிலிருந்தும் படைக்கப்பட்ட மனிதன்,
வழிகெடுக்கும் மனிதன் (31:6) அக்கிரமம் செய்யும் மனிதன் (42:42) கர்வமுள்ளவன்
மனிதன்(90:4-10, 96:6) உலக இன்பங்களில் மூழ்கவே விரும்பும் மனிதன் (76:27, 87:16)
கீழ்நிலை அடைபவன் மனிதன் (95:5) அவசரக்காரன் மனிதன் (17:11, 21:37, 70:19) அறியாமை
நிறைந்தவன் மனிதன் (33:72) பலகீன மானவன் மனிதன் (4:28) நன்றி கெட்டவன் மனிதன்
(10:12, 11:9, 17:67, 29:65,66, 30:33,34, 31:32, 39:49, 100:6) உலகைப் பெரிதும்
விரும்புகிறவன் மனிதன் (3:14) இவ்வளவு தெளிவாக சம்மட்டியால் மண்டை யில் ஓங்கி
அடிப்பதுபோல் குர்ஆனில் சொல்லி இருக்க இந்த இறைவாக்குளை நிராகரித்து என்னு டைய சுய
கருத்துக்களை மார்க்கமாக்க ஒருபோதும் நான் முற்பட்டதில்லை.
அதனால்தான் அந்நஜாத்தின் பின் அட்டையில் யாரையும் தக்லீது செய்யாதீர்கள், அபூ
அப்தில்லாஹ்வையும், அந்நஜாத்தையும் கண்டிப்பாக தக்லீது செய்யாதீர்கள்! அந்ஜாத்தில்
வருபவ ற்றை குர்ஆன், ஹதீஸோடு சரிபார்த்து விளங்கிப் பின்பற்றவேண்டும் என்றே நாங்கள்
சொல்லு கிறோம். எங்களை தக்லீது செய்கிறவர்களுக்கு மறுமையில் உதவி செய்யவும்,
பொறுப்பு ஏற்கவும் முடியாது என்று திட்டமாக நாங்கள் அறிவிக்கிறோம் என்று அடிக்கடி
எழுதி வருவது உங்களின் கண்களில் படவில்லையா? அவரை எப்படி நம்புவது என்று
கேட்டிருக்கிறீர்களே நியாயமா?
நபிமார்கள் உட்பட மனிதர்களில் யாருமே தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்காதீர்கள். நபிமார்கள் அல்லாஹ்வுடன் வஹியின் தொடர்புடன் இருந்ததால், அவர்களின் தவறுகள்
உடனுக்குடன் திருத்தப்பட்டு, நேர்வழி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதித்
தூதருக்குப் பின் அந்த வாய்ப்பு யாருக்குமே இல்லை என்பதைத் தெளிவுபடுத்த அல்லாஹ்,
பல சிறப்புகளைப் பெற்ற, நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபி வருவதாக இருந்தால்
அதற்கு முழுத் தகுதி பெற்றவர் என நபி(ஸல்) அவர்களாலேயே புகழ்ந்துரைக்கப்பட்ட
உமர்(ரழி) அவர்களையே நபி (ஸல்) அவர்கள் இறந்த உடன் அவர்கள் இறக்கவில்லை என்று
முஹம்மது(ஸல்) அவர்களை வணங்குவது போல் அல்லாஹ்வுக்குள்ள தனித் தன்மையை நபிக்குக்
கொடுத்துப் பெரும் தவறைச் செய்ய வைத்து மனித இனத்திற்குப் பாடம் புகட்டியுள்ளான்.
அப்போது யாருக்கும் வஹி வரவில்லை. முன்னர் நபிக்கு வஹியாக வந்து அல்குர்ஆனில் இருக்
கும் 3:144, 39:30 குர்ஆன் வசனங்களே அபூபக் கர் (ரழி) அவர்களால் படித்துக்
காட்டப்பட்டு உமர்(ரழி) அவர்களின் பெரும் தவறு உணர்த்தப்பட்டது. இந்த நிலையில்
மார்க்கத்திற்கு உட்பட்டவற்றில் எந்த அல் லாமாவின் சுயக் கருத்தையும் புகுத்த
முடியுமா? அது அனுமதிக்கப்பட்டதா எனச் சிந்தித்து விளங்குங்கள்.
மவ்லவிகள் ஆலிம்கள் அல்லாமாக்கள் படித்துப் பட்டம் பெற்ற மேதைகள் எனப் பீற்றிக்
கொண்டு 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு முரணாக சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறு
போடுவதோடு மார்க்கத்திற்கு உட்பட்டவற்றை மார்க்கம் அல் லாதவை என்றும்,
மார்க்கத்திற்கு உட்படாதவற்றை மார்க்கம் என்றும் தலைகீழாக்கி அது கொண்டு பிழைப்பு
நடத்துவதாலேயே 2:74, 5:13, 6:125 குர்ஆன் வசனங்கள் கூறுவதுபோல் மவ்லவிகளின்
உள்ளங்கள் இறுகி கல்லாகி உண்மையை நேர் வழியை அறியவிடாமல் தடுக்கின்றன.
இப்போது உங்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் இதுதான். 1960களிலேயே எனது 18
வயதிலேயே மார்க்க ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. இலங்கையில் கல்லூரியில்,
பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே மார்க்க ஈடுபாடு ஏற்பட்டு தப்லீக் பணியில் ஈடுபட்டு
வந்தேன். இயற்கையிலே தர்கா சடங்குகளை வெறுத்து வந்தேனே அல்லாமல் மவ்லவிகள் மீது
அபார நம்பிக்கையும், மத்ஹபில் ஈடுபாடும் இருக்கவே செய்தது. உலகம் இயங்க 4 பருவங்கள்
எப்படி அவசியமோ அதுபோல் இஸ்லாம் இயங்க 4 மத்ஹபுகள் அவசியம் என்றெல்லாம் அப்போது
பேசியுள்ளேன். 1963ல் இந்தியா வந்த பின்னர், குடும்பத்தினர் மத்திய அரசின் ரயில்வே
துறையில் வேலைக்கு ஏற்பாடு செய்து சேரச் சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை.
குடும்ப நிர்பந்தம் காரணமாக தடுமாற்றமுற்று ஐங்கால கடமையான ஜமாஅத் தொழுகை, சுன்னத்,
நபில் தொழுகை நேரம் போக நோன்பு நோற்ற நிலையில் எஞ்சிய நேரத்தில் கிளிப்பிள்ளை
பாடமாக குர்ஆன் ஓதுதல் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) இமாம் கஸ்ஸாலி, மிர்சா குலாம்
அஹ்மத் போன்றோரின் நூல்கள் இவற்றைப் படிப்பதிலேயே மூழ்கி இருந்தேன். அப்போது குலாம்
அஹமதின் இஸ்லாமிய ஞான போதம் என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தாலும் காதியானி
கொள்கையில் ஈடுபாடு ஏற்படாமல் துறவு மனப்பான்மை ஏற்பட்டு சூஃபிச சிந்தனையே வலுவான
இடத்தைப் பிடித்தது. அந்த சந்தர்ப்பத்தில் எனது சிறிய தாயாரின் திருமணம் இடம்
பெற்றது. எனது சிறிய தாயாரை மணமுடிக்கும் மாப்பிள்ளை ஒரு பெரும் தவறைச் செய்வது போல்
எனது எண்ண ஓட்டம் இருந்தது. அப்படியானால் துறவு மனப் பான்மை எந்த அளவு
ஆட்கொண்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
1964-ல் ஊரிலிருந்து புறப்பட்டு முதல் நாள் குலசை, 2-ம் நாள் திருச்செந்தூர், 3-ம்
நாள் காயல்பட்டினம் நடையாக வந்து ஜாமிவுல் அஸ்ஹர் பள்ளியில் தங்கினேன். அன்று மஹ்ழரா
கந்தூரி. ஊரெல்லாம் நெய்ச்சோறு மணம். கடைகளில் பகல் சாப்பாடு கிடைக்காமல் பட்டினி
கிடந்தேனே அல்லா மல், நார்சா சோறு சாப்பிடவில்லை. அல்லாஹ் அன்றே பாதுகாத்தான். துறவு
மனப்பான்மையில் வீட்டில் சொல்லிக் கொண்டு உடுத்தியிருந்த உடையுடன் வீட்டை விட்டு
வெளியேறினேன். அல்லாஹ் அதிலும் தெளிவைத் தந்து சூஃபிச சிந்தனையைக் கைவிட்டு,
மணமுடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்தினான். 1971 வரை மவ்லவிகளிடமும், மத்ஹபிலும் அபார நம்பிக்கையில் இருந்த என்னை அவுலியா, தென்னாட்டு ஹஜ்ரத்ஜீ எனச்
சொல்லும் நிலையில் இருந்த ஒரு மவ்லவியின் செயல் அதிர்ச்சியுறச் செய்து தீவிரமாகச்
சிந்திக்க வைத்தது.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நான் அவரசப் படவில்லை. திடுதிப்பென ஒரு முடிவுக்கும்
வரவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் சில கேரள முஜாஹித் சகோதரர்கள்,
காயல்பட்டினத்தைச் சேர்ந்த “சிம்’ கொள்கையுடைய இருவர் தங்கள் தங்கள் கொள்கையில்
இணைக்க முயற்சி செய்தனர். நான் அவசரப்பட்டு முடிவு எடுக்கவில்லை.
தப்லீக் பணியைத் தூய்மைப்டுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் ஹிஜ்ரி 10.2.1398ல் ஹஜ்ரத்
ஜீக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஹஜ்ரத்ஜீயை இரண்டு முறை டில்லி சென்று
சந்தித்திருக்கிறேன். சஹரன்பூர் சென்று அமல்களின் சிறப்புப் புகழ் ஜக்கரிய்யா
சாஹிபைச் சந்தித்திருக்கிறேன். உங்கள் ஊர் காயல் பட்டினத்தில் 1978 ஜனவரி 13,14,15
மூன்று நாட்கள் நடந்த 3-வது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கருத்தரங்க
மாநாட்டிலும் “”பேரறிஞர் பெருமக்களுக்கோர் கனிவான வேண்டுகோள்” என்ற தலைப்பில் 24
பக்க வெளியீட்டைக் கொடுத்துள்ளேன். அனைத்து மதரஸாக்கள், பிரபல மவ்லவிகள் என கடிதம்
எழுதினேன். 1981-ல் ஷாபி மத்ஹபு அடிப்படையிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றினேன்.
ஆக 1971-ல் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக 1983 வரை 12 வருடங்கள் தீவிரமாகச் சிந்தித்து,
குர்ஆனை மீண்டும் மீண்டும் பொருள் அறிந்து படித்துப் பார்த்து, அல்ஹதீஸ் நூல் மூன்று
பாகங்களையும் மீண்டும் மீண்டும் படித்துச் சிந்தித்து விளங்கிய பின்னரே ஓர்
உறுதியான முடிவுக்கு வந்து 1983-ல் எமது இந்த தப்லீக் பிரசாரத்தை ஆரம்பித்தோம்.
1986-ஏப்ரலிலிருந்து அந்நஜாத் மாத இதழை வெளியிட ஆரம்பித்தோம்.
எந்த ஒரு விசயத்திலும் திடமான, தெளிவான ஆதாரம் கிடைக்காதவரை மக்களிடம் நடைமுறை யில்
இருப்பதையே சரிகண்டு செயல்படுகிறோம். ஆனால் திடமான தெளிவான சந்தேகத்திற்கிடமில்லாத
ஆதாரம் கிடைத்துவிட்டால், உலக மக்கள் அனைவரும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தாலும்,
உலகமே எதிர்த்தாலும் அதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் துணிச்சலை எல்லாம்
வல்ல அந்த ரப்புல் ஆலமீனே எமக்குத் தந்துள்ளான். அதனால் ஏற்படும் ஏச்சுப் பேச்சு,
அவதூறு, இன்னோ ரன்ன அனைத்துத் துன்பங்களையும் சகித்துக் கொள்ளும் பொறுமையையும்
அந்த ரப்புல் ஆல மீனே தந்துள்ளான். அவனுக்கே சர்வ புகழும், புகழ்ச்சியும் உரித்தானது.
அந்த அடிப்படையில் 2000-ல் சர்வதேச தேதிக் கோடு மனிதன் போட்டது என்றும், நாள்
மஃறிபில் ஆரம்பிக்கிறது என்றும் நாம் அந்நஜாத்தில் எழுதியது உண்மைதான். ஆனால்
பின்னர் சகோதரர் அலி மனிக்பானிடமிருந்து எமக்குக் கிடைத்த தகவல், ஆய்வு அடிப்படையில்
மனிதன் வெறுமனே கற்பனை செய்து அந்தத் தேதிக் கோட்டைப் போடவில்லை. தேதிக் கோட்டிற்கு
மேற்கே இருப்பவர்கள் (பூமியின் கிழக்குப் பகுதி) வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழும் அதே
நேரத்தில், தேதிக் கோட்டிற்கு கிழக்கே இருப்பவர்கள் (பூமியின் மேற்குப் பகுதி)
வியாழன் ளுஹர் தொழுகிறார்கள். பூமியின் மற்ற பகுதிகளிலெல்லாம் ஒருவர் பின்னால்
ஒருவர் நின்று ஒரே திசையிலுள்ள கஃபாவை நோக்கித் தொழும் போது, இந்த இடத்தில் ஜுமுஆ
தொழுகிறவர்கள் மேற்கிலுள்ள கிப்லா நோக்கியும், வியாழன் ளுஹர் தொழுகிறவர்கள்
கிழக்கிலுள்ள அதே கிப்லா நோக்கியும், ஒருவர் பின் ஒருவர் நிற்பதற்கு மாறாக,
முதுகைக் காட்டிக் கொண்டு எதிரும் புதிருமாக நிற்பதை அறியும்போது என்ன விளங்குகிறது? இது மனிதன் போட்ட தேதிக்கோடு என்பது சரியா? அல்லது இறைவன் போட்ட தேதிக்கோடு
என்பது சரியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தவறு என்று தெரிந்தவுடன்
அதிலிருந்து மீள்வது அல்லாஹ்வுக்கு விருப்பமானதா? அல்லது வரட்டுக் கவுரவத்திற்காக
தவறிலேயே நிலைத்து அல்லாவின் வெறுப்பிற்கும், கோபத்திற்கும் ஆளாவது முறையா?
சொல்லுங்கள்.
அதே போல் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற நம்பிக்கை கடந்த 1000 வருடங்களாக
சவுதி முதல் அனைத்து முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம் அறிஞர்கள், ஆலிம்கள், அவாம்கள்
என அனைத்து முஸ்லிம்களிடமும் இருந்து வருகிறது. எனவே நாமும் அதில் உறுதியாக
இருந்தோம். 2000-ல் அந்நஜாத்தில் எழுதவும் செய்தோம். சில குர்ஆன் வசனங்களில் இரவை
முன்னரும் பகலைப் பின்னரும் சொல்லி இருப்பதை ஆதாரமாகத் தந்திருந்தோம்.
ஆனால் முறையான ஆய்வுக்குப் பின்னர் குர்ஆனில் நாளைக் குறிப்பிடும் இடங்களில் வரும்
“லைலத்’ என்ற அரபி பதத்திற்கு உங்களைப் போன்ற மவ்லவிகள் இரவு எனக் கூறுவது தவறு
என்பதை உணர்ந்தோம், தெளிந்தோம். 97:1-3-ல் கத்ருடைய வசனங்களில் வரும் “லைலத்’ என்ற
அரபி பதத்திற்கு இரவு என்று பொருள் கொடுத்தால் அது வெறும் 12 மணி நேரம் மட்டுமே
இருக்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால் பஜ்ரிலிருந்து சூரிய உதயம் வரையுள்ள சுமார்
1¼ மணி நேரம் போக 10¾ மணி நேரம் மட்டுமே “லைலத்துல்கத்ர்’ இருக்கும். உலகின்
எஞ்சியுள்ள 13¼ மணி நேரத்தில் இருக்கும் மக்களுக்கு “லைலத் துல் கத்ர்’ கிடைக்காதா?
அவர்களுக்கும் கிடைப்பதாக இருந்தால் அது கண்டிப்பாக 24 மணி நேரம்-ஒரு நாள் இருந்தே
ஆகவேண்டும். எனவே இந்த அத்தியாயத்திலுள்ள 3 இடங்களிலும், மற்றும் 2:51, 7:142,
19:10 வரும் லைலத்-நாளைக் குறிக்குமே அல்லாமல் இரவைக் குறிக்காது என்ற தெளிவு
கிடைத்தது. மேலும் 3:41-ல் “”ஃதலாஃதத்த அய்யாம்” மூன்று நாட்கள் என நேரடியாகக்
கூறும் “”ஜக்கரிய்யா (அலை) 3 நாட்கள் பேசாமல் இருக்கும் அதே சம்பவம் 19:10-ல்
கூறப்படும்போது ஃதலாஃத லயாலின் (லைலத்தின் பன்மை) 3 நாட்கள் எனத் தெளிவாக்கப்
பட்டுள்ளதையும் விளங்கினோம்.
எனவே, கத்ருடைய நாள் பஜ்ர் வரை இருக்கிறது என்று அல்லாஹ் 97:5-ல் கூறி இருப்பதால்,
நாள் பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது என்பது உறுதியாகிறது. மேலும் 2:238
கூறும் நடுத் தொழுகை அஸருடைய தொழுகைதான் என்பது புகாரீ(ர.அ) 4533, 6396 ஹதீஸ்கள்
மூலமும், நபி(ஸல்) அவர்களின் இரு மனைவிமார்கள் நடுத் தொழுகை அஸர் தொழுகைதான் என்று
உறுதிப்படுத்துவது மூலமும் ஆதாரமாக இருக்கிறது. ஹதீஸ்களில் வரும் “லைலத்த மஷாஹ்’
என்ற அரபி பதத்திற்கு இரவின் மாலை என்று கூறமுடியாது. நாளின் மாலை என்பதே சரியாகும்.
நீங்கள் ரமழான் இரவுகளில் இரவுத் தொழுகைக்குப் பிறகு சொல்லிக் கொடுக்கும்
பித்அத்தான நிய்யத்தில் கூறும் “”நவைத்து சவ்மகதின்-நாளை நோன்பு பிடிக்க நிய்யத்
செய்கிறேன் என்று சொல்லிக் கொடுப்பதே அன்றைய நாள் மஃறிபில் ஆரம்பிக்க வில்லை. நாள்
மஃறிபில் ஆரம்பித்திருந்தால் “”இன்று பிடிக்க நிய்யத் செய்கிறேன்” என்றே சொல் லிக்
கொடுக்க வேண்டும். எனவே மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் உங்கள்
ஆபாக்கள் கற்றுத்தந்த பித்அத்தான நிய்யத்தே நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பதை
உறுதிப்படுத்துகிறது. அதன் பின்னரே யூதர்களின் சதியால் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது
என்ற யூத நடைமுறை முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்டுள்ளது.
புகாரீ 1821-ல் வரும் மாதம் 29 லைலாஹ்வை கொண்டது என்பதை 29 இரவுகள் என்று சொல்வது
தவறு 29 நாட்கள் என்று கூறுவதே பொருத்தமானது. நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃபை பஜ்ரில்
ஆரம்பித்து பஜ்ரில்தான் முடித்தார்கள். மஃறிபில் அல்ல. ஹஜ்ஜு டைய கடமைகளை நபி(ஸல்)
பஜ்ரில் ஆரம்பித்தார்களே அல்லாமல் மஃறிபில் அல்ல.
இரவும் பகலைப் போல் இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் நாம் முன்னர் நாள் மஃரிபில்
ஆரம்பிக்கிறது என்று 2000-ல் எழுதி விட்டோமே! இப்போது நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது
என்று மாற்றிச் சொன்னால் மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று ஷைத்தான் தூண்டும்
துர்போதனைக்கு வழிபட்டு நன்கு தெரிந்த நிலையில் முன்பு சொன்ன தவறையே மீண்டும்
மீண்டும் சொல்ல உண்மையான விசுவாசியின் மனம் துணியுமா? மதகுருமார்களான மவ்லவிகள்
வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டிருப்பதால் மக்களிடம் தங்களுக்கிருக்கும்
செல்வாக்குச் சரிந்துவிடக் கூடாது என்ற தவறான நோக்கில் கூறுவது தவறு என அவர்கள் மனம்
ஒப்புக்கொண்டாலும் அந்த உண்மையைச் சொல்லத் துணியமாட்டார்கள். ஆனால்
வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு வருவதை அல்லாஹ் மிகமிக விரும்புகிறான். அதற்கு மாறாக
நேர்வழிக்கு வந்த பின்னர் வழி தவறிச் செல்வதையே அதாவது முர்த்தத் ஆவதையே அல்லாஹ்
மிகமிகக் கடுமையாக வெறுக்கிறான். இந்த உண்மையை 7:175-179, 47:25-28 இறைவாக்குகளைப்
படித்து விளங்குகிற வர்கள் உணர முடியும். எனவே 2000-ல் நாம் எழுதியது தவறு என்று
கூறுவதில் ஒருபோதும் வெட்கப்படமாட்டோம்.
பூமி உருண்டை எனும்போது டேட் லைனை எந்த இடத்திலும் போடலாமா? ஏன் 0 டிகிரி கிரின்
வீட்டிலிருந்து கூட ஆரம்பிக்கலாமே? கடலில் ஏன் போட வேண்டும்? இதற்குப் பதில் தருவாரா?
என்றும் அடுத்து சூரியன் நேரம் காட்டி மட்டுமே. சந்திரன் நாட் காட்டியும் நேரம்
காட்டியும். இந்த வித்தியாசத்தைப் புரியாததின் விளைவு தான் இவ்வளவு பிரச்சனைக்கும்
தலையாய காரணம் என்று தன்னை மெத்தப் படித்த மேதை எனக் காட்ட முயலுவதே உங்களின்
அறியாமையை வெளிப்படுத்துகிறது. தேதிக்கோட்டை பூமிப் பகுதியில் எங்கு போட்டாலும்
அந்த ஊரின் ஒரு பகுதி வெள்ளியாகவும் மறுபகுதி வியாழனாகவும் இருக்கும். இது
நடைமுறைச் சாத்தியமா? இந்த நடைமுறைச் சாத்திய மில்லாத கற்பனையின் அடிப்படையில் தான்
தலைப் பிறை 2நாள், 3 நாள் வர முடியும் என உங்களைப் போன்றவர்கள் பிதற்றுகிறீர்கள்.
மற்றபடி ஒரு தேதி, ஒரு நாள், ஒரு பிறை 24 மணிக்குள் ஒரு நாளில் மட்டுமே வரமுடியும்.
சந்திரன் நாட்காட்டியும் நேரம் காட்டியும் என்று பிதற்றி இருக்கிறீர்களே! சந்திரன்
எப்படி நேரத்தைக் காட்டுகிறது. அதனை எந்தக் கடிகாரம் கொண்டு கணக்கிடுகிறீர்கள்
என்பதை அறியத் தருவீர்களா? இந்த உங்களின் அறிவில்லா பிதற்றலே நீங்கள் பிறையின்
சுழற்சி பற்றி எந்த அளவு அறியாமையின் உச்சியில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.
தேதிக்கோடு இயற்கையிலேயே ஊர்களில்லா கடல் பகுதியில் அமைந்திருப்தால்தான் ஓர் ஊரிலேயே இரண்டு தேதி இரண்டு கிழமை இல்லாத நிலை ஏற்பட்டு வீண் சச்சரவுகள்
தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
 அன்று கணினி கணக்கு இல்லாததால் பிறை பார்க்கும் கட்டாயம் இருந்தது; இன்று அந்தக்
கட்டாயம் இல்லை!
14. பிறையைப் பற்றியும் சூரியனைப் பற்றியும் திருகுர்ஆன் வசனங்களின் எண்களைக் கூறி
நீங்களும் குறித்துக் கொண்டு போய் தமிழ் விரி வுரையை எடுத்துப் பாருங்கள். இவை அனைத்
தும் விஞ்ஞானத்தை எடுத்துக் கூறுகிறது என்று நான் கூறியதாகக் கூறி நீங்கள்
அளித்துள்ள பதிலில் அதைத்தான் நாமும் கூறுகின்றோம். சர்வதேச பிறை என்ற தலைப்
பிறைக்கும் இந்த வசனங்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்தவித சம்பந்தமுமில்லையே! இந்த
வசனங்களின் கருத்துக்கு யாரும் மறு கருத்துக் கூற முடியாது. இதில் யாருக்கும்
கருத்து வேறுபாடும் இல்லை. இவர் கூறிய வசனங்கள் எதுவும் சர்வதேச பிறை அல்லது
தலைப்பிறையைப் பற்றி கூறவில்லை. மாறி மாறி வரும் அவைகளின் நிலைகளைப் பற் றியே
கூறுகின்றன என்று உங்களின் கற்ப னையை நாம் சொன்னதாகத் திரித்து எழுதி மக்களை
நீங்கள் ஏமாற்றி இருக்கிறீர்கள். நாம் கூறியது இதுதான்:
நாம் குறிப்பிட்ட வசனங்கள் விஞ்ஞானத்தை எடுத்துக் கூறுகின்றன என்றோ சர்வதேச பிறை
பற்றியோ தலைப்பிறை பற்றியோ கூறுகின்றன என்றோ கூறவில்லை. தலைப்பிறையைக் கண்ணால்
பார்த்து மட்டுமே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று மவ்லவிகளாகிய நீங்கள் அனை
வரும் ஏகோபித்து ஒட்டுமொத்தமாகக் கோரஸ் பாடுகிறீர்களே. சந்திரனின் ஓட்டம் மனிதக்
கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா? அதற்கு மாறாக அல்லாஹ்வின் முழுக்
கட்டுப்பாட்டில், துல்லிய கணக்கின் அடிப்படையில் சுழல்கின்றதா? மனிதக் கண்கள் அதில்
பட்டாலும் படாவிட்டாலும் அது ஒரு வினாடி கூட நிற்காமல் சதா சுழன்று
கொண்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட்ட வசனங்களைப் படித்துப் பார்த்து விளங்கிக்
கொள்ளுங்கள் என்றே சொன்னோம். குர்ஆன் மொழி பெயர்ப்பைப் பார்க்கச் சொன்னோமே அல்லாமல்
நீங்கள் எழுதியுள்ளது போல விரிவுரையைப் பார்க்கச் சொல்லவில்லை.
நீங்களோ இந்த வசனங்களின் கருத்துக்கு யாரும் மறு கருத்து கூற முடியாது. இதில்
யாருக்கும் கருத்து வேறுபாடும் இல்லை என்று எழுதிவிட்டு, சந்திரனின் ஓட்டம் மனிதக்
கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மனிதக் கண் பட்டால்தான் ஓடும்; கண் படாதவரை
நிற்கும், சந்திரனின் ரீமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள். எனவே கண்ணில் படுவதே முதல்
பிறை எனக் கூறி உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள்.
15. அல்லாஹ் தஆலா குர்ஆனில் தலைப்பிறையைப் பற்றி என்ன கூறுகின்றான்? என்று பார்ப்போம் என்று எழுதி உங்கள் அரபி புலமையை(?) காட்டி குர்ஆனிலே யஸ்அலுனக அனில் ஹிலால்
என்று ஒருமையில் கூறாது யஸ் அலுனக அனில் அஹில்லா என்று பன்மையாக கூறுவதின் மூலம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் தலைப் பிறை வராது என்பதை வல்ல நாயன் அல்லாஹு தஆலா நமக்கு
தெளிவாக்கி விட்டான் என்று பிதற்றியுள்ளீர்கள்.
முன்னர் ததஜ தலைமை இமாம்(?) 2:185 வசனத்தில் “”எவர் (ரமழான்) அம்மாதத்தை அடைகிறாரோ”
என்று ஒரே நேரத்தில் அல்ல ஒரு நாளின் 24 மணி நேரத்திற்குள் அடைவதைக் கூறும்
வசனத்தில் 2 நாள், 3 நாள் அடையலாம் என சுய விளக்கம் கூறி அவரது பக்தர்களை
வழிகெடுத்தாரோ அதேபோல் அஹில்லாவுக்கு தலைப்பிறை இரண்டு நாள், மூன்று நாள் வரலாம் என
சுய விளக்கம் கொடுத்து உங்களை நம்பியுள்ளவர்களை வழி கெடுக்கிறீர்கள்.
2:189 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது பாருங்கள். பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: “”அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன….. (2:189)
உங்களது கூற்றுப்படி அஹில்லா-பிறைகள் அனைத்தும் தலைப்பிறையையே குறிக்கின்றன என்றால்
அவை எப்படி காலம் முழுக்கக் காட்டும்? எப்படி துல்ஹஜ் பிறை 8லிருந்து பிறை 13 வரை
இடம் பெறும் ஹஜ்ஜை அறிவிக்கும்? மவ்லவிகளாகிய நீங்கள் இப்படித்தான் குர்ஆன்
வசனங்களின் அர்த்தங்களை அனர்த்தமாக்கி 7:55 குர்ஆன் வசனத்திற்கு முரணாக
சப்தமிட்டுச் செய்யும் கூட்டு துஆவை செயல்படுத்துகிறீர்கள் 7:205 இறைவாக்குக்கு முர
ணாக தரீக்காக்களில் சப்தமிட்டு கூட்டுத் திக்ரை நடைமுறைப்படுத்துகிறீர்கள். 7:3,
2:186, 50:16 இறைவாக்குகளுக்கு முரணாக அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்கும் இடையில்
இடைத்தரகர் களாக-புரோகிதர்களாகப் புகுகிறீர்கள், 3:103,105, 6:153,159, 30:32,
42:13,14 குர்ஆன் வசனங்களுக்கு முரணாகச் சமுதாயத்தை மத்ஹபுகள், தரீக்காக்கள்,
மஸ்லாக்கள், இயக்கங்கள் போன்ற எண்ணற்ற பிரிவுகளாகப் பிரித்து சமுதாயத்தை சின்னாப்
பின்னப்படுத்தி நாயிலும் கேடான ஒரு நிலையை உருவாக்கி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம்
ஒரு அடிப்படைக் காரணம் சமுதாயத்தை 21:92, 23:52 குர் ஆன் வசனங்களுக்கு முரணாக
ஆலிம்-அவாம் எனப் பிளவுபடுத்தி, மற்ற அனைத்து மதங்களிலுமுள்ளது போல் 5 சதவீதமும்
தேறாத மதகுருமார் களாகிய நீங்கள் 95 சதவிகித மக்களை நீங்கள் இழுத்த இழுவைக்கெல்லாம்
ஆட வைக்கிறீர்கள்.
இதற்கெல்லாம் இன்னொரு அடிப்படைக் கார ணம் சுமார் 50 குர்ஆன் வசனங்களுக்கும் மேலாக
கடமையான மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாக ஆக்கக் கூடாது, அப்படி வயிற்றுப்
பிழைப்பாக ஆக்குகிறவர்கள் நேர்வழியில் இருக்க மாட்டார்கள் என்று 36:21 இறைவாக்கும்,
அப்படி மார்க்கப் பணியை பிழைப்பாகக் கொள்வதால் ஏற்படும் பாதகங்கள் அனைத்தையும்
விலாவாரியாகச் சொல்லும் சுமார் 50க்கும் மேற்பட்ட குர்ஆன் வசனங்களையும் நிராகரித்து
குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்ட ஹராம்கள் அனைத்தையும் விட மெகா மெகா ஹராமான முறையில்
2:174 இறைவாக்கு சொல்வது போல் மதகுருமார்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு
எதையும் உட்கொள்ளவில்லை. நாளை மறுமையில் இந்த மதகுருமார்களோடு அல்லாஹ் பேசவும்
மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்த வும் மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும்
வேதனையுண்டு என மிகக் கடுமையாக எச்சரித்திருந்தும், ஹராமான உணவின் காரணமாக,
18:57-ல் இறை வன் கடுமையாக எச்சரிக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறீர்கள்; அது வருமாறு.
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு அறிவுரைக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்து
தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய
அக்கிமக்காரன் எவன் இருக்கிறான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இரு தயங்களின்மீது
இவற்றை விளங் கிக் கொள்ளா தவாறு திரைகளையும், அவர்க ளுடைய செவிகளில் செவிட்டுத்
தன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால்
அழைத்தாலும் அவர்கள் ஒரு போதும் நேர்வழியடையமாட் டார்கள்.
(அல்கஃபு 18:57)
(மேலும் : பார்க்க 47:25, 7:175-179, 2:159-162, 6:157, 45:23, 4:27, 5:48)
பிறை சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் ஒரேயயாரு ஹதீஸிலாவது கண்ணால் பார்த்து என்றோ மேக
மூட்டம் என்றோ இல்லாத நிலையில் நீங்கள் வலிய கண்ணால் பார்த்து என்றும் மேகமூட்டம்
என்றும் உங்கள் சுய கருத்துக்களைப் புகுத்தி அர்த்தத்தை அநர்த்தமாக்கி பிறை
துல்லிய கணக்கின்படி அல்லாஹ்வின் முழுக்கட்டுப்பாட்டிலிருக்கிறது என்று பல குர்ஆன்
வசனங்கள் இருந்தும் அவை அனைத்தையும் நிராக ரித்துப் புறக்கணித்து அற்ப
கிரயத்தை-சம்பளத்தை குறிக்கோ ளாகக் கொண்டிருக்கும் மதகுருமார்களாகிய நீங்கள் நாளை
மறுமையில் தப்ப முடியுமா? (பார்க்க: 9:9,34, 11:19, 31:6, 2:41,79, 3:188, 5:62,
6:21, 11:18)
நபி(ஸல்) “”லாநக்துபு வலா நஹ்ஸுபு” என்று சொல்வது போல் அன்று துல்லிய கணக்கு முறையை
அல்லாஹ் வெளிப்படுத்தாத நிலையில் சூரியனைப் பார்த்து நேரத்தையும், பிறையைப் பார்த்து
மாதத்தையும் தீர்மானிக்கும் கட்டாயம் இருந்தது. அன்றைய நிலையில் அதில் தவறு ஏற்பட
வாய்ப்பும் இருந்தது என்பதை புகாரீ(ர.அ.)1959 ஹதீஸில் நோன்பு துறந்த பின் சூரியன்
மறையாமல் தெரிந்தது என்ற அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. எனவே அன்று ­க்குடைய நாள்
இருக்கவே செய்தது. ஆனால் இன்று நூற்றுக்கு நூறு மிகமிகத் திட்டமாகத் துல்லியமாக
அறியும் அரிய வாய்ப்பை அல்லாஹ் கொடுத்திருப்பதால் அக்கணக் கீட்டைப் பயன்படுத்த
குர்ஆனிலோ, ஹதீஸிலோ அணுவத்தனையும் தடை இல்லை என்பதை உங்க ளின் ஆலிம் என்ற
அகந்தை-தற்பெருமை ஒருபோதும் ஒப்புக்கொள்ள விடாது.
16. தலைப்பிறை என்றால் எதற்குக் கூறப்படும் என்பதை குர்ஆன் ஹதீது மூலம் என்று கூறி
ஜனவரி 2000-ல் இவர் எழுதிய ஆதாரத்தைப் பார்ப்போமா? என்று எழுதி அதில் முக்கியமாக,
“”தலைப்பிறை என்றால் பிறை முழுமை யாக மறைக்கப்பட்டு அதாவது அமாவாசை ஏற்பட்டு
அதிலிருந்து விடுபட்டு வெள்ளைப் பிறைக் கீற்று தெரிய ஆரம்பித்துவிட்டால் தலைப்பிறை
பிறந்து விட்டது என்பதை குர்ஆன், ஹதீது மூலம் அறிந்து கொண்டோம்.
“”மார்க்கத்தில் பிறை பிறந்ததை அறிந்து நோன்பை ஆரம்பிக்க இரண்டு வழிமுறைகள்
ஷரிஅத்தில்
உண்டு என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஒன்று பிறையை கண்களால் நேரடியாகப்
பார்த்து அறிந்து கொள்வது. இன்னொன்று பிறை கண்ட தகவல் ஆதாரபூர்வமாக கிடைப்பதை
ஏற்றுக் கொள்வது.
நபி(ஸல்) காலத்தில் அந்தந்த ஊரில் பிறை பார்த்து நோன்பு வைத்ததால் வெவ்வேறு
நாட்களில் தான் நோன்பை ஆரம்பித்தார்கள் என்பது உண்மை தான் என்று ஜனவரி 2000-ல்
அந்நஜாத்தில் எழுதியதைக் காட்டி நீங்கள்,
உலகத்தில் வெவ்வேறு நாட்களில் நோன்பு இன்னும் பெருநாள் கொண்டாடியதை நபி(ஸல்) அவர்களே
தடுக்கவில்லை. அனுமதித்தார்கள் என்பதை இவர் தெளிவாக ஒப்புக்கொண்டுவிட்டு பிறகு
அதற்கு மாற்றமாக “காலத்திற்கு தக்க மாறலாம்’ என்று கூறுகின்றாரே! இது நபி(ஸல்)
அவர்களை அவ மதித்ததாக ஆகாதா? மாற்றும் உரிமை இவருக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று
கேட்டிருக்கிறீர்கள்.
எமது பதில்: நாம் முன்னரே விளக்கியது போல் நாம் சூஃபிஸம், மத்ஹபு, தப்லீக் இப்படி
ஒவ்வொன்றாக விளங்கி அவற்றிலிருந்து விடுபட்டோம். 2000-ல் தத்தம் பகுதி
தனித்தனிப்பிறை என்ற நிலையிலிருந்து தகவல் அடிப்படையில் உலகம் முழுக்க ஒரு பிறை
என்ற நிலைக்கே முன்னேறி இருந்தோம். கணினி கணக்கீட்டின் மூலம் பல ஆண்டுகளின் பிறைக்
கணக்கை முன்கூட்டியே கணக்கிட முடியும் என்ற நிலைக்கு அப்போது உயரவில்லை.
இந்த நிலையில் 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழில் அப்போதைய அதன் ஆசிரியர் இப்போதைய ததஜ
இமாம்(?) பல அமர்வுகள், பல அறிஞர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து ஒப்புக்கொண்டு
அறிவித்த உலகம் முழுக்க ஒரே பிறை அதாவது சர்வதேச பிறை என்று அறிவித்ததற்கு மாறாக
அல்மூபீன் நவ. டிச.99 இதழில் சர்வதேச பிறையை மறுத்து தத்தம் பகுதிப் பிறை என பல்ட்டி
அடித்து எழுதி இருந்ததற்கு மறுப்பாக சர்வதேச பிறையை நிலைநாட்டி எழுதப்பட்டதே
அந்நஜாத் 2000 ஜனவரி இதழில் இடம் பெற்றவை. அப்போது பிறை பற்றிய கணினி கணக்கீட்டைப்
பற்றி உறுதியான தெளிவு நமக்கு இருக்கவில்லை என்பது உண்மைதான்.
அறியாமையிலும், வழிகேட்டிலும் இருந்த ஒருவன் அதிலிருந்து கரையேறி நேர்வழிக்கு
வருவது தவறில்லை. அந்நஜாத்தின் ஆரம்ப காலங்களில் 1986களில் நாமும் தத்தம் பகுதி பிறை
தலைப்பிறை என்ற நம்பிக்கையில் தான் இருந்தோம். அதிலிருந்து கரையேறி சர்வதேச பிறை
என்ற நிலைக்கு உயர்ந்தது 1995-1996களில்தான். இதுபற்றி 1996 பிப்ரவரி இதழ் பக்கம்
6-ல் பிறை பற்றிய அறிவிப்பும் பக்கம் 7-ல் பிறை பற்றிய அறிவிப்பின் விளக்கம் என்றும்
தெளிவு படுத்தியுள்ளோம். தகவல் அடிப்படையில் சர்வதேச தலைப்பிறை என்பதில் உறுதியாக
இருந்தோம். அந்த அடிப்படையில்தான் ததஜ இமாம்(?) 97 நவம்பரில் ஒப்புக்கொண்ட சர்வதேச
தலைப்பிறை என்ற நிலையிலிருந்து பல்டி அடித்து கீழிறங்கி 47:25 சொல்வது போல்
புறங்காட்டிச் சென்று மீண்டும் தத்தம் பகுதி பிறை என்று தாழ்ந்த நிலைக்குச் சென்றதை
விமர்சித்துத்தான் ஜனவரி 2000-ல் எழுதப்பட்டது.
கோணல் வழிவிட்டு நேர்வழிக்கு வருவது வரவேற்கத் தக்கதே. அல்லாஹ் அதை மிகவும்
விரும்புகிறான். அதற்கு மாறாக நேர்வழிக்கு வந்த பின்னர் கோணல் வழிக்குச் செல்வதுதான்
மிகமிகக் கண்டிக்கத் தக்கது. இது “”முர்த்தத்” என்ற நிலைக்குத் தள்ளிவிடும். இதை
குர்ஆன் முஹம்மது 47:25 வசனம் தெளிவாகக் கூறுகிறது.
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்ன தென்று அவர்களுக்குத் தெளிவான பின், புறங்காட்டிச்
செல்கிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவ றான
எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கிவிட்டான் (47:75).
எனவே தகவல் அடிப்டையில் சர்வதேச பிறையை ஒப்புக்கொண்ட பின்னர் முதுகைத் திருப்பிக்
கொண்டு மீண்டும் தத்தம் பகுதி பிறைக்குக் கீழிறங்கி அல்மூபீனில் எழுதப்பட்டவைக்கு
மறுப் பாகத்தான் அந்நஜாத் 2000 ஜனவரியில் எழுதினோம். அன்று கணினி கணக்கீட்டு முறையை
முழுமையாக அறியாதிருந்ததால் சில குறைபாடுகள் அதில் இருப்பதை நாம் மறுக்கவில்லை.
அன்று அப்படி எழுதிவிட்டோமே! அதை எப்படி மறுப்பது என்று அவற்றிற்கு சப்பைக் கட்டு
கட்ட முற்பட்டால் நாமும் 47:25 குறிப்பிடும் பட்டியலில் சேரும் துர்பாக்கிய நிலை
ஏற்பட்டுவிடும். அல்லாஹ் அந்த நிலையை விட்டு நம்மைக் காப்பானாக. ஆயினும் உலகளாவிய
அளவில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்குள் ஜுமுஆ தொழுவதைப் போல் நோன்பு ஆரம்பிப்பதும்,
பெருநாளில் தொழுவதும் இடம்பெற வேண்டும் என்பதில் 2000-லும் மாற்றுக் கருத்து இல்லை.
2011லும் மாற்றுக் கருத்து இல்லை.
17. ஒரு மாதம் 29 வந்தால் மறு மாதம் 30 என்று கூறாமல், மாதம் என்பது 29 நாட்கள்
அல்லது 30 நாட்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று கணித்து நிர்ணயம் செய்யக் கூடாது
என்ற தெளிவைத் தரவில்லையா? என்று கேட்டிருக்கிறீர்கள்.
எமது பதில்: நபி(ஸல்)
அவர்களின் காலத்திற்கு முன்னரே இருந்த ஹிந்துக்களின் பஞ்சாங்கம், யூதர்களின்
பஞ்சாங்கப்படி கணித் துக் கூறுவதை நாம் ஒரு போதும் சரி காண வில்லை என்று பலமுறை
எழுதிவிட்டோம். உங்கள் அறிவில் உறைக்காதது ஆச்சரிய மில்லை.
கணினி கணக்கீட்டின்படி எந்த மாதம் 30-ல் முடிகிறதோ அதை 30 என்றும், 29-ல் முடிகிறதை
29 என்றும் உறுதியாக சொல்ல முடிகிறதே அல்லாமல் தோராயமாகச் சொல்லப்படுவதில்லை. அன்று
போல் இன்று 29-ல் முடியுமா? 30-ல் முடியுமா? என்ற சந்தேகமோ, சச்சரவோ, கருத்து
வேறுபாடோ ஏற்பட வழியே இல்லை. திட்டமாகக் கூற முடிகிறது. கணக்கீடு சரியாக
இருக்கப்போய்த்தான் பல வருடங்களுக்குப் பின்னர் இடம் பெறும் சூரிய, சந்திர
கிரகணங்களை இப்போதே சொல்லி அவை நூற்றுக்கு நூறு சரியாக நடைபெறுவதை உலக மக்கள்
அனைவரும் பார்க்கிறார்கள்.
18. உலகத்தில் வெவ்வேறு நாட்களில் நோன்பு இன்னும் பெருநாள் கொண்டாடியதை நபி (ஸல்)
அவர்களே தடுக்கவில்லை, அனுமதித் தார்கள் என்பதை இவர்கள் தெளிவாக ஒப்புக் கொண்டு
விட்டு, பிறகு அதற்கு மாற்றமாக “காலத்திற்கு தக்க மாறலாம்’ என்று கூறுகின் றாரே? இது
நபி(ஸல்) அவர்களை அவமதித்த தாக ஆகாதா? மாற்றும் உரிமை இவருக்கு எங்கிருந்து
கிடைத்தது? என்று கேட்டிருக்கிறீர்கள்.
நமது விளக்கம்: நாம் கூறியுள்ளதைத் திரித்து எழுதி உங்கள் முகல்லிதுகளை ஏமாற்ற
முற்பட்டிருக்கிறீர்கள். நபி(ஸல்) இருந்த மதீனாவில் வெவ்வேறு நாட்களில் நோன்பு
இன்னும் பெருநாள் கொண்டாடியதை நபி(ஸல்) தடுக்காதிருந்தார்களா? நபி(ஸல்) அவர்கள்மீது
எவ்வளவு பெரிய பழியைச் சுமத்துகிறீர்கள்? ஒரே ஊரில் வெவ்வேறு நாட்களில் நோன்பு
இன்னும் பெருநாள் கொண்டாடக்கூடாது. சமுதாயம் பிளவுபடக்கூடாது என்ற உறுதியான நம்
பிக்கையில் தானே மாதம் 29 நாட்கள், 30 நாட்கள் எனச் சச்சரவிட்டுப் பிளவுபடாதீர்கள்.
பார்த்து முடிவு செய்யுங்கள் என்றார்கள். அல்லது மதீனாவில் இருந்து கொண்டு இன்றுபோல்
மக்காவில் நடப்பதை தொலைக்காட்சி மூலம் பார்த்தும் வேறு நாளில் கொண்டாடுவதைத்
தடுக்காமல் இருந்தார்களா? சொல்லுங்கள். அறிவோடு பேச முற்படுங்கள். அறிவீனமாகப் பேசி
அறிவிலி பட்டம் வாங்காதீர்கள். பக்கத்து பக்கத்து ஊர்களில் என்ன நடக்கிறது என்பதை
இன்று அறிவது போல் அன்று அறியும் வசதி இருந்ததா? இல்லையே? இந்த நிலையில் பக்கத்து
ஊரில் என்ன நடக்கிறது என்று தெரியாம லேயே எப்படித் தடுக்க முடியும் என்ற அற்ப
அறிவும் உங்களிடம் இல்லையா? அன்று அவரவர்கள் ஊர் களில் நடப்பது அவர்கள் மட்டுமே
அறிந்த வி­யம். இன்றோ ஒரு குக்கிராமத்தில் நடப்பது உலகம் முழு வதும் அறியும் நிலை.
வேறுபாடு தெரிகிறதா? தெரிய வில்லையா? எதார்த்தத்தில் நபி(ஸல்) அவர்களை அவமதிப்பது
நீங்களா? நாமா?
19. அன்றைய காலத்தில் மதினாவிலிருந்தவர் கள் மக்காவில் என்றைக்கு அரபா என அறிந்து
கொண்டு நோன்பு இருக்கவில்லை. தாங்களா கவே பிறை பாத்தே தீர்மானித்தார்கள் என்பது
உண்மைதான் என்று ஜனவரி 2000-ல் அந் நஜாத்தில் எழுதியதை எடுத்துக்காட்டி, 9 நாட் கள்
இடைவெளியில் மக்காவிலிருந்து எத்த னையோ நபர்கள் மதீனா வந்து இருப்பார்களே.
அவர்களிடம் கேட்டு அல்லது செய்தி அறிய ஒரு நபரை மக்காவிற்கு அனுப்பி விபரம்
தெரிந்திருக் கலாமே? அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்ய வில்லையே. இதற்கு என்ன பதில்?
என்று கேட்டிருக்கிறீர்கள்.
எமது விளக்கம் : இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை என அல்லாஹ் 67:2, 5:48, 6:165,
11:72 போன்ற குர்ஆன் வசனங்களில் கூறி இருப்பதோடு, 22:78, 4:28, 5:6 வசனங்களில்
மார்க்கத்தில் எவ் வித சிரமமில்லை என்று கூறியிருப்பதோடு, 2:233, 286, 6:152, 23:62
போன்ற இறைவாக்குகளில் எந்த ஆத்மாவையும் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்றும் கூறி
இருக்க பெரும் சிரமப்பட்டு மக்காவிலிருந்து யார் வந்தார்கள் என்று தேடுவதையோ,
சிரமப்பட்டு மதினா விலிருந்து மக்கா போய் வருவதையோ அல்லாஹ் விதித்திருப்பானா?
சொல்லுங்கள். அரஃபா தினத்தை அறிய 9 நாள்கள் அவகாசம் இருக்கிறது. நோன்பு ஆரம்பிக்க
ஒரு நாள் கூட அவகாசமில்லையே? அதற்கு என்ன செய்திருக்க முடியும் சொல்லுங்கள்.
மேலும் சந்திரனின் ஓட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு பல வருடங்களின் ரமழான்
ஆரம்பிப்ப தையும், பெருநாள் தினங்களையும் இன்றே முன் கூட்டியே அறிந்து எவ்வித
சிரமும் இல்லாமல் எளி தாகச் செயல்பட அல்லாஹ் வசதி ஏற்படுத்தித் தந்தி ருந்தும்
அல்லாஹ்வின் இந்த அருளைப் புறக் கணித்துவிட்டு, என்று நோன்பு ஆரம்பம், என்று
பெருநாள் என்று இறுதி நாள் வரை மக்களைப் பரிதவிக்கவிட்டு சிரமப்படுத்துவது அல்லாஹ்
கட்டளையிட்டதா? நபி வழியா? சொல்லுங்கள்.(பார்க்க 22:78)
சவுதியில் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்ட சில அம்சங்கள் காணப்பட்டாலும், மற்ற முஸ்லிம்
நாடுகளைவிட அதிகமாக
ஷரீஅத் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே இந்த பிறை விஷயத்தில் அவர்களது முடிவை ஹஜ் கிரிகைகளுக்கு உலக முஸ்லிம்கள் ஏற்று
நடப்பது போல் ரமழான் பிறை விஷயத்திலும் அவர் களது முடிவை ஏற்று நடப்பதில் தவ்ஹீத்
மவ்லவிகள் என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்று 2000-ல் நாம் எழுதி இருப்பதை எழுதி
சவூதி பிறையை கண்ணை மூடி பின்பற்ற வேண்டும் என்று எழுதி விட்டு தற்போது கணித்து
முடிவு செய்வதுதான் சரி என்கிறாரே ஏன் தடுமாற்றம்? சவூதியை பின்பற்ற குர்ஆன் ஹதீஸ்
ஆதாரம் உண்டா? ஊருக்கு உபதேசமா? என்று கேட்டிருக்கிறீர்கள். அத்துடன்,
20. பிறையைப் பார்த்து தீர்மானிப்பதாக இருந்தாலும் கணித்துத் தீர்மானிப்பதாக
இருந்தாலும் வெளியிலிருந்து கிடைக்கும் செய்தியைக் கொண்டு தீர்மானிப்பதாக இருந்
தாலும் அப்படி முடிவு செய்யும் உரிமை உங்க ளுக்கு உண்டு. வீண் சண்டை சச்சரவை தவிர்த்
துக் கொள்ளுங்கள் என்றே (நீங்கள் நோன்பு என்று முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு
என் ஹதீஸின் மூலம்) விளங்க முடிகிறது என்று அன்று 2000-ல் எழுதியதைச் சுட்டிக்
காட்டி நீங்கள் எழுதி இருப்பதாவது:
இதன்மூலம் நபி(ஸல்) இந்த சமுதாயத்தில் நோன்பு பெருநாளை அறிய மூன்று வழிகள் கூறி
யிருக்க இவர் முதலில் சவூதியை பின்பற்றினார். பிறகு பார்க்காது கணித்து முடிவு
செய்ய வேண்டும் என்றும் தற்பொழுது சச்சரவை தீர்க்க விஞ்ஞான அடிப்படையில்
கணிக்கப்பட்ட கணக்கை ஏற்க வேண் டும் என்றும், இதற்கு மாறு செய்பவர்கள் 33:66. 67.68
வசனத்தின் பிரகாரம் காஃபிர்கள், நரகவாதி கள் என்று கூறினாரே? 2000 ஜனவரி அந்நஜாத்
ஆசிரியருக்கும் இவரின் இந்த கூற்றுப் பொருந் தும்தானே என்று கேள்வி
எழுப்பியுள்ளீர்கள்.
மேலும் பிறை சச்சரவை தீர்க்க 3 வழிகளை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்
என்று 2000 ஜனவரியில் ஒப்புக் கொண்டவர், தற்பொழுது அதற்கு மாறாக தான் ஒரு புதுவழியை
கூறி இதற்கு மாற்றம் செய்பவர்களை காஃபிர்கள் நரகவாதிகள் என்று கூறினால், நபி(ஸல்)
அவர்க ளின் தெளிவான சொல்லுக்கு யார் மாற்றம் செய்து வழிகேட்டில் உள்ளார் என்பதை நாம்
புரிந்து கொள் ளலாம் என்று எழுதியுள்ளீர்கள்.
எமது விளக்கம்:
முதலில் அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறி உங்கள் முகல்லிதுகளுக்கு
கொம்பு சீவி விட்டுள்ளீர்கள். எந்த இடத்திலும் அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி(ஸல்)
அவர்களின் நடைமுறைக் கும் யார் மாறாக நடக்கிறார்களோ அவர்கள் காஃபிர் கள், நரகவாதிகள்
என்று 33:66, 67,68 வசனங்கள் கூறுவதை கூறி இருப்போமே அல்லாமல், நாம் சொல்லுவதற்கு
மாறு செய்கிறவர்கள் 33:66,67, 68படி காஃபிர்கள், நரகவாதிகள் என்று ஒருபோதும் சொல்ல
மாட்டோம். இது நீங்கள் எம்மீது சொல்லும் அப்பட்டமான அவதூறாகும்; அல்லது நாம் சொல்லி
யிருப்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
அடுத்து இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை; முஸ் லிம்களை எந்த நிலையிலும் பிளவுபடுத்தக்
கூடாது; அப்படி பிளவு படுத்துவது 21:92, 23:52, 3:103,105, 6:153, 159, 30:32,
42:13,14 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் முரணான மிகமிகக் கொடூரமான
செயல் என்பதை நாம் திட்ட மாகத் தெளிவாக எப்போது அறிந்து கொண்டோமோ அதன் பின்னரே
1983லிருந்து எமது இந்த பிரச்சார பணியை ஆரம்பித்தோம். பிளவுகளை ஏற்படுத்தும்
ஆலிம்-அவாம் வேறுபாடு, மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக்கள், இயக்கங்கள் இவை
அனைத்தையும் கடு மையாக விமர்சிக்க ஆரம்பித்தோம். இவற்றைத் தூக் கிப் பிடிக்கும்
கூலிக்கு மாரடிக்கும் புரோகித வர்க்கத்தை மிகமிகக் கடுமையாக விமர்சித்து அவர்களை
மக்க ளுக்கு அடை யாளம் காட்ட முற்பட்டோம். காரணம் இப்புரோகிதர்களின் பிடியிலிருந்து
மக்கள் விடுபடாத வரை மக்கள் வெற்றி பெற முடியாது என்பதை, குர்ஆன் கூறும் முன்னைய
நபிமார்களுக்குப் பின்னர் அச்சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து மக் களை
வழிகெடுத்து நரகில் தள்ளும் மதகுருமார்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்த பின்னரே
திட்டமாக அறிந்து கொண்டோம்.
சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க குர்ஆன், ஹதீஸ் கூறும் நேரடிக் கருத்துக்களை
அப்படியே எடுத்து வைக்கிறோம். அதற்கு மாறாக சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அதன் மூலம்
ஆதாயம் அடைவதையே குறிக்கோளாகக் கொண்ட மார்க்கம் அனுமதியாத ஷைத்தானின் ஏஜண்டுகளான
மதகுருமார்களையே மிக வன்மையாகச் சாடுகிறோம்.
மார்க்க மேதைகள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் கொடுக்கும் மேல் விளக்கங்கள்
(Explanations)  விரிவுரைகள்
(Interpretations) குர்ஆன், ஹதீஸ் கூறும் அதே கருத்தை
வலியுறுத்துவதாக இருந்தால் ஏற்க லாம். குர்ஆன், ஹதீஸ் நேரடிக் கருத்துக்களை திரித்து
வளைத்து மறைப்பதாக இருந்தால் அது 2:159, 160, 161,162 இறைக் கட்டளைகள்படி கொடிய
ஹராம் என்றே கூறுகிறோம். அல்லாஹ்வுடைய தூதர் சொன் னதை மறைத்து வேறு விளக்கம்
கொடுப்பதாக இருந் தால் இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் அந்தஸ் துக்கு மேல்
அந்தஸ்துடையவர்களாக இருக்க வேண் டும். அல்லாஹ் சொல்லியுள்ளதை மறைத்து மேல் விளக்கம்
இவர்கள் கொடுப்பதாக இருந்தால் இம்மத குருமார்கள் அல்லாஹ்வை விட உயர்ந்த அந்தஸ்து
டையவர்களாக இருக்க வேண்டும். (நவூது பில்லாஹ்) இந்த நிலை 42:21, 49:16 இறைக் கட்டளை
கள்படி கொடிய ஹராம்-குற்றம் என்றே கூறுகிறோம். குர்ஆனிலும், ஹதீஸிலும் இப்படி
தங்களின் சுய கருத்துக்களைப் புகுத்தியே சமுதாயத்தை எண்ணற்றப் பிரிவுகளாகப்
பிரித்து சமுதாயத்தை சீரழிய வைத் திருக்கிறார்கள்.
அன்றும் இன்றும்!
நபி தோழர்களுடைய காலத்தில் அவர்களின் அழகிய நடைமுறைகளால் ஈர்க்கப்பட்டே மக்கள் சாரை
சரையாக இஸ்லாத்தைத் தழுவினர். அதற்கு நேர்மாறாக இன்றைக்கு இந்த முஸ்லிம் மதகுருமார்களின், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் முஸ்லிம்களின் கேடுகெட்டப் பழக்க
வழக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்தைத் தழுவ விரும்புகிறவர்களும் வெருண்டோடுகிறார்கள்.
ஆக இந்த மதகுருமார்களின் குர்ஆன், ஹதீ ஸுக்கு முரணான சுய விளக்கங்கள் மாற்றாரை இஸ்
லாத்தைத் தழுவ விடாமல் வெருண்டோடச் செய்வது டன், ஓரளவு சிந்திப்பவர்களை
நாத்திகத்தில் சிக்கவும் வைக்கின்றன. முஸ்லிம்களையும் எண்ணற்றப் பிரிவுகளில் சிக்க
வைத்துள்ளன. பல இறைவாக்கு கள் கூறும் சமுதாய ஒற்றுமையையே ஒரே மாறா இலட்சியமாகக்
கொண்டு நாம் செயல்படுவதால், அதற்கு இடையூறாக இருக்கும் மார்க்கத்தை வயிற் றுப்
பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிகளை மிக மிகக் கடுமையாகச் சாடுகிறோம். சமுதாய ஒற்றுமை
யைக் கருத்தில் கொண்டு குர்ஆன், ஹதீஸ் நேரடிப் போதனைகளுக்கு முரணில்லாதவற்றில் நடை
முறையிருப்பவற்றை ஆதரிக்கிறோம்; சரி காண்கிறோம்.
அந்த அடிப்படையில் 2000-ல் தத்தம் பகுதிப் பிறையிலிருந்து தகவல் பிறை என்ற
அடிப்படையில் படி ஏறியிருந்ததால், அதற்கமைய எமது கருத்துக்கள் இருந்தன என்பதை
ஒப்புக் கொள்கிறோம். அன்று நாம் எடுத்தெழுதிய “”நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான்
நோன்பு; நீங்கள் முடிவு செய்யும் நாளில்தான் பெருநாள்” என்று காணப்படும் ஹதீஸ்
கடுமையான ஆய்வுக்குப்பிறகு ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல என்று கூற நாம் வெட்கப்படமாட்டோம்.
17:36 இறைக்கட்டளைப்படி உறுதியாகத் தெரியாத நிலையில் ஒன்றை எடுத்து நடக்க முடி யாது.
புகாரீ, வியாபாரம் பாடத்தில் “”சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் இருக்கிறது. இந்த அடிப்படையில் அந்நஜாத்தில்
சரியான ஹதீஸ் என்று செயல்படுத்தச் சொன்ன சில ஹதீஸ்களை மீள் ஆய்வுக்குப் பிறகு
பலகீனமானது என்று எழுதி யிருக்கிறோம். உதாரணமாக முன்னர் தொழுகை இருப்பில்
விரலாட்டும் ஹதீஸ்களை சரிகண்டு எழுதிய பின்னர் உங்கள் மத்ஹபு, தரீக்கா
மதரஸாவிலிருந்து வந்த விரலாட்டும் ஹதீஸ்கள் பற்றிய விமர்சனங் களை நடுநிலையோடு ஆய்வு
செய்து ஏற்கத்தக்க ஹதீஸ்கள் அல்ல என்று தெளிவுபடுத்தி இருக்கிறோம். புரோகித
மவ்லவிகள் சொல்லி நாம் கேட்பதா? என்று இறுமாப்புக் கொள்ளவில்லை. மனிதர்களில் யாராக
இருந்தாலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும்
சொல்கிறோம்.
அதனால்தான் எம்மையோ அந்நஜாத்தையோ ஒருபோதும் தக்லீது செய்யக்கூடாது என்று வன்மை யாகக்
கண்டித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை அந்நஜாத்தில் எழுதி வருவது தவறு;
குர்ஆன் ஹதீஸுக்கு முரணானது என்று மனிதர் களில் யாருடைய சுயவிளக்கமோ (சிமுஸ்ரீயிழிஐழிமிஷ்லிஐவி)
விரிவுரையோ (தஃப்ஸீர்-ணூஐமிerஸ்ரீreமிழிமிஷ்லிஐ) இன்றி நேரடி குர்ஆன் வசனத்தையோ,
ஆதாரபூர்வமான ஹதீ ஸையோ தந்துவிட்டால் உடனடியாக அதை ஏற்று எம்மைத் திருத்திக்
கொள்ளவும், அல்லாஹ்விடம் மன்னிப்புக்கேட்டு மீளவும் தயாராக இருக்கி றோம். இது நமது
எஜமானனான அல்லாஹ்வின் மீது ஆணை.
மேலும் அன்று 2000-லும் எந்த முடிவை எடுத்தாலும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு
அந்த முடிவின்படி செயல்படுங்கள் என்றே வலி யுறுத்தி இருக்கிறோமே அல்லாமல் மூன்று
பிரிவு களாகப் பிரிந்து செயல்பட மார்க்கம் அனுமதிக்கிறது என்று நாம் கூறவில்லை.
அன்று நபி(ஸல்) அவர் களது காலத்தில் வெவ்வேறு ஊர்களில்தான் வெவ் வேறு நாட்களில்
நோன்பும், பெருநாளும் இடம் பெற்றன. ஆனால் கைசேதம் இன்றோ ஒரே ஊரில் மட்டுமல்ல ஒரே
குடும்பத்தில் கூட 3 நாள் நோன்பு ஆரம்பம், 3 நாள் பெருநாள் என அவிழ்த்து விட்ட
நெல்லிக்காய் மூட்டையிலிருந்து சிதறும் நெல்லிக் காய்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்
முஸ்லிம்கள்!
சிதறியுள்ள இந்த சமுதாயத்தை மீண்டும் இறைக்கட்டளைப்படி ஒன்று சேர்க்க தத்தம் பகுதி
பிறை வழிவகுக்குமா? அன்றைய இரவின் தகவல் பிறை வழி வகுக்குமா? அல்லது முன்னரே
கணக்கிட்டு நாட்களல்ல, மாதங்கள் அல்ல, வருடங்களுக்கு முன்னரே தெரிய வரும் தலைப்பிறை
வழி வகுக் குமா? சொல்லுங்கள். சமுதாய ஒற்றுமையைக் குறிக் கோளாகக் கொண்டவர்களுக்கு
கணக்கீட்டின்படி யுள்ள பிறையை ஏற்பதில் ஒருபோதும் தயக்கம் இருக் காது. சமுதாயத்தை
எண்ணற்றப் பிரிவுகளாக்கி அற்ப உலக ஆதாயம் அடையும், அல்லாஹ்வுக்காகச் செய்யவேண்டிய
மார்க்கப் பணியை காசுக்காகச் செய் யும் மவ்லவிகளான மதகுருமார்களுக்குக் கணக்
கீட்டின்படியுள்ள பிறை எட்டிக்காயாகக் கசக்கும் என்பதில் ஐயமுண்டா? சொல்லுங்கள்.
தத்தம் பகுதிப் பிறையில் குறைபாடுகள் சிரமங் கள் இருப்பது போல் 2000-ல் நாம் சொன்ன
தகவல் பிறையிலும் குறைபாடுகளும், சிரமங்களும் இருக் கத்தான் செய்கின்றன. அதையே
குறிப்பிட்டுள்ளீர் கள். அதனால்தான் எவ்வித குறைபாடோ, சிரமங் களோ இல்லாத,
முன்கூட்டியே அறிய முடிந்த கணக் கின்படியுள்ள பிறையை வலியுறுத்துகிறோம். இது
குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரணான செயல் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம்.
21. எளிமையான யாருக்குமே சிரமமேயில்லாத வழிமுறைகளைக் கூறிய நம்
ஷரிஅத்தின் சட்டத்தை,
தன் தவறான ஆய்வின் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய ரசூல்(ஸல்) அவர்க ளும் கூறாததை தன்
மனோ இச்சைக்கு அடி பணிந்து துணிந்து கூறி தானும் நேர்வழி தவறி மக்களையும் வழி தவறச்
செய்து, மக்கள் நல் அமல் புரிவதற்கு சிரமத்தையும் ஏற்படுத்தத் தான் முயல்கின்றாரோ
என்று எண்ணத் தோன் றுகின்றது என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
எமது விளக்கம்:
உண்மை என்ன? திருடன் மற்றவர்களைத் திருடன் என்று சொல்வதுபோல் இருக்கிறது உங்கள்
கூற்று. 5:3, 33:36 இறைவாக்குகளும், வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் நெறி நூல்,
நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை; புதியவை அனைத்தும் வழிகேடுகள்;
வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும்” என்று உங்களைப் போன் றவர்கள்
அடிக்கடி சொல்லும் பிரபல்யமான ஹதீஸும், நபி(ஸல்) அவர்கள் இறுதி சமயத் தில்
வலியுறுத்திய “”உங்களை நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன்
இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகப் போகிறவனைத் தவிர வேறு யாரும் இதில்
வழிகெட்டுச் செல்லமாட்டான்” என்ற பிர பல்யமான ஹதீஸும் என்ன கூறுகின்றன?
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் வஹீ மூலம் பெற்ற மார்க்கத்தில் அணுவளவல்ல;
அணுவின் முனை அளவும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதை உறுதியாக அறிவிக்க வில்லையா?
இந்த நிலையில், நபி(ஸல்) மரணித்து சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்கத்திற்கு
உட்பட்ட நிலையில் சு.ஜவாகிய நீங்கள் இஜ்மா, கியாஸ் என்றும் ததஜவினர் லாஜிக், பாலிஸி
என்றும் மார்க்கம் அல்லாத ஆலிம்-அவாம் வேறுபாடு, மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக்கள்,
இயக்கங்கள் போன்ற பித்அத்தான பெயர்களால் மார்க்கத்தில் உங்களின் கற்பனைகளைப்
புகுத்துவது, மதகுருமார்களாகிய உங்களின் ஆய்வின் மூலம், எளிமையான ஆலிம்-அவாம் என்ற
வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமே சிரமமே இல்லாத வழிமுறைகளைக் கொண்ட இஸ்லாமிய
ஷரீஅத்தின்
சட்டத்தை, நம்
ஷரீ அத்தின் சட்டம் என கற்பனை செய்து, உங்களதும், உங்களது ஆபாக்களதும்
மனோ இச்சைக்கு அடி பணிந்து துணிந்து அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும்
கூறாததைக் கூறி நீங்களும் வழி தவறி மக்களையும் வழிதவறச் செய்து, மக்கள் உரிய நாளில்
உரிய நல்லமல்களைச் செய்வதைத் தடுத்து, ரமழான் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொண்டு
கடமையான 2 நோன்புகளை இழக்கச் செய்தும், நோன்பு பிடிக்க ஹராமான
ஷவ்வால் முதல் நாளில்
நோன்பு நோற்க வைத்தும் இவ்வுலகில் சிரமத்தையும், மனக்குழப்பத்தையும் ஏற்படுத்துவதோடு
மறுமையில் அவர்களை நரகில் தள்ளும் கொடிய செயலை செய்வது யார்? சொல்லுங்கள். நீங்களா?
நாமா?
மதகுருமார்களாகிய உங்கள் ஆபாக்களான யூதக் கைக்கூலிகள் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும்
முற்றிலும் முரணாக ஹிஜ்ரி 400க்கு பிறகு கற்பனை செய்தவற்றை-மார்க்கமல்லாதவற்றை
மார்க்கமாக்கி அதை நம்
ஷரிஅத் சட்டம் எனக் கூறிக்கொண்டு அல்லாஹ் 4:112-ல் சொல்வது
போல் அந்தப் பழியை எம்மீது சுமத்துகிறீர்களே இது இறையச்சமுடையவர்களின் செயலா?
சொல்லுங்கள்.
நாம், வஹீ மூலம் பெற்ற மார்க்கத்திற்கு உட்பட்ட
ஷரீஅத் சட்டத்தில் அணுவளவல்ல அணுவின்
முனை அளவும் மாற்றம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதையே கடந்த 29
வருடங்களாக மக் கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். ஆனால் 22:27-ல் அல்லாஹ் கூறும்
ஒட்டகத்தில் செல்வது ஹஜ் கடமைக்கு உட்பட்டதல்ல, அன்று சூரிய ஓட்டத்தைப் பார்த்து
நேரம் அறிந்தது தொழுகை கடமைக்கு உட்பட்டதல்ல, தூரத்துச் செய்தியை ஆள் நேரில் வந்து
சொன்னது மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பது போல் அன்று பிறையைப் பார்த்து மாதம்
பிறப்பதை அறிந்தது மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல எனத் தெள்ளத் தெளிவாகக் கூறிக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால் மதகுருமார்களாகிய உங்கள் ஆபாக்கள் நிலை எப்படி இருந்தது தெரியுமா? முதன் முதலாக ஒட்டகத்திற்குப் பதிலாக புதிதாகக் கண்டு பிடித்த வாகனத்தில் ஹஜ்ஜுக்குப் போவதை
மறுத்தார்கள். அவர்கள் மாறவில்லை. காலமே அவர்களை மாற்றி யது. முதன் முதலாக கடிகாரம்
கண்டு பிடிக்கப்பட்டு அதன் மூலம் நேரம் அறிந்து தொழ ஆரம்பித்த போதும் இப்படித்தான்
சூரியனைப் பார்ப்பது இபாதத்-வணக்கம் என ஓலமிட்டார்கள். அவர்கள் மாறவில்லை. காலமே
அவர்களை மாற்றியது.
இப்படி ஒவ்வொரு நவீன கண்டுபிடிப்பும் பயன்பாட்டுக்கு வரும்போதும், நபி(ஸல்) அவர்களது
காலத்தில் இருந்த நடைமுறையே மார்க்கம்-இபாதத்-வணக்கம் அதை மாற்றுவது குர்ஆன்,
ஹதீஸுக்கு மாற்றம் என உங்களின் ஆபாக்கள் ஒப்பாரி வைக்கத்தான் செய்தார்கள். அவர்கள்
மாறவில்லை. காலம்தான் அவர்களை மாற்றியது. இன்று இந்த பிறை பற்றி இவ்வளவு தெளிவாக
விளக்கியும், பிறை பார்ப்பது மார்க்கம் அல்ல; மாதம் பிறப்பதை அறிவது தான் மார்க்கம்.
அன்று பிறை பார்த்தது மாதம் பிறப்பதை அறிய ஒரு கருவி-சாதனமே அல்லாது அது
மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என 3-ம் வகுப்பு மாணவன் விளங்குவது போல் விளக்கினாலும்,
அதை ஏற்கும் மனப்பக்குவம் மார்க்கம் கற்ற மேதைகள் என தற்பெருமை பேசும் உங்களைப்
போன்றோருக்கு ஒரு போதும் வராது. ஆயினும் காலம் உங்களை நிச்சயம் மாற்றும். நீங்களோ
அல்லது உங்களது வாரிசுகளோ இன்று பள்ளிகளில் தொழுகை நேர அட்டவணை என்று தகவல் பலகை
மாட்டியுள்ளதுபோல், நோன்பு கால அட்டவணை என்றும் தகவல் பலகை மாட்டத்தான் போகிறீர்கள்.
நபியுடைய காலத்தில் நபியுடைய பள்ளியில் இப்படி தொழுகை நேர அட்டவணை எனும் தகவல்பலகை
மாட்டப்படவில்லை என்பது உங்க ளுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் அப்படி மாட்டியுள்ளது உங்களது
ஷரிஅத் சட்டப்படி குர்ஆன், ஹதீ ஸுக்கு முரண்தானே? பித்அத்தானே?
என்ன சொல்கிறீர்கள்?
ஒவ்வொரு நவீன கண்டுபிடிப்பின் போதும் நீங்கள் ஏன் இப்படி பயந்து ஆர்ப்பரிக்கிறீர்கள்?
குர் ஆன், ஹதீஸுக்கு முரண் என ஒப்பாரி வைக்கிறீர்கள் தெரியுமா? ஆம்! 2:146, 6:20
வசனங்களில் அல்லாஹ் சொல்வது போல் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட
மதகுருமார்கள் நேர்வழி, சத்தியம் இதுதான் என்பது அவர்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது
போல் நன்கு அறிவார்கள்.
எஜமானன் அல்லாஹ்வின் எண்ணற்றக் கட்டளைகளுக்கு முரணாக மக்களை ஏமாற்றி வயிறு
வளர்த்துக் கொண்டிருப்பதும் அவர்கள் நன்கு அறிந்த விஷயம் தான்.
அல்லாஹ்வின் கலாமான குர்ஆனில் விபரித் துள்ளபடிதான் அண்டசராசரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அல்லாஹ்வின் ஃபிஅல்-செய லில் கட்டுப்பட்டவை. எனவே அல்லாஹ்வின் கலா
மான சொல்லும் ஃபிஅலான செயல்களும் ஒரு போதும் முரண்படா. எனவே நவீன அறிவியல் கண்டு
பிடிப்புகள் தங்களின் தில்லுமுல்லுகளை, திருகு தாளங்களை அம்பலப் படுத்திவிடுமோ,
தங்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் ஒவ்வொரு
புதிய கண்டுபிடிப்பும் போதும் பயத்தால் அலறுகிறார்கள்.
ஆக மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் சொல்லும்
மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸுக்கு முரணாக மார்க்கம் அல்லாததாக ஆக்கியும், குர்ஆன்,
ஹதீஸ் சொல்லாத மார்க்கம் அல்லாதவற்றை மார்க்கம் ஆக்கியும் இஜ்மா, கியாஸ், லாஜிக்,
பாலிஸியின் பெயரால் மத் ஹபுகள், தரீக்காக்கள், சூஃபிசம், மஸ்லக்கள், இயக் கங்கள்
போன்ற பித்அத்களால் மேலும் பலபல பித் அத்களைக் கற்பனை செய்து படு ஜோராக வயிறு
வளர்த்து வருகிறார்கள். இவர்களின் இந்த வழிகேட்டுச் செயல்களை எண்ணற்ற குர்ஆன்
வசனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆனால் மார்க்கம் கற்ற மேதைகள் என்று அபூ
ஜஹீலுக்கும் தாருந் நத்வா ஆலிம்கள் என பிதற்றிய ஜாஹில்களுக்கும் இருந்த அதே
ஆணவம்-தற்பெருமை இவர்களுக்கும் இருப்பதால் அன்று அவர்கள் அரபி மொழியில் தேர்ச்சி
பெற்றிருந்தும் குர்ஆனை விளங்க முடியாதது போல், இன்றும் இவர்களும் அரபி மொழி
ஓரளவாவது கற்றிருந்தும் குர்ஆனை விளங்கும் பாக்கியம் பெற மாட்டார்கள். அந்த
அடிப்படையில் தான் நீங்கள் மனோ இச்சைக்கு அடிபணிந்து குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக
நடந்து கொண்டு நாம் மனோ இச்சைக்கு அடிபணிந்து குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக நடப்ப தாகச்
சொல்கி றீர்கள். திருடன் மற்றவர்களைத் திருடன் என்று சொல்வது போல். (பார்க்க 4:112)
22. ஹஜ்ஜிற்கு சென்ற தனது கணவன் இறந்து போன செய்தியை போன் மூலம் உறுதியாகத் தெரிந்து
கொண்ட பின்னரும் “”இத்தா” இருக்க மறுத்து, தனது கணவர் கூடச் சென்றவர்கள் திரும்பி
வந்து நேரில் சொன்னதின் பின்னரே அக் காலத்தில் நடைபெற்றது போல் “”இத்தா” இருப் பேன்
என்று அடம் பிடிப்பது போலாகும். பாவ மாகும் என்று 2000-ல் நாம் எழுதியுள்ளதை
விமர்சித்து எமக்கு குர்ஆன், ஹதீஸ் சட்டம் தெரியவில்லை என மவ்லவி என்ற தற்பெரு மையை
வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
எமது விளக்கம்:
ஒருவன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டு மற்றவன் கொட்டப் பாக்குக்கு
விலை சொன்ன கதையாக இருக்கிறது உங்களின் ஆணவ விளக்கம்; வெளியூரில் கணவன் இறந்துவிட்ட
செய்தி உடன் தெரி யாமல் காலம் கடந்து தெரியவந்தால், மனைவி எப்படி “”இத்தா”
கடைபிடிப்பது என்ற கேள்வி இங்கு இல்லை.
கணவன் இறந்த செய்தி சுடச்சுட உடன் கிடைக்கிறது. ஆனால் தகவல் நவீன கருவியான தொலை
பேசி மூலம் கிடைத்துள்ளது. அந்தச் செய்தியை ஏற்காமல் அப்பெண் அன்றுபோல் ஆள் நேரில்
வந்து மரணச் செய்தியைச் சொல்ல வேண்டும் என்று அடம் பிடித்தால் அதை மவ்லவிகளாகிய
நீங்கள், அதுதான் நபியின் சுன்னத்து-ஆள் நேரில் வந்து தான் சொல்ல வேண்டும்
என்பீர்களா? அல்லது அன்று தொலைத் தொடர்பு வசதி இல்லாததால் ஆள் நேரில் வரும் கட்டாயம்
இருந்தது. ஆனால் இன்று தொலைத் தொடர்பு வசதி இருப்பதால், இறப்புச் செய்தியை உறுதி
செய்து கொண்டு மனைவி இத்தா இருக்க வேண்டும் என்பீர்களா? என்பது தான் எமது கேள்வி.
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் உங்களின் அறிவீனத்தை எப்படி விளக்குவது?
அதைவிட அறிவீனமான ஒரு விளக்கத்தை தந்துள்ளீர்கள். அதாவது இத்தா விஷயம் தகவல் அறிந்து
செயல்படுவது. பிறை விஷயம் கண்ணால் பார்த்து செயல்படுவது. அதனால் இது மக்களை
ஏமாற்றும் தவறான உதாரணம் என்று பிதற்றி இருப்பதே நீங்கள் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
எப்படி என்று பாருங்கள்.
இத்தா இருப்பது மார்க்கம். அதற்குரிய இறப்புச் செய்தி வரும் முறை மார்க்கத்திற்கு
உட்பட்டதல்ல. செய்தி அன்று ஆள் மூலமும் வந்தது. இன்று தொலைத் தொடர்பு மூலமும்
வருகிறது. அதைப் போல் ரமழான் மாதம் பிறப்பதை அறிந்து நோன்பு நோற்பது மார்க்கம்.
ரமழான் மாதம் பிறப்பதை அறியத்தரும் கருவி மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல. அன்று
பிறையைப் பார்த்து மாதம் பிறப்பதை அறிந் தார்கள். இன்று கணினி கணக்கீட்டின் மூலம்
மாதம் பிறப்பதை அறிகிறோம். எது மார்க்கம்? எது மார்க்கம் இல்லை எனத் தெரியாமல்
பிதற்றி உங்களின் அறி வீனத்தை வெளிப்படுத்தாதீர்கள்.
23. முஸ்லிம்களாகிய நமக்கு நாட்காட்டியாக பிறை பார்ப்பதையே குர்ஆனும் நபிமொழி ஹதீ
தும் கூறுகிறது. சூரியனை மற்றவர்கள் நாட் காட்டியாக எடுத்து செயல்படுகிறார்கள்.
சூரிய னில் எப்படி மாற்றம் வராதோ அதைப் போல் அவர்களின் பண்டிகையும் மாறாது. உதார
ணமாக ஜனவரி மாதத்தை 29ல் முடித்து அடுத்த நாள் பிப்ரவரி முதல் தேதி என்றாலும் எந்தக்
குழப்பமும் ஏற்படப் போவதில்லை.
கிறித்துவர்கள் தங்கள் பண்டிகையின் தேதியை நிர்ணயித்துவிட்டார்கள். அதனால் அதில்
மாற்றம் ஏற்படாது.
பிறையில் வளரும், தேயும், மறையும் ஆக மூன்று நிலை உள்ளது. மேலே கூறிய ஜனவரி
உதாரணத்தைப் போல் நம் இஸ்லாமிய காலண்டரில் மாற்றம் செய்ய இயலாது. அவ் வாறு
மாற்றினால் பிறை காட்டிக்கொடுத்து விடும். இதனால் நிச்சயமாக 1, 2 நாட்கள் வித்தி
யாசம் ஏற்படுவது என்பது இறைவன் விதித்த நியதி. உலகம் முழுவதும் ஒரே நாளில் நோன்பு,
பெருநாள் வரவேண்டுமானால் நாமும் அவர்க ளின் சூரிய கணக்கிற்கு மாறவேண்டும். இது
குர்ஆன் ஹதீதிற்கு மாற்றம் என்று எழுதி உங்க ளின் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
பிறை பார்ப்பதையே குர்ஆனும் நபி மொழியையும் கூறுகின்றது என்று ஒரு பகிரங்கமான பொய்யைக் கூறியுள்ளீர்கள். அல்லது பிறை பார்ப்பதைச் சொல்லும் குர்ஆன் வசனத்தை எடுத்துக்
காட்டுங்கள். குர்ஆனில் 2:185 வசனத்தில் “”உங்களில் எவர் அம்மாதத்தில்
நுழைகிறாரோ(ஷஹித) அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றிருக்கிறதே அல்லாமல்
எவர் அம்மாதத்தின் பிறையைப் பார்க்கிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்று
இல்லவே இல்லை. குர்ஆனில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறும் நீங்கள் எப்படிப்பட்ட
அநியாயக் காரர்-பொய்யர் என்பதைச் சுயமாகச் சிந்திக்கும் மக் கள் அறிவார்கள்.
உங்களைப் போன்ற மதகுருமார் கள் பின்னால் ஆட்டு மந்தைகள் போல் கண்மூடிச் செல்லும்
பெருங் கூட்டம் மட்டுமே உணர மாட்டார்கள்.
மாதம் பிறப்பதை அறிய அன்று பிறை பார்ப் பதைத் தவிர வேறு வழி இல்லாத நிலையில் மாதம்
29-ல் முடிகிறது இல்லை 30-ல் முடிகிறது என்ற சர்ச்சையையும், 2-ம் பிறை இல்லை, 3-ம்
பிறை என்ற சர்ச்சையையும் தீர்த்து சமுதாய ஒற்றுமை காக்க பிறை பார்க்கச்
சொல்லப்பட்டதே அன்றி பிறை பார்ப்பது இபதத்தோ-வணக்கமோ அல்ல. ஹதீஸிலும் மாதம்
பிறப்பதை அறிய ஏவப்பட்டுள்ளதே அல் லாமல் பிறை பார்ப்பதை வணக்கமாக ஏவப்பட வில்லை.
இதிலும் நீங்கள் பொய்யரே. குர்ஆன், ஹதீ ஸில் இல்லாததை இருப்பதாகச் சொல்லும் அநியாயக்
காரரே. (பார்க்க. 6:21,157, 7:37, 10:17, 11:18, 16:105, 39:32, 51:10,77:15 )
சூரியனை நாள்காட்டியாக உலகில் எவருமே எடுக்கவில்லை-நாம் வசிக்கும் பூமியின்
சுழற்சியை வைத்து நாளும், பூமி சூரியனைச் சுற்றி வருவதை வைத்து வருடமும்
கணக்கிடப்படுகிறது. இதிலும் உங்கள் அறியாமையே வெளிப்படுகிறது. மேலும்
சூரியக்கணக்கில் மாற்றம் இல்லை, ஆனால் சந்திரக் கணக்கில் மாற்றம் இருக்கிறது
என்பதும் உங்களின் அறியாமையே. சூரியக் கணக்கில் நான்கு வருடங் களுக்கு ஒருமுறை ஒரு
நாளைக் கூட்ட வேண்டிய நிலையும் சுமார் 100 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாளைக்
குறைக்க வேண்டிய நிலையும் உண்டு. ஆனால் சந்திரக் கணக்கில் ஆயிரம் வருடங்களா னாலும்
ஒரு நாளைக் கூட்ட வேண்டுமென்றோ? ஒரு நாளைக் குறைக்க வேண்டுமென்றோ, வரவே வராது. அந்த
அளவு துல்லியமாகச் சந்திரனின் சுழற்சி இருக்கிறது.
மதகுருமார்களாகிய உங்களின் 3-ம் பிறையே முதல் பிறை என்ற மூடக்கொள்கையையே பிறை
காட்டிக் கொடுக்கிறது. அதாவது மாத்தின் இறுதி நாளில் அதாவது 29-ம் அல்லது 30-ம்
நாளில் இடம் பெறும் அமாவாசை அல்லது சூரிய கிரகணம் உங்களின் மூடக் கொள்கைப்படி 27லோ
28லோ இடம்பெறும். சந்திர சுழற்சியின் நடுப்பகுதியில் வர வேண்டிய பெளர்ணமி-பூரணச்
சந்திரன் பிறை 12ல் வரும் அவலத்தைப் பார்க்க முடிகிறது. சூரியக் கணக்கிலுள்ள
குறைபாட்டை சந்திரக் கணக்கில் புகுத்தி உங்களது சொத்தை வாதத்தை நிலைநாட்ட முற்படுவது
அறியாமையின் உச்சக் கட்டம்.
24. இந்த விஞ்ஞான முதிர்ச்சியின் உச்சக்கட் டத்திலும் முஸ்லிம்களுக்கு மத்தியில்
ஊருக்கு ஊர் நோன்பு, பெருநாள் கொண்டாடுகின்றனர் என்று மற்றவர்கள் நம்மை பார்த்து
ஏளனம் நையாண்டி செய்கிறார்கள் என்று கற்பனை யாக கூறினார் என்று எழுதி இருக்கிறீர்கள்.
ஊருக்கு ஊர் பெருநாள் கொண்டாடித்தான் ஆக வேண்டும். வேறு வேறு நாட்களில் கொண்டாடுவதே
நையாண்டிக்குரியது. துலுக்கனுக்கு 3-ம் பிறையே முதல் பிறை என்று ஹிந்துக்கள்
நையாண்டி செய்வது பலர் அறிந்த உண்மை. நாம் கற்பனை செய்யவில்லை. நீங்கள் உங்களின்
தவறான வாதங்களை நிலைநாட்ட கற்பனைகளை அவிழ்த்து விடுகிறீர்கள். மற்றவர்கள் ஏளனம்
செய்கிறார்கள் என்றால், “”எந்த எந்த காலகட்டத்தில்
ஷரீஅத்தின் சட்டத்தில் மாற்றம்
செய்ய வேண்டும்” என்று ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பட்டியல் போட ஆரம்பித்தால் அது எங்கு
போய் முடியும்? என்று கேட்டிருக்கிறீர்கள். மதகுருமார்களாகிய உங்களின் சுயநலக்
கற்பனைகளைப் புகுத்தாமல், குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை மட்டும் உள்ளபடிச்
செயல்படுத்தினால் உலகம் அழியும் வரை
ஷரீஅத் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய
வேண்டியதே இல்லை.
மதகுருமார்களாகிய நீங்கள் உங்களின் இவ் வுலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு
ஷரீஅத்தில் இஜ்மா, கியாஸின் பெயரால் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளதால், 21:92, 23:52-ல்
அல்லாஹ் கூறும் வேற்றுமை இல்லா ஒரே சமுதாயம் என்று கூறியுள்ளதை நிராகரித்து-2:39
இறைக்கட்டளைப்படி குஃப்ரிலாகி நீங்கள் எழுதி இருப்பது போல் ஆளுக்கொரு பட்டியல்
போட்டு ஒரே சமுதாயத்தை எண்ணற்ற பிரிவுகளிலாக்கி எங்கு போய் முடியுமோ என்ற ஆபத்தான
நிலையை உண்டாக்கி இருக்கிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டு மதகுருமார்களாகிய உங்களுக்கே 100க்கு 100 பொருந்திப் போவதைப் பார்த்தீர்களா?
2000-ல் நாம் கணக்கீட்டு முறையை சரியாக ஆய்வு செய்யாத நிலையில், நாள் ஆரம்பிப்பது
பற்றி கடந்த 1000 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருவதை ஏற்று எழுதி இருந்தது உண்மை
தான். நாம் முன்னர் சொன்னது போல் சரியான, நேரடியான குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கிடைக்காத
வரை நடை முறையில் இருப்பதை மறுக்கும் துணிச்சல் நமக்கு ஏற்பட்டதில்லை. உரிய ஆதாரம்
கிடைத்து விட்டால் உலகமே எதிர்த்தாலும் அந்த உண்மையைச் சொல்ல அஞ்சியதே இல்லை. நாம்
நம்மைப் படைத்த நமது எஜமானனான அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சுகிறோம்.
அறியாத நிலையில் அல்லது நிர்பந்த நிலை யில் தவறு செய்வதற்கும், நன்கு அறிந்த
நிலையில் தவறு செய்வதற்குமுள்ள வேறுபாட்டை அறியாத நிலையில், அல்லது அறியாதது போல்
நடித்து உங்களின் தவறான குர்ஆன், ஹதீஸுக்கு முரண் பட்ட கொள்கையை நிலைநாட்ட பெரிதும்
முயற்சி செய்துள்ளீர்கள். 2:146, 6:20, 7:175-179, 47:25 குர்ஆன் வசனங்களை மீண்டும்
மீண்டும் படித்து விளங்கி தொளபா செய்து மீள முற்படுங்கள். ஆனால் மார்க்கத்தைப்
பிழைப்பாகக் கொண்ட நிலையிலும், ஆலிம்-அவாம் வேறுபாட்டை உண்டாக்கி ஆணவம்-தற்பெருமை
கொள்ளும் நிலையிலும் தெளபா செய் யும் வாய்ப்புக் கிடைக்கவே கிடைக்காது என்பதை
நபி(ஸல்) அவர்களது காலத்து ஐ.உ.ச. தாருந்நத்வா ஆலிம்களாகிய ஜாஹில்கள், அதன் தலைவன்
அபுல் ஹிக்கமாகிய அபூஜஹீல் ஆகியவர்களின் வழிகெட்ட நிலையிலிருந்து விளங்குங்கள்,
படிப்பினையாகக் கொள்ளுங்கள்.
மவ்லவிகள் வழி தவறக் காரணம்!
மறுமையை மறந்து அற்ப இவ்வுலக ஆதாயங்களையே குறியாகக் கொண்ட மவ்லவிகளான மதகுருமார்களாகிய உங்களுக்கு இவ்வுலகில் இருக்கும் உங்களுக்குச் சாதகமான
(Pluspoint) என்ன தெரியுமா? அல்குர்ஆன் 2:243, 6:116, 7:187, 11:7, 12:21, 38,40,68,103, 13:1,
16:38, 17:89, 18:54, 25:50, 30:6, 30, 34:28,35,36, 37:71, 40:57,59,61,82, 45:26
5:59, 43:78, 2:100, 3:110, 5:37,103, 6:111, 7:17, 102, 131, 8:34, 9:8, 10:36,
55,60, 12:106, 16:75,83, 101, 21:24, 23:70, 25:44, 26:8, 26:67, 103, 121, 139,
158, 174, 190, 223, 27:61, 73, 28:13,57, 29:63, 30:42 31:25, 34:41, 36:7,
39:29,49, 41:4, 44:39, 49:4, 52:47 ஆகிய இத்தனை வசனங்களில் பெரும்பான்மையினர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். நன்றி செலுத்தமாட்டார்கள். நேர்வழிக்கு வரமாட்டார்கள்.
கற்பனைகளிலும், யூகங்களிலும் மூழ்கி இருப்பார்கள், வழிகேட்டையே விரும்புவார்கள்
என்று பெரும்பாலான மக்களின் இழிநிலையை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான். அப்படிப்பட்ட
பெரும்பான்மை மக்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவேன் என்றும் 32:13, 11:118,119
போன்ற இறைவாக்குகளில் கூறி உறுதிப்படுத்தி இருக்கிறான்.
அதற்கு நேர்மாறாக மிகமிகச் சொற்பமானவர்களே சத்தியத்தை உணர்ந்து நேர்வழி பெறுவார்கள்
என்றும் 2:83,88,246,249, 4:46,83,142,155, 5:13, 7:3,10, 11:116, 17:62, 23:78,
27:62, 32:9, 40:58, 48:15, 67:23, 69:41, 42 ஆகிய பல இடங்களில் கூறியுள்ளான்.
இப்போது நிதானமாக நடுநிலையோடு சிந்தியுங்கள். வியாபாரத்தில் அதிக லாபம் அடைவதைக்
குறிக்கோளாக் கொண்ட ஒரு வியாபாரி அதிகமான வாடிக்கையாளர்களைக் கவர் வது என்பதிலேயே
குறியாக இருப்பான். உலகியல் வியாபாரங்களில் அதிக வாடிக்கையாளர்களைக் கவர
அனுமதிக்கப்பட்ட வழிகளும் உண்டு. அனுமதிக்கப்படாத வழிகளும் உண்டு.
இப்போது மார்க்கத்தைத் தொழிலாக- வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளாகிய நீங்கள்
ஆதாயத்தைக் கருதி அதிகமான மக்களைக் கவரும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள். ஆனால்
அதிகமான மக்கள் நரகிற்கு இட்டுச் செல்லும் ஷைத்தான் அழகாகக் காட்டும் வழிகேடுகளையே
அதிகமாக விரும்பி அதிலேயே மூழ்கி இருப்பார்கள். இப்போது நீங்கள் அந்த அதிகமான மக்களை
கவர்ந்து உங்கள் பக்கம் இழுப்பதாக இருந்தால் அவர்கள் விரும்பி நேசிக்கும்
வழிகேடுகளையே நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
காரணம் நேர்வழியை குர்ஆன், ஹதீஸ் போதனையை திரிக்காமல் வளைக்காமல் உள்ளது உள்ளபடிச்
சொன்னால் மக்களில் பெருங்கூட்டம் அதனால் கவரப்பட்டு உங்கள் பின்னால் அணி வகுக்க
மாட்டார்கள். 2:159,161,162 கூறுவது போல் நேர்வழியைக் கோணல் வழிகளாக்கி அதிலேயே
உறுதியாக நின்றால்தான் பெருங்கொண்ட மக்கள் உங்கள் பின்னால் அணி திரள்வார்கள்.
நீங்கள் எதிர் பார்க்கும் உலகியல் ஆதாயங்கள் பெருவாரியாகக் கிடைக்கும். குர்ஆன்
வசனங்களுக்கு மேல் விளக்கம் (சிமுஸ்ரீயிழிஐழிமிஷ்லிஐ) விரிவுரை
(Interpretation) எனக் கூறி அவற்றின் அர்த்தங்களை அநர்த்தமாக்கும் இரகசியம் புரிகிறதா? சிந்தியுங்கள்.
மார்க்கத்தை மாக்கம் அல்லாததாக்கி மார்க்கம் அல்லாததை மார்க்கமாக்கி இஜ்மா, கியாஸ்.
லாஜிக் பாலிசி என கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டும் மவ்லவிகளாகி உங்கள்
பின்னால் தான் உலகம் அழியும் வரை மக்களில் பெருங் கூட்டம் இருப்பார்கள். உங்களுடைய
புரோகிதத் தொழில் ஜாம் ஜாம் எனப் படுஜோராக நடக்கும் என்பதில் ஐய மில்லை. ஆனால்
மறுமையிலோ உங்களின் நிலை? சிந்தியுங்கள். நாளை விசாரணையின் ஆரம்பத்திலேயே தலை
குப்புற நரகில் எறியப்படுபவர்களில் மவ்லவிகளும் ஒரு சாரார் என்பதை நினைவில்
வையுங்கள்.
கோடிக் கணக்கான சிப்பிகளில் சில முத்துக்களே தேறுவது போல் மிகச் சொற்பமானவர்களே
மவ்லவிகளாகிய உங்கள் வசீகர, சூன்ய பேச்சிலிருந்து தப்புவார்கள்.
நபிமார்கள் தங்கள்மீது விதிக்கப்பட்ட மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி கேட்கக்
கூடாது; எதிர் பார்க்கக் கூடாது. அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மறுமை யில் தங்கள்
பணிக்குரிய கூலியை எதிர்பார்த்து மட் டுமே செய்யவேண்டும் எனப் பல இடங்களில் அல்லாஹ்
மிகக் கடுமையக, பகிரங்கமாகப் பிரகடனப் படுத்தும்படி சொல்லியுள்ள இரகசியம் புரிகிறதா?
மக்களிடம் கூலி-சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள் எப்ப டிப்பட்டக் குற்றச் செயல்களில்
ஈடுபடுவார்கள் என்பதை 2:41, 42,44,75, 79, 109, 146,159, 160,161,162, 174,188,
3:78,187,188, 4:44,46, 5:13, 41, 62,63, 6:20, 21,25,26, 9:9,10,34, 11:18,19,
31:6 ஆகிய இந்த குர்ஆன் வசனங்களை நடுநிலையுடன் நிதான மாகப் படித்து விளங்குங்கள்.
இந்த வசனங்கள் எல்லாம் முன் சென்றவர்கள் பற்றியவை நமக்கல்ல என்று உங்கள் ஆபாக்களான
மதகுருமார்கள் எழுதி வைத்துள்ளதை நம்பி ஏமாறா தீர்கள். அல்லாஹ், தவறு குற்றம் என்று
சொல்வதை யார் செய்தாலும் தவறுதான். லூத் (அலை) அவர்க ளின் சமுதாயம்தான் ஓரினப்
புணர்ச்சியில் ஈடுபட்ட தாக அல்லாஹ் கண்டிக்கிறான். அது அந்தச் சமுதா யத்திற்குத்தான்
தடை; எங்களுக்கில்லை என்று பகிரங் கமாகச் சொல்லும் ஒரு மவ்லவியையாவது உங்க ளால்
காட்ட முடியுமா?
36:21ல் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிகிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பதாக
கூறி இருப்பதை சிந்தித்து விளங்குங்கள். கடந்த 29 வருட முயற்சியின் பலனாக சில
மவ்லவிகள் சுயமாக தொழில் செய்து பொருளீட்ட முன்வந்திருக்கிறார்கள். இது
வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றமே. ஆயினும் அவர்களிடமும் மவ்லவி-ஆலிம் என்ற ஆணவம்-தற்
பெருமையும், மவ்லவி அல்லாதவர்களை அவாம் என இழிவாக எண்ணும் நிலையும் இருக்கவே
செய்கிறது. இந்தத் தற்பெருமையும் அவர்களை குர்ஆனில் உள் ளதை உள்ளபடி விளங்கத்
தடையாகவே இருக்கும். இந்த தற்பெருமை சத்தியத்தை உண்மை என்று அறிந்த பின்னரும்
மறுக்கத் தூண்டும். அணுவத் தனை பெருமையுடையவனும் சுவர்க்கம் நுழைய முடியாது. அது
உண்மையை மறுப்பதும், மற்றவர் களை இழிவாக எண்ணுவதும் ஆகும் என்ற நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கையை அப்படிப்பட்ட வர்கள் கவனத்தில் கொள்வார்களாக.
சூரியனும் சந்திரனும் கணக்கீட்டின் படியே சுழல்கின்றன என அல்லாஹ் பல வசனங்களில் கூறி
இருக்க 2:85-ல் கண்டிப்பதையும் பொருட் படுத் தாமல் சூரியக் கணக்கை ஏற்றும் சந்திரக்
கணக்கை மறுப்பதும் மட்டுமின்றி, தொழுகையைப் போல் பிறையை ஒப்பிடுவது முட்டாள்த்தனம்
என்று கூறி அல்லாஹ்வையே முட்டாளாக்கும் (நவூதுபில்லாஹ்) நீங்கள் யார் என்பதை
குர்ஆனை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் அறிவார்கள்.
ஹிஜ்ரி காலண்டரில் சில சில்லறைக் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மனித தயாரிப்பு என்ற நிலையில் சிற்சில குறைகள் இருப்பது இயற்கையே. ஆயினும் ஒவ்வொரு
மாதத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள நாட்களிலோ, சங்கமம் நடக்கும் நாள், இடங்களிலோ,
சூரிய சந்திர கிரகணங்கள் இடம் பெறும் தேதிகளிலோ எவ்விதத் தவறும் இல்லை. ரமழான்
ஆரம்பம், முடிவு, பெருநாள் தினம், அரஃபா தினம், ஹஜ் பெருநாள் தினம் இவற் றில்
எவ்விதக் குறையும் இல்லை என்பதே முக்கியம் கவனிக்க வேண்டியது. ஹிஜ்ரி காலண்டரிலும்
ஏக குழப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது இப்படிப் பட்ட அறிவீனமான
கருத்துக்களாக இருக்குமே அல்லாது ஏற்கத்தக்க குர்ஆன், ஹதீஸ் கூறும் அறிவார்த்தமான
எந்தத் தெளிவும் உங்களிடம் இருக்க முடியாது என்பதை இக்கடிதமே உறுதிப்படுத்துகிறது.
11.04.2008 உங்களின் 18 பக்கக் கடிதத்திற்கு நாம் பதில் கொடுக்க இதுவரை
முற்படவில்லை. அதற்கு ஒரு காரணம் நீங்கள் எனக்கு நேரடியாகக் கடிதம் எழுதவில்லை.
மக்களைக் குழப்பும் நோக்கில்IIM-க்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள். அதைத் தமிழ்
பேசும் மக்களிடையே பரப்பி இருக்கிறீர்கள். இந்தக் கடிதத்திற்கு நான் பதில் தர வில்லை
என்றும் செய்தி பரப்பி வருகிறீர்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவே இந்த
விளக்கங்கள்.
முடிவுரை : உண்மை எங்கிருந்து வந்தாலும் நம் மனோ இச்சைக்கு இடமளிக்காது அதை ஏற்று
நடக்கும் ஆரோக்கியமான மனநிலை நமக்கு வர வேண்டும். மன முரண்டிற்கு மருந்தில்லை. எத்தி
வைப்பது எங்களின் கடமை. நேர்வழி எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுதலாவிடமே உள்ளது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். 29:69 இறைக் கட்டளைப்படி முயற்சி செய்வது நமது கடமை.
முயற்சிப்பவர்களுக்கு அவனது வழியை எளிதாக்கித் தருவதாக அல்லாஹ் வாக்க ளித்துள்ளான்.
அவன் வாக்கு மாறுபவன் அல்ல. (3:9,194, 13:31, 39:20)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::