அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்று பாடக் கேட்டது நினைவிருக்கலாம். உள்ளத்தில் உதிக்கும் ஆயிரம் எண்ணங்களும் உருப்படியானவைகளாக உதிப்பதில்லை ஆயிரத்தில் எத்தனையோ உதித்த வேகத்தில் உள்ளத்தை துருப்பிடிக்கச் செய்து விடுவதுமுண்டு உள்ளம் துருப்பிடித்து விட்டால் உடல் கெடுவதை விளக்கவுமா வேண்டும் ? .
மனிதாபிமானம்
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்று பாடக் கேட்டது நினைவிருக்கலாம். உள்ளத்தில் உதிக்கும் ஆயிரம் எண்ணங்களும் உருப்படியானவைகளாக உதிப்பதில்லை ஆயிரத்தில் எத்தனையோ உதித்த வேகத்தில் உள்ளத்தை துருப்பிடிக்கச் செய்து விடுவதுமுண்டு உள்ளம் துருப்பிடித்து விட்டால் உடல் கெடுவதை விளக்கவுமா வேண்டும் ? .
உள்ளத்தை அடிக்கடிக் கழுவி தூய்மையாக்கிக் கொண்டால் தான் தீய எண்ணங்கள் உள்ளத்தில் தங்காது.
* உள்ளத்தை எவ்வாறு கழுவுவது ?
* உள்ளம் எங்கு இருக்கிறது ?
உள்ளம் என்ற ஒரு உறுப்பு இருந்தால் அது இருக்கும் இடம் தெரிந்தால் ? நம்மால் கழுவ முடியவில்லை என்றாலும் டாக்டரிடம் கொடுத்து பல் சுத்தம் செய்து கொள்வது போல் உள்ளத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம் ! உள்ளம் நமக்கு மறைவானவை அதில் உதிப்பதம் உதிப்பதில் தங்குவதும், போவதும் மறைவானவைகளாகும்.
மறைவான தீயவைகள் உள்ளத்தில் தங்கி விடுவதை மறைவான இறைவனை தொழுவதன் மூலமே கழுவி தூய்மைப் படுத்த முடியும்.
தன்னைக் கடந்து செல்லக் கூடிய நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இறைவனை நம்பிக்கையுடன் ( ஐ வேலை) தொழுது உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்ளச் சொல்கிறது இஸ்லாம்.
அவ்வாறிருந்தால் தான் உள்ளம் செயல்படத் தொடங்கும் உள்ளம் நல்லவைகளை நாடிச் செல்லும் தீயவைகளை விட்டுத் திரும்பும்.
உள்ளங்கள் திரும்பாதவரை
அதனால் தான் அல்லாஹ் உங்கள் உருவங்களைப் பார்ப்பதில்லை உள்ளத்தைப் பார்க்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இன்றுப் பார்க்கிறோம்.
காசுக்காக தன்னைப் போன்ற சக மனிதர்களின் உயிரை சாய்த்து விடுகிறான் தலைக்கு ஒரு ரேட், காலுக்கு ஒரு ரேட், கைக்கு ஒரு ரேட், என்று விலைப் பேசுகிறான்.
பீறிட்டு ஓடக்கூடிய இரத்தம் அவனது உள்ளத்தை பாதிப்படையச் செய்வதில்லை என்றால் எந்தளவுக்கு உள்ளம் மாசுப் பட்டிருக்கும் ?
ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்ணை கதற கதற கற்பழிக்கிறான் அவளது அழுகுரல் அவனது உள்ளத்தை பாதிப்படையச் செய்வதில்லை என்றால் எந்தளவுக்கு உள்ளம் மாசுப் பட்டிருக்கும் ?
இஸ்லாம் வருவதற்கு முன் இதே நிலை தான் உலகெங்கும் நீடித்திருந்தது இஸ்லாம் வந்து மனிதர்களை இறைவணக்கத்தில் ஈடுபடுத்தி உள்ளங்களை தூய்மைப்படுத்தி உயிரினங்களின் மீது இரக்கம் கொள்ளச் செய்தது.
A is for arab ‘s என்ற தலைப்பில் Jorge rabble என்ற வரலாற்றாசிரியர் salon.com என்ற அமெரிக்க செய்தி ஊடகத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் A millennium ago, while the West was shrouded in darkness, Islam enjoyed a golden age. Lighting in the streets of Cordoba when London was a barbarous pit; religious tolerance in Toledo while pogroms raged from York to Vienna.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மேற்கத்தியர்கள் இருளில் மூழ்கி கிடந்தபோது இஸ்லாமியர்கள் பொற்காலத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர், லண்டன் ஒரு காட்டுமிராண்டிப் பகுதியாக இருந்த போது 'கார்டோபா' ஒளிவிளக்கால் மிண்ணிக் கொண்டிருந்தது. 'யார்;க் முதல் வீயென்னாவரை' மனித படுகொலைகள் நடந்த கொண்டிருந்த போது 'டோலிடோ' மதசகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. என்று வர்ணித்திருந்தார்.
யுத்தகளத்திலும்.
மனசாட்சிக்குத் திரையிட்டு கொலை வெறியும், கொள்ளை சிந்தனையும், கற்பழிக்கும் காம உணர்வும் மேலேங்கி நிற்கக் கூடிய யுத்த களத்திலும் கூட உள்ளத்தை செயல்படச் செய்தது உலகில் இஸ்லாம் மட்டுமே.
கருனையே உருவான காருன்ய நபி(ஸல்) அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் தவிர்க்க முடியாத பல போர்களை சந்திக்க நேரிட்டது அவைகளில் அதிகமானப் போர்களில் மாபெரும் வெற்றியை ஈட்டினர் ஆனாலும் எதிராளிகளின் உயிர்களின் மீதும், மானம் மரியாதையின் மீதும் வெற்றியாளர்களின் மனிதாபிமானம் மேலோங்கி நின்றது.
மனிதாபிமானம் மேலோங்கி நின்றதற்கு 0முக்கியக் காரணம். யுத்தத்தில் கலந்து கொண்டு வாளேந்தி போர் புரிய முடியாத பெண்களையும், குழந்தைகளையும் கொலலக் கூடாது என்று காருண்ய நபி (ஸல்) அவர்கள் உத்தரவுப் பிறப்பித்தது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டப் போர் வீரர்களின் உள்ளத்தில் இரக்கத்தை விதைத்து.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள். என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 3015.
தோல்வியை ஒப்புக் கொண்டு ஆயுதங்களை கீழேப் போட்டு யுத்தத்தில் சரணடைபவர்களை கொலலக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டப் போர் வீரர்களின் உள்ளத்தில் இரக்கத்தை விதைத்து.
எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்ல அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள் 'உஸாமாவே! அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான் '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று சொன்னேன். (ஆனால் என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் நான் '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன். என்று உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 4269.
மனித உயிர்களின் மீது மட்டும் தான் கருணை கொண்டார்களா காருண்ய நபி.
ஒருமுறை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பயணத்திலிருக்கும் போது தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றிட சென்று விட்டு திரும்பும் பொழுது தோழர்கள் இரு குருவி குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள் அவர்களுக்கு மேலே அவற்றின் தாய் குருவி நிம்மதியிழந்து தன் இரக்கைகளை விரித்து தாழ்த்தி பறந்து வந்து தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு காருண்ய நபியவர்கள் ''இதன் குஞ்சுகளை பறித்து இக்குருவியின் நிம்மதியைக் குலைத்தவர் யார்? அவற்றை அதனிடமே ஒப்படைத்து விடுங்கள்' என்றுக் கடிந்து கொள்கிறார்கள் . அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு மஸ்வூத் நூல்: அபூதாவூது
இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். ஆவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். ஆவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். ஆவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, 'உங்களைக் கடித்தது ஒரேயொர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?)'' என்று வஹீ (இறைச்செய்தி) அறிவித்(து அவரைக் கண்டித்)தான். ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' நூல்: புகாரி 3319.மனிதாபிமானத்திற்கு சொர்க்கமே பரிசு
மனித உயிர்களல்லாது பிற வாயில்லா ஜீவன்களின் மீதும் இரக்கம் கொள்ளச் சொல்கிறது சத்திய இஸ்லாம்.
அதனால் மனிதர்களின் பெரும் பாங்களைக் கூட கருனையாளன் அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். ஆந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. ஆதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். ஆவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 3321.
நம்மில் சிலர் சில உயிர் பிராணிகளை வீட்டில் கட்டிப்போட்டும் கூண்டில் அடைத்தும் வளர்ப்பார்கள் அவர்களில் பலர் அவைகளை மரக்கட்டைகளைப் போல் பொம்மைகளைப் போல் நினைத்துக்கொண்டு அவற்றிற்கான உணவு மற்றும் நீர் போன்ற இன்றியமையாத தேவைகளை முறையாக செய்து கொடுக்க முன்வருவதில்லை விரும்பிய நேரங்களில் உணவோ, நீரோ கொடுப்பதும் மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் சிலரது வாடிக்கை.
உணவு, நீர் மட்டும் தான் அவைகளுக்கு தேவை என்றும் நினைத்து விடக் கூடாது மனித இனத்தைப் போல் அவைகளுக்கும் ஆன்மா இருப்பதால் இனவிருத்தி செய்யும் ஆற்றல் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதால் அவைகளை அவைகள் வசிக்கக் கூடிய பகுதிகளில் விட்டு விடுவது தான் ஜீவகாருண்யத்திற்கு சிறந்த அடையாளம்.
அவைகளில் எதாவது ஒன்று நம்முடைய வீட்டில் கவனிப்பு குறைவின்றி செத்து விட்டால் அதற்கும் நாம் இறைவனிடம் பதில் சொல்லி ஆக வேண்டும்.
ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். ஆதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்¡ரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 3482. '
நாயின் தாகத்தை தணித்த விபச்சாரிக்கு பரிசு பெரும்பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றும், பூனையைக் கட்டிப்போட்டு சாகடித்ததற்கு தண்டனை நரகம் என்றும் இஸ்லாம் அறிவித்திருக்கிறதென்றால் அவ்வப்பொழுது பொதுமக்கள் நடமாடக் கூடிய இடங்களில் குண்டு வைத்து விலை மதிக்க முடியாத அப்பாவிகளின் உயிரைக் குடிப்பதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு இறைவன் என்ன தண்டனை வழங்குவான் சிந்திப்பர்களா ?
எங்கு குண்டு வெடித்தாலும் முதலில் முஸ்லீம்களின் பெயர் தான் ஊடகத்தில் வரும் காலம் கடந்து சாமியார்கள் என்றும், ஹிந்து மதவாத அமைப்பின் தலைவர்கள் என்றும் வரும்.
அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது சரியே, பெயரளவில் முஸ்லீமாக இருந்தாலும் சரியே, சத்திய இஸ்லாத்தின் சுகந்த காற்றை நுகர்ந்து கொண்டு உள்ளத்தை தூய்மைப் படுத்திக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ முன்வரவேண்டும்.
இல்லை என்றால் இதற்கு இறைவனிடம் மகத்தான் தண்டனை உண்டு என்பதை மட்டும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவித்தார். நூல். முஸ்லிம் 5011.
-J.இக்பால்கான்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment