Monday, May 5, 2014

விபச்சார ஊடகங்களும் -முஸ்லிம்களும்...!

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பும் ஊடகங்களின் முஸ்லிம் விரோதப்போக்கும்
மீடியாக்களின் கையூட்டு மந்திரம்
o தொடரும் கருணாநிதியின் முஸ்லிம் விரோதப் போக்கு!
o வெட்ட வெளிச்சமாகும் ஊடகங்களின் பொய் பித்தலாட்டம்
o அப்பாவி ஜாகிர் ஹுசைன் : சிறையில் சந்தித்த 'மறுமலர்ச்சி தமுமுக' ஒருங்கிணைப்பாளர் பேட்டி!
o  டிஜிபி யிடம் இந்திய தேசிய லீக் அளித்த புகார் மனு
சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு... அலட்சியப்படுத்தும் ஊடகங்கள் 
o  ஊடக தர்மம் என்பது என்ன? 
மீடியாக்களின் கையூட்டு மந்திரம்
எங்கு குண்டுகள் வெடித்தாலும் அதற்கு முஸ்லிம்கள் மட்டுமே காரணம் என்று பரப்புவது மீடியாக்களின் கையூட்டு மந்திரம்.
இதற்குத்தான் இந்த மீடியாக்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடங்களிலிருந்தே தங்களது மூன்றாம் தர வேலைகளை காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றன.
இது போன்ற குண்டுவெடிப்பிற்கு இஸ்லாமிய அமைப்புகள் மற்றவர்களை விட கடுமையான முறையில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு, அதனை அந்த அந்த மீடியா அலுவலகங்களுக்கே அனுப்பி வைத்தும் கூட அதனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, மீண்டும் மீண்டும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களை பொது மக்களிடமிருந்து பிரித்து வைப்பதிலேயே குறிக்கோளாக செயல்படுகின்றன.
இது போன்ற நடவடிக்கைகளில் இருந்தே இந்த மீடியாக்களின் இரவு நேர கள்ள உறவுகள் அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
மனசாட்சி என்பதை அடகு வைத்துவிட்டு நேரில் பார்த்தது போல கண்டபடி எழுதும் விபச்சார மீடியாக்கள். வெளியிட்ட செய்தி தவறென்றாலும் அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டார்கள். காவல்துறை பணியை இவர்களிடம் கொடுத்தது யார்? பத்திரிகை தர்மம் என்பது எங்கே போனது?
ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும் போதும் காவல்துறை தனது விசாரணையை தொடங்கும் முன்னே மீடியாக்கள் தங்கள் கற்பனைகளையும், முஸ்லீம்கள் மீதான துவேசத்தையும் கட்டவிழ்கின்றன.
பல்வேறு குண்டுவெடிப்புகளில் குண்டு வைத்தது காவிகள் என்பது தெரிந்தப் பின்பும் அதுப் பற்றி தொடர்ந்து பேசுவதற்கு துப்பில்லாதவர்கள்.

தொடரும் கருணாநிதியின் முஸ்லிம் விரோதப் போக்கு!
முதல்வர் ஜெயலலிதாவை தினமும் தாக்கிப் பேச வேண்டிய அரிப்பில் இருக்கும் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் 'சென்னையில் பிடிபட்ட ஜாகிர் உசேனை தீவிரமாக விசாரணை செய்து அவனது அடுத்தடுத்த நகர்வுகளை கண்டுபிடித்து அதற்கேற்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்த...ிருந்தால் இந்த குண்டுவெடிப்பை தடுத்திருக்க முடியும்' என்று சொல்ல, ஜெயலலிதாவும் கருணாநிதியை திருப்பி 'Arm chair Critic' என்று கிண்டல் செய்து இருக்கிறார். உண்மையில் அவரை 'Wheel chair Critic' என்று தான்சொல்லி இருக்க வேண்டும்.
ஆராயாமல் வெளியிடப்படும் இம்மாதிரியான அறிக்கைகளால் முஸ்லிம் சமுதாயத்துக்கு என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்ற சிந்தனை கொஞ்சமும் இல்லாது கருணாநிதி வெளியிடும் அறிக்கைகளை அவருடன் தற்போது கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் அமைப்புகள் எடுத்து சொல்லவேண்டும். ஆனால் அப்படி சொல்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்த அறிக்கையை கண்டு நொந்துப் போன இந்திய தேசிய லீக் தலைவர் 'தடா' ரஹீம் என்பவர் நேற்று சென்னை காவல்துறை டிஜிபியை சந்தித்து, கருணாநிதியின் இந்த கண்றாவி அறிக்கை பற்றி புகார் கூறி, அவரை கைது செய்யுமாறு மனு செய்து இருக்கிறார். மேலும், முஸ்லிம்கள் எவரும் கருணாநிதியை இனியும் ஆதரிக்க வேண்டாமென்றும் கோரி இருக்கிறார். உண்மைதானே, இந்த அறிக்கையின் வலியை அவரால் தானே முழுமையாய் உணரமுடியும்.
முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஒரு நிரந்தர பகைவர் என்பதை இவர்கள் தான் சாமர்த்தியமாக மறைக்கிறார்கள். இன்று சிறையில் வாடும் முஸ்லிம்கள் பெரும்பாலும் திமுகவின் ஆட்சி கருணாநிதியால் கைது செய்யப்பட்டவர்கள் தான். கருணாநிதி ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்புகளுக்காக பல முஸ்லிம்கள் வீடு புகுந்து தேடப்பட்டார்கள். தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டார்கள். 'ஆயிஷா' என்று கற்பனையான பெண் தீவிரவாதி உருவாக்கப்பட்டாள். அவள் பேரால் முஸ்லிம் பெண்கள் ஆடை சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்படி ஒரு பெண் இல்லவே இல்லை என்று முஸ்லிம் மக்கள் கதறினார்கள். 'அவள் பிறவி முஸ்லிமல்ல, சங்கீதா என்ற பெண் ஒரு தீவிரவாதி முஸ்லிமை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டு 'ஆயிஷா' என்று பெயர் மாற்றிக் கொண்டு தீவிரவாதி ஆகிப் போனாள்' என்று திரைக்கதை எழுதினார்கள். ஆனாலும் ஆயிஷா கடைசிவரை அகப்படவில்லை. கருணாநிதி வாஜ்பாய் அரசில் இருந்தபோது தான் குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதும் சும்மாதான் இருந்தார் கருணாநிதி. - Bhagyalakshmii Dhananjeyan

வெட்ட வெளிச்சமாகும் ஊடகங்களின் பொய் பித்தலாட்டம்
CBCID IG மகேஷ்குமார் அகர்வால் சென்னை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசைனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்ன பின்னரும் பத்திரிக்கைகளில் வெளிவரும் கட்டுரைகள் ஜாகிர் உசேன் செய்ததாக தான் வருகின்றன.
- ஏன் பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதுகின்றன?
- யார் மேல் வெறுப்பை உண்டாக்க துடிக்கின்றன?
- இதனால் பத்திரிக்கைகளுக்கு என்ன லாபம்?
- யாரின் கைப்பாவையாக பத்திரிகைகள் செயல்படுகின்றன?
சென்னை சென்ட்ரல் வெடிகுன்டு விபத்தில் பலியான மாற்று மத சகேதரி!
இதுவே ஒரு ஹஜிரா, பாத்திமா என்ற முஸ்லிம் சகேதரியாக இருந்து இருந்தால், இன்நேரம் விபச்சார தொலைக்காட்சி ஊடகம், விபச்சார பத்திரிக்கை ஊடகங்கள் தொடர்ந்து இஸ்லாமிய பெண் மனித வெடிகுண்டு தாக்குதல் என்று குறைத்துக்கொன்டு இருந்து இருக்கும்.

அப்பாவி ஜாகிர் ஹுசைன் : சிறையில் சந்தித்த 'மறுமலர்ச்சி தமுமுக'ஒருங்கிணைப்பாளர் பேட்டி !
சும்மா விடாது அப்பாவியின் சாபம் ; விரைவில் வெளுக்கும் போலீசின் சாயம் !!
'ISI' உளவாளி என பட்டம் சுமத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர் ஜாகிர் ஹுசைன், ISI தரச்சான்று பெற்ற அப்பாவி என்கிறார், மறுமலர்ச்சி தமுமுக ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான ஜைனுலாபிதீன்.
இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், மறுப்பு பக்கத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டி:-
இலங்கை கண்டியை சேர்ந்த முஹம்மத் நுவைர் என்பவரின் மகனான ஜாகிர் ஹுசைன், கடந்த 1994 முதல் தமிழகத்துக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி வந்து செல்பவர்.
இந்தியப் பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்வதும், அங்கிருந்து சில சாதனங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் சிறு வணிகர், அவர்.
40 வயதுடைய ஜாகிர் ஹுசைனுக்கு, மனைவியும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர், தற்போது அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தன் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூட தெரியாமல், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஜாகிர் ஹுசைன்.
மீடியாக்களால் மிகப்பெரும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், இந்த சதியிலிருந்து வெளியேறுவதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்.
அடிக்கடி தமிழக தலைநகர் சென்னைக்கு வியாபார நிமித்தமாக அவர் வந்து சென்றாலும், எப்போதும் மண்ணடியில் உள்ள ஒயிட் பேலஸில் தங்குவது தான் வழக்கம்.
கடைசியாக ஏப்ரல் 10 ந்தேதியன்று சென்னை வந்து சென்ற அவர், மீண்டும் 18 ந்தேதி சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர் தன்னிடமிருந்த 'பிசினஸ் விசா' உள்ளிட்ட ஆவணங்களுடன், தற்போது செல்லத்தக்க வகையில் உள்ள பாஸ்போர்ட் மற்றும், காலாவதியான பாஸ்போர்ட் என அனைத்தையும் காண்பிக்கிறார்.
அவரிடமிருந்த ஆவணங்களை சரிப்பார்த்து பெற்றுக் கொண்ட போலீசார், குற்ற முகாந்திரம் ஏதும் இல்லாத காரணத்தினால், அவரை விசாரணை வளையத்தில் வைத்திருப்பதாக சொல்லி அனுப்பி விடுகின்றனர்.
8 நாட்கள், சென்னையில் வியாபார நிமித்தமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்த அவரை 26 ந்தேதி மாலை 'மெட்ராஸ் யுனிவெர்சிட்டி' அருகில் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர்.
அதைதொடர்ந்து 29 ந்தேதி வரை சட்டவிரோத காவலில் வைத்து விசாரணை என்ற பெயரால் அடித்து துன்புறுத்தியுள்ள போலீஸ்,
வெற்றுத்தாள்கள் சிலவற்றிலும் எழுதப்பட்ட சில காகிதங்களிலும் கட்டாய கையொப்பம் வாங்கிக் கொண்டு,13 வது மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி ரிமாண்ட் செய்கின்றனர்.
மாஜிஸ்டிரேட் கேட்டால், மோசடி வழக்கு என சொல்ல சொல்லி வற்புறுத்தியுள்ளது காவல்துறை.
இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன்:
இன்று சனிக்கிழமை என்பதால், இவர் மீது என்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தன்னால் உறுதிப் படுத்த முடியவில்லை என்றார்.
திங்கள் கிழமைக்குப் பிறகு தான் அதன் விவரங்கள் தெரிய வரும் என்று சொன்ன வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.
ஒருவர், ஒரே நேரத்தில் ISI க்காக உளவு வேலைப் பார்த்துக் கொண்டே, கள்ள நோட்டுக்களையும் புழக்கத்தில் விட்டு மாட்டிக் கொள்வாரா என்பது தான் நம்முடைய கேள்வி.

டிஜிபி யிடம் இந்திய தேசிய லீக் அளித்த புகார் மனு (04 04 2014)
இன்று மாலை 4 மணி அளவில் டிஜிபி அவர்களை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தோம் அதில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் முக்கியமானவை
1) சென்னையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது அதே சமயம் குடியுரிமையில்லாமல் தங்கியிருந்த ஒரே காரணத்தை வைத்து ஜாகீர் உசேன் என்பவரை முஸ்லிம் தீவிரவாதி போல் சித்தரிப்பதையும்,சென்னை குண்டு வெடிப்புக்கும் அவருக்கும் சம்மந்தமுள்ளதைப் போன்றும் வரும் செய்திகளை தடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம்
2) பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை காவல்துறை சரியாக விசாரித்திருந்தால் ரயில் நிலைய குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்காது என காவல்துறையே அறியாத ஒரு விஷயத்தை முன்னால் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது  எனவே ஜாகீர் உசேனைப் பற்றி பல அறிய தகவல்களை தெரிவிக்கும் திரு கருணாநிதி அவர்களை விசாரணை வலையத்தில் வைத்து விசாரித்தால் இன்னும் காவல்துறைக்கு குண்டு வெடிப்பு சம்மந்தமாக பல தகவல்கள் கிடைக்கும் இதை தமிழக காவல்துறை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம்
3) சென்னை குண்டு வெடிப்பிற்கு பின் முஸ்லிம் சமூகத்தின் மீது அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த சில ஊடகங்களும்,அமைப்புகளும்,தனி நபர்களும் சென்னையில் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகின்றனர் அதனால் அப்படிபட்டவர்களை கடுமையாக காவல்துறை எச்சரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம்
இதை கவனமுடன் கேட்டுக்கொண்ட டிஜிபி அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
முதலில் முதல்வர் அவர்கள் திரு கருணாநிதி அவர்கள் உண்மைக்கு புறம்பாக ஜாகீர் உசேனை பற்றி கூறியதையும்,ஒரு வேலை அவருக்கு(கருணாநிதிக்கு)தீவிரவாதிகள் தொடர்பு இருந்து யாரேனும் தகவல் தந்தார்களேயானால் அதை விசாரணைக்கு அளித்து உதவுமாறும் பதிலடி கொடுத்தார்
பின்னர் சிபிசிஐடி ஐஜி அவர்கள் சென்னை குண்டு வெடிப்பிற்ரும் ஜாகீர் உசேனுக்கும் விசாரணை அடிப்படையில் எந்த சம்மந்தமும் இல்லை என மீடியா செய்தி வெளியிட்டார்
பின்னர் சென்னை கமிஷனர் அவர்கள் வதந்திகளை பரப்புகின்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் படுகாயம்
சிதம்பரம் மாரியப்பன் நகர் 2வது குறுக்குத்தெருவை சேர்ந்த பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் அருள் என்பவர் தங்கியிருந்தார். அவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர். இன்று அருள் அறையில் பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதில் அருள் படுகாயமடைந்தார். அவரை மூன்று பேர் ஆட்டோவில் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
விபச்சார மீடியாக்கள்...இதை தீவிரவாத செயல் என்றோ, குண்டு தயாரித்தவர்கள் இந்து தீவிரவாதிகள் என்றோ கூறவில்லை!
சாட்சிகளோ, ஆதாரங்களோ கிடைக்காத பட்சத்தில், விசாரணையில் தடுமாறும் போதும்...இந்த நாய்களுக்கு கிடைக்கும் ஒரே ஆயுதம் ...இஸ்லாமிய தீவிரவாதம்! அதுதான் இந்திய முஹாஜிதீன்கள்

  அரசியல் இலாபம்   
கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது. அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? 
கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது. அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
மோடிVs லேடி
தேசிய அரசியல் களம் சூடு பிடித்து, அடுத்த பிரதமர் தான்தான் என்ற கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு, கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவரது நம்பிக்கைக்குரிய சகோதரி ஜெயலலிதா, “வளர்ச்சியின் நாயகர் மோடியா இந்த லேடியா?” எனக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
இதன் பின்னணியில் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதும், அதன் மூலம் “ஜெ”வை பிரதமராக தேர்வு செய்து பாஜகவின் கனவை தகர்ப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், “அதிமுக ஆதரவு தங்களுக்கு தேவைப்படாது” என்ற மோடியின் பதிலடி கூறப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பின்னணியில் முன்னணியா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் நெடுங்காலம் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியை விட்டு வெளியேறிய போது, 27 அக்டோபர் 2013 அன்று பீகாரில் குண்டு வெடித்தது நினைவிருக்கலாம். பிஹாரின் சட்ட ஒழுங்குகளை குறை கூற இந்த குண்டு வெடிப்பை பாஜகவினர் பயன்படுத்தினர்.
ஆனால் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.
அதே போன்றதொரு சூழ்நிலை தற்போதும் நிலவுவதால், கூட்டணிக்கு போகாமலேயே எட்டி உதைத்த அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க இரயில் நிலைய குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறது.
ஊடகத்திலுள்ள பாசிச சக்திகளின் துணையுடன் வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் மேல் பழியைப் பரப்பி, ஜெயாவிடம் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்தி பாஜக பரிவாரங்கள் அதிமுக ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.
நேர்மையான விசாரணை நடந்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? அமைதி தவழும் பூங்காவாய் தமிழகம் நிலை நிற்குமா?
அமைதி தவழும் பூமியை அனைவருக்கும் கேட்போம்! (-முஹம்மது ஷாஃபிஈ Thanks: thoothu)

ஊடக தர்மம் என்பது என்ன? 
அசாமில் 32 இஸ்லாமியர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட போடோ திவிரவாதிகளாள் சுட்டுப் படுகொலை மூடி மறைக்கும் பார்ப்பன ஊடகங்கள் ஒன்னும்மில்லாத செய்திகளுக் கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு விவாத மேடை நேர்படப்பேசு அந்தப்பேச்சு இந்தப்பேச்சு என்று அலசும் நடுநிலை நாக்குப்பூச்சிகளே செந்த நாட்டு மக்கள் உள் நாட்டு போடோ திவிரவாதிகளாள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஏன் விவாதங்கள் நடைறெவில்லை இறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா?
இதே செயலை ஒரு முஸ்லிம் செய்திருந்தால் உங்கள் முகப்பு அட்டை படத்திலிருந்து முக்கிய தலைப்பு செயதியாக உலா வந்து கொண்டிருக்கும் அனைத்து டி வி சான்னல்களிலும் பத்திரிக்கைகளிலும் பார்பனர்களின் ஆதிக்கம் இந்த நாட்டிற்க்கு ஆபத்தானது திவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை வேறோடு கில்லி எறியவேண்டும்
மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் கைதானது - மூன்று இந்துக்கள்! ஆனால், எந்த நாளிதழும் எந்த செய்தித் தொலைக்காட்சியும் "மூன்று இந்து தீவிரவாதிகள்" கைது என்று சொல்லவேயில்லை! இதுவே கைதாயிருந்தது ஒரே ஒரு முஸ்லீம் நபராக இருந்திருந்தால் கூட "முஸ்லீம் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்" என்று செய்தி வரும் இந்நாட்டில்!
எங்கு குண்டு வெடித்தாலும் உடனே காவல்துறையினர், அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை விசாரணை என்ற பெயரில் மிகுந்த துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக்குகின்றனர்! ஒரு குண்டு வெடித்தால் உடனே "யாரோ முஸ்லீம் தீவிரவாதி குண்டு வச்சுட்டான்" என்று பொத்தம் பொதுவாய் எதுவுமே தெரியாமல் பொது மக்களை நம்ப வைத்திருப்பது தான் இந்துத்தவ மற்றும் காவித் தீவிரவாதிகளின் வெற்றி! அனைத்து ஊடகங்களும் இப்போது இதற்கு சிறிதும் கூச்சமே இன்றி உடன் போகின்றன!.
ஊடக தர்மம் என்பது என்ன? மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதற்கு பதிலாக, தொடர்ச்சியாக அச்சத்தையே உண்டு பண்ணுகிறது இவர்களின் காட்சியமைப்புகள். உடனடியாக தந்தி தொலைக்காட்சி இதனை நிறுத்த வேண்டும். தவிர, இன்னமும் குண்டு வெடிப்பிற்கான காரணமோ, யார் செய்திருப்பார்கள் என்கிற தகவலோ தெரியாமல், தொடர்ச்சியாக யார் செய்திருக்க கூடும் என்கிற கணிப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, பா.ஜ.க தமிழ்நாடு தலைவர், பொன். ராதாக்ருஷ்ணன் நேராக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு மட்டும், அமைதியாக இருந்தால் எப்படி? தமிழ்நாட்டில்தான், இந்த அளவிற்கு மோடி எதிர்ப்பலை வீசுகிறது, உடனே அந்த எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி திருப்பிவிடும் போக்கைத்தான், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஊடகங்கள் ஆற்றும் பணி முக்கியமானது. அதனை கொஞ்சம் பொறுப்புணர்வுடன் செய்தால், காலம் அவர்களை கனிவுடன் நோக்கும்.
தொகுப்பு: www.nidur.info

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment