Thursday, January 12, 2012

''மத உணர்வுகள் மற்றும் பேச்சுச் சுதந்திரம்''

''மத உணர்வுகள் மற்றும் பேச்சுச் சுதந்திரம்'' குறித்த விவாதத்தில் பிரிட்டனின் மிகவும் பிரபல்யமான பல்கலைக்கழகம் ஒன்று அகப்பட்டிருக்கிறது.

பேஸ்புக் பக்கத்தில் இருக்கின்ற முகமது நபியின் படத்தை அகற்றுமாறு யு சி எல் என அழைக்கப்படும் யூனிவர்சிட்டி கொலிஜ் ஒப் லண்டனின் ( லண்டன் பல்கலைக்கழகம்) நாத்தீக மாணவர் அமைப்பு கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு இதுவரை அது மறுப்புக் கூறி வருகின்றது.

1826 ஆம் ஆண்டு திருச்சபையின் எதிர்ப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டனின் முதலாவது மதசார்பற்ற பல்கலைக்கழகமான யு சி எல்லில் அதாவது லண்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த முரண்பாடு மிகவும் கடுமையானது.

மத ரீதியான முன்னுரிமையாக இந்த விடயத்தைப் பார்க்கும் நாத்தீக மற்றும் மனித நேய மாணவர் அமைப்பு படத்தை அகற்ற மறுக்கிறது. மாணவர்களின் நலன்களுக்கு பொறுப்பான மாணவர் சங்கத்துடன் அவர்கள் இதன் காரணமாக முரண்படுகிறார்கள்.

முகமது நபி, இயேசுக் கிறிஸ்துவுடன் ஒரு மதுக்கடையில் அமர்ந்து மதுபானம் போன்ற ஒன்றை அருந்திக்கொண்டு பாடம் படிப்பதாக தமது ஃபேஸ்புக்கில் வரையப்பட்டிருக்கும் கார்டூனை அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்கப்பட்டிருக்கிறது.

மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அதனைவிட அந்த கார்ட்டூன் இஸ்லாத்தை ஸ்தாபித்தவரை சித்தரித்துக் காட்டுவதுதான் இங்கு பெரிய குற்றமாகப் பார்க்கப்படுககின்றது.

இந்தக் கார்ட்டூனை அகற்றுமாறு தாம் கோரியதாகக் கூறியுள்ள மாணவர் சங்கம், ஆனால் இந்த விடயம் குறித்து கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மாணவர்கள் முறைப்பாடு ஏதாவது செய்தார்களா என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

ஆனால், மாணவர்கள் மத்தியில் நல்ல உறவைப் பேண வேண்டிய கடமை தமக்கு உள்ளது என்று அவர்கள் பிபிசிக்கு கூறியுள்ளனர். மிகவும் தாராள போக்குக்கான பாரம்பரித்தைக் கொண்ட எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களைக் கொண்ட, குறிப்பாக ஐரோப்பாவில், மதங்களின் விடயத்தில் கருத்துச் சுதந்திரம் எந்த அளவுக்கு தலையிடலாம் என்பது குறித்த ஸ்திரமின்மை இன்னமும் அகல மறுக்கிறது.

எல்லாம் என்று கூறமுடியாவிட்டாலும், பல வெளியீடுகள், முகமது நபியின் உருவத்தை வரைவதை தணிக்கை செய்கின்றன. கடந்த வருடம் முகமது நபியின் உருவ வரைபடத்தை தனது அட்டையில் வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகையின் பாரிஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

நெதர்லாந்துப் பத்திரிகை ஒன்று முகமது நபியின் உருவத்தை வரைந்து வெளியிட்டதற்காக 2006 இல் ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் போனார்கள். பேச்சுரிமை என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்தாமல் இருப்பதற்கான உரிமையை விட பெரியது என்று இந்த சர்ச்சையின் மையத்தில் இருக்கும் மாணவர்கள் வாதிடுகிறார்கள்.

மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கூறுகிறது.
thanks to yarlmuslim

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment