பிரம்மச்சார்யமா? தாம்பத்தியமா? - எது ஆரோக்கியப் பாதை?
[ எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன.
எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா? முடியும்! அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.
ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது;]
உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.
எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. சாதிக்குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு; பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன.
பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை.
காதலும், காமமும், உடலுறவும் வாழ்க்கையில் இன்றியமையாதவை. மணமாகாத வாலிபர்களின் இச்சையைத் தூண்டப் பச்சைபச்சையாக உடலுறவுகளை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப்பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாசமானவை. திருக்குறளில காமத்துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதியுள்ளார். மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக்கிறது. காரணம், அதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா? முடியும்! அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.
ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது;
அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும்; நல்ல தூக்கம் வரும்; அதனால் மன இறுக்கம், கவலை தீரும்; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.
நன்றி : நூல் "யோகக்கலையும் இயற்கை மருத்துவமும்" . (மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment