Wednesday, November 30, 2011


செருப்படி வாங்கிய 10 பிரபலங்கள்





செருப்படி வாங்கிய 10 பிரபலங்கள்









செருப்படி வாங்கிய 10 பிரபலங்கள் : பிளாஷ்பேக்


சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமை தாக்கியதும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவாரை தாக்கியதும் பரபரப்பாய் பேசப்பட்டது. இச்சூழலில் இந்நேரம் வாசகர்களுக்காக சமீப காலங்களில் பொதுமக்களிடத்தில் தாக்குதலுக்குள்ளான பிரபலங்களை பற்றிய ஒரு பிளாஷ் பேக்...

ஜார்ஜ் புஷ்

பொதுமக்களிடம் செருப்படி வாங்கிய கலாச்சாரத்தை துவக்கி வைத்த பெருமை அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையே சாரும். தன்னுடைய ஆட்சிகாலத்தில் பொருளாதார தடை எனும் பெயரில் 6 இலட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்ற புஷ் செல்வாக்கிழந்திருந்தார். அச்சூழலில் விடை பெறும் பயணமாக டிசம்பர் 2008 ல் ஈராக் வந்த புஷ் பத்திரிகையாளர்களிடம் பேசி கொண்டிருந்த போது புஷ்ஷின் தவறான ஈராக்கிய கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த முந்ததர் அல் ஜைதி எனும் பத்திரிகையாளர் புஷ்ஷை நாய் என்று திட்டியதோடு தன் 10 அளவு ஷூவை புஷ்ஷை நோக்கி வீசினார். குறி தவறிய போதும் நேரடி ஒளிபரப்பாக இருந்ததால் ஜைதி உலக புகழ் பெற்றதோடு ஈராக்கிய மக்களின் விடை கொடுக்கும் முத்தம் தான் தன் செருப்படி என்றார்.

ப.சிதம்பரம்

உலக அளவில் செருப்படி கலாசாரத்தை துவக்கி வைத்த பெருமை புஷ்ஷுக்கு என்றால் இந்தியாவில் நம்ம உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அப்பெருமை சாரும். பத்திரிகையாளர்கள் சிபிஐ 1984 சீக்கிய கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு எப்பங்குமில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்ததை பற்றி கேட்ட போது பதிலளிக்க மறுத்ததால் ஜர்னைல் சிங் எனும் பத்திரிகையாளர் தன் பாதணிகளை சிதம்பரத்தை நோக்கி வீசினார்

மன்மோகன் சிங்

அஹமதாபாத்தில் ஏப்ரல் 2009 தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் பேசி கொண்டிருந்த போது 21 வயது கணிப்பொறி இஞ்சினியரிங் படிக்கும் மாணவன் ஷூவை வீசினான். எவ்வித நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்று பிரதமர் பெருந்தன்மை காட்டியதும் பிஜேபியின் வெறுப்பு கலாசாரத்தை மோடி தூண்டி விட்டார் என்று காங்கிரஸ்காரர்கள் குறை கூறியதும் சுவையான காட்சிகள்.

பி.எஸ்.எடியூரப்பா

ஏப்ரல் 2009ல் கர்நாடகாவிலுள்ள ஹசன் எனும் இடத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவரை நோக்கி வீசப்பட்ட செருப்பு குறி தவறி அவரின் மேடையில் விழுந்தது. செருப்பு வீசிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

எல். கே. அத்வானி

அதே ஏப்ரல் 2009ல் மத்திய பிரதேசத்தில் ஒரு பொது கூட்டத்தில் பிஜேபி மூத்த தலைவர் அத்வானி பேசிய போது முன்னாள் பிஜேபி நிர்வாகி ஒருவர் அத்வானியின் மீது மர செருப்பை வீசினார். மேலும் வீசியவர் அத்வானி ஒரு போலி இரும்பு மனிதர் என்றும் பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றும் கூறினார்.

ஒமர் அப்துல்லா

2010 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்றத்தின் போது காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா உரையாற்றிய போது பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறையை சார்ந்த ஒருவர் தன்னுடைய ஷூவை ஒமர் அப்துல்லாவை நோக்கி வீசினார். பின்னர் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது.

சுரேஷ் கல்மாடி

மற்றவர்கள் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது காமென்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி தில்லியில் உள்ள சிபிஜ கோர்டில் ஷூவால் தாக்கப்பட்டார். மேலும் தாக்கியவர் இரும்பு கம்பியை கொண்டு கல்மாடியை தாக்க திட்டமிட்டார் என்றும் குற்ற பிண்ணணி உடையவர் என்றும் காவல்துறை கூறியது

எஸ்.பி.எஸ். ரத்தோர்

ருசிகா மானபங்க வழக்கில் குற்றவாளியான ஹரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர் நீதிமன்றத்தில் இருந்து தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருந்த போது 29 வயது மாணவர் உத்சய் சர்மா மூன்று முறை அவர் முகத்தை குறு கத்தியால் கீறியது பரபரப்பை ஏற்படுத்தியது

பிரசாந்த் பூஷன்

நடத்தப்பட்ட சம்பவங்களிலேயே ஜனநாயக உரிமையான பேச்சுரிமை குறித்த விவாதத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. காஷ்மீரின் நிலை குறித்து முடிவெடுக்க காஷ்மீரிகளுக்கே உரிமை உண்டு என்று கருத்து தெரிவித்தமைக்காக இந்து வலது சாரி குழுக்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

அர்விந்த் கேஜ்ரிவால்

பிரசாந்த் பூஷன் தாக்குதலுக்கு பின் சில நாட்கள் கழித்து அன்னா ஹசாரேவின் குழுவிலுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் லக்னோவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போது ஊழல் விவகாரத்தில் மக்களை தவறாக திசை திருப்புகிறார். என்று கூறி செருப்பை வீசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே செருப்பை மட்டுமல்ல குண்டுகளை தாங்க தம் குழு தயார் என்றார்.

  • 0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

    Post a Comment