Wednesday, March 28, 2012

நம்ம பெண்கள்...!

சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று உலகின் தைரியமிக்க பெண்கள் 150 பேரை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. இந்த பட்டியலில் சவுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப். மற்றொரு சவுதி பெண்மணி அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்தி.


http://www.marhum-muslim.com/இந்த பட்டியலில் உள்ள மேலும் சிலர்: நோபல் பரிசு வென்ற எமனைச் சேர்ந்த தவக்கல் கேர்மன், நோபல் பரிசு வென்ற சோமாலியாவின் ஹவா அப்தி, லிபியாவின் இமான் அல் ஒபைதி, சிரியாவின் தல் அல் மல்லோகி, எகிப்தின் தேவர்தஸ், ஆப்கானிஸ்தானின் நூர்ஜஹான் போன்ற சிறந்த பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.
'இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டதற்க்காக எங்கள் பத்திரிக்கையின் பட்டியலில் தைரியமிக்க பெண்மணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என்கிறது இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழு.
டெய்லி பீஸ்ட் என்ற இந்த பத்திரிக்கை உயிரியல் துறை ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காக இந்த தேர்வை செய்திருக்கிறது. இவரது கண்டுபிடிப்பு வளரும் நாடுகளில் பல உயிர்களைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என்று இந்தப் பத்திரிக்கை மதிப்பிடுகிறது. இவரது கண்டு பிடிப்பால் மருத்துவர் அல்லாதவர் கூட நோயாளியின் நோய் தாக்கத்தைக் கண்டறிய முடியும்.
ஹயாத் சிந்தியின் ஆரம்ப பள்ளிப் படிப்பு சவுதி அரேபியாவிலேயே தொடங்கியது. அதன்பிறகு தனது கல்லூரி வாழ்க்கையை லண்டனில் தொடங்க ஆசைப்பட்டார். இவரது தந்தை ஒரு பெண் தனியாக நாடு விட்டு நாடு சென்று படிப்பதை விரும்பவில்லை. இருந்தும் இந்தப் பெண் தனது தந்தையை வற்புறுத்தி கல்லூரி படிப்பை லண்டனிலேயே தொடங்கினார். லண்டன் வந்த இவர் முதலில் சேர்ந்தது இங்கிலீஷ் கல்லூரி. அதன்பிறகு கேம்ப்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். லாப நோக்கமற்ற அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி பணியில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார் ஹயாத் சிந்தி.
ஹயாத் சிந்தி ஏற்கெனவே 100 சகதி மிக்க பெண்கள் பட்டியலில் சியோ மேகஸின் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
மேலும் இவர் அறிஞர்களின் கற்பனைகள், புத்தி கூர்மை போன்றவற்றை ஒருமுகப்படுத்தி அதனை தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் வளைகுடாவில் உள்ள அறிஞர்களை பயன் படுத்தி இந்த பிராந்தியத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறார்.
'நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி' என்கிறார் தனது வாழ்நாளில் அதிக நாட்களை அமெரிக்காவில் கழித்த சகோதரி ஹயாத் சிந்தி,
-நன்றி அரப் நியூஸ்
14:03:2012
இஸ்லாத்தை ஓரளவு தனது ஆட்சியிலும் சவுதி அரேபியா கடைபிடித்து வருவதை அறிவோம். இஸ்லாமிய ஆட்சிகளில் பெண்களின் உரிமை ஏகத்தக்கும் மறுக்கப்படும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. அத்தகைய வாதம் தவறு என்பதை இது போன்ற செய்திகள் உறுதிபடுத்தகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கு இஸ்லாம் தடையில்லை என்பதற்கு இந்த பெண்மணியும் ஒரு உதாரணம்.
நம்நாட்டிலும் பல பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அது இயல்பாக நடைபெற்று வரும் ஒன்று. அனால் இஸ்லாமிய சூழலில் இஸ்லாத்தை முழுவதும் கடைபிடித்து இது போன்று சமூக சேவையிலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு முன் மாதிரி என்றால் மிகையாகாது.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::