Wednesday, March 28, 2012

படுக்கையறை...!

[ படுக்கையறையை அழகாக வைத்துக்கொள்வதில் மனைவியின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சொல்வதைக்காட்டிலும் மனைவியின் டேஸ்ட்டுக்கே விட்டு விடுங்கள். ஏனெனில் படுக்கையறையைப் பொருத்தமட்டில் கணவனைவிட மனைவிக்கே அதிக உரிமை உள்ள இடம்.http://www.marhum-muslim.com/


வீடு முழுக்க கணவனின் அதிகாரம் கொடிகட்டிப்பறந்தாலும் படுக்கையறைக்குள் மனைவியின் அதிகாரம் மேலோங்கியிருந்தாலே இல்வாழ்க்கை இனிக்கும்.
எவரேனும் எட்டிப்பார்ப்பார்களோ எனும் அச்ச உணர்வுடன் படுக்காதீர்கள். அதற்கான ஏற்பாட்டுடந்தான் அறைக்கதவை சாத்த வேண்டும். இப்பொழுது அந்த அறைக்குள் உங்கள் இருவரின் ராஜ்யம்தான். நீங்கள் எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ]
படுக்கையறையில் எப்பொழுதும் சுகந்தம் வீச வேண்டும். அவ்வப்பொழுது நறுமணப்பொருள்களை உபயோகித்து அறையை மணம் கமழும்படி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
சில வீடுகளில் படுக்கையறை ஜன்னல்களை எப்போதுமே சாத்தியே வைத்திருப்பார்கள். இது நிச்சயமாக இது ஆரோக்கியக் கெடுதலே!..
தம்பதிகள் உள்ளிருக்கும்பொழுது, அறைக்கதவோடு ஜன்னல் கதவையும் சாத்திவிட வேண்டாம். ஜன்னல் கதவு திறந்திருந்தால் தான் நல்ல காற்றோட்டமிருக்கும்.
அதேசமயம் மற்றவர்கள் ஜன்னலுக்குள் உள்ளே எட்டிப்பார்க்கும் சூழ்நிலை இருந்தால் லேசாக மூடி வைக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளுங்கள்.
பெரிய ஜன்னலாக இருந்தால் பாதி அளவிற்கோ முக்கால் அளவிற்கோ நீலத்திரையிடுங்கள். நீலக்கலருக்கும் இன்பக் கிளுகிளுப்பிற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு.
இரவு நேரங்களில் படுக்கையறை விளக்கை அனைத்து அறையை ஒரே இருட்டாக்கி விடாதீர்கள். இலேசான வெளிச்சம் அவசியம் வேண்டும். "நைட் லேம்ப்" ஐ பயன்படுத்தலாம். மல்லிகைப்பூ காலமிருந்தால் மனைவி மல்லிகைப்பூ சூடி துயில்கொள்வது கணவனுடனான நெறுக்கத்திற்கு துணை புரியும்.
தம்பதிகள் இருவரும் துயில் கொள்ளும் படுக்கை எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி வெயிலில் எடுத்துப்போட்டு உலர்த்தியோ அல்லது வேறு விதமாகவோ கவனமாகச் சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். அதுபோல் தலையணையையும் அவ்வப்போது துவைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
படுக்கையறைக்கென்று தனியாக உடைகளை வைத்துக்கொள்வது கணவன் மனைவி இருவருக்குமே அவசியம்.
படுக்கையறையை அழகாக வைத்துக்கொள்வதில் மனைவியின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சொல்வதைக்காட்டிலும் மனைவியின் டேஸ்ட்டுக்கே விட்டு விடுங்கள். ஏனெனில் படுக்கையறையைப் பொருத்தமட்டில் கணவனைவிட மனைவிக்கே அதிக உரிமை உள்ள இடம். வீடு முழுக்க கணவனின் அதிகாரம் கொடிகட்டிப்பறந்தாலும் படுக்கையறைக்குள் மனைவியின் அதிகாரம் மேலோங்கியிருந்தாலே இல்வாழ்க்கை இனிக்கும்.
எவரேனும் எட்டிப்பார்ப்பார்களோ எனும் அச்ச உணர்வுடன் படுக்காதீர்கள். அதற்கான ஏற்பாட்டுடந்தான் அறைக்கதவை சாத்த வேண்டும். இப்பொழுது அந்த அறைக்குள் உங்கள் இருவரின் ராஜ்யம்தான். நீங்கள் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
முக்கியமான ஒரு விஷயம் படுக்கையறைக்குள் மனைவியுடன் தாம்பத்ய உறவை மேற்கொள்வதற்கு முன் கட்டாயமாக செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுங்கள். ஸைலண்ட் மோடில் கூட வைக்க வேண்டாம். இல்லற சுகத்தின் முக்கியமான கட்டத்தில் அது உங்கள் இருவருக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
படுக்கையறைக்குள் அவசியம் குடிநீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது வெளியில் எழுந்துசெல்லும் கஷ்டத்தை இது தவிர்க்கும்.
படுக்கையறைக்குள் உடுத்திய துணியை தொங்கவிட்டு கொசுவை வரவழைக்காதீர்கள். பாத்ரூம், அறையுடன் இருந்தால் அதன் கதவை நன்றாக தாழிடுங்கள்
படுக்கையறைக்குள் சிலர் சினிமா நடிகைகளின் ஃபோட்டோக்களை மாட்டி வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். படுக்கையறையில் உங்கள் இல்லாளே நாயகி. கணவன் அள்ளிப்பருக வேண்டியது மனைவியின் அழகைத்தானே தவிர நிழல்களையல்ல.
மனித வாழ்க்கை அற்புதமானது என்று எடுத்துக்கொண்டால் இல்லறவாழ்வு ஏராளமான அற்புதங்களைக்கொண்ட இன்பக்கருவூலம். அதை எனோதானோவென்று வீணாக்கி விடாதீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் அணுஅணுவாக அனுபவித்து மகிழுங்கள். மறக்காமல் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::