புதுடெல்லி: டெல்லியில் உள்ள வெளிநாடுகளுக்கு கடிதம் மற்றும் பார்சல்கள் அனுப்பும் சேவையை செய்து வரும் அஞ்சல் நிலையம் மூலம் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 200 பார்சல் போதை மருந்து பொருள்களை தபால் நிலைய ஊழியர் ஒருவர் கண்டுபிடித்து, சுங்கத் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
டெல்லி, பஞ்சாபில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு டெல்லியில் உள்ள வெளிநாட்டு சேவையில் ஈடுபடும் அஞ்சலகம் வழியாக அனுப்பும் பார்சல்களில் போதைப் பொருளை கடத்துவது நடந்து வருகிறது. இக் குற்றச் செயல்களை தீவிரமாக கண்காணித்து அஞ்சல் நிலையம் கட்டுப்படுத்தி வருகிறது.
டெல்லியில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக சேவையில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர் ஒருவர், சந்தேகத்துக்கிடமான போதை பொருள்கள் அடங்கிய பார்சல்களை சரியாக கணித்து கண்டுபிடித்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்து வருகிறார். இது மாதிரியான பார்சல்களை கண்டுபிடிக்க சில உத்திகளை உபயோகப்படுத்துவதாக தெரிவித்த அவர் அந்த உத்திகளை தெரிவிக்க மறுத்து விட்டார் .இந்த ஊழியர் கணித்து பிடிக்கும் பார்சல்களில் 95 சதவீதம் சரியாக போதை பொருட்கள் அடங்கிய பார்சல்களாகவே இருக்கும். அந்த அளவுக்கு இப் பணியில் அவர் திறமை பெற்றிருக்கிறார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை ஹெராயின், சரஸ், கேட்டமைன் போன்ற 80 போதை பொருட்கள் அடங்கிய பார்சல் பாக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.ஒரு கிலோ ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடி. டீ பாக்கெட்டுகளுக்கு இடையில் இதுபோன்ற போதை பாக்கெட்டுகளை வைத்து அனுப்புவது கடத்தல்காரர்களின் வழக்கமாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல்களில் இதுபோன்ற போதை பொருள் வைத்து அனுப்புவது அவ்வப்போது சில சமயங்களில் நடப்பதுண்டு. முறையான முகவரி இல்லாமல், சந்தேகத்துக்கு இடமான வகையில் வரும் பார்சல்களில் போதைப்பொருள் போன்றவை தென்பட்டால் உடனே சுங்கத்துறையிடம் தெரிவித்து விடுவோம். அவர்கள் அந்த பார்சல்களை கைப்பற்றி மேல் நடவடிக்கை எடுப்பார்கள். என்று பிரணவ் குமார் தெரிவித்தார்
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment